நீசுனி நோவ்கோரத் மாகாணம்

நீசுனி நோவ்கோரத் மாகாணம் (Nizhny Novgorod Oblast, உருசியம்: Нижегоро́дская о́бласть, நீசெகரோத்ஸ்கயா ஓப்லஸ்த்) அல்லது நீசெகோரத் மாகாணம்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும்.

இதன் நிர்வாக மையம் நீசுனி நோவ்கோரத் நகரம் ஆகும். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள்தொகை 3,310,597 ஆகும். 1932-1990 காலகட்டத்தில் இது கோர்க்கி ஒப்லாஸ்து என அறியப்பட்டது. இந்த மாகாணம் வழியாக வோல்கா ஆறு கடந்து செல்கிறது.

நீசுனி நோவ்கோரத் மாகாணம்
Nizhny Novgorod Oblast
மாகாணம்
Нижегородская область
நீசுனி நோவ்கோரத் மாகாணம் Nizhny Novgorod Oblast-இன் கொடி
கொடி
நீசுனி நோவ்கோரத் மாகாணம் Nizhny Novgorod Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை
நீசுனி நோவ்கோரத் மாகாணம்
நாடுநீசுனி நோவ்கோரத் மாகாணம் உருசியா
நடுவண் மாவட்டம்வோல்கா
பொருளாதாரப் பகுதிவோல்கா-வையாத்கா
நிர்வாக மையம்நீசுனி நோவ்கோரத்
அரசு
 • நிர்வாகம்நீசுனி நோவ்கோரட்த் சட்டமன்றம்
 • ஆளுநர்வலேரி சாந்த்சொவ்
பரப்பளவு
 • மொத்தம்76,900 km2 (29,700 sq mi)
பரப்பளவு தரவரிசை40வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • மொத்தம்33,10,597
 • Estimate (2018)32,34,752 (−2.3%)
 • தரவரிசை10வது
 • அடர்த்தி43/km2 (110/sq mi)
 • நகர்ப்புறம்78.9%
 • நாட்டுப்புறம்21.1%
நேர வலயம்ஒசநே+03:00 Edit this on Wikidata (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-NIZ
அனுமதி இலக்கத்தகடு52, 152
அலுவல் மொழிகள்உருசியம்
இணையதளம்http://www.government-nnov.ru/

புவியியல்

நீசுனி நோவ்கோரத் மாகாணம் 
நீஷ்னி நொவ்கோரத் ஒப்லாஸ்து வரைபடம்

இந்த ஒப்ளாஸ்து 76.900 சதுர கிலோமீட்டர் (29,700 சதுர மைல்) பரப்பளவு கொண்டுள்ளது. இந்த பகுதியின் நிலப்பரப்பில் வேளாண் நிலம் 41%, காடுகள் பரப்பளவு 48%, ஏரிகள் மற்றும் ஆறுகள், 2%; பிறவகை நிலங்கள் 9% ஆகும். ஒப்லாஸ்து எல்லைகளாக வடக்கில் கொஸ்ட்ரோமா ஒப்லாஸ்து, வடகிழக்கில் கீரோவ் ஒப்லாஸ்து, கிழக்கில் மாரீ எல் குடியரசு மற்றும் சுவாஷ் குடியரசு ஆகியவையும், தெற்கில் மர்தோவியா குடியரசு, தென்மேற்கில் ரயாசன் ஒப்லாஸ்து, மேற்கில் விளாடிமிர் ஒப்லாஸ்து , வடமேற்கில் திறான ஒப்லாஸ்து ஆகியவை உள்ளன.

இயற்கை வளங்கள்

இந்த ஒப்லாஸ்து குறிப்பிடும்படியான மதிப்புமிக்க இயற்கை வளம் அற்றதாக உள்ளது, ஓரளவு மணல் இருப்பு கொண்டுள்ளது. (டைட்டானியம்-ஸிர்கோனியம் மணல் உட்பட), மேலும் களிமண் , ஜிப்சம் , கரி , கனிம உப்பு , மரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு

மாகாணத்தின் மக்கள் தொகை: 3,310,597 ( 2010 கணக்கெடுப்பு ); 3,524,028 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,714,322 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உருசிய இனக்குழுவினர் மக்கள் தொகையில் 3.109.661 ( 95.1% ) உள்ளனர். பிற இன குழுக்களில் தடார்கள் 44,103 ( 1.4%), மோர்தோவர்கள் 19,138 ( 0.6%), உக்ரைனியர்கள் 17,657 ( 0.5% ) மற்றும் வேறுபல இனக்குழுக்கள் இருந்தாலும் ஒவ்வொரு குழுவும் 0.5% க்கும் குறைவாகவே உள்ளனர், 42.349 பேர் மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர். .

