புன்வெற்றிடம்

அனைத்து தாவர மற்றும் பூஞ்சை உயிரினங்களின் உயிரணுக்களிலும் காணப்படும் மென்சவ்வால் சூழப்பட்ட ஒரு புன்னங்கமே புன்வெற்றிடம் (Vacuole) ஆகும்.

விலங்குக் கலங்களில் இடையிடையே சிறிய அமைப்பாகத் தோன்றுவதுடன், சில அதிநுண்ணுயிரி மற்றும் பாக்டீரியா போன்ற உயிரினங்களின் கலங்களிலும் இது உள்ளது. ஒளி நுணுக்குக்காட்டியில் ஒன்றுமில்லாத வெற்றிடம் போலத் தோற்றமளிக்கும். இதனாலேயே இப்புன்னங்கத்திற்கு இப்பெயர் வந்தது. எனினும் இது வெற்றிடமல்ல. புன்வெற்றிட மென்சவ்வுள் நீர், சேதன மற்றும் அசேதன மூலக்கூறுகள் மற்றும் நொதியங்கள் கரைசல் வடிவில் காணப்படுகின்றது. சிலவேளைகளில் உள்ளெடுக்கப்பட்ட திண்மத்துகள்களும் காணப்படலாம். சிறிய நுண்குமிழிகள் ஒன்று சேர்ந்து புன்வெற்றிடம் உருவாவதாகக் கருதப்படுகின்றது. புன்வெற்றிடத்திற்கென்றொரு குறித்த வடிவம் காணப்படுவதில்லை. புன்வெற்றிடத்தின் வடிவம் ஒவ்வொரு கலத்தின் வடிவத்துக்கும் தேவைக்குமேற்றபடி வேறுபடும். விலங்குக் கலங்களில் புன்வெற்றிடம் அவ்வளவாக முக்கியத்துவம் வாய்ந்த புன்னங்கம் அல்ல. தாவரங்களிலும், பூஞ்சைகளிலும், சில அதிநுண்ணுயிரிகளிலும் புன்வெற்றிடம் அதி முக்கியத்துவம் வாய்ந்த புன்னங்கங்களில் ஒன்றாக உள்ளது.

புன்வெற்றிடம்
தாவரக் கலத்தில் புன்வெற்றிடம்
புன்வெற்றிடம்
விலங்குக் கலத்தில் புன்வெற்றிடம்

புன்வெற்றிடத்தின் தொழில்கள்

தாவர மற்றும் பூஞ்சைக் கலங்களில் பொதுவாக பின்வரும் தொழில்களை புன்வெற்றிடம் மேற்கொள்ளும்:

  • கலத்துக்குத் தீங்கு விழைவிக்கக்கூடிய பொருட்களைப் பிரித்தெடுத்தல்
  • கழிவுப் பொருட்களை சேகரித்தல்
  • நீரைச் சேமித்தல்
  • நீர்நிலையியல் அமுக்கத்தைப் பேணல்
  • கலத்தின் pH பெறுமானத்தைப் பேணல், அமில உட்பகுதியைக் கொண்டிருத்தல்
  • சிறிய மூலக்கூறுகளை சேமித்து வைத்தல்
  • தேவையற்ற பொருட்களை சேமித்தல்
  • தாவரங்களுக்கு தாங்குமியல்பை வழங்கல்
  • வித்துக்களில் வித்து முளைத்தலுக்குத் தேவையான புரதத்தை சேமித்தல்

தாவரங்களிலும், பூஞ்சைகளிலும் விலங்குகளில் இருப்பதைப் போல முறையான கழிவகற்றும் தொகுதி காணப்படாமையால் அனுசேபத்தின் போது வெளியிடப்படும் கழிவுகள் கலத்தினுள்ளேயே சேமிக்க வேண்டும். இவ்வடிப்படையில் தாவர மற்றும் பூஞ்சைக் கலங்களில் புன்வெற்றிடம் மிகவும் முக்கியமானதாகும்.

தாவரக் கலத்தில் புன்வெற்றிடம்

புன்வெற்றிடம் 
அந்தோசயனின் நிறப்பொருளை சேமித்துள்ள தாவரப் புன்வெற்றிடம்

விருத்தியடைந்த தாவரக் கலத்தில் 30% தொடக்கம் 80%க்கும் மேற்பட்ட கனவளவை புன்வெற்றிடம் உள்ளடக்கியிருக்கும். இதன் கனவளவே இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. தாவரப் புன்வெற்றிடத்தை உருவாக்கும் மென்சவ்வு இழுவிசையிரசனை எனப்படுகின்றது. இதனைப் புன்வெற்றிட மென்சவ்வு எனவும் அழைப்பர். கலச்சாற்றிலிருந்து புன்வெற்றிடத்திற்கு கலத்தின் அமிலத்தன்மையைக் குறைப்பதற்காக H+ அயன்கள் கடத்தப்படுவதால் புன்வெற்றிடச் சாறு குறைவான pH பெறுமானத்தைக் கொண்டிருக்கும். இவ்வமிலத்தன்மை நொதியங்களை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றது; கரையங்களைக் கடத்தவும் பயன்படுகின்றது. பொதுவாக முதிர்ச்சியடைந்த தாவரக் கலத்தில் அதிக கனவளவைப் பிடித்திருக்கும் ஒரு தனி புன்வெற்றிடம் காணப்படும். வளர்ந்து கொண்டிருக்கும் முதிர்ச்சியடையாத தாவரக் கலத்தில் பல சிறிய புன்வெற்றிடங்கள் காணப்படலாம்.

