ஆர்யா: தமிழ்த் திரைப்பட நடிகர்

ஆர்யா (பிறப்பு:11 திசம்பர் 1980) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

இவர் 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். ஆர்யாவிற்கும் சாயிஷாவிற்கும் மார்ச் 10, 2019 அன்று திருமணம் நடந்தது.

ஆர்யா
ஆர்யா: ஆரம்பகால வாழ்க்கை, திரைப்பட வாழ்க்கை, நடித்த திரைப்படங்கள்
CCL ஆட்டம் ஒன்றில்
பிறப்புஜம்ஷத்
11 திசம்பர் 1980 (1980-12-11) (அகவை 43)
காசர்கோடு
கேரளா
இருப்பிடம்சென்னை
தமிழ்நாடு
இந்தியா
பணிநடிகர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2005-இன்று வரை
உயரம்6' (1.83 மீ)
வாழ்க்கைத்
துணை
சாயிஷா (தி. 2019)
உறவினர்கள்சத்யா (சகோதரன்)

ஆரம்பகால வாழ்க்கை

இவர் டிசம்பர் 11, 1980ஆம் ஆண்டு காசர்கோடு , கேரளாவில் பிறந்தார். இவருக்கு சத்யா, என்ற ஒரு இளைய சகோதரன் உள்ளார். அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.நடிகை சாயிசா என்பவர் திருமணம் செய்து கொண்டார்.ஆர்யாவின் இயற்பெயர் ஜம்ஷத் சேதிராகத் என்பதாகும். பிறந்த ஊர் திரிகரிபுர், காரசகோடு. கேரளா. பெற்றோர் பெயர் உமர் செதிராகாந்த்-ஜாமிலா செதிரா காந்த்.[சான்று தேவை]

திரைப்பட வாழ்க்கை

2005-2010

இவர் 2003ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த திரைப்படத்தில் சாம், அசின், பூஜா, லைலா நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சிறு பிரச்சனை காரணமாக 2005ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் வருவதற்கு முன்பு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், நவ்தீப் மற்றும் சமிக்சா நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி அடைந்தது. இந்த திரைபப்டத்தில் நடித்ததற்க பிலிம்பேர் விருது புதுமுக நடிகருக்கான விருதை வென்றார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் ஒரு கல்லூரியின் கதை என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். பட்டியல் என்ற திரைப்படத்தில் இவருடன் நடிகர் பரத் நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக பூஜா மற்றும் பத்மப்பிரியா நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி அடைந்தது. நல்ல வசூலும் செய்தது.

2007ஆம் ஆண்டு ஓரம் போ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைபடத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா நடித்துள்ளார். சேரன் இயக்கி நடித்த மாயக் கண்ணாடி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு சர்வம் மற்றும் பாலா இயக்கிய நான் கடவுள் என்ற திரைப்படத்தில் ருத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைபப்டத்தில் முதலில் நடிப்பதற்காக அஜித் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பிறகு ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார். இந்த திரைப்படம் காசி மற்றும் தமிழ்நாட்டில் படபிடிப்பு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஆர்யா ஒரு அகோரியாக நடித்துள்ளார். இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இந்த திரைபப்டத்தில் இவருடன் சேர்ந்து பூஜாவும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பல பிரிவுகளின் கில் தமிழக அரசு திரைப்பட விருதுகள், விஜய் விருதுகள், போன்ற பல விருதுகளை வென்றுள்ளது. சர்வம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக திரிசா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இவர் 2010ஆம் ஆண்டு வருடு, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு போன்ற திரைப்படங்களிலும் வருடு என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவருடன் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். இந்த திரைபப்டத்தில் இவர் வில்லனாக நடித்துள்ளார். ஏ. எல். விஜய் இயக்கிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக ஏமி ஜாக்ஸன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற வெற்றி திரைபப்டத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சிக்கு புக்கு என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சிரேயா சரன் நடித்துள்ளார். இவர் காதல் சொல்ல வந்தேன் மற்றும் வ என்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

2011-2014

இவர் 2011ஆம் ஆண்டு உருமி, அவன் இவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு வேட்டை, சேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ராஜா ராணி திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆரம்பம் திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து அஜித் குமார், நயன்தாரா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தற்பொழுது இவர் மீகாமன், புறம்போக்கு, யட்சன் போன்ற திரைப்படங்களில் நடித்து கொண்டுள்ளார். இந்த திரைப்படங்கள் 2014ஆம் ஆண்டு அல்லது 2015ஆம் ஆண்டு வெளியாகும்.

