ஃபாலன் கிங்டம்

ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் (Jurassic World: Fallen Kingdom) என்பது 2018 -இல் வந்த அமெரிக்க   அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும். மேலும் இது ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுதியின் இரண்டாம் படமும், ஒட்டுமொத்த ஜுராசிக் பார்க் தொடரின் ஐந்தாம் படமும் ஆகும்.

இதற்கு முந்தைய படத்தின் இயக்குனர் கோலின் திரெவாரோவும் முதல் இரண்டு படங்களை இயக்கிய ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கும் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகச் செயல்பட்டுள்ளனர்.

ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்
Jurassic World: Fallen Kingdom
இயக்கம்ஜே. ஏ. பெயோனா
கதை
  • கொலின் திரெவாரோ
  • டெரெக் கொன்னோலி
மூலக்கதைமைக்கேல் கிரைட்டன் இயற்றிய கதாபாத்திரங்கள்
இசைமைக்கேல் ஜியாச்சினோ
நடிப்பு
  •  கிறிஸ் பிராட்
  • பிரைஸ் டல்லஸ் ஹோவர்ட்
  • ரஃபே ஸ்பல்
  • ஜஸ்டிஸ் ஸ்மித்
  • டானியெல்லா பினெடா
  • ஜேம்ஸ் கிராம்வெல்
  • டோபி ஜோன்ஸ்
  • டெட் லெவின்
  • பி. டி. வோங்
  • இசபெல்லா செர்மன்
  • ஜெரால்டின் சாப்ளின்
  • ஜெஃப் கோல்ட்ப்ளும்
ஒளிப்பதிவுஆஸ்கார் ஃபோரா
படத்தொகுப்புபெர்னாட் விலாப்லானா
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுமே 21, 2018 (2018-05-21)(WiZink மையம்)
சூன் 22, 2018 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்128 மணித்துளிகள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$ 17 கோடி
மொத்த வருவாய்$ 130.8 கோடி

முந்தைய படத்தின் கதைக்களமான ஈஸ்லா நுப்லார் தீவிலேயே இப் படத்தின் கதையும் நடைபெறுகிறது. இத் தீவு ஓர் எரிமலை வெடிப்பால் அழியுமுன் ஓவன் கிராடி-யும் கிளேர் டியரிங்-கும் அங்கு எஞ்சியுள்ள தொன்மாக்களை மீட்க முயல்கின்றனர்.  

முந்தைய படத்தில் நடித்த  கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட், பி. டி. வோங் ஆகியோர் மீண்டும் நடித்துள்ளனர். முதல் இரண்டு படங்களில் தோன்றிய ஜெஃப் கோல்ட்ப்ளும் தன் பாத்திரத்தை மீண்டும் ஏற்றுள்ளார். பிறர் புதுமுகங்களாவர்.

படப்பிடிப்பானது 2017 பிப்ரவரி முதல் ஜூலை வரை பிரிட்டனிலும் ஹவாயிலும் நடைபெற்றது. முதன்முதலாக மத்ரித்தில் மே 21 2018  அன்று இப்படம் திரையிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் ஜூன் 22, 2018 , அன்று  வெளியானது. மேலும் தமிழில் ஜுராசிக் வேர்ல்ட்: சரிந்த சாம்ராஜ்யம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. 

உலகளவில் $ 130 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய இப் படம் , 100 கோடி டாலர் இலக்கைக் கடந்த மூன்றாவது ஜுராசிக் வரிசைப் படமாக அமைந்தது. மேலும் 2018-இல் அதிக வருவாய் ஈட்டிய மூன்றாவது படமாகவும்  , இதுவரை அதிக வருவாய் ஈட்டிய 12-ஆவது படமாகவும் ஆனது. இப் படத்தில் பிராட் மற்றும் ஹோவர்டின் நடிப்பு, பெயோனாவின் இயக்கம், காட்சி வேலைப்பாடுகள் மற்றும் "வியத்தகு இருண்ட தருணங்கள்" ஆகியவை பாராட்டப்பெற்றன. , மறுபுறம் இத் தொடர் முன்பே நிறைந்திருக்கவேண்டியது என்பதாகக் கூறிய சில திறனாய்வாளர்கள் இப் படத்தின் திரைக்கதை மற்றும் கதைப்போக்கை விமர்சித்தனர்.

இதன் தொடர்ச்சியாக மீண்டும் திரெவாரோ இயக்கத்தில் ஜுராசிக் வேர்ல்ட் : டொமினியன் என்ற படம் ஜூன் 10, 2022 அன்று வெளியானது.

