நீர்நிலை (body of water) என்பது எல்லா வகையான நீரின் தொகுப்புகளையும் குறிக்கும்.
பொதுவாக இது புவிப்பரப்பின் மீது காணப்படும். நீர்நிலை என்ற சொல் சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள், நீரோடைகள், சுனைகள், மடுக்கள் போன்ற இயற்கையான நீர்நிலைகளையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்ற மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்நிலைகளையும் குறிக்கும்.
தேங்கி நிற்கும் அல்லது தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலைகளை நீர்த்தேக்கம் என்கிறோம்.
♦ பள்ளத்தாக்கு அணை நீர்த்தேக்கம்
♦ கரையோர நீர்த்தேக்கம்
♦ சேவை நீர்த்தேக்கம்
தமிழ் | ஆங்கிலம் | வேறு | விளக்கம் | |
1 | அருவி | water fall Stream | நீர்வீழ்ச்சி | மலை, குன்று போன்றவற்றில் இருந்து வேகத்துடன் விழும் நீர் |
2 | river | நதி | இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் | |
Rivulet | ||||
காட்டாறு | jungle stream/river | |||
brook | அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர் | |||
Brooklet | ||||
3 | நீரோட்டம், நீர்த்தாரை | Stream (current) | ஆற்றொழுக்கு | |
நீரோடை | A water-course | |||
விசை நீரோடை | torrent | |||
கீழாறு | Undergroundstream | பூமியினுள்ளோடும் ஆறு | ||
நீரூற்று | fountain, spring | தண்ணீர் நிலத்துக்கடியே இருந்து வெளியே தோன்றும் பகுதி (இயல்பாயமைந்த நீர் ஊற்று நிலை) | ||
நீர்ச்சுனை, . சுனை | Mountain Pool; a spring or fountain on a mountain | மலையிடத்து இயல்பாயமைந்த நீர் ஊற்று நிலை | ||
நீர்த்தாரை | fountain | |||
ஊறணி, ஊற்று | A fountain, a spring of water | (பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது) | ||
ஊருணி (1) | Drinking water tank | ஊரார் அனைவரும் உண்பதற்குரிய நீர்நிலை | உண்பதற்கு, பருகுவதற்குப் பயன்படும் நீர்நிலை | |
இலஞ்சி (இலைஞ்சி) | A natural or artificial reservoir, tank for drinking and other purposes | |||
Well | ||||
உறை கிணறு | Ring Well | மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு | ||
நடைகிணறு (நடை கேணி) | (Large well with steps on one side) | இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு | ||
large well, A square or oblong walled tank | அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு | |||
குட்டை | small pond, small pool | சிறிய குட்டம் | மழை நீரின் சிறிய தேக்கம், மாடு முதலியன குளிப்பாட்டும் நீர் நிலை | |
A tank, a pond | செயற்கையான நீர்த் தேக்கம், குளிக்கப்பயன்படும் நீர் நிலை. | |||
பொய்கை | natural pool or natural pond or natural tank Spring Pond | இயற்கையிலுண்டான நீர்நிலை, நீரூற்று உடையது | ||
deep pool in a river | ஆற்றிடையுடைய ஆழமான பகுதி. | |||
குட்டம் | (Large Pond) | பெருங் குட்டை | ||
குண்டம் | -(Small Pool) | சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை | ||
குண்டு | A pool, a basin of water | குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம். | ||
தடாகம் | Pond, lake | தடாகத்தில் தாமரைச் செடிகள் வளரும். | ||
வாவி | Tank | தடாகம் | ||
கயம் | tank, lake, Moat | வற்றாத குளம், அகழி | ||
ஏரி | lake, A large tank or reservoir for irrigation | குளம் | வேளாண்மைத் தொழிலுக்குப் பயன்படும் இயற்கையான நீர் நிலை | |
பண்ணை | ||||
ஏல்வை | ||||
4 | கழிமுகம் | Estuary, firth | ஆறு கடலொடு கலக்கும் சங்கமுகம் | |
கயவாய், முகத்துவாரம் | Estuary | பகுதி மூடியதும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆறுகள் அல்லது சிற்றாறுகள் கலப்பதும், கடலுடன் தொடர்புடையதுமான, கரையோர நீர்ப்பரப்பு | ||
கடற்கழி | firth | நீண்ட, குறுகிய கழிமுகம் | கழிமுகத்தின் இசுக்கொட்லாந்தியச் சொல் | |
முகத்துவாரம் | Mouth of a firth or Estuary | நீண்ட, குறுகிய கழிமுகத்தின் வாய் | ||
காயல், களப்பு | lagoon | உப்பங்கழி (2) | ||
கடல் | ||||
உப்பங்கழி | Backwater, Salt-pan | |||
காயல் | Backwater | |||
உப்பளம் | Salt-pan | |||
கடல்வாய்க்கால் | Lagoon | உப்பங்கழி | ||
அல்குகழி | சிறிய உப்பங் கழிநிலம் | |||
அகழி | Moat | கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் | ||
ஆழிக்கிணறு | Well in Sea-shore | கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு | ||
காரானை (2) | Waterspout (3) | கடலின்மீதுகுவிந்து கீழிறங்கி நீரைமுகந்து பெருந்தூண் போல நிற்கும் மேகம் | ||
நீர்த்தம்பம் | Water spout | நீர்த்தாரை? | நீரை வெளியேற்றும் குழாய் |
நீர்நிலை
நீர் நிலைகளை அவற்றின் அளவுக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு ஏற்பவும் பல்வேறு பெயர்களால் தமிழர்கள் அழைத்து வந்துள்ளனர்.
இலஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம்.
சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்.
This article uses material from the Wikipedia தமிழ் article நீர்நிலை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.