தேலேஸ்

மிலேத்தசின் தேலேசு (Thales of Miletus, கிரேக்க மொழி: Θαλῆς (ὁ Μιλήσιος), தேலேசு (Thalēs; /ˈθeɪliːz/, தேலிஸ்; அண்.

கிமு 546) என்பவர் அனத்தோலியாவில் மிலீட்டஸ் நகரைச் சேர்ந்த சாக்கிரட்டீசுக்கு முந்திய கிரேக்க மெய்யியலாளர் ஆவார். இவர் கிரேக்கத் தொன்மத்தின் ஏழு ஞானிகளுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். கிரேக்க மெய்யியலில் இவர் முதன்மையானவர் எனக் குறிப்பாக அரிசுட்டாட்டில் போன்றோர் கருதினர். கிரேக்கத் தன்னியல்பு பொருள்முதல் வாத மெய்யியற் பள்ளியைத் தொடங்கி வைத்தவரும் இவரே. இயற்கையின் தொன்முதல் நெறிமுறை ஆகவும் பொருண்மத்தின் தன்மையாகவும் நீரை இவர் கருதியதாக அரிசுட்டாட்டில் கூறுகிறார். எனவே இவர்தான் நிலவும் அனைத்துப் பண்டங்களுக்குமான அடிப்படையைப் புலன்களால் உணரமுடிந்த ஒற்றைப் புறநிலை நெறிமுறையால்முதலில் விளக்கியவராவார்.

தேலேசு
Thales
தேலேஸ்
பிறப்புஅண். கிமு 624
இறப்புஅண். கிமு 546
காலம்சாக்ரட்டீசுக்கு முந்திய மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளி
முக்கிய ஆர்வங்கள்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
செல்வாக்குச் செலுத்தியோர்
    • பாபிலோனிய வானியல்
    • பண்டைய எகிப்தியக் கணிதம்
    • பண்டைய எகிப்திய சமயம்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

தேலேசு இயற்கை நிகழ்வுகளைத் தொன்மத்தைப் பயன்படுத்தாமல் விளக்கினார். பெரும்பாலும் பிற அனைத்துச் சாக்ரட்டீசுக்கு முந்திய மெய்யியலாருமே அறுதி பொருளையும் மாற்றத்தையும் உலக நிலவலையும் இவரைப் பின்பற்றித் தொன்மம் சாராமலே விளக்கினர். இந்த தொன்மம் தவிர்த்தல் போக்கு அறிவியல் புரட்சியை ஏற்படுத்தியது. இவர்தான் அனைத்துக்குமான பொது நெறிமுறையையும் கருதுகோள்களையும் உருவாக்கிப் பயன்படுத்தியவர். எனவே இவர் "அறிவியலின் தந்தை" எனவும் போற்றப்படுகிறார். என்றாலும் சிலர் இத்தகுதி தெமாக்கிரித்தசுக்கே பொருந்தும் என்கின்றனர்.

பட்டைக்கூம்புகளின் உயரத்தையும் கடற்கரையில் இருந்து கப்பல் உள்ள தொலைவையும் கண்டறிய, இவர் கணிதவியலில் வடிவவியலைப் பயன்படுத்தினார். இவர்தான் முதலில் தேலேசுத் தேற்றத்தின் கிளைத்தேற்றங்களைக் கண்டறிய பகுப்புவழி பகுத்தறிதல் முறையைப் பயன்படுத்தினார். எனவே இவரே முதல் கணிதவியலாராக, ஏன், கணிதவியலின் கண்டுபிடிப்பாளராகவே கருதப்படுகிறார்.

இவர் கிமு 585-84 இல் சூரிய ஒளிமறைப்பை முன்கணித்துள்ளார். ஆம்பர் என்னும் பொருளை துணியில் தேய்த்த பின் அது வைக்கோல் துண்டுகளை ஈர்க்கும் திறம் பெறுகின்றது என கண்டுபிடித்தார். அம்பரின் இப் பண்பைப் பற்றி கிமு 300களில் வாழ்ந்த பிளாட்டோ என்பாரும் குறித்துள்ளார். மின்சாரத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றான மின் தன்மை இவ்வகைக் கண்டுபிடிப்பில் இருந்து தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.

மேலும் காண்க

குறிப்புகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Tags:

தேலேஸ் மேலும் காண்கதேலேஸ் குறிப்புகள்தேலேஸ் உசாத்துணைதேலேஸ் வெளி இணைப்புகள்தேலேஸ்அனத்தோலியாஅரிசுட்டாட்டில்உதவி:IPA/Englishகிரேக்க மொழிசாக்கிரட்டீசுமிலீட்டஸ்மெய்யியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் எண் கணித சோதிடம்சேக்கிழார்மயில்பத்து தலவேதாத்திரி மகரிசிசித்தார்த்ஆடுஎட்டுத்தொகை தொகுப்புவிளையாட்டுதிருமந்திரம்மு. மேத்தாநுரையீரல்தமிழ்மதராசபட்டினம் (திரைப்படம்)திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதயாநிதி மாறன்சங்க காலப் புலவர்கள்உன்னை நினைத்துமுருகன்அழகர் கோவில்அகத்தியர்கருணாநிதி குடும்பம்வே. தங்கபாண்டியன்தேனீதிருவள்ளுவர்கட்டுரைவேதநாயகம் பிள்ளைஅளபெடைஇரண்டாம் உலகப் போர்கௌதம புத்தர்செஞ்சிக் கோட்டைசீனாஜவகர்லால் நேருபொது ஊழிபெண்நாளந்தா பல்கலைக்கழகம்நுரையீரல் அழற்சிபாரத ஸ்டேட் வங்கிஒற்றைத் தலைவலிசிதம்பரம் மக்களவைத் தொகுதிதமிழ்ப் புத்தாண்டுகொன்றை வேந்தன்முரசொலி மாறன்உணவுகுணங்குடி மஸ்தான் சாகிபுசிவபெருமானின் பெயர் பட்டியல்வெள்ளையனே வெளியேறு இயக்கம்கணையம்ஹஜ்பஞ்சபூதத் தலங்கள்நீக்ரோமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்வி.ஐ.பி (திரைப்படம்)பரணி (இலக்கியம்)உருவக அணிதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்மு. க. ஸ்டாலின்காச நோய்வரலாறுவெள்ளியங்கிரி மலைநாம் தமிழர் கட்சிதீநுண்மிஊராட்சி ஒன்றியம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)நயன்தாராஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்விசுவாமித்திரர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சுவாதி (பஞ்சாங்கம்)திராவிட முன்னேற்றக் கழகம்சென்னை சூப்பர் கிங்ஸ்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஐஞ்சிறு காப்பியங்கள்கம்போடியாதமிழ்நாடு காவல்துறைநம்மாழ்வார் (ஆழ்வார்)எருதுகலாநிதி மாறன்🡆 More