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2005 அறிந்தும் அறியாமலும் குட்டி தமிழ் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது
ஒரு கல்லூரியின் கதை சத்ய தமிழ்
உள்ளம் கேட்குமே இம்மன் தமிழ்
2006 கலாபக் காதலன் அகிலன் தமிழ்
பட்டியல் கோசி தமிழ்
வட்டாரம் பர்மா தமிழ்
2007 மாயக்கண்ணாடி ஆர்யா தமிழ் சிறப்புத் தோற்றம்
ஓரம் போ சந்துரு தமிழ்
2009 நான் கடவுள் ருத்ரன் தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது,
சிறந்த நடிகருக்கான விஜய் விருதுகள் இரண்டுக்கும் முன்மொழியப்பட்டார்.
சிவா மனசுல சக்தி அருண் தமிழ் சிறப்புத் தோற்றம்
சர்வம் கார்த்திக் தமிழ்
2010 வருடு திவாகர் தெலுங்கு
மதராசபட்டினம் இளம்பரிதி தமிழ்
காதல் சொல்ல வந்தேன் தமிழ் சிறப்புத் தோற்றம்
பாஸ் என்கிற பாஸ்கரன் பாஸ்கரன் தமிழ்
சிக்கு புக்கு அர்ஜுன் தமிழ்
2011 அவன் இவன் கும்பிடுறேன் சாமி தமிழ்
2012 வேட்டை குருமூர்த்தி தமிழ்
ஒரு கல் ஒரு கண்ணாடி ரஜினி முருகன் தமிழ் சிறப்புத் தோற்றம்
சேட்டை தமிழ்
2013 ராஜா ராணி ஜான் தமிழ்
இரண்டாம் உலகம் தமிழ்
ஆரம்பம் தமிழ்
2014 'கதை திரைக்கதை வசனம் இயக்கம் தமிழ் சிறப்புத் தோற்றம்
ஜீவா தமிழ் சிறப்புத் தோற்றம்
மீகாமன் சிவா தமிழ்
2015 புறம்போக்கு தமிழ்
யட்சன் தமிழ்
டபுள் பர்றேல் மலையாளம் படபிடிப்பில்
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க தமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆர்யா ஆரம்பகால வாழ்க்கைஆர்யா திரைப்பட வாழ்க்கைஆர்யா நடித்த திரைப்படங்கள்ஆர்யா மேற்கோள்கள்ஆர்யா வெளி இணைப்புகள்ஆர்யாஅறிந்தும் அறியாமலும்ஆரம்பம் (திரைப்படம்)இரண்டாம் உலகம் (திரைப்படம்)ஓரம் போசாயிஷாசிக்கு புக்குசேட்டைதமிழ்தயாரிப்பாளர் (திரைப்படம்)திரைப்படம்நடிகர்நான் கடவுள்பாஸ் என்கிற பாஸ்கரன்மதராசபட்டினம் (திரைப்படம்)ராஜா ராணி (2013 திரைப்படம்)விஷ்ணுவர்த்தன் (இயக்குனர்)வேட்டை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சடுகுடுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கரும்புற்றுநோய்பந்தலூர்இராபர்ட்டு கால்டுவெல்பொது ஊழிஅத்தி (தாவரம்)தென்காசி மக்களவைத் தொகுதிநற்கருணை ஆராதனைமுலாம் பழம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)உருசியாவிளம்பரம்அகத்தியமலைபுங்கைசூர்யா (நடிகர்)திருமணம்முதலாம் இராஜராஜ சோழன்தேம்பாவணிலொள்ளு சபா சேசுஇந்திய நாடாளுமன்றம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாடுஆண் தமிழ்ப் பெயர்கள்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்உத்தரகோசமங்கைவேதம்எலுமிச்சைகயிறுசிவனின் 108 திருநாமங்கள்நெல்லியாளம்விவிலிய சிலுவைப் பாதைசுபாஷ் சந்திர போஸ்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திருச்சிராப்பள்ளிசிலுவைநாளந்தா பல்கலைக்கழகம்விலங்குதிருப்பதிமுகம்மது நபியின் இறுதிப் பேருரைசிவபெருமானின் பெயர் பட்டியல்மருதமலை முருகன் கோயில்விருத்தாச்சலம்சரண்யா துராடி சுந்தர்ராஜ்ஆண்டாள்இந்தியத் தேர்தல் ஆணையம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நியூயார்க்கு நகரம்ஆடு ஜீவிதம்சுவாதி (பஞ்சாங்கம்)சாரைப்பாம்புபூலித்தேவன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்நன்னீர்நெடுநல்வாடைஏலாதிகோயம்புத்தூர் மாவட்டம்தஞ்சாவூர்இந்திய தேசியக் கொடிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சீமான் (அரசியல்வாதி)புதினம் (இலக்கியம்)எம். ஆர். ராதாஜெ. ஜெயலலிதாவால்ட் டிஸ்னிகிறிஸ்தவம்அரபு மொழிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிமார்ச்சு 29மஞ்சள் காமாலைஇந்து சமயம்தன்னுடல் தாக்குநோய்விளையாட்டுசேரர்வட சென்னை மக்களவைத் தொகுதிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதேர்தல் பத்திரம் (இந்தியா)🡆 More