இந்தியத் தங்க முதுகு தவளை

கையலாரானா இண்டிகா பிஜூ மற்றும் பலர், 2014

இந்தியத் தங்க முதுகு தவளை
இந்தியத் தங்க முதுகு தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராணிடே
பேரினம்:
இந்தோசில்விரானா
இனம்:
இ. இண்டிகா
இருசொற் பெயரீடு
இந்தோசில்விரானா இண்டிகா
பிஜூ மற்றும் பலர், 2014
வேறு பெயர்கள்

இந்தியத் தங்க முதுகு தவளை (Indosylvirana indica-இந்தோசில்விரானா இண்டிகா), இராணிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது முன்னர் இந்தோசில்விரானா டெம்போராலிசுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது, ஆனால் 2014 ஆய்வில் இது ஒரு தனித்துவமான சிற்றினமாகக் கண்டறியப்பட்டது.

சொற்பிறப்பியல்

இண்டிகா என்ற சிற்றினத்தின் பெயர் இலத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. இது இந்தியாவில் இருந்து இச் சிற்றினத்தின் தோற்றத்தைக் குறிக்கிறது.

பரவல்

இந்தியத் தங்க முதுகு தவளை, இந்திய மாநிலங்களான கருநாடகம் மற்றும் கேரளம் மாநிலங்களின் பாலக்காட்டுக் கணவாய் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

வாழ்விடம்

இந்தியத் தங்க முதுகு தவளை, இரண்டாம் நிலை மற்றும் முதன்மைக் காடுகளில் வாழ்கிறது. மேலும் காடுகளை ஒட்டிய ஈரநிலங்களுக்கு அருகில் காணப்படுகிறது. சில சமயங்களில் வற்றாத வேகமான நீரோடைகளுடன் தொடர்புடையது. இது கடல் மட்டத்திலிருந்து 40 மற்றும் 1,145 m (131 மற்றும் 3,757 அடி) வரையிலான உயரத்தில் காணப்படுகிறது. 2019-ன் பிற்பகுதியில், இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட இனமாக மதிப்பீடு செய்யப்படவில்லை.

விளக்கம்

வயது வந்த ஆண் தவளை 46–59 mm (1.8–2.3 அங்)உடல் நீளமும், பெண் தவளை 66–74 mm (2.6–2.9 அங்) நீளமும் உடையது. தலை அகலத்தை விட நீளமானது. முதுகுபுற பார்வையில் மூக்கு நீள்வட்டமாகவும் பக்கவாட்டுப் பார்வையில் வட்டமாகவும் இருக்கும். செவிப்பறை தனித்துவமானது. முன்கைகள் மிதமான குறுகிய மற்றும் மெல்லியதாகக் காணப்படும். விரல்கள் நீளமானவை மற்றும் நுனிகளில் மழுங்கிய கூர்மையான வட்டுகளைக் கொண்டுள்ளன. தோல் விளிம்புகள் உள்ளன. பின்னங்கால்கள் ஒப்பீட்டளவில் நீளமாகவும் மெல்லியதாகவும் இருக்கும். கால்விரல் நுனிகள் மழுங்கிய கூர்மையான வட்டுகளைக் கொண்டுள்ளன; கால்விரல்கள் மிதமான வலைப்பக்கத்தைக் கொண்டுள்ளன. முதுகுப் பகுதிகள் வெண்கல நிறத்திலும், கீழ்ப் பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். செவிப்பறைப் பகுதி வெளிர் சாம்பல்-பழுப்பு நிறமாகவும், செவிப்பறை வெளிர் பழுப்பு நிறமாகவும் இருக்கும். மேல் உதடு மஞ்சள்-வெள்ளை பட்டையைக் கொண்டுள்ளது. இது கை செருகலுக்கு மேலே தொடர்கிறது. தொண்டை, மார்பு மற்றும் தொப்பை ஆகியவை சாம்பல்-வெள்ளை நிறத்தில் உள்ளன.

மேற்கோள்கள்

Tags:

இந்தியத் தங்க முதுகு தவளை சொற்பிறப்பியல்இந்தியத் தங்க முதுகு தவளை பரவல்இந்தியத் தங்க முதுகு தவளை வாழ்விடம்இந்தியத் தங்க முதுகு தவளை விளக்கம்இந்தியத் தங்க முதுகு தவளை மேற்கோள்கள்இந்தியத் தங்க முதுகு தவளை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சாகித்திய அகாதமி விருதுகடலோரக் கவிதைகள்ஜன கண மனகாயத்ரி மந்திரம்மண்ணீரல்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தமிழர் அணிகலன்கள்மே நாள்சச்சின் (திரைப்படம்)மானிடவியல்ஜிமெயில்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்சென்னை சூப்பர் கிங்ஸ்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இராமானுசர்சைவத் திருமணச் சடங்குமதுரை நாயக்கர்மயக்கம் என்னநிணநீர்க் குழியம்தமிழச்சி தங்கப்பாண்டியன்வெற்றிக் கொடி கட்டுவெண்குருதியணுநீக்ரோதமிழர் பருவ காலங்கள்பலாவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்ரோகிணி (நட்சத்திரம்)இன்ஸ்ட்டாகிராம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்மோகன்தாசு கரம்சந்த் காந்திஐங்குறுநூறுநீர்நிலைஅழகர் கோவில்புதன் (கோள்)கருப்பைகுற்றாலக் குறவஞ்சிவனப்புபரணர், சங்ககாலம்சட் யிபிடிமகரம்மாசிபத்திரிமுத்தொள்ளாயிரம்திரிகடுகம்பிரசாந்த்சினைப்பை நோய்க்குறியூடியூப்பதினெண் கீழ்க்கணக்குஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கருத்தடை உறைஇயேசுஅறிவுசார் சொத்துரிமை நாள்வளையாபதிதிக்கற்ற பார்வதிநாச்சியார் திருமொழிகண்டம்பகிர்வுஅகத்திணைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்உத்தரகோசமங்கைமுதற் பக்கம்தற்கொலை முறைகள்தரணிவேற்றுமைத்தொகைஇந்திய தேசியக் கொடிநீரிழிவு நோய்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்சேரன் செங்குட்டுவன்பிள்ளையார்குறுந்தொகைஆற்றுப்படைமார்க்கோனிஇந்திய ரிசர்வ் வங்கிமஞ்சள் காமாலைசப்ஜா விதைமாத்திரை (தமிழ் இலக்கணம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்திராவிடர்ஈரோடு தமிழன்பன்தீபிகா பள்ளிக்கல்🡆 More