முத்தன்னா மாகாணம்: ஈராக்கின் மாகாணம்

முத்தன்னா கவர்னரேட் (Muthanna Governorate, அரபு மொழி: المثنى‎ அல் முத்தன்னா ) அல்லது அல் முத்தன்னா மாகாணம் என்பது ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும்.

இது 7 ஆம் நூற்றாண்டின் அரபு தளபதியான அல்-முத்தன்னா இப்னு ஹரிதாவின் பெயரால் அழைக்கபடுகிறது. இது நாட்டின் தெற்கு பகுதியில், சவூதி அரேபியா, குவைத்து ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ளது. இதன் தலைநகரம் சமவா நகரம் ஆகும்.

முத்தன்னா மாகாணம்
محافظة المثنى
அல் முத்தன்னா மாகாணம்
மாகாணம்
Location of முத்தன்னா மாகாணம்
ஆள்கூறுகள்: 30°12′N 45°21′E / 30.200°N 45.350°E / 30.200; 45.350
நாடுஈராக்
தலைநகரம்சமவா
பெயர்ச்சூட்டுஅல்-முத்தன்னா இப்னு ஹரிதா
அரசு
 • ஆளுநர்முகமது அலி அல்-ஹசானி
பரப்பளவு
 • மொத்தம்51,740 km2 (19,980 sq mi)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்770,500
ம.மே.சு. (2017)0.628
medium

வரலாறு

1976 க்கு முன்னர் இது திவானியா மாகாணத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியாக இருந்தது. அந்த மாகாணத்தில் இன்றைய நஜாஃப் மாகாணம் மற்றும் அல்-கதிசியா மாகாணம் ஆகியவையும் உள்ளடங்கியதாக இருந்தது .

மாகாணதின் தலைநகரான சமாவா நகரானது பண்டைய சுமேரிய - பாபிலோனியா நகரமான உரூக்குக்கு ( அரமேயம் : எரெக் ) மிக அருகில் உள்ளது. இது ஈராக்கு என்ற பெயரின் மூலமாக இருக்கலாம். செலூக்கியப் பேரரசு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து பாபிலோன் வீழ்ச்சிக்குப் பிறகு, உருக் தெற்கு பாபிலோனியாவின் மிகப்பெரிய நகரமாக ஆனது. அதன் பெயரான (எரெக்) பாபிலிக்கு (பாபிலோனியா) மாற்றாக வந்தது. ஏனெனில் இந்த நகரம் முந்தைய தலைநகரைக் காட்டிலும் நீண்ட காலம் கி.பி 7 ஆம் நூற்றாண்டுவரை தப்பிப்பிழைத்திருந்தது.

1991 பெப்ரவரியில், பாரசீக வளைகுடா போரின்போது வரலாற்றில் மிகப்பெரிய கவச பீரங்கி வண்டி போர்களில் ஒன்றான நோர்போக் போர் நடந்தது.

மாகாண அரசு

  • ஆளுநர்: முகமது அலி அல் ஹசானி
  • துணை ஆளுநர்: சாமி அல் ஹசானி
  • அல்-முத்தன்னா மாகாண சபையின் தலைவர்: அப்துல் லத்தீப் அல் ஹசானி

குறிப்புகள்

Tags:

அரபு மொழிஈராக்கின் மாகாணங்கள்ஈராக்குகுவைத்துசவூதி அரேபியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அண்ணாமலை குப்புசாமிபெயர்மாசாணியம்மன் கோயில்ஐங்குறுநூறு - மருதம்கம்பர்சீரடி சாயி பாபாதேவாங்குவேலு நாச்சியார்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ருதுராஜ் கெயிக்வாட்முல்லைப் பெரியாறு அணைவெள்ளி (கோள்)ரெட் (2002 திரைப்படம்)மதுரைகன்னத்தில் முத்தமிட்டால்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தூது (பாட்டியல்)சிறுகதைவௌவால்தேவகுலத்தார்அயோத்தி இராமர் கோயில்ஈரோடு தமிழன்பன்கரிகால் சோழன்மே நாள்தேவாரம்ஆய்த எழுத்து (திரைப்படம்)விவேகானந்தர்சார்பெழுத்துமதீச பத்திரனமாமல்லபுரம்மியா காலிஃபாஅம்மனின் பெயர்களின் பட்டியல்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்108 வைணவத் திருத்தலங்கள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வெற்றிக் கொடி கட்டுதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்ஆண்டாள்குறிஞ்சி (திணை)உலக மலேரியா நாள்விழுமியம்பறவைக் காய்ச்சல்திருமூலர்திரு. வி. கலியாணசுந்தரனார்ஆங்கிலம்காற்றுஇரட்சணிய யாத்திரிகம்மு. கருணாநிதிஅக்கிதமிழர் கப்பற்கலைஉலகம் சுற்றும் வாலிபன்திருச்சிராப்பள்ளிகாவிரி ஆறுகொல்லி மலைஞானபீட விருதுதிராவிட இயக்கம்அவுன்சுவிடுதலை பகுதி 1ஐஞ்சிறு காப்பியங்கள்தங்கராசு நடராசன்தினமலர்முதலாம் உலகப் போர்தமிழர் விளையாட்டுகள்மூகாம்பிகை கோயில்கிறிஸ்தவம்சேலம்தைப்பொங்கல்கம்பராமாயணம்கட்டபொம்மன்குறை ஒன்றும் இல்லை (பாடல்)கோவிட்-19 பெருந்தொற்றுசெவ்வாய் (கோள்)புதுச்சேரிசூர்யா (நடிகர்)இடிமழைமுடிகணையம்இலங்கை🡆 More