கதைச்சுருக்கம்

2015-ஆம் ஆண்டு ஈஸ்லா நுப்லார் தீவிலிருந்த ஜுராசிக் வேர்ல்ட் அழிந்தபின்,அப் பூங்காவின் கடற்காயலில் இறந்துபோன இன்டாமினஸ் ரெக்ஸ்-இன் டி.என்.ஏவைச் சேகரிக்க ஒரு கூலிப்படை வருகிறது. அதன் எலும்பொன்றை எடுத்தபின் அவர்களை டைரனோசாரஸ் ரெக்ஸ், மோஸசாரஸ் ஆகியன தாக்குகின்றன. இதில் ஒருவர் உயிரிழந்தபின் பிறர் தீவிலிருந்து தப்புகின்றனர்.

2018-ஆம் ஆண்டில் வாசிங்டன், டி. சி.யிலுள்ள அமெரிக்க மேலவை, ஈஸ்லா நுப்லாரில் நிகழவுள்ள எரிமலை வெடிப்பிலிருந்து அங்குள்ள தொன்மாக்களை மீட்பது குறித்து ஆலோசிக்கிறது. பல ஆண்டுகளுக்குமுன் அங்கிருந்த ஜுராசிக் பார்க் அழிந்தபோது தப்பிய கணித வல்லுநர் இயான் மால்கம் சாட்சியமளிக்கையில், ஜான் ஹேமன்ட் செய்த தவறைத் திருத்தவேண்டுமெனில் அவ்விலங்குகளைச் சாகவிடவேண்டும் என வலியுறுத்துகிறார்.

இதற்கிடையே ஜுராசிக் வேர்ல்ட்-டின் முன்னாள் செயன்முறை மேலாளரான கிளேர் டியரிங், தொன்மாக்களைக் காக்கும் நோக்கில் Dinosaur Protection Group என்ற அமைப்பை நிறுவுகிறார். தொன்மாக்களை மீட்பதற்கு எதிராக மேலவையில் தீர்மானம் நிறைவேறுவதைத் தொடர்ந்து, ஹேமன்டின் முன்னாள் கூட்டாளியான பெஞ்சமின் லாக்வுட், கிளேரை வடக்கு கலிபோர்னியாவிலுள்ள தன் பண்ணை வீட்டுக்கு வரவழைக்கிறார். லாக்வுட்டும் அவரது உதவியாளர் ஈலை மில்ஸும், தொன்மாக்களை ஒரு புதிய தீவுக் காப்பகத்துக்கு மாற்றும் திட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ஈஸ்லா நுப்லாரின் விலங்குகளைக் கண்டறியத் தேவையான பின்தொடர்வுக் கட்டமைப்பை மீளியக்க கிளேரின் உதவி தேவைப்படுகிறது. அங்கு எஞ்சியுள்ள ஒரே வெலாசிராப்டரான புளூ-வை மீட்கும் பொறுப்பை ஜுராசிக் வேர்ல்ட்-டின் முன்னாள் ராப்டர் பயிற்சியாளரும் தன் முன்னாள் தோழனுமான ஓவன் கிரேடியிடம் கிளேர் ஒப்படைக்கிறார்.

இதன்பின் கிளேரும் ஜுராசிக் வேர்ல்ட்-டின் முன்னாள் தொழில்நுட்ப வல்லுநர் பிராங்க்ளின் வெப்-பும் ஈஸ்லா நுப்லாருக்குச் சென்று அதன் கண்காணிப்புக் கட்டமைப்பை மீளியக்குகின்றனர். இவ்வேளையில் கென் வீட்லி தலைமையிலான கூலிப்படையோடு இணையும் ஓவனும் தொல்விலங்கு மருத்துவர் ஸியா ரோட்ரிக்ஸும் புளூவை மீட்கின்றனர். அப்போது குழுவினருக்குள் ஏற்படும் மோதலில் புளூ சுடப்படுகிறது. வீட்லி ஓவனை மயக்கப்படுத்துகிறார். இவரையும் கிளேர், பிராங்க்ளின் ஆகியோரையும் தீவில் கைவிட்டபின், புளூவிற்கு சிகிச்சையளிக்க ஸியாவைப் பணையக்கைதியாக அழைத்துச் செல்கிறார் வீட்லி. மீட்கப்பட்ட தொன்மாக்களோடு கூலிப்படைக் கப்பல் தலைநிலம் திரும்புகிறது. பிற விலங்குகள் எரிமலை வெடிப்பில் இறக்கின்றன. மயிரிழையில் அக் கப்பலுக்குள் நுழையும் கிளேர், ஓவன், பிராங்க்ளின் ஆகியோர், டி-ரெக்ஸின் குருதியை புளூவுக்கு மாற்றி அதன் உயிரைக் காக்க ஸியாவுக்கு உதவுகின்றனர். மேலும், மீட்கப்பட்ட தொன்மாக்கள் எதற்காகவோ ஒரு இரகசிய இடத்துக்குக் கொண்டுசெல்லப்படுவதை உணர்கின்றனர்.

