த டூ டவர்ஸ்

த லார்டு ஆப் த ரிங்ஸ்: த டூ டவர்ஸ் (ஆங்கில மொழி: The Lord of the Rings: The Two Towers) என்பது 2002 ஆம் ஆண்டு பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில் வெளியான அமெரிக்க நாட்டு காவிய கனவுருப்புனைவு சாகசத் திரைப்படம் ஆகும்.

இது ஜே. ஆர். ஆர். டோல்கீன் எழுதிய த லோட் ஒவ் த ரிங்ஸ் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அத்துடன் இந்த படம் த லார்டு ஆப் த ரிங்ஸ் திரைப்படத் தொடரின் இரண்டாவது பாகமாக வெளிவந்தது. பேரி எம். ஆஸ்போன், பிரான் வால்ஸ் மற்றும் ஜாக்சன் ஆகியோர் இந்த திரைப்படத்தை தயாரித்தனர். வால்ஸ், பிலிப்பா போயன்ஸ், ஸ்டீபன் சிங்க்ளர் மற்றும் ஜாக்சன் ஆகியோர் இந்த திரைப்படத்தை எழுதினர். இந்த திரைப்படத்தில் எலியா வுட், இயன் மெக்கெல்லன், லிவ் டைலர், விக்கோ மோர்டென்சென், சீன் ஆஸ்டின், கேட் பிளான்சேட், ஜோன் ரைஸ்-டேவிஸ், பெர்னாட் ஹில், கிறிஸ்டோபர் லீ, பில்லி பாய்ட், டோமினிக் மோனகன், ஆர்லாந்தோ புளூம், ஹியூகோ வீவிங், மிராண்டா ஓட்டோ, டேவிட் வென்கம், பிராட் டௌரிப், கார்ல் அர்பன் மற்றும் ஆண்டி செர்கிஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (2001) திரைப்படமும், இந்த திரைப்படத்திற்கு பின்னர் 2003 ஆம் ஆண்டில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் என்ற படமும் வெளியானது.

த லார்டு ஆப் த ரிங்ஸ்:
த டூ டவர்ஸ்
த டூ டவர்ஸ்
இயக்கம்பீட்டர் ஜாக்சன்
தயாரிப்பு
மூலக்கதைத டூ டவர்ஸ்
படைத்தவர்
ஜே. ஆர். ஆர். டோல்கீன்
திரைக்கதை
  • பிரான் வால்ஸ்
  • பிலிப்பா போயன்ஸ்
  • ஸ்டீபன் சிங்க்ளர்
  • பீட்டர் ஜாக்சன்
இசைஹோவர்ட் ஷோர்
நடிப்பு
ஒளிப்பதிவுஆண்ட்ரூ லெஸ்னி
படத்தொகுப்பு
  • மைக்கேல் ஹார்ட்டன்
விநியோகம்நியூ லைன் சினிமா
வெளியீடுதிசம்பர் 5, 2002 (2002-12-05)(ஜியக்பெல்ட் திரையரங்கம்)
18 திசம்பர் 2002 (ஐக்கிய அமெரிக்கா)
19 திசம்பர் 2002 (நியூசிலாந்து)
ஓட்டம்179 நிமிடங்கள்
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு94 மில்லியன்
மொத்த வருவாய்947.5 மில்லியன்

த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் திரைப்படத்தின் கதையை தொடரும் இந்த திரைப்படத்தில், கதையானது மூன்று வழிகளில் நகர்கிறது. புரோடோ மற்றும் சாம் அந்த ஒரு மோதிரத்தை அழிப்பதற்காக மோர்டோரை நோக்கிய தங்களது பயணத்தை தொடர்கின்றனர். வழியில் அவர்கள் மோதிரத்தின் முன்னாள் உரிமையாளரான கோலுமை சந்திக்கின்றனர். கோலும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறது. ஆரகோன், லெகோலஸ் மற்றும் கிம்லி ஆகியோர் போரால் பாதிக்கப்பட்ட நாடான ரோகனுக்கு வருகின்றனர். அங்கு உயிர்த்தெழுந்த கான்டால்புடன் மீண்டும் இணைந்து கொள்கின்றனர். ஹெல்ம்'ஸ் டீப் யுத்தத்தில் போரிடுகின்றனர். மெர்ரி மற்றும் பிபின் பிடியிலிருந்து தப்பிக்கின்றனர். என்டு எனப்படும் ட்ரீபியர்டை சந்திக்கின்றனர். ஐசென்கார்ட் மீதான தாக்குதலுக்கு உதவி செய்கின்றனர்.