புன்வெற்றிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் நீர் கலச்சுவருக்கு எதிராக நீர்நிலையியல் அமுக்கத்தைக் கொடுக்கின்றது. இவ்வமுக்கம் தாவரத்தை வாடாமல் விறைப்புத்தன்மையுடன் பேண உதவுகின்றது. இதனாலேயே நீரூற்றப்படாத தாவரங்களும், பிரசாரணம் மூலம் நீரகற்றப்பட்ட தாவரங்களும் புன்வெற்றிடம் மூலம் கொடுக்கப்படும் அமுக்கம் குறைவடைவதால் வாட்டமடைகின்றன.

விலங்குக் கலத்தில் புன்வெற்றிடம்

விலங்குக் கலங்களின் தொழிற்பாட்டில் புன்வெற்றிடங்கள் அவ்வளவாகப் பங்களிப்பதில்லை. விலங்குகளில் கழிவகற்றவும், பிரசாரண அமுக்கத்தைப் பேணவும் பல்வேறு தொகுதிகளும் அங்கங்களும் காணப்படுவதால் புன்வெற்றிடங்கள் விலங்குக் கலத்தில் தேவைப்படுவதில்லை. அவ்வப்போது தற்காலிகமாக புன்வெற்றிடங்கள் விலங்குக் கலத்தில் தோன்றி மறையும். அகக்குழியமாதல் மற்றும் புறக்குழியமாதல் ஆகிய செயற்பாடுகளில் இவை உதவுகின்றன. விலங்குக் கலங்களில் புன்வெற்றிடங்கள்- புடகங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. சில விலங்குக் கலங்களில் எந்தவொரு புன்வெற்றிடமும் இருப்பதில்லை.

பூஞ்சைகளில் புன்வெற்றிடம்

பூஞ்சைகளிலுள்ள புன்வெற்றிடம் தாவரப் புன்வெற்றிடம் புரியும் தொழிலையே புரிகின்றது. பிரசாரணச் சீராக்கம், pH சீராக்கம், அமினோ அமிலங்கள், பொசுபேற்றுக்களின் சேமிப்பு, விஷத்தன்மையான ஈயம், கோபால்ட், ஸ்ட்ரோன்டியம் ஆகிய உலோகங்களின் அயன்களை குழியவுருவிலிருந்து வேறாகப் பிரித்து சேமித்தல் ஆகிய தொழில்களைப் பூஞ்சைக் கலங்களிலுள்ள புன்வெற்றிடங்கள் புரிகின்றன.

மேற்கோள்கள்

Tags:

புன்வெற்றிடம் புன்வெற்றிடத்தின் தொழில்கள்புன்வெற்றிடம் தாவரக் கலத்தில் புன்வெற்றிடம் விலங்குக் கலத்தில் புன்வெற்றிடம் பூஞ்சைகளில் புன்வெற்றிடம் மேற்கோள்கள்புன்வெற்றிடம்அதிநுண்ணுயிரிஉயிரணுஉயிரினம்கரிமச் சேர்வைதாவரம்திண்மம்நுணுக்குக்காட்டிநொதியம்பாக்டீரியாபுன்னங்கம்பூஞ்சைவிலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாதவிடாய்டி. எம். செல்வகணபதிபதுருப் போர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்லொள்ளு சபா சேசுசைவத் திருமுறைகள்அரிப்புத் தோலழற்சிபணவீக்கம்சிவன்எஸ். பி. பாலசுப்பிரமணியம்ஆங்கிலம்பசுமைப் புரட்சிகுத்தூசி மருத்துவம்மூசாதீரன் சின்னமலைபனிக்குட நீர்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)ஜெ. ஜெயலலிதாதிராவிட மொழிக் குடும்பம்கன்னியாகுமரி மாவட்டம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இந்தியப் பொதுத் தேர்தல்கள்ஓ. பன்னீர்செல்வம்கரூர் மக்களவைத் தொகுதிகருப்பை நார்த்திசுக் கட்டிசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தைராய்டு சுரப்புக் குறைபெண்ணியம்தமிழ்ப் புத்தாண்டுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்அலீஉமாபதி சிவாசாரியர்அன்னை தெரேசாகிராம நத்தம் (நிலம்)இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சிலிக்கான் கார்பைடுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மார்பகப் புற்றுநோய்நிலக்கடலைஇந்தோனேசியாநயினார் நாகேந்திரன்கருத்தரிப்புதமிழ் எண் கணித சோதிடம்திருட்டுப்பயலே 2தமிழர் விளையாட்டுகள்காயத்ரி மந்திரம்முன்னின்பம்கோயில்பாசிப் பயறுஅக்பர்வேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழர் கலைகள்ஊரு விட்டு ஊரு வந்துதிருத்தணி முருகன் கோயில்காடுவெட்டி குருபத்துப்பாட்டுசினைப்பை நோய்க்குறிஈ. வெ. இராமசாமிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அயோத்தி தாசர்சிவாஜி கணேசன்தமிழக வரலாறுசாகித்திய அகாதமி விருதுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அஸ்ஸலாமு அலைக்கும்அன்னி பெசண்ட்மதயானைக் கூட்டம்காளமேகம்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிமுகம்மது நபிமத்திய சென்னை மக்களவைத் தொகுதிஇயேசுவின் சாவுஆனந்தம் விளையாடும் வீடுதமிழிசை சௌந்தரராஜன்முத்தொள்ளாயிரம்இந்தியக் குடியரசுத் தலைவர்முத்தரையர்ஆறுமுக நாவலர்🡆 More