நிலையான அலை

சமவீச்சு மற்றும் சம அலைநீளம் உடைய இரு முன்னேறு அலைகள்,நேர்க்கோட்டில் எதிரெதிர்த் திசைகளில் செல்லும்போது, ஒன்று மற்றொன்றின் மீது மேற்பொருந்துவதால் நிலையான அலைகள் (standing wave) உருவாகின்றன.

தொகுபயன் வீச்சு பெருமமாகும் இடம் எதிர்கணுக்கள் எனப்படுகிறது. தொகுபயன் வீச்சு சிறுமமாகும் (சுழியாகும்) இடம் கணுக்கள் எனப்படுகிறது.

நிலையான அலை
கருமை நிற அலைகள் நிலையான அலைகள்
நிலையான அலை
கருமை நிற அலைகள் நிலையான அலைகள்

சிறப்பியல்புகள்

நிலையான அலைகளின் சிறப்பியல்புகள் பின்வருமாரு

நிலையான அலை 
கணுக்களும் எதிர்கணுக்களும்
  • அலை வடிவம் நிலையாக இருக்கும்.
  • கணுக்களும் எதிர்கணுக்களும் மாறிமாறி உருவாகின்றன.
  • இடப்பெயர்ச்சி சுழியாகும் புள்ளிகள் கணுக்கள் என்றும் இடப்பெயர்ச்சி பெருமமாகும் புள்ளிகள் எதிர்க்கணுக்கள் என்றும் கூறப்படும்.
  • கணுக்களில் அழுத்த மாற்றம் பெருமமாகவும் எதிர்க்கணுக்களில் அழுத்த மாற்றம் சிறுமமாகவும் இருக்கும்.
  • கணுக்களில் உள்ள துகள்களைத் தவிர மற்ற அனைத்துத் துகள்களும் சம அலைவு காலத்துடன் தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்கின்றன.
  • ஒவ்வொரு துகளின் வீச்சும் சமமல்ல. எதிர்க்கணுக்களில் பெருமமாக உள்ள வீச்சு, குறைந்து கொண்டே சென்று கணுக்களில் சுழியாகும்.
  • கணுக்களில் சுழியாக உள்ள துகள்களின் திசைவேகம், அதிகரித்துச் சென்று எதிர்க் கணுக்களில் பெருமமாகிறது.
  • நிலையான அலையில் ஆற்றல் மாற்றப்படுவதில்லை. ஒவ்வொரு அதிர்வின் போதும், ஊடகத் துகள்கள் அனைத்தும் அவற்றின் நடுநிலைப் புள்ளியை ஒரே காலத்தில் இரு முறைகள் கடக்கின்றன.
  • ஒரு பிரிவிலுள்ள துகள்கள் அனைத்தும் ஒத்த கட்டத்திலும், அடுத்தடுத்த பிரிவிலுள்ள துகள்கள் எதிரெதிர் கட்டத்திலும் அதிர்வடைகின்றன

அதிர்வெண்கள்

நிலையான அலை 
மேலிருந்து முதலில் காணப்படும் நிலையான அலைகள் அடிப்படை அதிர்வெண் கொண்ட அலைகள் மிதம் இருப்பது மேற்சுரங்கள். மேலிருந்து முதலில் காணப்படும் அடிப்படை அதிர்வெண் முதலாம் சீரிசை, பின்னர் மேற்சுரங்கள் இரண்டாம் சீரிசை, மூன்றாம் சீரிசை என வரிசையாகக்கூறப்படுகிறது

அடிப்பபடை அதிர்வெண்கள்

நிலையான அலைகள் பல அதிர்வெண்களின் உருவாகலாம். அப்படியான அதிர்வுகளின் மிகவும் குறைந்த அதிர்வெண் அடிப்படை அதிர்வெண்.

மேற்சுரங்கள்

நிலையான அலைகளில் அடிப்படை அதிர்வெண்களைவிட அதிகமான அதிர்வெண்களில் அதிரும்போது அவை மேற்சுரங்கள் எனப்படுகிறது.

சீரிசை

நிலையான அலைகள் பல அதிர்வெண்களில் அதிரலாம். அடிப்படை அதிர்வெண் முதலாம் சீரிசை, பின்னர் மேற்சுரங்கள் இரண்டாம் சீரிசை, மூன்றாம் சீரிசை என வரிசையாகக்கூறப்படுகிறது

எடுத்துக்காட்டுகள்

இழுவிசையுடன் உள்ள கம்பியை அதிர்வூட்டும் போது, முன்னேறும் குறுக்கலை உருவாகி, கம்பியின் ஒரு முனைக்குச் சென்று எதிரொலித்து மீண்டு வரும். எனவே நிலையான அலைகள் உருவாகின்றன.

மேற்கோள்கள்

Tags:

நிலையான அலை சிறப்பியல்புகள்நிலையான அலை அதிர்வெண்கள்நிலையான அலை எடுத்துக்காட்டுகள்நிலையான அலை மேற்கோள்கள்நிலையான அலைஅலைஅலைநீளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முகலாயப் பேரரசுஇட்லர்ரத்னம் (திரைப்படம்)விளக்கெண்ணெய்சிந்துவெளி நாகரிகம்வெட்சித் திணைதிரிகடுகம்சூரைஅம்மனின் பெயர்களின் பட்டியல்கொடுக்காய்ப்புளிதிருப்பாவைதமிழ் எண்கள்தேஜஸ்வி சூர்யாகள்ளுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பல்லவர்ஏப்ரல் 27காடுபிரபஞ்சன்டிரைகிளிசரைடுதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்மு. க. முத்துகல்லீரல்புவிபாசிசம்தமிழ் எழுத்து முறைஅந்தாதிமுன்மார்பு குத்தல்மூலம் (நோய்)தமிழ்நாட்டின் நகராட்சிகள்கலிங்கத்துப்பரணிபுறாதிருமந்திரம்ஆசாரக்கோவைசிவவாக்கியர்அவுரி (தாவரம்)வெள்ளியங்கிரி மலை69 (பாலியல் நிலை)மாரியம்மன்வேதநாயகம் பிள்ளைபெயரெச்சம்இலங்கையின் தலைமை நீதிபதிபூனைநாயன்மார் பட்டியல்மு. கருணாநிதிஜே பேபிமயங்கொலிச் சொற்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மதுரை வீரன்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்சரண்யா பொன்வண்ணன்முதலாம் உலகப் போர்பாரதி பாஸ்கர்சுற்றுச்சூழல்தண்டியலங்காரம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019நாயன்மார்சிலம்பரசன்எண்பெயர்ச்சொல்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வெந்தயம்இலட்சம்தன்னுடல் தாக்குநோய்நிணநீர்க்கணுகுமரகுருபரர்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தன்யா இரவிச்சந்திரன்சுப்பிரமணிய பாரதிமுத்தொள்ளாயிரம்கழுகுஉமறுப் புலவர்காதல் கொண்டேன்அமலாக்க இயக்குனரகம்சுய இன்பம்🡆 More