இந்த படமானது அமெரிக்க திரைப்பட நிறுவனமான நியூ லைன் சினிமாவால் நிதியுதவி அளிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. ஆனால் த லார்ட் ஆப் த ரிங்ஸ் திரைப்பட தொடரின் திரைப்படங்கள் அனைத்தும் முழுவதுமாக இயக்குனர் ஜாக்சனின் சொந்த நாடான நியூசிலாந்தில் படமாக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டன. இந்த திரைப்பட தொடரின் மூன்று திரைப்படங்களும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டன. இந்தத் திரைப்படம் நியூயார்க்கின் ஜியக்பெல்ட் திரையரங்கத்தில் டிசம்பர் 5, 2002 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்டது. டிசம்பர் 18, 2002 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. டிசம்பர் 19, 2002 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படமானது விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகிய இரு தரப்பினராலும் வரவேற்கப்பட்டது. திரைப்பட உருவாக்குதலில் ஒரு மைல்கல் என கருதப்படுகிறது. கற்பனை வகை திரைப்படங்களில் ஒரு சாதனை என்றும் கருதப்படுகிறது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஐஅ$951.2 மில்லியன் (6,802.6 கோடி) வசூல் செய்தது. இதன்மூலம் 2002 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படமாக இப்படம் ஆனது. மேலும் அந்நேரம் வரை எக்காலத்திலும் வெளிவந்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றது.

இந்த திரைப்படமானது எக்காலத்திலும் உருவாக்கப்பட்ட கற்பனை திரைப்படங்களில் சிறப்பானதும் மற்றும் அதிக செல்வாக்குப் பெற்ற திரைப்படமாகவும் கருதப்படுகிறது. இந்த திரைப்படம் பல்வேறு பாராட்டுக்களை பெற்றது. 75 ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த தயாரிப்பு, சிறந்த திரை இயக்கம், சிறந்த இசை கலவை, சிறந்த இசை இயக்கம் மற்றும் சிறந்த திரை வண்ணம் ஆகிய 6 விருதுகளுக்கு இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. கடைசி இரண்டு பரிந்துரைகளுக்கு விருதை வென்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஆண்டி செர்கிஸ்ஆர்லாந்தோ புளூம்இயன் மெக்கெல்லன்எலியா வுட்ஐக்கிய அமெரிக்காகனவுருப்புனைவுத் திரைப்படம்கார்ல் அர்பன்காவியத் திரைப்படம்கேட் பிளான்சேட்சாகசத் திரைப்படம்சீன் ஆஸ்டின்ஜே. ஆர். ஆர். டோல்கீன்ஜோன் ரைஸ்-டேவிஸ்டோமினிக் மோனகன்த லார்டு ஆப் த ரிங்ஸ் (திரைப்படத் தொடர்)த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங்த லோட் ஒவ் த ரிங்ஸ்பீட்டர் ஜாக்சன்பேரி எம். ஆஸ்போன்மிராண்டா ஓட்டோலிவ் டைலர்விக்கோ மோர்டென்சென்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிணநீர்க்கணுகான்கோர்டுதிருட்டுப்பயலே 2கிருட்டிணன்திருநாவுக்கரசு நாயனார்ஆடு ஜீவிதம்நியூயார்க்கு நகரம்சூல்பை நீர்க்கட்டிஜெயகாந்தன்108 வைணவத் திருத்தலங்கள்பேரூராட்சிகுறுந்தொகைசுரதாவேற்றுமை (தமிழ் இலக்கணம்)முதலாம் இராஜராஜ சோழன்நஞ்சுக்கொடி தகர்வுபெரும் இன அழிப்புதமிழர் அளவை முறைகள்அ. கணேசமூர்த்திசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்விஜய் ஆண்டனிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ் எண்கள்திதி, பஞ்சாங்கம்சுக்ராச்சாரியார்நெல்லியாளம்காதல் (திரைப்படம்)பகவத் கீதைசட் யிபிடிமீனா (நடிகை)கள்ளுநெசவுத் தொழில்நுட்பம்கிறிஸ்தவம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதமிழர் நிலத்திணைகள்மருதமலை முருகன் கோயில்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்ஊரு விட்டு ஊரு வந்துவால்ட் டிஸ்னிபணவீக்கம்ஆ. ராசாதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்வட்டாட்சியர்கண்ணனின் 108 பெயர் பட்டியல்பிள்ளைத்தமிழ்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிபூட்டுகுறை ஒன்றும் இல்லை (பாடல்)சிறுநீரகம்சு. வெங்கடேசன்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஇந்தியத் தேர்தல் ஆணையம்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிமீன்இந்திய வரலாறுஇடைச்சொல்சுடலை மாடன்வீரமாமுனிவர்தீரன் சின்னமலைமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்உரிச்சொல்சிலுவைப் பாதைவிருத்தாச்சலம்குமரி அனந்தன்இரசினிகாந்துஉப்புச் சத்தியாகிரகம்பரிவர்த்தனை (திரைப்படம்)அரக்கோணம் மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளிதினகரன் (இந்தியா)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பொன்னுக்கு வீங்கிதமிழ் இலக்கணம்முல்லைப்பாட்டுசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்🡆 More