பான் கி மூன்

பான் கி மூன் ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச் செயலாளராவார்..

ஏழாவது பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி 1, 2007 முதல் இவர் அப்பொறுப்பை ஏற்றார்.. இவர் ஜூன் 13, 1944 அன்று கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர். பொதுச் செயலாளர் பதவிக்கு வரும்முன் தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் பதவி 2016 ஆம் ஆண்டு திசம்பர் 31 இல் நிறைவுற்றது.

பான் கி மூன்
பான் கி மூண்

கல்வி

பான் கி மூன் 1970ஆம் ஆண்டு சியோல் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து, பன்னாட்டு உறவுகள் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1985ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஜான் எப் கென்னடி அரசாட்சிப் பள்ளியிலிருந்து பொது ஆட்சி பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பணிகள்

தென் கொரியாவின் இந்தியத் தூதரகத்தில் முதன் முதலாகப் பணியில் சேர்ந்த மூண், கொரிய வெளியுறவுத்துறையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டோடு நின்று போன வட கொரிய அணு ஆயுத உற்பத்தி சம்பந்தமான ஆறு நாடுகள் பேச்சுவார்த்தையிலும் இவர் பங்காற்றினார்.

மரணதண்டனைகள் நிறுத்தப்படவேண்டும் என பான் கி மூன் வலியுறுத்தியபோதும் சதாம் குசேனின் மரணதண்டனையை இடைநிறுத்த ஆக்கபூர்வமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டி

பான் கி மூன், ஐ. நா. பொதுச் செயலாளர் பதவிக்கு நடைபெற்ற நான்கு (உறுப்பினர் விருப்பமறியும்) தேர்வுகளிலும் முதலாவதாக வந்தார். இரண்டாவதாக வந்த இந்தியாவின் சசி தரூர் உள்ளிட்டோர் படிப்படியாகப் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஐ. நா. பாதுகாப்பு அவை இவரை முறைப்படி தெரிவு செய்து பொதுச் சபைக்கு சிபாரிசு செய்துள்ளது. இத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது இவரும், தென் கொரிய அரசும் பணபலத்தை பயன்படுத்தி ஏழை நாடுகளின் ஆதரவைப்பெற முயற்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தகுந்தது. தவிர பிரெஞ்சு மொழியில் பரீட்சயமானவர் என்றவாறு அவர் குறிப்பிட்டபோதும் பிரஞ்சு மொழியில் அவ்வளவான புலமையைக் காணவியவில்லை.

உசாத்துணைகள்

Tags:

பான் கி மூன் கல்விபான் கி மூன் பணிகள்பான் கி மூன் பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டிபான் கி மூன் உசாத்துணைகள்பான் கி மூன்19442007ஐக்கிய நாடுகள் அவைகோபி அன்னான்ஜனவரி 1ஜூன் 13தென் கொரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

உத்தரகோசமங்கைமங்கலதேவி கண்ணகி கோவில்ஔவையார் (சங்ககாலப் புலவர்)திருவோணம் (பஞ்சாங்கம்)தமிழ்நாட்டின் அடையாளங்கள்ஆடை (திரைப்படம்)உவமையணிரயத்துவாரி நிலவரி முறைபெண்இணையம்சங்க இலக்கியம்திருக்குறள்இந்தியன் பிரீமியர் லீக்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)கூர்ம அவதாரம்திருவிளையாடல் புராணம்பொருநராற்றுப்படைகடவுள்இந்தியாவின் பசுமைப் புரட்சிமதீச பத்திரனமுதல் மரியாதைகருப்பைசித்த மருத்துவம்சின்ன வீடுபழனி முருகன் கோவில்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்விடுதலை பகுதி 1தமிழர் நெசவுக்கலைதமிழ்த்தாய் வாழ்த்துதசாவதாரம் (இந்து சமயம்)மலேசியாஏலகிரி மலைசெக் மொழிநிலாசிதம்பரம் நடராசர் கோயில்சேலம்தமிழர் கப்பற்கலைபுறப்பொருள் வெண்பாமாலைஐந்திணைகளும் உரிப்பொருளும்குணங்குடி மஸ்தான் சாகிபுவிஸ்வகர்மா (சாதி)நேர்பாலீர்ப்பு பெண்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்பாரத ரத்னாமரபுச்சொற்கள்கொல்லி மலைஇந்தியத் தேர்தல்கள் 2024கல்லணைதிருநாவுக்கரசு நாயனார்செண்டிமீட்டர்இந்திய தேசியக் கொடிகுஷி (திரைப்படம்)பால கங்காதர திலகர்நயன்தாராகண்ணனின் 108 பெயர் பட்டியல்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைகருட புராணம்கருக்காலம்பொது ஊழிசெங்குந்தர்சித்திரைத் திருவிழாகலம்பகம் (இலக்கியம்)நயினார் நாகேந்திரன்அரவான்எட்டுத்தொகைதிருவாசகம்அழகிய தமிழ்மகன்விளையாட்டுமறைமலை அடிகள்கேரளம்செஞ்சிக் கோட்டைஇராபர்ட்டு கால்டுவெல்தமிழ் இலக்கியம்திருப்பூர் குமரன்ஆற்றுப்படைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)🡆 More