நீர்மூழ்கிக் குண்டு

நீரின் மேற்பரப்புக்கு மேலிருந்தோ அல்லது நீருக்கடியிலிருந்து ஏவப்பட்டு நீருக்கடியில் தானாக உந்திச் சென்று இலக்கைத் தாக்ககூடிய கணை நீர்மூழ்கிக் குண்டு (Torpedo) எனப்படுகிறது.

இந்நீர்மூழ்கிக் குண்டுகள் இலக்கைத் தொட்டவுடன் அல்லது இலக்கை அண்மித்தவுடன் வெடிக்கக் கூடியன. நீர்கண்ணிகள் நீர்மூழ்கிக் குண்டை ஒத்தனவாயினும் இவை தானாக உந்திச் செல்லும் ஆற்றலைக் கொண்டிருப்பதில்லை. இவை கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்கள், வான்கலங்கள் எனப் பலதரப்பட்ட இடங்களிலிருந்து ஏவப்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் கப்பல்களுக்கு எதிராக நீர்மூழ்கிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டாலும் தற்போது நீர்மூழ்கிக் கப்பல்களுக்கெதிராகவே முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

நீர்மூழ்கிக் குண்டு
நீர்மூழ்கிக் குண்டொன்று கப்பலிருந்து ஏவப்படும் காட்சி

வரலாறு

பிரிட்டனைச் சேர்ந்த இராபர்ட் ஒயிட்ஹெம் என்பவர் 1866-ஆம் ஆண்டு டார்பிடோ என்ற கடற்போர் ஆயுதத்தைக் கண்டுபிடித்தார். அது சுருட்டு போன்று நீண்ட வடிவம் கொண்ட தானியங்கி குண்டு. நீருக்கடியில் அதிவேகமாகச் செல்லக் கூடியது. தற்போது அதில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அமைப்பு

குண்டு பின்பகுதியில் வெடிமருந்து வைக்கப்பட்டிருக்கும். முன்பகுதியில், சதுர அங்குலத்துக்கு 20 ஆயிரம் கிலோ அழுத்தத்தைத் தாங்கக்கூடிய காற்றுக் கலன்கள் உள்ளன. நடுப்பகுதியில் கியர், சார்ஜிங் வால்வு, ஸ்டாப் வால்வு போன்ற கருவிகள் உள்ளன. வால்பகுதிதான் மிகவும் முக்கியமானது. இங்குதான் என்ஜின், ஸ்டியரிங், டார்பிடோவை இயக்கும் எரிபொருள் ஆகியவை உள்ளன. அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நுண்ணிய கருவிகளும் இப்பகுதியில்தான் இருக்கும்.

தாக்கம்

நீருக்கடியில் அதிவேகமாகப் பாய்ந்து சென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கான கப்பலையோ, நீர்மூழ்கிக் கப்பலையோ ஊடுருவித் தாக்கும். தாக்கிய வேகத்திலேயே இது வெடிக்கும். இதனால் அந்தக் கப்பலும் பெரும்பாதிப்புக்குள்ளாகும். டார்பிடோவின் அளவுக்கு ஏற்ப அதனால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாக இருக்கும். முழுக் கப்பலையுமே அழித்துவிடக் கூடிய சக்தி வாய்ந்த டார்பிடோக்களும் உள்ளன.

வகைகள்

நவீன நீர்மூழ்கிக் குண்டுகளை

  • நேர்கோட்டில் பயணிப்பன
  • தானியக்கமாக (இலக்கின் வெப்பத்தைக் கொண்டு) இலக்கை அடையக் கூடியன
  • கம்பி மூலம் கட்டுப்படுத்தக் கூடியன என வகைப் படுத்தலாம்.

மேற்கோள்கள்

Tags:

நீர்மூழ்கிக் குண்டு வரலாறுநீர்மூழ்கிக் குண்டு அமைப்புநீர்மூழ்கிக் குண்டு தாக்கம்நீர்மூழ்கிக் குண்டு வகைகள்நீர்மூழ்கிக் குண்டு மேற்கோள்கள்நீர்மூழ்கிக் குண்டுகப்பல்நீர்மூழ்கிக் கப்பல்வான்கலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சஞ்சு சாம்சன்தமிழ்க் கல்வெட்டுகள்நான்மணிக்கடிகைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்மூலம் (நோய்)பர்வத மலைஇந்திய ரூபாய்கோயம்புத்தூர்ஆப்பிள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வீரப்பன்தமிழ்நாடு அமைச்சரவைகிருட்டிணன்புதுக்கவிதைதீரன் சின்னமலைமகேந்திரசிங் தோனிமு. மேத்தாஇந்திய தேசிய காங்கிரசுஜெயம் ரவிமாத்திரை (தமிழ் இலக்கணம்)அக்பர்காமராசர்பெண் தமிழ்ப் பெயர்கள்குகேஷ்தமிழ் இலக்கியம்பொன்னுக்கு வீங்கிதிருமூலர்பாரிஎலான் மசுக்தேவ கௌடாநவக்கிரகம்சமயக்குரவர்சொக்கத்தங்கம் (திரைப்படம்)தொல். திருமாவளவன்பண்பாடுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்திருப்போரூர் கந்தசாமி கோயில்பழந்தமிழ் இசைவாரன் பபெட்கன்னத்தில் முத்தமிட்டால்மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்கருக்கலைப்புஏப்ரல் 29உயர் இரத்த அழுத்தம்அஜித் குமார்அறுபடைவீடுகள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்தமிழர் பருவ காலங்கள்பெரியாழ்வார்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தளபதி (திரைப்படம்)பிரேமலுஆனைக்கொய்யாதீபிகா பள்ளிக்கல்ஔவையார்இயேசு காவியம்இன்ஸ்ட்டாகிராம்தேவாரம்சமந்தா ருத் பிரபுபுற்றுநோய்விஷ்ணுபெருமாள் திருமொழிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மணிமேகலை (காப்பியம்)தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)அணி இலக்கணம்தொல்லியல்பக்தி இலக்கியம்ஏப்ரல் 30தமிழிசை சௌந்தரராஜன்உதகமண்டலம்ஆபிரகாம் லிங்கன்ஐம்பெருங் காப்பியங்கள்பஞ்சாயத்து ராஜ் சட்டம்பிலிருபின்சிவன்சிறுதானியம்🡆 More