சுகோத்கா தன்னாட்சி வட்டாரம்

சுக்கோட்டா தன்னாட்சி பிராந்தியம் (Chukotka Autonomous Okrug உருசிய மொழி : Чуко́тский автоно́мный о́круг, tr.

Chukotsky avtonomny okrug; IPA: [tɕʊˈkotskʲɪj ɐftɐˈnomnɨj ˈokrʊk]; Chukchi: Чукоткакэн автономныкэн округ, Chukotkaken avtonomnyken okrug) அல்லது சுக்கோட்டாChukotka (Чукотка) எனப்படுவது ரஷ்யா கூட்டாட்சி அமைப்பைச் சேர்ந்த (தன்னாட்சி பிராந்தியத்தியம் ) ரஷியன் தூர கிழக்கு பகுதியாகும். மக்கள் தொகை: 50,526 ( 2010 கணக்கெடுப்பு ). இந்த தன்னாட்சி பிராந்தியத்தின் பரப்பளவு 737.700 சதுர கிலோமீட்டர் (284,800 சதுர மைல்) ஆகும். இதன் முதன்மை நகரம் மற்றும் நிர்வாக மையம் அனடீர் ஆகும். அலாஸ்காவை ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்ற பிறகான காலத்தில் இருந்து இந்த பிராந்தியமே ரஷ்யாவின் மிகவும் மிகத் தொலைவில் உள்ள ஒரு வடக் கிழக்கு பிராந்தியமாக மேற்கு அரைக்கோளத்தில் விளங்குகிறது. (180வது தீர்க்கரேகைக்கு கிழக்கே).

சுக்கோட்டா தன்னாட்சி பிராந்தியம்
Chukotka Autonomous Okrug
Autonomous okrug
Чукотский автономный округ
சுக்கோட்டா தன்னாட்சி பிராந்தியம் Chukotka Autonomous Okrug-இன் கொடி
கொடி
சுக்கோட்டா தன்னாட்சி பிராந்தியம் Chukotka Autonomous Okrug-இன் சின்னம்
சின்னம்
பண்: Anthem of Chukotka Autonomous Okrug
சுகோத்கா தன்னாட்சி வட்டாரம்
நாடுசுகோத்கா தன்னாட்சி வட்டாரம் உருசியா
நடுவண் மாவட்டம்தூரக் கிழக்கு
பொருளாதாரப் பகுதிதூரக் கிழக்கு
நிர்வாக மையம்அனடைர்
அரசு
 • நிர்வாகம்Duma
 • ஆளுநர்ரோமன் கோப்பின்
பரப்பளவு
 • மொத்தம்7,37,700 km2 (2,84,800 sq mi)
பரப்பளவு தரவரிசை7th
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • மொத்தம்50,526
 • Estimate (2018)49,348 (−2.3%)
 • தரவரிசை82nd
 • அடர்த்தி0.068/km2 (0.18/sq mi)
 • நகர்ப்புறம்64.8%
 • நாட்டுப்புறம்35.2%
நேர வலயம் (ஒசநே+12)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-CHU
அனுமதி இலக்கத்தகடு87
அலுவல் மொழிகள்உருசியம்
இணையதளம்http://www.chukotka.org

நிலவியல்

இப்பிராந்தியத்தின் வடக்கு எல்லையாக சுக்சி கடலும், ஆர்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான கிழக்கு சைபீரிய கடலும் விளங்குகிறது. கிழக்கில் பெரிங் நீரிணை மற்றும் பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான பெரிங் கடலில் உள்ளது. தெற்கில் கம்சாத்கா பிரதேசம் மற்றும் மகதன் ஒப்லாஸ்து மேற்கில் சகா குடியரசு, ஆகியவை உள்ளன. சுக்சி தீபகற்பத்தின் கிழக்கே ரஷ்யா மற்றும் அலாஸ்கா இடையே பெரிங் நீரிணை உள்ளது, சுற்றுசூழல் அடிப்படையில், இப்பகுதியை மூன்று வேறுபட்ட பகுதிகளாகப் பிரிக்கலாம் ஆர்டிக் பனிப்பாலை, மத்திய பனிப்பிரதேசம், தெற்கில் டைகா ஆகும். இந்த பிரதேசத்தில் சுமார் பாதிக்கும் மேலே ஆர்க்டிக் வட்டத்தைச் சேர்ந்தது . இந்த பகுதியில் சுக்கோட்சுகி மலைகள் மற்றும் அனடீர் ரேஞ்ச் போன்ற மலைத்தோடர்களால் நிறந்துள்ளது. இந்த பிராந்தியத்தின் ஆறுகள் அதன் வடக்கு மற்றும் மத்திய மலைகளில் இருந்து தோன்றுகின்றன. முக்கிய ஆறுகள் உள்ளன. இப்பிரதேசத்தின் பெரும் பகுதிகளில் மேற்கு அலாஸ்காவில் உள்ளதை ஒத்த ஆர்க்டிக் தாவரங்களால் நிறந்துள்ளது. அனடீர் வளைகுடா சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஆறு பள்ளத்தாக்குகள் கொண்ட பகுதிகளில் சிறிய இலைகள் கொண்ட மர வகைகளான பைன், பிர்ச், நெட்டிலிங்கம், வில்லோ மரங்கள் வளருகின்றன. தாவரங்களில் 900 இனங்கள் பாசி மற்றும் லிச்சென் போன்றவற்றில் 400 இனங்கள் உட்பட வளருகின்றன. மேலும் 220 பறவை இனங்கள் மற்றும் 30 நன்னீர் மீன் இனங்களை கொண்டுள்ளது.

