மாவை சேனாதிராஜா

மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா (பிறப்பு: அக்டோபர் 27, 1942) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.

மாவை சேனாதிராஜா
மாவை சேனாதிராஜா
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
10 அக்டோபர் 2000 – மார்ச் 2020
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
செப்டம்பர் 7, 1999 – 2000
முன்னையவர்நீலன் திருச்செல்வம்
பதவியில்
1989–1994
முன்னையவர்அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 27, 1942 (1942-10-27) (அகவை 81)
மாவிட்டபுரம், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழிடம்(s)241/5, டபிள்யூ. ஏ. சில்வா ஒழுங்கை, வெள்ளவத்தை, இலங்கை
முன்னாள் கல்லூரிஇலங்கைப் பல்கலைக்கழகம்

வாழ்க்கைக் குறிப்பு

மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. இவர் யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார். வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அரசியலில்

சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார். 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார். 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவரியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார். ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 சூலை 13 இ படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 1999 சூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.

2000-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின. 2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

செப்டம்பர் , 2014இல் சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

தேர்தல் வரலாறு

தேர்தல் தொகுதி / மாவட்டம் கட்சி வாக்குகள் முடிவு
1989 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் தவிகூ 2,820 தெரிவு செய்யப்படவில்லை
2000 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் தவிகூ 10,965 தெரிவு
2001 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் தவிகூ 33,831 தெரிவு
2004 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 38,783 தெரிவு
2010 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 20,501 தெரிவு
2015 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 58,782 தெரிவு
2020 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 20,358 தெரிவு செய்யப்படவில்லை

மேற்கோள்கள்

Tags:

மாவை சேனாதிராஜா வாழ்க்கைக் குறிப்புமாவை சேனாதிராஜா அரசியலில்மாவை சேனாதிராஜா தேர்தல் வரலாறுமாவை சேனாதிராஜா மேற்கோள்கள்மாவை சேனாதிராஜாஇலங்கை நாடாளுமன்றம்இலங்கைத் தமிழரசுக் கட்சிஇலங்கைத் தமிழர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நான் அவனில்லை (2007 திரைப்படம்)திருவள்ளுவர்நீதிக் கட்சிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தேவாரம்வாட்சப்முகேசு அம்பானிமயங்கொலிச் சொற்கள்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்புதுச்சேரிநாயக்கர்இந்திய வரலாறுதமிழ் இலக்கியப் பட்டியல்இந்தியத் தேர்தல்கள்இராமச்சந்திரன் கோவிந்தராசுகிராம ஊராட்சிஅக்பர்சிங்கம் (திரைப்படம்)அமேசான்.காம்பாசிப் பயறுவரலாறுகுடியுரிமைமதுரை மக்களவைத் தொகுதிமலக்குகள்பத்து தலதமிழ்ப் பருவப்பெயர்கள்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிநெடுநல்வாடை (திரைப்படம்)கூகுள் நிலப்படங்கள்மூதுரைஅண்ணாமலை குப்புசாமிகம்பராமாயணம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிஇயேசுவின் உயிர்த்தெழுதல்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024பழமொழி நானூறுபர்வத மலைபோதைப்பொருள்செஞ்சிக் கோட்டைவினையெச்சம்அரிப்புத் தோலழற்சிபூலித்தேவன்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்அரக்கோணம் மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்சூர்யா (நடிகர்)சென்னைநற்கருணை ஆராதனைதாவரம்சுதேசி இயக்கம்உஹத் யுத்தம்இராவணன்அ. கணேசமூர்த்திசீவக சிந்தாமணிசுடலை மாடன்பிரான்சிஸ்கன் சபைவெந்து தணிந்தது காடுகனிமொழி கருணாநிதிகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிஉன்னாலே உன்னாலேமுதலாம் இராஜராஜ சோழன்குடமுழுக்குமுதற் பக்கம்வெ. இராமலிங்கம் பிள்ளைநயன்தாராமருது பாண்டியர்சாரைப்பாம்புமலையாளம்முகம்மது நபிசீர் (யாப்பிலக்கணம்)முரசொலி மாறன்கண்ணதாசன்நாலடியார்அரண்மனை (திரைப்படம்)திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்மக்களாட்சிசுவாதி (பஞ்சாங்கம்)🡆 More