இதற்கிடையே லாக்வுட் மாளிகையில், மில்ஸும் ஏலதாரர் எவர்சோலும், மீட்கப்பட்ட தொன்மாக்களை கறுப்புச் சந்தையில் ஏலம் விட இரகசியமாகத் திட்டமிடுகின்றனர். மேலும் இன்டாமினஸ் மற்றும் ராப்டர் டி.என்.ஏக்களைக் கொண்டு மரபியலாளர் ஹென்றி வூ உருவாக்கிய ஆயுதமயமான கலப்பினத் தொன்மாவான இன்டோராப்டரை முன்னோட்டமிடவும் எண்ணுகின்றனர். புளூவின் குருதியில் கலப்பு ஏற்பட்டுள்ளதை அறியாத வூ, அதன் டி.என்.ஏவைக் கொண்டு, கட்டளைகளுக்குப் பணியும் மேம்பட்ட இன்டோராப்டர் ஒன்றை உருவாக்க எண்ணுகிறார். இவையனைத்தையும் ஒட்டுக்கேட்கும் மெய்ஸி (லாக்வுட்-டின் பேர்த்தி), தன் தாத்தாவிடம் இதைத் தெரிவிக்கிறார். மில்ஸின் திட்டத்தை எதிர்க்கும் லாக்வுட், அவரால் கொல்லப்படுகிறார். (மெய்ஸி உண்மையில் லாக்வுட்டின் காலமான மகளிடமிருந்து படியெடுக்கப்பட்டவர் எனவும், இதுபோன்ற முயற்சியை எதிர்த்த ஹேமன்ட், லாக்வுட் உடனான நட்பை முறித்துக்கொண்டமையும் பின்னர் தெரியவருகிறது.)

மீட்கப்பட்ட தொன்மாக்கள் லாக்வுட் மாளிகைக்குக் கொண்டுவரப்பட்டபின், அவற்றுள் பல ஏலத்தில் எடுக்கப்படுகின்றன. பிணைக்கைதியாக உள்ள ஸியாவை பிராங்க்ளின் மீட்கிறார். ஆனால் ஓவனும் கிளேரும் சிறையாகின்றனர். பின் ஸ்டிஜிமோலோக் ஒன்றைத் தூண்டித் தங்கள் சிறையை உடைக்கச்செய்து இருவரும் வெளியேறுகின்றனர். இவர்களுடன் மெய்ஸி இணைகிறார். மேலும் இது முன்வடிவு மட்டுமே என்ற வூவின் எதிர்ப்பையும் மீறி இன்டோராப்டர் விற்கப்படுவதை அறிகின்றனர். ஸ்டிஜிமோலோக்கை ஏல அறைக்குள் அனுப்பி குழப்பம் விளைவிக்கிறார் ஓவன். இதைத் தொடர்ந்து இன்டோராப்டரின் பல் ஒன்றைப் பிடுங்கிப் பதக்கமாக்க விரும்பி அதை மயக்கப்படுத்துகிறார் வீட்லி. எனினும் மயக்கமுற்றதுபோல வெறுமனே நடிக்கும் அத் தொன்மா, அவரையும் எவர்சோல் உள்ளிட்ட பிறரையும் கொல்கிறது. பின்னர் தப்பிச் செல்கையில் ஓவன்,கிளேர், மெய்ஸி ஆகியோரை மாளிகையூடே துரத்துகிறது. இறுதியில் ஸியா, புளூவை விடுவித்து இன்டோராப்டருடன் மோதச் செய்கிறார். இரு விலங்குகளும் சண்டையிட்டவாறே உயரமான ஒரு கண்ணாடிக்கூரைக்குச் செல்கின்றன.அங்கிருந்து இன்டோராப்டர், ஒரு டிரைசெரடாப்ஸ் எலும்புக்கூட்டின் கொம்பின்மீது விழுந்து இறக்கிறது. புளூ தப்புகிறது.

இதன்பின் சிறைப்பட்ட தொன்மாக்கள் உள்ள கிடங்கில் ஹைட்ரஜன் சயனைட் நச்சுவளி கசிவதால் அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. ஓவனின் எதிர்ப்பை மீறி அவற்றை விடுவிக்கிறார் மெய்ஸி. இன்டாமினஸின் எலும்புடன் தப்ப முயலும் மில்ஸை டி-ரெக்ஸ் கொன்று அவ்வெலும்பையும் மிதித்து அழிக்கிறது. ஓவன், கிளேர், மெய்ஸி, ஸியா, பிராங்க்ளின் ஆகியோர் தப்புகின்றனர். புளூவும் பிற தொன்மாக்களும் லாக்வுட் மாளிகைப் பகுதியிலிருந்து வெளியேறுகின்றன.

