பிரின்சு

பிரின்சு ரோஜர்சு நெல்சன் (Prince Rogers Nelson, சூன் 7, 1958 – ஏப்ரல் 21, 2016), பரவலாக பிரின்சு என்றே அறியப்பட்ட இந்த அமெரிக்க பாடகர், பாடலாசிரியராகவும், பல்வகை இசைக்கருவி கலைஞராகவும், இசைத்தட்டு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தமது திறமையைக் காட்டியுள்ளார்.

இசையில் புதுமைப் புனைவாளரான பிரின்சு மேடையில் அவரது துடிப்புமிக்க, அட்டகாசமான நடத்தைக்காகவும் மதிப்புமிகு உடைகளுக்காகவும் அபரிமித ஒப்பனைகளுக்காகவும் அறியப்பட்டவர். இவரது குரல்வளம் விரிவான வீச்சைக் கொண்டது. வன்கு இசை, ராக் இசை, ரிதம் அண்ட் புளூஸ், உள்ளுணர்வு இசை, மாயத்தோற்ற இசை, பரப்பிசை என பல்வகைப் பாணிகளையும் உள்ளடக்கியது. உலகெங்கும் இவரது இசைத்தட்டுக்கள் 100 மில்லியனுக்கும் கூடுதலாக விற்பனையாயுள்ளன; அனைத்துக் காலங்களுக்குமான சிறந்த கலைஞர்களில் ஒருவராக விளங்கினார். பிரின்சு ஏழு கிராமி விருதுகளையும் கோல்டன் குளோப் விருது ஒன்றையும்அகாதமி விருது ஒன்றையும் வென்றுள்ளார். 2004இல் ராக் அண்டு ரோல் புகழ் மண்டபத்தில் இடம் பெற்றார்]].

பிரின்சு
பிரின்சு
2008ஆம் ஆண்டு கோயெச்செல்லா விழாவில் நிகழ்த்தும்போது
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பிரின்சு ரோஜர்சு நெல்சன்
பிற பெயர்கள்
  • ஜாமீ இசுட்டார்
  • அலெக்சாண்டர் நெவர்மைண்டு
  • ஜோயி கோகோ
  • பிரின்சு
  • முன்பு பிரின்சு என அறியப்பட்டக் கலைஞர்
பிறப்பு(1958-06-07)சூன் 7, 1958
மினியாப்பொலிஸ், மின்னசோட்டா, ஐ.அ
இறப்புஏப்ரல் 21, 2016(2016-04-21) (அகவை 57)
சான்காசன், மின்னசோட்டா, ஐ.அ
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
  • பாடகர்-கவிஞர்
  • பலவகை இசைக்கருவிகள்
  • இசைத்தட்டு தயாரிப்பாளர்
  • நடிகர்
  • திரைப்பட இயக்குநர்
இசைக்கருவி(கள்)
  • பாட்டுக்கள்
  • கிட்டார்
  • அடித்தொனி கிட்டார்
இசைத்துறையில்1976–2016
வெளியீட்டு நிறுவனங்கள்
  • வார்னர் பிரதர்சு
  • பைசுலே பார்க்
  • என்பிஜி
  • ஈஎம்ஐ
  • கொலம்பியா
  • அரிஸ்டா
  • யூனிவர்சல்
இணைந்த செயற்பாடுகள்
  • தி ரெவலூசன் (இசைக்குழு)
  • வெண்டி & லிசா
  • தி நியூ பவர் ஜெனரேசன்
  • தி டைம்
  • மோரிசு டே
  • சீலா ஈ.
  • வானிட்டி 6
  • அப்பல்லோனியா 6
  • மசரட்டி
  • தி பாமிலி (இசைக்குழு)
  • 94 ஈஸ்ட்
  • மேட் அவுஸ் (இசைக்குழு)
  • அன்னா பான்டாஸ்டிக்
  • ஆண்டி அல்லோ
  • தேர்டுஐகேர்ல்

பிரின்சு மினியாப்பொலிசில் பிறந்தார். இளம் அகவையிலேயே இசையில் நாட்டம் கொண்டிருந்தார். 18ஆம் அகவையிலேயே வார்னர் பிரதர்சு நிறுவனத்தில் ஒப்பந்தப் பாடகரானார். 1978இல் ஃபார் யூ என்ற தனது இசைத்தொகுப்பை வெளியிட்டார். 1979இல் வெளியான இவரது இசைத்தொகுப்பு பிரின்சு விற்பனையில் பிளாட்டினம் நிலையை எட்டியது. அடுத்த மூன்று தொகுப்புகளும்—டர்ட்டி மைண்டு (1980), கண்ட்ரோவர்சி (1981), மற்றும் 1999 (1982)—தொடர்ந்து வெற்றி கண்டன. 1984இல், தனது பின்னணி இசைக்குழுவை தி ரெவலூசன் என அழைத்தார்.

