சுவால்பார்டு

சுவால்பார்டு (Svalbard, /ˈsvɑːlbɑːr/ SVAHL-bar, நகர கிழக்கு நோர்வே ஒலிப்பு:  (Audio file Svalbard audio.ogg not found);), முன்னதாக டச்சுப் பெயர் இசுபிட்சுபெர்கன் (Spitsbergen) ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள நோர்வேசிய தீவுக்கூட்டம் ஆகும்.

தற்போது இத்தீவுக்கூட்டத்தில் உள்ள முதன்மையான தீவு இசுபிட்சுபெர்கன் என அழைக்கப்படுகின்றது. ஐரோப்பிய பெருநிலத்தின் வடக்கே வட துருவத்திற்கும் நோர்வேயின் பெருநிலப்பகுதிக்கும் இடையே இத்தீவுகள் அமைந்துள்ளன. இந்தத் தீவுகள் நிலநேர்க்கோடு 74° வடக்கு மற்றும் 81° வடக்கு இடையிலும் நிலநிரைக்கோடு 10° கிழக்கிலிருந்து 35° கிழக்கு வரையிலும் பரவியுள்ளன. மிகப்பெரிய தீவாக இசுபிட்சுபெர்கன் உள்ளது; அடுத்துள்ள பெரிய தீவுகள் நோடாசுலாந்தெட், எட்கேரியோ ஆகும்.

சுவால்பார்டு
சின்னம் of சுவால்பார்டு
சின்னம்
சுவால்பார்டுஅமைவிடம்
நிலைUnincorporated area
தலைநகரம்லாங்யியர்பியன்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)Norwegian, Russian
இனக் குழுகள்
இறையாண்மையுள்ள நாடுசுவால்பார்டு Kingdom of Norway
தலைவர்கள்
• ஆளுநர்
செஸ்டின் அஸ்கோல்ட் (2015–)
பரப்பு
• மொத்தம்
61,022 km2 (23,561 sq mi)
மக்கள் தொகை
• 2012 மதிப்பிடு
2,642
நாணயம்நார்வே குரோனா (NOK)
நேர வலயம்ஒ.அ.நே+1 (சிஈடி)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (சிஈஎஸ்டி)
அழைப்புக்குறி+47
இணையக் குறி.no a
  1. .sj ஒதுக்கப்பட்டது,பயன்பாட்டில் இல்லை.

நிர்வாகப் பிரிவுகளின்படி இந்த தீவுக்கூட்டம் நோர்வேயின் மாவட்டங்களில் ஒன்றாக இல்லை; கூட்டுருவாக்கம் பெறாத பகுதியாக நோர்வே அரசு நியமிக்கும் ஆளுநரால் நிர்வகிக்கப்படுகின்றது. 2002 முதல் சுவல்பார்டின் முதன்மை குடியிருப்புப் பகுதியான லாங்யியர்பியனில் பெருநிலப் பகுதி நகராட்சிகளை ஒத்த தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி நடைபெற்று வருகின்றது. உருசிய சுரங்க சமூகத்தினர் பாரென்ட்சுபர்கு என்ற குடியிருப்பில் வாழ்கின்றனர். நியொல்சன்டு என்றவிடத்தில் ஆய்வகம் ஒன்றும் சுவெக்ருவா என்னுமிடத்தில் சுரங்கமும் உள்ளன. சுவல்பார்டு உலகின் மிகுந்த வடக்குக் கோடியில் நிரந்தர குடிமக்களுடன் அமைந்துள்ள குடியிருப்பாகும். இதற்கும் வடக்கிலிருக்கும் குடியிருப்புகளில் சுழல்முறையில் வசிக்கும் ஆய்வாளர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