பின்னர் அமெரிக்க மேலவையின் புதிய அமர்வொன்றில் பேசும் மால்கம், மனிதர்களும் தொன்மாக்களும் இணைந்து வாழவேண்டிய புதிய ஜுராசிக் காலம் பிறந்துள்ளதை அறிவிக்கிறார். படத்தின் இறுதிக் காட்சியில், விடுதலையான பல்வேறு தொன்மாக்கள், காட்டிலும் புறநகர்ப் பகுதிகளிலும் உலவுகின்றன.

நடித்தவர்கள்

முதன்மைக் கட்டுரை: ஜுராசிக் பார்க் தொடரில் தோன்றிய கதைமாந்தரின் பட்டியல்

எண் கதைமாந்தர் நடித்தவர் குறிப்பு
1 ஓவன் கிரேடி

(Owen Grady)

கிறிஸ் பிராட்

(Chris Pratt)

முன்னாள் கடற்படை வீரர்; விலங்கின நடத்தையியல் வல்லுநர்; ஜுராசிக் வேர்ல்ட் பூங்காவின் முன்னாள் ராப்டர் பயிற்சியாளர்
2 கிளேர் டியரிங்

(Claire Dearing)

பிரைஸ் டல்லஸ் ஹோவார்டு

(Bryce Dallas Howard)

ஜுராசிக் வேர்ல்ட் -டின் முன்னாள் செயன்முறை மேலாளர் ; தொன்மா உரிமை ஆர்வலர்; தற்போது Dinosaur Protection Group அமைப்பின் தலைவர்
3 ஈலை மில்ஸ்

(Eli Mills)

ரஃபே ஸ்பல்

(Rafe Spall)

லாக்வுட்-டின் பேராசை கொண்ட உதவியாளர்
4 பிராங்க்ளின் வெப்

(Franklin Webb)

ஜஸ்டிஸ் ஸ்மித்

(Justice Smith)

ஜுராசிக் வேர்ல்ட் -டின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்; தற்போது Dinosaur Protection Group அமைப்பின் கணினி ஆய்வாளர் மற்றும் கொந்தர்
5 ஸியா ரோட்ரிக்ஸ்

(Zia Rodriguez)

டானியெல்லா பினெடா

(Daniella Pineda)

அமெரிக்க ஈரூடகப் படையில் பணியாற்றியவர்; தற்போது Dinosaur Protection Group அமைப்பின் தொல்விலங்கு மருத்துவர்
6 சர் பெஞ்சமின் லாக்வுட்

(Sir Benjamin Lockwood)

ஜேம்ஸ் குரோம்வெல் 

(James Cromwell )

தொன்மாக்களைப் படியெடுக்கும் தொழில்நுட்பத்தை ஹேமன்டுடன் இணைந்து உருவாக்கியவர்
7 எவர்சோல்

(Mr. Eversoll)

டோபி ஜோன்ஸ்

(Toby Jones)

ஈஸ்லா நுப்லார் தொன்மாக்களை விற்கும் ஏலதாரர்
8 கென் வீட்லி

(Ken Wheatley)

டெட் லெவின்

(Ted Levine)

ஈஸ்லா நுப்லார் தொன்மா மீட்பு நடவடிக்கைத் தலைவர்
9 ஹென்றி வூ

(Dr. Henry Wu)

பி. டி. வோங்

(B. D. Wong)

ஜுராசிக் பார்க் , ஜுராசிக் வேர்ல்ட் ஆகிய இரு பூங்காக்களிலும் தலைமை மரபணு வல்லுநராக  இருந்தவர்
10 மெய்ஸி லாக்வுட் (Maisie Lockwood) இசபெல்லா செர்மன்

(Isabella Sermon)

லாக்வுட் -டின் பேர்த்தி
11 ஐரிஸ் (Iris) ஜெரால்டின் சாப்ளின்

(Geraldine Chaplin )

மெய்ஸி-யின் செவிலித்தாய்; லாக்வுட்-டின் மாளிகை மற்றும் குடும்ப ரகசியங்களின் காப்பாளர்
12 இயான் மால்கம்

(Dr.Ian Malcolm)

ஜெஃப் கோல்ட்ப்ளும் (Jeff Goldblum) கணித வல்லுநர் மற்றும் ஒழுங்கின்மைக் கோட்பாட்டாளர்;ஜுராசிக் பார்க் அழிந்தபோது உயிர்தப்பியவர்
13 செனட்டர் ஷெர்வுட்

(Senator Sherwood)

பீட்டர் ஜேசன் (Peter Jason ) எரிமலை வெடிக்குமுன் தொன்மாக்களை மீட்பது குறித்து விவாதிக்கும் மேலவை உறுப்பினர்