1990களின் துவக்கத்தில், பிரின்சிற்கும் வார்னர் பிரதர்சுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. 1993இல் தமது இசைக்குழுவின் பெயரை உச்சரிக்கவியலா சின்னம் வடிவில், பிரின்சு, பெயரிட்டார். 1994க்கும் 1996க்கும் இடையே ஐந்து தொகுப்புக்களை வெளியிட்டார். 2000களில் மீண்டும் "பிரின்சு" என்றே குறிப்பிடத் தொடங்கினார். பின்னர் 16 இசைத்தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். இவரது இறுதி தொகுப்பாக ஹிட் அன்ரண் பேசு டூ, திசம்பர் 11, 2015இல் டைடல் ஓடைச்சேவை மூலமாக வெளியானது. ஏப்ரல் 21, 2016இல் 57ஆம் அகவையில் சான்காசன், மின்னசோட்டாவின் பய்சுலே பார்க் பகுதியில் ஒலிப்பதிவு மையமாகவும் விளங்கிய இல்லத்தில் மறைந்தார்; மரணத்திற்கு முந்தைய இருவாரங்களாக அவருக்கு இன்ஃபுளுவென்சா-போன்ற நோயறிகுறிகள் இருந்தன.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

அகாதமி விருதுஉள்ளுணர்வு இசைஐக்கிய அமெரிக்காகிராமி விருதுகோல்டன் குளோப் விருதுபரப்பிசைராக் அண்டு ரோல்ராக் இசைரிதம் அண்ட் புளூஸ்வன்கு இசை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொச்சி கப்பல் கட்டும் தளம்சமணம்பச்சைக்கிளி முத்துச்சரம்பித்தப்பைஏலாதிபெண்ணியம்விரை வீக்கம்பத்துப்பாட்டுஅண்ணாமலையார் கோயில்பகாசுரன்கட்டுவிரியன்மாதவிடாய்பூலித்தேவன்நவதானியம்அகமுடையார்மியா காலிஃபாகாப்சாசிறுநீரகம்எங்கேயும் காதல்ஆண்டு வட்டம் அட்டவணைசடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்மாலை நேரத்து மயக்கம்அகத்தியர்நபிகரிசலாங்கண்ணிசப்தகன்னியர்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்காவிரிப்பூம்பட்டினம்திருமணம்நுரையீரல் அழற்சிதிருமழபாடி வைத்தியநாதர் கோயில்வைணவ சமயம்கே. என். நேருகர்நாடகப் போர்கள்நாலடியார்புற்றுநோய்வேலைகொள்வோர்பெ. சுந்தரம் பிள்ளைதாஜ் மகால்தமிழ் விக்கிப்பீடியாகே. அண்ணாமலைஒட்டுண்ணி வாழ்வுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ரமலான்நாச்சியார் திருமொழிமனோன்மணீயம்அகழ்ப்போர்ஏ. வி. எம். ராஜன்திருப்பதி வெங்கடாசலபதி கோயில்கருச்சிதைவுசிறுநீர்ப்பாதைத் தொற்றுமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)குதுப் நினைவுச்சின்னங்கள்பாக்டீரியாசீரடி சாயி பாபாஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்வேற்றுமையுருபுதிருப்பாவைஜீனடின் ஜிதேன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்இராவணன்கன்னத்தில் முத்தமிட்டால்மாதுளைநெடுநல்வாடைபேரிடர் மேலாண்மைஅரபு மொழிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இந்திய மொழிகள்குப்தப் பேரரசுநடுக்குவாதம்இராம நவமிஉமறுப் புலவர்ஆங்கிலம்இந்திய ரூபாய்இயற்கைஉ. சகாயம்குறிஞ்சிப் பாட்டுஇலங்கையின் வரலாறுசென்னை🡆 More