இத்தீவுகள் 17ஆவது 18ஆவது நூற்றாண்டுகளில் திமிங்கிலவேட்டைகான அடித்தளமாக பயன்பட்டன. 20ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தோன்றலாயின. இதன் காரணமாக நிரந்தர குடியிருப்புகள் நிறுவப்பட்டன. 1920ஆம் ஆண்டு ஏற்பட்ட சுவல்பார்டு உடன்பாடு நோர்வேசிய இறைமையை உறுதி செய்தது; 1925இல் இயற்றப்பட்ட சுவல்பார்டு சட்டம் இதனை நோர்வே இராச்சியத்தின் முழுமையான அங்கமாக ஆக்கியது. தவிரவும் இவை சுவல்போர்டை கட்டற்ற பொருளியல் மண்டலமாகவும் படைத்துறையற்ற மண்டலமாகவும் அறிவித்தன. நோர்வேயைச் சேர்ந்த இசுடோர் நோர்சுக்கேயும் உருசிய நிறுவனம் ஆர்க்டிகுகோலும் மட்டுமே இன்று உள்ளன. ஆய்வும் சுற்றுலாவும் முதன்மையான கூடுதல் தொழிகளாக வளர்ந்துள்ளன; சுவல்போர்டு பல்கலைக்கழக மையமும் சுவல்போர்டு உலகளாவிய விதை பெட்டகமும் முக்கியமானவை. இந்தக் குடியிருப்புகளை இணைக்க சாலைகள் எதுவுமில்லை. பனி உந்திகளும், வானூர்திகளும் படகுகளும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.சுவல்போர்டு வானூர்தி நிலையம், லாங்யியர் முதன்மை வாயிலாக உள்ளது.

சிறப்புகள்

இப்பகுதியில் ஏப்ரல் 10 முதல் ஆகஸ்டு 23 முடிய சூரியன் மறையாது, தொடர்ந்து பிரகாசிக்கிறது;

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில ஒலிப்புக் குறிகள்ஆர்க்டிக் பெருங்கடல்உதவி:IPA/Englishஉதவி:IPA/Norwegianடச்சு மொழிதீவுக்கூட்டம்நிலநிரைக்கோடுநிலநேர்க்கோடுநோர்வேவட துருவம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய புவிசார் குறியீடுஅதியமான் நெடுமான் அஞ்சிஆண்டாள்மணிவண்ணன்வைணவ சமயம்தேவாரம்கொச்சி கப்பல் கட்டும் தளம்நண்பகல் நேரத்து மயக்கம்திருக்குர்ஆன்திருவாரூர் தியாகராஜர் கோயில்புவிதாயுமானவர்தினமலர்மாணிக்கவாசகர்இணையம்முதுமலை தேசியப் பூங்காவாரணம் ஆயிரம் (திரைப்படம்)வல்லினம் மிகும் இடங்கள்களவழி நாற்பதுகண்ணாடி விரியன்நாடகம்நெகிழிசாதிமகேந்திரசிங் தோனிஇந்தியாகே. அண்ணாமலைசங்கம் (முச்சங்கம்)ஆப்பிள்இன்னா நாற்பதுதலைமைச் செயலகம் (தமிழ்நாடு)கருப்பை நார்த்திசுக் கட்டிதிருவள்ளுவர் ஆண்டுநவரத்தினங்கள்அகத்திணைஇசுலாமிய வரலாறுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நான்மணிக்கடிகைஇந்திய அரசியலமைப்புவைரமுத்துமுக்குலத்தோர்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)புதினம் (இலக்கியம்)இரசினிகாந்துதொலைக்காட்சிபஞ்சாபி மொழிகுருதிச்சோகையூதர்களின் வரலாறுஉமறு இப்னு அல்-கத்தாப்மயங்கொலிச் சொற்கள்இன்று நேற்று நாளைஅகழ்ப்போர்ஏறுதழுவல்தெலுங்கு மொழிபார்த்திபன் கனவு (புதினம்)உதயநிதி ஸ்டாலின்சமூகம்விலங்குஆதம் (இசுலாம்)பாரிவேதநாயகம் பிள்ளைஒட்டுண்ணி வாழ்வுஇன்ஸ்ட்டாகிராம்பல்லவர்இசுலாத்தின் புனித நூல்கள்பூக்கள் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சேலம்திருநாவுக்கரசு நாயனார்கிறிஸ்தவம்கால்-கை வலிப்புகருமுட்டை வெளிப்பாடுஐக்கிய நாடுகள் அவைதோட்டம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மொழிபெயர்ப்புமரபுச்சொற்கள்வட சென்னை (திரைப்படம்)மக்களாட்சி🡆 More