மதுரைக் காஞ்சி: பத்துப்பாட்டு

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி.

தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. "பெருகு வளமதுரைக் காஞ்சி" எனச் சிறப்பிக்கப்படும் இப்பாட்டு "கூடற்றமிழ்" என்றும் "காஞ்சி பாட்டு"என்றும் சிறப்புப் பெயர்களைப்பெறும்.

1 பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப்பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.

போரின் வழியாக கொடுமையை விளக்குதல்

பெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த் திறத்தையும் போரில் பகைவரைக் கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டை‌யை அழித்து அங்கே எள் மற்றும் திவசங்கள் விதைத்ததையும் பாடுவர். மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் பாடுகிறார்.

நாடெனும்பேர் காடுஆக

ஆசேந்தவழி மாசேப்ப

ஊர் இருந்தவழி பாழ்ஆக

போரினால் நாடாக இருந்த இடம் காடாகும். பசுக்கள் திரிந்த வழியில் புலிகள் உலவும். ஊர் முழுதும் பாழாகும் என்று சொல்கிறார்.

நாளங்காடி மற்றும் அல்லங்காடி

சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதனால் கடல் பொங்கி வழிவதுமில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார்.

மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது

கரைபொருது இரங்கும் முந்நீர் போல,

கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.

ஓர் இரவு (அல்)

ஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள் யா‌வற்றையும் மருதனார் கூறுகிறார். குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம் ஆகியவற்றைக் கூறி நிறைவாக மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகியவற்றை விளக்கி அவனை வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார்.

வெளி இணைப்புகள்

சொல்வனம் இதழில் குமரன் கிருஷ்ணன் கட்டுரை: https://solvanam.com/?p=51185 1.தமிழ் இலக்கிய வரலாறு. முனைவர் கா.கோ.வேங்கடராமன்.பக்கம்-78.பதிப்பு 2008.

Tags:

மதுரைக் காஞ்சி போரின் வழியாக கொடுமையை விளக்குதல்மதுரைக் காஞ்சி நாளங்காடி மற்றும் அல்லங்காடிமதுரைக் காஞ்சி ஓர் இரவு (அல்)மதுரைக் காஞ்சி வெளி இணைப்புகள்மதுரைக் காஞ்சிபத்துப்பாட்டுமாங்குடி மருதனார்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரச மரம்நவரத்தினங்கள்சுந்தர காண்டம்அய்யா வைகுண்டர்பூப்புனித நீராட்டு விழாஆந்திரப் பிரதேசம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பாசிசம்தன்யா இரவிச்சந்திரன்69 (பாலியல் நிலை)நாலடியார்பெண் தமிழ்ப் பெயர்கள்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)எஸ். ஜானகிவேதநாயகம் பிள்ளைசீனாஜெயகாந்தன்பக்தி இலக்கியம்மரம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திரிகடுகம்இந்தியத் தேர்தல் ஆணையம்மெய்யெழுத்துவேதாத்திரி மகரிசிமாரியம்மன்திட்டம் இரண்டுசிறுதானியம்சீரடி சாயி பாபாகுறுந்தொகைபெருங்கதைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்காடழிப்புவினைச்சொல்குடும்பம்முலாம் பழம்புவிகண்ணப்ப நாயனார்பகிர்வுவேற்றுமையுருபுமஞ்சள் காமாலைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கிராம சபைக் கூட்டம்கூர்ம அவதாரம்சிற்பி பாலசுப்ரமணியம்சைவ சமயம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்தைப்பொங்கல்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்கணியன் பூங்குன்றனார்எண்ஜோதிகாயாழ்நிலக்கடலைமதீச பத்திரனதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சேலம்குற்றாலக் குறவஞ்சிஆய கலைகள் அறுபத்து நான்குதமிழில் சிற்றிலக்கியங்கள்சரண்யா பொன்வண்ணன்நம்மாழ்வார் (ஆழ்வார்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஏலகிரி மலைஇராமாயணம்குருதி வகைபரணி (இலக்கியம்)வீரப்பன்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஸ்ரீலீலாஅயோத்தி தாசர்மனித உரிமைஇராவணன்கள்ளுதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இளையராஜா🡆 More