தயாரிப்பு

திரையில் தோன்றிய உயிரினங்கள்

மேலும் பார்க்க: ஜுராசிக் பார்க் தொடரில் தோன்றிய விலங்குகளின் பட்டியல்

இப் படத்தின் தொன்மாக்கள், அசைவூட்டம் CGI ஆகிய இரு முறைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்டன. சிறப்பு விளைவுக் கலைஞர் நீல் ஸ்கேன்லன் அசைவூட்ட மாதிரிகள் தயாரிப்பில் ஈடுபட்டார். டேவிட் விக்கரியும் அவர்தம் ILM குழுவினரும் CGI மாதிரிகளை வடிவமைத்தனர். இம் முறைகளுக்கிடையே முரண்பாடற்ற நிலையை எட்ட வேண்டி இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். தொன்மாக்களைத் துல்லியமாகக் காண்பிக்கும் நோக்கில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொல்லுயிர் ஆய்வாளர்களுடனான கலந்துரையாடலும் இதில் அடங்கும். தொன்மாக்களின் அசைவுகளையும் நடத்தையையும் அறுதியிட வேண்டி யானைகளையும் காண்டாமிருகங்களையும் இவர்கள் பார்வையிட்டனர். டென்வர் இயற்கை மற்றும் அறிவியல் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொன்மா வல்லுநர் ஜான் ஹங்க்லா, படத்தின் ஆலோசகராகப்  பணியாற்றினார். மேலும் படப்பிடிப்புக்காக தொன்மா படிம மாதிரிகளையும் வழங்கினார். தொன்மாக்களின் இழைநயங்கள், நிறங்கள் ஆகியவைக்குறித்த ரசிகர்களின் கூடுதல்  ஈடுபாட்டை உணர்ந்த பெயோனா, இப் படத்தில் அவற்றை மேம்படுத்தியுள்ளார். இன்னும் சொல்லப்போனால், முன்பு கருதப்பட்டதைவிட  பழங்காலத் தொன்மாக்கள் வண்ணமயமாகவும் ஒளிமிக்கவையாகவும் இருந்தனவென்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.

இப் படத்தில் முன்னெப்போதையும்விட மிகுதியான தொன்மாக்கள் தோன்றுகின்றன. முந்தைய படங்களில் தோன்றாத அலோசாரஸ், பேரியோனிக்ஸ், கார்னோடாரஸ், ​​சைனோசெராடாப்ஸ்,ஸ்டிஜிமோலோக் மற்றும் இன்டோராப்டர் (கலப்பினம்) உள்ளிட்ட புதிய தொன்மாக்களைச் சேர்க்க பெயோனா விரும்பினார். துவக்கத்தில் வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களில் இரு இன்டோராப்டர்கள் இடம்பெறுவதாக இருந்தன. காயின் மற்றும் ஆபேல் கதையை நினைவூட்டும் வகையில், வெள்ளையை கருப்பு கொல்வதாக இருந்தது. எனினும் திரைக்கதைக்குத் தேவையில்லை என்பதால் வெள்ளை நீக்கப்பட்டது. இதேபோன்ற நிலை டைலோஃபோசாரஸுக்கும் ஏற்பட்டது.

பேரியோனிக்ஸ், கார்னோடாரஸ் முதலானவை CGI முறையில் உருவாயின.

மேலும் முந்தைய தொடர்ச்சிகளைவிட மிகுதியான (ஐந்து மாதிரிகள்) மேம்பட்ட அசைவூட்டத் தொன்மாக்கள் இப்படத்தில் பயன்படுத்தப்பெற்றுள்ளன. மனிதர்களுக்கும் தொன்மாக்களுக்கும் இடையிலான தொடர்பு முன்னதை விட இப்படத்தில் நெருக்கமாக அமைந்துள்ளமையே இதற்குக் காரணம். இவற்றின் பயன்பாட்டால் நடிகர்களும் ஊக்கத்தோடு பணியாற்றியதை பெயோனா குறிப்பிட்டார். எனினும் ஸ்கேன்லன், இம்முறையிலுள்ள சிக்கல்களையும் குறிப்பிட்டார்.

அசைவூட்டத் தொன்மாக்களைப் பெரிதாகக் காட்டவேண்டுமெனில் அவற்றைக்கொண்டு படத்தின் ஷாட்களை மிகுதியாக நிரப்பவேண்டாம் என ஸ்பில்பேர்க் பரிந்துரைத்தார். இவற்றைக் செய்ய பைன்வுட் ஸ்டுடியோவைச் சேர்ந்த 35 பேர் எட்டு மாதங்கள் உழைத்தனர்.

