முதலாம் யசீத்

முதலாம் யசீத் (Yazid I, அரபி: يزيد بن معاوية بن أبي سفيان), முதலாம் முஆவியாவின் மகனும், உமைய்யா கலீபகத்தின் இரண்டாவது கலீபாவும் ஆவார்.

யூலை 23, 645 இல் பிறந்தார். தாயார் பெயர் மைசூன். இவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பின் 680ல் அடுத்த கலீபாவாகத் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். இவரின் தலைமையை ஏற்க மறுத்த கலீபா அலீயின் மகனும், முகம்மது நபியின் பேரனுமாகிய உசேனை கொலை செய்ய உத்திரவிட்டார். இதன்படி கர்பலா என்ற இடத்தில் நடைபெற்ற போரில் உசேன் கொல்லப்பட்டார். இசுலாத்தின் சன்னி மற்றும் சியா பிரிவின் காரணிகளில் இந்தப் போர் ஒரு முக்கியமான அம்சம் ஆகும். மொத்தம் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த யாசித், 683ல் இறந்தார். இறக்கும் பொழுது யாசித்தின் வயது 38 மட்டுமே.

முதலாம் யசீத்
உமய்யா கலீபா
ஆட்சி680 – 683
முன்னிருந்தவர்முதலாம் முஆவியா
பின்வந்தவர்இரண்டாம் முஆவியா
முழுப்பெயர்
யாசித் இப்னு முஆவியா
அரச குலம்உமய்யா கலீபகம்
தந்தைமுதலாம் முஆவியா
தாய்மைசூன்

யாசித்தின் ஆட்சியில் இசுலாமியப் படைகளுக்கு பல பின்னடைவுகள் ஏற்பட்டன. பெர்பர்கள் எனப்படும் பழங்குடி சேனைகளிடம், வட ஆப்பிரிக்கப் பகுதிகளை இவரது ராணுவம் இழந்தது. இதன் மூலம் மத்திய தரைகடல் பகுதில் நிலவி வந்த இசுலாமிய மேலாதிக்கத் தனமும் கட்டுப்படுத்தப் பட்டது. தன்னை எதிர்த்த அப்துல்லா இப்னு சுபைர் என்பவரைச் சிறை பிடிக்க இவர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது புனித காபா சிறிது சேதமடைந்தது. இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக இவர் இசுலாமியர்களின் பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகினார்.

இவரின் மறைவுக்குப் பின்பு, இவரது மகன் இரண்டாம் முஆவியா அடுத்த கலீபாவாக ஆட்சி பொறுப்பேற்றார்.

Tags:

அரபு மொழிஅலீஉமய்யா கலீபகம்கலிபாசன்னி இசுலாம்சியா முசுலிம்முகம்மது நபிமுதலாம் முஆவியாயூலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாட்டு நலப்பணித் திட்டம்குப்தப் பேரரசுகௌதம புத்தர்யானையின் தமிழ்ப்பெயர்கள்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)இன்ஸ்ட்டாகிராம்செஞ்சிக் கோட்டைகில்லி (திரைப்படம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்தமிழிசை சௌந்தரராஜன்விளையாட்டுதிராவிட மொழிக் குடும்பம்குற்றாலக் குறவஞ்சிசூல்பை நீர்க்கட்டிசேமிப்புஅங்குலம்உரிச்சொல்முதற் பக்கம்அரிப்புத் தோலழற்சியாதவர்பாண்டியர்திணைகருக்காலம்பழமொழி நானூறுபணவீக்கம்தீபிகா பள்ளிக்கல்செக்ஸ் டேப்திராவிடர்எட்டுத்தொகை தொகுப்புஎலுமிச்சைதொலைபேசிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)விசாகம் (பஞ்சாங்கம்)உயிர்மெய் எழுத்துகள்நம்மாழ்வார் (ஆழ்வார்)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஇந்தியத் தேர்தல் ஆணையம்கவிதைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கரணம்பிரேமம் (திரைப்படம்)நுரையீரல் அழற்சிஇன்னா நாற்பதுகாளமேகம்பிரேமலுஐந்திணைகளும் உரிப்பொருளும்தமிழ்விடு தூதுநீரிழிவு நோய்முலாம் பழம்இமயமலைபீப்பாய்பத்துப்பாட்டுமணிமேகலை (காப்பியம்)திருவள்ளுவர்வரலாறுஐக்கிய நாடுகள் அவைபத்து தலமுன்னின்பம்வாணிதாசன்திருவரங்கக் கலம்பகம்கலிங்கத்துப்பரணிகள்ளுகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)சீனிவாச இராமானுசன்தேவேந்திரகுல வேளாளர்யானைமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்கருத்தடை உறைஇந்தியன் பிரீமியர் லீக்முருகன்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)நீர் மாசுபாடுகாளை (திரைப்படம்)ஐஞ்சிறு காப்பியங்கள்வன்னியர்🡆 More