வாதவியல்

வாதவியல் (Rheumatology) என்பது வாத நோய்களுக்கானச் சிகிச்சை, நோயறிதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பொது மற்றும் குழந்தை மருத்துவத்தின் சிறப்பு உட்பிரிவுகளுள் ஒன்றாகும்.

இப்பிரிவில் நிபுணரான மருத்துவரை வாதவியலாளர் (Rheumatologist) அல்லது முடவியலாளர் எனலாம். மூட்டுகள், மென்திசுக்களை உள்ளடக்கிய தன்னுடல் தாக்குநோய்கள், நாள அழற்சி, பரம்பரையாக வரும் இணைப்பிழைய பிறழ்வுகள் ஆகிய மருத்துவ இடர்ப்பாடுகளுக்கு மருத்துவம் செய்பவர்கள் வாதவியலாளர்கள் ஆவர்.

வாதவியல்
அமைப்புதசை - எலும்பு மண்டலம்
குறிப்பிடத்தக்க நோய்கள்மண்டலிய செம்முருடு, முடக்கு வாதம், சிரங்கு முடக்கு வாதம் (Psoriatic arthritis), மடங்காதநிலை முதுகெலும்பு வீக்கம்
குறிப்பிடத்தக்கச் சோதனைகள்மூட்டுறை திரவம், வாத சோதனை, எக்சு-கதிர்
நிபுணர்முடவியல் மருத்துவர் (Rheumatologist)

தற்பொழுது, இவ்விதமான பிணிகள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் பிறழ்வினைகளாகக் கருதப்படுகின்றன. எனவே, வாதவியல் என்பது அதிகளவு நோயெதிர்ப்பியல் துறையைச் சார்ந்தது எனலாம். தற்கால வாதவியலில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றமாக கடும் வாதநோயைக் கட்டுப்படுத்தும் உயிரிய மருந்துகளைக் (biologics) கண்டறிந்ததைக் குறிப்பிடலாம்.

பிணிகள்

வாதவியலாளரால் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் வாத நோய்கள்:

சிதைகின்ற மூட்டு நோய்கள்

அழற்சியாக்கும் மூட்டு நோய்கள்

  • முடக்கு வாதம்
  • தண்டுவட எலும்பு மூட்டு நோய்
  • இளம்பருவ மூலமறியா முடக்கு வாதம் (Juvenile Idiopathic Arthritis)
  • படிக மூட்டு நோய்கள்: கீல்வாதம், போலியான கீல்வாதம்
  • நோய்த்தொற்று முடக்கு வாதம் (Septic arthritis)

உள்பரவிய நிலைகள், இணைப்பிழைய பிறழ்வுகள்

  • மண்டலிய செம்முருடு
  • ஷியோக்கிரன் நோய்க்கூட்டறிகுறி (Sjögren's syndrome)
  • தோல் தடிப்பு (Scleroderma)
  • பலதசையழற்சி (Polymyositis)
  • சரும தசையழல் (Dermatomyositis)
  • பலதசைவலி மூட்டு நோய் (Polymyalgia rheumatica)
  • தனித்தன்மையற்ற இணைப்பிழைய பிறழ்வுகள் (Mixed connective tissue disease)
  • பலகுருத்தெலும்பழற்சி (Polychondritis)
  • இணைப்புத்திசுப் புற்று (Sarcoidosis)
  • நாள அழற்சி

மேற்கோள்கள்

Tags:

வாதவியல் பிணிகள்வாதவியல் மேற்கோள்கள்வாதவியல்இணைப்பிழையம்தன்னுடல் தாக்குநோய்நாள அழற்சிமூட்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுப்மன் கில்மலைபடுகடாம்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்108 வைணவத் திருத்தலங்கள்சினைப்பை நோய்க்குறிதமிழ்நாடு காவல்துறைவேளாளர்வரலாறுசங்க காலப் புலவர்கள்குறிஞ்சி (திணை)கட்டபொம்மன்பாரத ரத்னாதமிழில் சிற்றிலக்கியங்கள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மதராசபட்டினம் (திரைப்படம்)பொருநராற்றுப்படைதொல். திருமாவளவன்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019மியா காலிஃபாகன்னத்தில் முத்தமிட்டால்மனித வள மேலாண்மைஅஜித் குமார்பாட்டாளி மக்கள் கட்சிஇராமர்பித்தப்பைஆடுஜீவிதம் (திரைப்படம்)ஏப்ரல் 25இனியவை நாற்பதுகாளமேகம்வாணிதாசன்தமிழ்நாடு சட்டப் பேரவைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)கர்மாதமிழ்விடு தூதுபதினெண்மேற்கணக்குஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்காடுவெட்டி குருபிரெஞ்சுப் புரட்சிதமிழக மக்களவைத் தொகுதிகள்ராஜசேகர் (நடிகர்)புங்கைசிறுநீர்ப்பாதைத் தொற்றுமாதேசுவரன் மலைமண்ணீரல்ஜே பேபிசென்னைபி. காளியம்மாள்மொழிபெயர்ப்புசெம்மொழிவினைச்சொல்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இமயமலைசூரரைப் போற்று (திரைப்படம்)மயக்கம் என்னநவதானியம்அகத்தியர்சாருக் கான்சீறாப் புராணம்தங்க மகன் (1983 திரைப்படம்)வினோஜ் பி. செல்வம்ஆற்றுப்படைகஞ்சாதினகரன் (இந்தியா)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைபர்வத மலைஜெமினிகணேசனும் சுருளிராஜனும்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தேவேந்திரகுல வேளாளர்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகௌதம புத்தர்ஆந்திரப் பிரதேசம்சச்சின் டெண்டுல்கர்தமன்னா பாட்டியாதிராவிசு கெட்உமறுப் புலவர்இன்ஸ்ட்டாகிராம்🡆 More