வெலாசிராப்டரைக் காண்பிக்க முந்தைய படத்தில் மோஷன் கேப்சர் பயன்படுத்தப்பட்டாலும், இம்முறை தொழில்நுட்பம் போதாதென ILM கருதியது. அதற்கு மாற்றாக,  முன்பு செய்யப்பட்ட key frame அனிமேஷனைப் பயன்படுத்த முடிவானது. இருப்பினும், பயோனாவுக்கு உதவும் முன்காட்சியாக்கமாக (previsualization) ஓரளவு மோஷன் கேப்சர் செய்யப்பட்டது. தொன்மாக்கள் திரளாகத் தோன்றும் காட்சிகளுக்காக key framing பயன்பட்டது. மேலும் அக் காட்சிகளை உருவாக்கும் நோக்கில்,  குதிரைகளின் ஓட்டத்தைக் காட்டும் உயர்விரைவு புகைப்படங்களை (high-speed photography) ILM போட்டுப்பார்த்தது. புளூ - இன்டோராப்டர் மோதல் காட்சி இலண்டனில் வடிவமைக்கப்பட்டு ILM-ஆல் key framing செய்யப்பட்டது. இக் காட்சிக்கு முன்காட்சியாக்கம் இல்லாமையால் இதை சவாலான காட்சி என்றார் ILM அசைவூட்ட மேற்பார்வையாளர் ஜான்ஸ் ரூபின்சிக்.

இது படப்பிடிப்புக்காக உருவான முதல் அசைவூட்ட மாதிரிகளில் ஒன்றாகும்.முந்தைய படத்தில் தோன்றிய டி. ரெக்ஸின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு முழு அளவிலான தலை மற்றும் தோள்கள் இணைந்த முப்பரிமாண மாதிரியாக ஸ்கேன்லன் இதை உருவாக்கினார். மூச்சுவிடல், தலையை நகர்த்துதல் ஆகிய திறன்களைக் கொண்டிருந்த இம் மாதிரி, இயக்குபிடிகளால் இயங்கியது. குருதிப்பரிமாற்றக் காட்சியில் இது பயன்பட்டது. இக் காட்சியின் துவக்க ஷாட்கள் அசைவுயூட்ட மாதிரியை மட்டும் பயன்படுத்தின. இறுதி ஷாட்களில் முழுமையாக CGI மட்டுமே பயன்பட்டது. இடையில் எடுக்கப்பட்ட ஷாட்கள் இரு முறைகளையும் பயன்படுத்தின.

முந்தைய படங்களில் தோன்றிய அதே பாத்திரமாகக் கருதப்படும் இதை புகழ்பெற்றது என்பதாக வருணித்தார் திரெவாரோ.

படத்துக்காக செய்யப்பட பொம்மலாட்ட மாதிரிகளில் ராப்டர் குட்டி ஒன்றும் அடங்கும். ஓவனுடன் தொடர்புகொள்ளும் காட்சியில் இது தோன்றுகிறது. இக் காட்சியின் இறுதி ஷாட்கள், ஈராழி தொலையியக்கி பொம்மைகளைப் பயன்படுத்தின. இப் பொம்மைகள் துள்ளுவதற்காக சுருள்வில் இணைக்கப்பட்டது.

புளூ காயம்பட்டுச் சிகிச்சைபெறும் காட்சிக்காக உருவான அசைவூட்ட மாதிரியை 12 பேர்வரை இயக்கினர். முதலில் மாதிரியோடும் பின் இல்லாமலும் ஆக இருமுறை இக் காட்சி படமாக்கப்பட்டது. பின்னர் இரு பதிவுகளும் ஒன்றிணைக்கப்பட்டு இறுதி வடிவம் தயாரானது. CGI வடிவத்துக்காக முந்தைய படத்தை அசைவூட்டர்கள் பார்வையிட்டனர். புளூவின் அசைவுகள் நாயை ஒத்திருப்பதாக விக்கரி கூறினார்.

  • இன்டோராப்டர் (Indoraptor)

இத் தொன்மா பெரும்பாலும் CGI முறையிலேயே உருவானது. அண்மைக் காட்சிகளுக்காக தலை, கழுத்து, தோள்கள், கால், (மனிதர்களைப்போன்ற நீண்ட) கை ஆகியவை உருவாயின. ஊதப்பட்ட மாதிரியொன்று சில காட்சிகளுக்காக முதலில் இயக்கப்பட்டது. பின்னர் அதன் இடத்தில் CGI பதிப்பு இடப்பட்டது.

