உடுவில் தேர்தல் தொகுதி

உடுவில் அல்லது மானிப்பாய் தேர்தல் தொகுதி (Uduvil / Manipay Electorate) என்பது மார்ச் 1960 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும்.

இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுவில் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதி வி. தர்மலிங்கம் 1960 முதல் 1977 வரையான அனைத்துத் தேர்தல்களிலும் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 1985, செப்டம்பர் 2 இல் படுகொலை செய்யப்பட்டார்

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1989 தேர்தலில் உடுவில் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

1960 (மார்ச்) தேர்தல்கள்

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. தர்மலிங்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 9,033 44.07%
  பொன்னம்பலம் நாகலிங்கம் லங்கா சமசமாஜக் கட்சி திறப்பு 3,811 18.59%
  வி. பொன்னம்பலம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நட்சத்திரம் 3,541 17.27%
ஜே. டி. ஆசீர்வாதம் சுயேட்சை புத்தகம் 1,552 7.57%
எஸ். ஹண்டி பேரின்பநாயகம் சுயேட்சை கண்ணாடி 1,241 6.05%
என். சிவநேசன் சுயேட்சை சூரியன் 1,008 4.92%
வி. வீரசிங்கம் சுயேட்சை சேவல் 312 1.52%
தகுதியான வாக்குகள் 20,498 100.00%
நிராகரிக்கப்பட்டவை 212
மொத்த வாக்குகள் 20,710
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 27,278
வீதம் 75.92%

1960 (சூலை) தேர்தல்கள்

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. தர்மலிங்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சி House 11,475 63.12%
  பொன்னம்பலம் நாகலிங்கம் லங்கா சமசமாஜக் கட்சி திறப்பு 6,704 36.88%
தகுதியான வாக்குகள் 18,179 100.00%
நிராகரிக்கப்பட்டவை 195
மொத்த வாக்குகள் 18,374
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 27,278
வீதம் 67.36%

1965 தேர்தல்கள்

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. தர்மலிங்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சி House 11,638 48.61%
  பொன்னம்பலம் நாகலிங்கம் லங்கா சமசமாஜக் கட்சி திறப்பு 6,726 28.09%
  என். சிவநேசன் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சைக்கிள் 5,577 23.29%
தகுதியான வாக்குகள் 23,941 100.00%
நிராகரிக்கப்பட்டவை 287
மொத்த வாக்குகள் 24,228
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 33,280
வீதம் 72.80%

1970 தேர்தல்கள்

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. தர்மலிங்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சி House 14,120 49.27%
  என். சிவநேசன் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சைக்கிள் 11,656 40.68%
குமாரசாமி வினோதன் சுயேட்சை தராசு 1,362 4.75%
  வி. காராளசிங்கம் லங்கா சமசமாஜக் கட்சி திறப்பு 1,264 4.41%
பி. வி. எம். கே. எம். சின்னத்துரை சுயேட்சை குடை 254 0.89%
தகுதியான வாக்குகள் 28,656 100.00%
நிராகரிக்கப்பட்டவை 119
மொத்த வாக்குகள் 28,775
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 36,690
வீதம் 78.43%

1977 தேர்தல்கள்

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. தர்மலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 27,550 83.99%
  ஆர். எஸ். அலோசியசு ஐக்கிய தேசியக் கட்சி யானை 3,300 10.06%
சி. பி. வி. எம். கே. முதலியார் சுயேட்சை குடை 1,065 3.25%
கே. என். இரத்தினவேல் சுயேட்சை ஏணி 887 2.70%
தகுதியான வாக்குகள் 32,802 100.00%
நிராகரிக்கப்பட்டவை 199
மொத்த வாக்குகள் 33,001
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 41,373
வீதம் 79.76%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் வி. தர்மலிங்கம் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

Tags:

உடுவில் தேர்தல் தொகுதி 1960 (மார்ச்) தேர்தல்கள்உடுவில் தேர்தல் தொகுதி 1960 (சூலை) தேர்தல்கள்உடுவில் தேர்தல் தொகுதி 1965 தேர்தல்கள்உடுவில் தேர்தல் தொகுதி 1970 தேர்தல்கள்உடுவில் தேர்தல் தொகுதி 1977 தேர்தல்கள்உடுவில் தேர்தல் தொகுதி இவற்றையும் பார்க்கஉடுவில் தேர்தல் தொகுதி மேற்கோள்களும் குறிப்புகளும்உடுவில் தேர்தல் தொகுதி1985இலங்கைஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960இலங்கைத் தமிழரசுக் கட்சிஉடுவில்செப்டம்பர் 2மானிப்பாய்யாழ்ப்பாண மாவட்டம்வட மாகாணம், இலங்கைவி. தர்மலிங்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பத்துப்பாட்டுவிழுமியம்தமிழக வரலாறுசடுகுடுதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புபறம்பு மலைஆளுமைநற்கருணைவேலுப்பிள்ளை பிரபாகரன்பட்டினப் பாலைமஞ்சள் காமாலைமீனா (நடிகை)இன்குலாப்சைவத் திருமணச் சடங்குசங்கம் (முச்சங்கம்)ஆண்டுசாத்துகுடிமாசாணியம்மன் கோயில்அறம்கண்டம்நயன்தாராதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பால்வினை நோய்கள்வளையாபதிமுகலாயப் பேரரசுகலம்பகம் (இலக்கியம்)வீரமாமுனிவர்பரதநாட்டியம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)பயில்வான் ரங்கநாதன்கல்விஅகநானூறுஎலுமிச்சையாவரும் நலம்மாநிலங்களவைகடலோரக் கவிதைகள்பெண்களின் உரிமைகள்ஹரி (இயக்குநர்)குருதி வகைதிருவிழாசெஞ்சிக் கோட்டைகடல்ஔவையார்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபுதுக்கவிதைநாளந்தா பல்கலைக்கழகம்உணவுபாவலரேறு பெருஞ்சித்திரனார்கோவிட்-19 பெருந்தொற்றுபுவியிடங்காட்டிமுதுமொழிக்காஞ்சி (நூல்)இந்திய அரசியல் கட்சிகள்ரத்னம் (திரைப்படம்)தங்கராசு நடராசன்இந்திய தேசிய காங்கிரசுசின்ன வீடுஇந்திய இரயில்வேசாகித்திய அகாதமி விருது2024 இந்தியப் பொதுத் தேர்தல்பலாபுலிஆறுமுக நாவலர்குற்றாலக் குறவஞ்சிகங்கைகொண்ட சோழபுரம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்மதுரைதங்க மகன் (1983 திரைப்படம்)முடிநவரத்தினங்கள்இசுலாமிய வரலாறுஅன்னை தெரேசாகருப்பை நார்த்திசுக் கட்டிகழுகுஇந்து சமயம்சைவத் திருமுறைகள்தமிழர் அணிகலன்கள்பாரத ரத்னாகிறிஸ்தவம்🡆 More