மேற்குச் சுவர்

மேற்குச் சுவர், அழுகைச் சுவர்/புலம்பற் சுவர் (எபிரேயம்: הכותל המערבי, எழுத்துப்பெயர்ப்பு: HaKotel HaMa'aravi; அரபு: حائط البراق‎, எழுத்துப்பெயர்ப்பு: Ḥā'iṭ Al-Burāq) எருசலேம் பழைய நகரில் கோவில் மலையின் மேற்கில் அமைந்துள்ளது.

இது யூத தேவாலயத்தை சுற்றிக் காணப்பட்ட சுவரின் எஞ்சிய பகுதியும், மலை கோயிலுக்கு அடுத்த அதி புனித இடமுமாக யூதத்தில் காணப்படுகிறது. 17 தொடர்கள் உட்பட்ட அரைவாசி சுவர் வீதி மட்டத்திலிருந்து கீழே உள்ளன. இது இரண்டாம் கோவிலின் இறுதி காலத்திற்குரியனவென்றும், கி.மு. 19 இல் முதலாம் ஏரோதால் கட்டப்பட்டதென்றும் பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், அன்மைய ஆய்வு ஏரோதின் காலத்தில் வேலைகள் பூர்த்தியாகவில்லையென்பதை குறிப்பிடுகிறது. எஞ்சிய அடுக்கின் பகுதிகள் 7ம் நூற்றாண்டின் பின்பு இடம்பெற்றன. மேற்குச் சுவர் என்பது யூத பகுதியில் தெரியும் பெரிய சதுக்கம் மட்டுமல்ல, முழு கோயில் மலையையும் உள்ளடக்கிய மறைந்து கிடக்கும் அதன் கட்டமைப்பு என்பனவுமாகும். இசலாமியர் வாழும் பகுதியில் காணப்படும் 25 அடி (8 மீட்டர்) பகுதியான சிறிய மேற்குச் சுவரும் இதனுள் அடங்கும்.

மேற்குச் சுவர்
(அழுகைச் சுவர்)
மேற்குச் சுவர்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்எருசலேம்
புவியியல் ஆள்கூறுகள்31°46′36″N 35°14′03″E / 31.776667°N 35.234167°E / 31.776667; 35.234167
சமயம்யூதம்
நிலைபாதுகாக்கப்பட்டுள்ளது
தலைமைமுதலாம் ஏரோது

இது யூதர்களின் செபம் செய்யும் இடமும் யாத்திரை செல்லும் இடமுமாக பல நூற்றாண்டுகளாகக் காணப்பட்டது. 4ம் நூற்றாண்டிலிருந்து இந்த இடம் யூதர்களுடன் தொடர்புபட்டு காணப்படுகின்றது என பழைய ஆதாரங்களிலிருந்து அறிய முடிகிறது. 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, பல யூதர்கள் சுவர் மற்றும் அதன் பகுதிகளின் உரிமையை பெற்றுக் கொள்ள முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீயோனிசம் சீயோனிச இயக்கத்தின் எழுச்சியுடன் சுவரானது யூத சமூகத்திற்கும் இசுலாம் மத தலைவர்களுக்கும் இடையிலான எதிர்ப்பின் மூலமானது. இசுலாம் மத தலைவர்கள் யூத தேசியவாதிகள் மலைக் குகையையும் யெரூசலேமையும் பெற்றுக் கொள்ள சுவர் காரணமாகிவிடும் எனக் கவலை கொண்டனர். சுவரை மையப்படுத்தி வெடித்த வன்முறை சர்வசாதாரணமாகி, சுவர் பற்றிய இசுலாமியர்களினதும் யூதர்களினதும் உரிமை கோரலை தீர்மானிக்க சர்வதேச குழு 1930 இல் கூடியது. 1948 ஆம் ஆண்டு அரபு-இசுரேலிய போரின் பின் சுவர் யோர்தானியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதனால் 19 வருடங்கள் யெரூசலேம் பழைய நகரை யூதர்கள் 1967 இல் கைப்பற்றும் வரை தடை செய்யப்பட்டிருந்தனர்.

குறிப்புகள்

வெளி இணைப்புக்கள்

மேற்குச் சுவர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Western Wall
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
    ஒளிப்படங்கள்

Tags:

அரபுஇரண்டாம் கோவில் (யூதம்)எபிரேயம்எருசலேம்கோவில் மலைமுதலாம் ஹெரொட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இமயமலைவிந்துஅறிவியல்தனிப்பாடல் திரட்டுயானையின் தமிழ்ப்பெயர்கள்தமிழ் இலக்கியப் பட்டியல்கார்ல் மார்க்சுகலம்பகம் (இலக்கியம்)கரிகால் சோழன்குண்டூர் காரம்தமிழ் தேசம் (திரைப்படம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைகுப்தப் பேரரசுதூது (பாட்டியல்)பி. காளியம்மாள்ஏலகிரி மலைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்அழகர் கோவில்நீ வருவாய் எனதமிழக வரலாறுமாத்திரை (தமிழ் இலக்கணம்)மங்காத்தா (திரைப்படம்)போக்குவரத்துருதுராஜ் கெயிக்வாட்அங்குலம்சடுகுடுமருதமலை முருகன் கோயில்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்இயேசு காவியம்அகமுடையார்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சூரரைப் போற்று (திரைப்படம்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்கட்டுரைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்காளமேகம்யானைஏப்ரல் 26சூரைசங்கம் (முச்சங்கம்)சூர்யா (நடிகர்)வெள்ளி (கோள்)முதலாம் இராஜராஜ சோழன்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கள்ளுநிணநீர்க்கணுசுற்றுச்சூழல்இந்தியன் பிரீமியர் லீக்செண்டிமீட்டர்ஆனைக்கொய்யாகா. ந. அண்ணாதுரைவௌவால்தரணிதமிழர் விளையாட்டுகள்பெண்இந்திய நாடாளுமன்றம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஆளுமைந. பிச்சமூர்த்திசச்சின் (திரைப்படம்)உலா (இலக்கியம்)தேவிகாசாகித்திய அகாதமி விருதுதேவாங்குபஞ்சதந்திரம் (திரைப்படம்)விஜய் வர்மாஏப்ரல் 25விஜயநகரப் பேரரசுபகத் பாசில்விழுமியம்திராவிட முன்னேற்றக் கழகம்கிராம நத்தம் (நிலம்)பித்தப்பைஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்காசோலைஎயிட்சுநிலாசுரைக்காய்சினேகா🡆 More