நாலுகாலியாகவும், இருகாலியாகவும் காண்பிக்கப்பெற்றுள்ள இவ்விலங்கு, இருகால்களில் நிற்கையில் ஏறத்தாழ 10 அடி (3.0 மீ) உயரமுள்ளது. இவ்விலங்கு ஒரு கருநிழலின் தோற்றத்தைக் கொண்டிருக்கவேண்டுமென விரும்பிய பெயோனா கறுப்பை அதன் நிறமாகத் தேர்ந்தெடுத்தார். இதன் முன்பற்களும் வளைநகங்களும் நாஸ்பெராட்டு படத்தில் தோன்றும் கவுண்ட் ஓர்லாக் பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

  • பிராக்கியோசாரஸ் (Brachiosaurus)

இவற்றுள் ஒன்று எரிமலை வெடிப்பில் இறக்கிறது. முதல் படத்தில் தோன்றிய அதே பாத்திரம் இது என்றார் பெயோனா. அப் படத்தில் இதற்குப் பயன்பட்ட அசைவூட்டத் தொழில் நுட்பத்தைக் கொண்டே இவ்விலங்கும் உருவாக்கப்பட்டது. ஃபாலன் கிங்டம் படத்துக்காக எடுத்து முடிக்கப்பட்ட ஷாட்களில் இதுவே இறுதியானதாகும். பெயோனாவும் பின்-தயாரிப்புக் குழுவினரும் பட வெளியீட்டிற்குச் சற்று முன்புவரை போராடி இக் காட்சியை நேர்த்தியாக்கினர்.

தென்னாப்பிரிக்கக் காட்டுயிர் தொடர்பான பட்டறிவுடைய க்ளூசெஸ்டர்ஷைர் கால்நடை அறுவையியலாளர் ஜொனாதன் கிரான்ஸ்டன், தொன்மாக்கள் தொடர்பான கால்நடையியல் நடைமுறைகள் மற்றும் அசைவூட்ட இயக்கங்கள் குறித்த ஆலோசனைகளைப் படக்குழுவினருக்கு வழங்கினார். மேலும் இந்த நடைமுறைகளை மேற்கொள்வது எப்படியென பிராட், ஹோவர்ட், பினெடா, ஸ்மித் ஆகியோருக்குக் கற்பித்தார். நுட்பமான, நம்பகமான விலங்கு அசைவுகளை உருவாக்குவது பற்றி பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு ஆலோசனை கூறினார்.

இசை

இத் திரைப்படத்திற்கு மைக்கேல் கியாச்சினோ இசையமைத்துள்ளார். முந்தைய படங்களுக்கு ஜான் வில்லியம்ஸ் அமைத்த இசையையும் இவர் இணைத்துக்கொண்டார். பேக் லாட் மியூசிக், ஒரு ஒலிப்பதிவுச் செருகேட்டை ஜூன் 15, 2018 அன்று வெளியிட்டது.

அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் மைக்கேல் கியாச்சினோ. 

# பாடல் நீளம்
1. "This Title Makes Me Jurassic"   2:54
2. "The Theropod Preservation Society"   3:47
3. "Maisie and the Island"   2:07
4. "March of the Wheatley Cavalcade"   2:14
5. "Nostalgia-Saurus"   1:05
6. "Double Cross to Bear"   2:32
7. "Lava Land"   3:17
8. "Keep Calm and Baryonyx"   2:46
9. "Go With the Pyroclastic Flow"   3:43
10. "Gyro Can You Go?"   2:17
11. "Raiders of the Lost Isla Nublar"   3:20
12. "Volcano to Death"   1:38
13. "Operation Blue Blood"   3:43
14. "Jurassic Pillow Talk"   2:47
15. "How to Pick a Lockwood"   3:10
16. "Wilting Iris"   1:11
17. "Shock and Auction"   2:28
18. "Thus Begins the Indo-Rapture"   3:41
19. "You Can Be So Hard-Headed"   2:28
20. "Between the Devil and the Deep Blue Free"   3:29
21. "There's Something About Maisie"   1:20
22. "World's Worst Bedtime Storyteller"   2:27
23. "Declaration of Indo-Pendence"   4:02
24. "To Free or Not to Free"   3:00
25. "The Neo-Jurassic Age"   3:33
26. "At Jurassic World's End Credits / Suite"   10:55

வரவேற்பு

ஃபாலன் கிங்டம் படத்துக்கு பிபிசி தமிழ் அளித்த மதிப்புரையில் ஒரு பகுதி:

ஜுராசிக் வகை திரைப்படங்கள் வெளியான துவக்கத்தில் அந்தப் படங்கள் ஏற்படுத்திய ஆச்சரியத்தை இந்தப் படத்திலும் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, திரைக்கதையைத்தான் முழுக்க முழுக்க நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு. முன்பு ஸ்பீல்பெர்க் இந்த வரிசையை இயக்கிக்கொண்டிருந்த காலத்தில், கதை ஒரு மிகப் பெரிய தீவில் நடந்தது. ஆனால், இந்தப் படத்தில் விலங்குகளை தீவிலிருந்து வெளியேற்றி கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு வீட்டிற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதனால் பல சமயங்களில் திகில் வீடு தொடர்பான படத்தைப் பார்ப்பதுபோல இருக்கிறது.