  • பிறப்பு (2011): 36,315 (1000 11.0)
  • இறப்பு (2011): 54,184 (1000 16.4 சதவீதம்)

2011 ல் 8.5% இறப்பு குறைந்துள்ளது,( 2010 ஆண்டை ஒப்பிடும்போது ) 2012 முக்கிய புள்ளிவிரங்கள்

  • பிறப்பு: 38,881 (1000 11.8)
  • இறப்பு: 52,771 (1000 16.0)
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:

2009 - 1.43 | 2010 - 1.42 | 2011 - 1.44 | 2012 - 1.55 | 2013 - 1.56 | 2014 - 1.59 (இ)

பொருளாதாரம்

தொழில் துறை உற்பத்தியில் இந்த பிராந்தியம் உருசியாவில் ஏழாவது இடத்தை வகிக்கிறது. பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் 650 க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு செய்கின்றன. கிட்டத்தட்ட 700,000 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பொருள் உற்பத்தி வேலை தொடர்புடைய தொழிலாளர்கள் 62% ஆவர். முன்னணி தொழில் பிரிவினர் பொறியியல் மற்றும் உலோக வேலைகள், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில்கள் , காடுகளைச் சார்ந்த தொழில்கள், மரப்பொருட்கள், மற்றும் காகித தொழிற்சாலைகள் போன்றவை குறிப்பிடத்தக்கதாக உள்ளன.

சமயம்

2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி, இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 69,2% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 2% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள், 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 1% கத்தோலிக்க திருச்சபை, மற்றும் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம் (ஸ்லாவிக் நியோபகனியம்) . மக்கள் தொகையில் 15% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 10% நாத்திகர், 0.8% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.

மேற்கோள்கள்

Tags:

நீசுனி நோவ்கோரத் மாகாணம் புவியியல்நீசுனி நோவ்கோரத் மாகாணம் மக்கள் வகைப்பாடுநீசுனி நோவ்கோரத் மாகாணம் பொருளாதாரம்நீசுனி நோவ்கோரத் மாகாணம் சமயம்நீசுனி நோவ்கோரத் மாகாணம் மேற்கோள்கள்நீசுனி நோவ்கோரத் மாகாணம்உருசியம்உருசியாஉருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்உருசியாவின் மாகாணங்கள்நீசுனி நோவ்கோரத்வோல்கா ஆறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

உயிர்ப்பு ஞாயிறுகொல்கொதாகண்ணனின் 108 பெயர் பட்டியல்மோசேவங்காளதேசம்நியூயார்க்கு நகரம்உவமையணிதமிழ்விடு தூதுமாதவிடாய்உப்புச் சத்தியாகிரகம்தைராய்டு சுரப்புக் குறைபிலிருபின்கனிமொழி கருணாநிதிஆய்த எழுத்து (திரைப்படம்)தங்கம் தென்னரசுபுற்றுநோய்பரிவர்த்தனை (திரைப்படம்)தென்னாப்பிரிக்காசைலன்ஸ் (2016 திரைப்படம்)விஷ்ணுலியோஅரிப்புத் தோலழற்சிநீலகிரி மாவட்டம்அஸ்ஸலாமு அலைக்கும்விஜய் ஆண்டனிசுலைமான் நபிஓம்பதினெண் கீழ்க்கணக்குஇந்தியப் பிரதமர்புங்கைபழமுதிர்சோலை முருகன் கோயில்உரிச்சொல்காதல் (திரைப்படம்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்பெருங்கடல்காதல் மன்னன் (திரைப்படம்)குருதி வகைமீனா (நடிகை)தெலுங்கு மொழிஆதம் (இசுலாம்)முன்னின்பம்வயாகராபணவீக்கம்ஆண்டாள்மதுரைநற்கருணை ஆராதனைதைப்பொங்கல்சாரைப்பாம்புதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்காயத்ரி மந்திரம்மோகன்தாசு கரம்சந்த் காந்திஎஸ். ஜெகத்ரட்சகன்கமல்ஹாசன்சிதம்பரம் மக்களவைத் தொகுதிசப்ஜா விதைமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்சுக்ராச்சாரியார்விலங்குகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிமுக்கூடற் பள்ளுவிளம்பரம்இந்தோனேசியாகபிலர் (சங்ககாலம்)ஊராட்சி ஒன்றியம்பிரெஞ்சுப் புரட்சிஅரவிந்த் கெஜ்ரிவால்பெங்களூர்நன்னூல்மயக்கம் என்னடி. டி. வி. தினகரன்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024ஆடு ஜீவிதம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கணினிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிஅல் அக்சா பள்ளிவாசல்விவிலிய சிலுவைப் பாதைசீரடி சாயி பாபா🡆 More