அப் ஊர்பி கொண்டிட்டா

அப் ஊர்பி கொண்டிட்டா (Ab urbe condita, AUC) என்பது இலத்தீன் மொழியில் ரோம் நகரம் நிறுவப்பட்டதில் இருந்து எனப்படும்.

மரபுவழியாக இது கிமு 753 ஆம் ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. சில ரோமன் ஆண்டுகளைக் குறிக்க பண்டைய ரோமன் வரலாற்றாளர்கள் அ.ஊ.கொ (AUC) என்ற இந்த ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள். உண்மையில், பண்டைய ரோமன்களை விட இன்றைய வரலாற்றாசிரியர்கள் இந்த ஆண்டு முறையை மிக அதிகமாக தமது ஆக்கங்களில் பயன்படுத்தி வருகின்றனர். ரோமர் காலத்தில் பொதுவாகத் தமது ஆண்டுகளை அந்தந்த ஆண்டில் இருந்த இரண்டு ஆட்சியாளர்களின் (consul) பெயரால் அழைத்தனர். பேரரசர் ஒருவர் ஆட்சியேறிய ஆண்டும் (regnal year) சில வேளைகளில் பயன்படுத்தப்பட்டது. இம்முறை குறிப்பாக பைசண்டைன் பேரரசு காலத்தில் கிபி 537 இற்குப் பின்னர் யுஸ்டீனியன் பேரரசனின் நடைமுறையில் இருந்தது.

அனோ டொமினி ஆண்டுகளுடன் ஒப்பீடு

ரோம் நகரில் டையனைசியஸ் எக்சிகசு என்ற துறவி கிபி 525 ஆம் ஆண்டில் அனோ டொமினி முறை காலக்கணக்கீட்டை அறிமுகப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பற்றிய அவரது ஆய்வை அடிப்படையாக வைத்து அவர் இந்த முறையைக் கணக்கிட்டார். அவரது ஈஸ்டர் அட்டவணையில் கிபி 532 ஆம் ஆண்டை ரோமப் பேரரசன் டயோகிளேத்தியன் முடி சூடிய ஆண்டான 248 உடன் தொடர்பு படுத்தினார். டயோகிளேத்தியன் முடி சூடிய 284, நவம்பர் 20 ஆம் நாளுடன் ஆரம்பிக்காமல், பதிலாக இயேசு கிறித்து பிறந்த ஆண்டாக எண்ணப்படும் ஆண்டுடன் தனது அட்டவணையைத் தொடங்கினார். இயேசு கிறித்துவின் பிறந்த ஆண்டு கிபி 1 எனவோ அல்லது கிமு 1 எனவோ அவர் கருதியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது (அனோ டொமினி ஆண்டுக்கணக்கில் சுழியம் ஆண்டு இல்லை). கிபி 1 ஆம் ஆண்டு ரோம ஆண்டு "DCCLIV அப் ஊர்பி கொண்டிட்டா" எனப் பின்னர் வரலாற்றாய்வாளர்களால் கணக்கிடப்பட்டது.

    ...1 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 753
    2 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 752
    3 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 751 ...
    750 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 4
    751 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 3
    752 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 2
    753 அப் ஊர்பி கொண்டிட்டா = கிமு 1
    754 அப் ஊர்பி கொண்டிட்டா = அனோ டொமினி (கிபி) 1
    755 அப் ஊர்பி கொண்டிட்டா = கிபி 2 ...
    759 அப் ஊர்பி கொண்டிட்டா = கிபி 6
    2753 அப் ஊர்பி கொண்டிட்டா = கிபி 2000
    2764 அப் ஊர்பி கொண்டிட்டா = கிபி 2011

குறிப்புகளும் மேற்கோள்களும்

Tags:

இலத்தீன்கிமுபைசண்டைன் பேரரசுரோமப் பேரரசுரோம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வராகிசூரரைப் போற்று (திரைப்படம்)அருந்ததியர்சித்திரைத் திருவிழாஎங்கேயும் காதல்ஒற்றைத் தலைவலிகர்மாவல்லினம் மிகும் இடங்கள்காரைக்கால் அம்மையார்நான் அவனில்லை (2007 திரைப்படம்)குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)தேம்பாவணிஅதியமான்இராமர்சொக்கத்தங்கம் (திரைப்படம்)வேலு நாச்சியார்கட்டபொம்மன்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்ஐஞ்சிறு காப்பியங்கள்ஜே பேபிபகவத் கீதைசப்ஜா விதையாப்பிலக்கணம்மணிமேகலை (காப்பியம்)பனைபூக்கள் பட்டியல்மூதுரைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்நாச்சியார் திருமொழிசுக்கிரீவன்விஷ்ணுஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)கம்பராமாயணம்தற்கொலை முறைகள்அங்குலம்இந்திய அரசியல் கட்சிகள்சுப்பிரமணிய பாரதிகார்லசு புச்திமோன்கன்னத்தில் முத்தமிட்டால்வடிவேலு (நடிகர்)இந்திய ரூபாய்குண்டூர் காரம்ஆசிரியர்ஆர். சூடாமணிசென்னை உயர் நீதிமன்றம்தில்லி சுல்தானகம்பேகன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சாதிக்காய்பள்ளிக்கூடம்முத்துராஜாமனித மூளைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்அக்கினி நட்சத்திரம்இல்லுமினாட்டிபனிக்குட நீர்தொகைநிலைத் தொடர்புவிவிஜய் வர்மாநந்தியாவட்டைதசாவதாரம் (இந்து சமயம்)ஏப்ரல் 29என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைஆய்த எழுத்து (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சைவ சமயம்நெல்லிரத்னம் (திரைப்படம்)மே நாள்இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்திருப்பதிவால்மீகிபிரியா பவானி சங்கர்கம்பராமாயணத்தின் அமைப்புதமிழ் நாடக வரலாறுபூலித்தேவன்🡆 More