துறைமுகத்திலிருந்து எந்த பிரச்சனையில்லாமல் கப்பல்களிலிருந்து விலங்குகளை ஏற்றி, கலிஃபோர்னியாவுக்குக் கொண்டுவருவது, வீட்டின் அடியிலேயே அவ்வளவு பெரிய மிருகங்களை அடைத்துவைப்பது, காக்கி சட்டை படத்தில் வருவதுபோல சர்வதேச அளவில் மாஃபியா தலைவர்களை அழைத்துவந்து இந்த மிருகங்களை ஏலம் விடுவது போன்றவையும் இந்த பிரம்மாண்ட கதையோடு பொருந்தவில்லை.

இயக்குநர் பயோனா, முன்பு திகில் படங்களை இயக்கிக்கொண்டிருந்தவர். அதே பாணி திகிலையும் இந்தப் படத்தில் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. படம் ஒரு வீட்டிற்குள் குறுகிவிட்டதால், முந்தைய படங்களில் இருந்த பிரம்மாண்டம் இதில் இல்லையோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

படத்தின் நாயகியான ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட்டின் நடிப்பு படத்தின் பலங்களில் ஒன்று. நாயகன் க்ரிஸ் ப்ராட்டிற்கு முந்தைய படத்தில் இருந்ததுபோன்ற பாத்திரம்தான். பிரிந்துவிட்ட காதலர்களான இருவருக்கும் இடையிலான வசனங்கள் சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன.

ஜூராசிக் பார்க் வகை திரைப்படங்களின் பெரும் ஆர்வமாக தொடரும் ரசிகருக்கு சற்று ஏமாற்றமளிக்கக்கூடிய திரைப்படம். மற்றவர்கள் சாதாரணமாக பார்த்து, ரசித்துவிட்டு வரலாம்.

மேற்கோள்கள்

Tags:

ஃபாலன் கிங்டம் கதைச்சுருக்கம்ஃபாலன் கிங்டம் நடித்தவர்கள்ஃபாலன் கிங்டம் தயாரிப்புஃபாலன் கிங்டம் மேற்கோள்கள்ஃபாலன் கிங்டம்2018சாகசத் திரைப்படம்ஜுராசிக் பார்க்ஜுராசிக் பார்க் (திரைப்படம்)ஜுராசிக் வேர்ல்ட்த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க்ஸ்டீவன் ஸ்பில்பேர்க்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கௌதம புத்தர்மத கஜ ராஜாமனித வள மேலாண்மைஇந்து சமயம்இரண்டாம் உலகப் போர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்குறுந்தொகைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்திருவிளையாடல் புராணம்குக்கு வித் கோமாளிநன்னூல்வானிலைஆட்கொணர்வு மனுவைரமுத்துஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்திய தேசியக் கொடிஇரட்டைக்கிளவிமதுரைகள்ளழகர் கோயில், மதுரைஅறம்ஸ்டார் (திரைப்படம்)நவக்கிரகம்குண்டிஆந்திரப் பிரதேசம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ரா. பி. சேதுப்பிள்ளைபஞ்சாங்கம்ர. பிரக்ஞானந்தாமுத்திரை (பரதநாட்டியம்)பவுல் (திருத்தூதர்)இந்தியக் குடியரசுத் தலைவர்நீதி நெறி விளக்கம்ம. கோ. இராமச்சந்திரன்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்வேற்றுமைத்தொகைகுறிஞ்சிப் பாட்டுமலையகம் (இலங்கை)பொய்கையாழ்வார்கொன்றைஆற்றுப்படைகாவிரிப்பூம்பட்டினம்நான்மணிக்கடிகைதிருமலை நாயக்கர் அரண்மனைபிரியா பவானி சங்கர்நெய்தல் (திணை)திரிசாகுகேஷ்அறுபடைவீடுகள்வேதநாயகம் சாஸ்திரியார்திருமந்திரம்திருக்குர்ஆன்பிரெஞ்சுப் புரட்சிசீமான் (அரசியல்வாதி)தமிழ் தேசம் (திரைப்படம்)கிராம ஊராட்சிதிருவள்ளுவர்குண்டலகேசிஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்சிறுபஞ்சமூலம்ஜே பேபிஆசாரக்கோவைபூலித்தேவன்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசீர் (யாப்பிலக்கணம்)இராவண காவியம்இலங்கையின் வரலாறுதொல்காப்பியர்விஜய் ஆண்டனிமு. கருணாநிதிதசாவதாரம் (இந்து சமயம்)தமிழ் நாடக வரலாறுதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தமிழ் மன்னர்களின் பட்டியல்மருதம் (திணை)உவமையணிஉயிர்மெய் எழுத்துகள்குலசேகர ஆழ்வார்🡆 More