காலநிலை

இப்பிராந்தியத்தின் காலநிலை இதன் அண்டையில் உள்ள மூன்று கடல்களின் நிலையைப் பொருத்து அமைகிறது. இதன் வானிலையில் தெற்கு காற்று ஈரமானதாகவும், வடக்கிலிருந்து வருவது கடுங் குளிர் காற்றாகவும் வகைப்படுத்தப்பட்டது. இதன் கடலோர பகுதிகளில் வருடத்திற்கு 200 முதல் 400 மிமீ வரை மழை பெய்கிறது. . வெப்பநிலை -15 டிகிரி செல்சியஸ் (5 ° பா) முதல் −35 °செ (−31 °பா) வரை சனவரி மாதங்களில் நிலவுகிறது. +5 °செ (41 °பா) முதல் +14 °செ (57 °பா) வரை சூலை மாத காலகட்டத்தில் வெப்பம் நிலவுகிறது.

வரலாறு

இதன் முதல் குடிகள் மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் இருந்து வந்தசைபீரியன் வேட்டைக்காரர்கள் ஆவர். இப்பகுதியில் இருந்தே நில பாலம் வழியாக மனித இடம்பெயர்வு அமெரிக்கா கண்டத்துக்கு நடந்ததாக கருதுகின்றனர்.

பொருளாதாரம்

இப்பிராந்தியத்தில் கச்சா எண்ணெய் , இயற்கை எரிவாயு , நிலக்கரி , தங்கம், டங்ஸ்டன் போன்றவை எடுக்கப்படுகின்றன. ஆனால் கிராமப்புற மக்கள் பிழைப்பு என்பது ஒருவகை கலைமான் மந்தைகள், திமிங்கில வேட்டை , மற்றும் மீன்பிடித்தல் ஆகியவற்றை நம்பியே உள்ளது. நகர்ப்புற மக்கள் சுரங்க , நிர்வாகம், கட்டமைப்பு, கலாச்சார பணி, கல்வி, மருத்துவம், மற்றும் பிற தொழில்களில் ஈடுபடுகிறார்கள்.

போக்குவரத்து

இப் பிராந்தியத்தின் போக்குவரத்து என்பது பெரும்பாலும் சாலைவசதியையும், வானூர்திகளையும் நம்பியே உள்ளது. இங்குள்ள முதன்மை வானூர்தி நிலையம் உகோல்னி வானூர்தி நிலையம் ஆகும் இது அனடீர் அருகில் உள்ளது. கடற்கரை பகுதிகளில் கப்பல் போக்குவரத்து கூட நடைபெறுகிறது, ஆனால் ஆண்டில் ஆறுமாதங்கள் பனியினால் நிலைமை மிகவும் கடுமையாக இருக்கும்.

மேற்கோள்கள்


Tags:

சுகோத்கா தன்னாட்சி வட்டாரம் நிலவியல்சுகோத்கா தன்னாட்சி வட்டாரம் காலநிலைசுகோத்கா தன்னாட்சி வட்டாரம் வரலாறுசுகோத்கா தன்னாட்சி வட்டாரம் பொருளாதாரம்சுகோத்கா தன்னாட்சி வட்டாரம் போக்குவரத்துசுகோத்கா தன்னாட்சி வட்டாரம் மேற்கோள்கள்சுகோத்கா தன்னாட்சி வட்டாரம்அலாஸ்காஉருசிய மொழிஐக்கிய அமெரிக்காரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்ரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பாரத ரத்னாதிரிகடுகம்நெல்சிறுதானியம்இந்தியத் தேர்தல் ஆணையம்மு. மேத்தாகரகாட்டம்அகநானூறுஔவையார் (சங்ககாலப் புலவர்)நீர் பாதுகாப்புந. பிச்சமூர்த்திஅழகர் கோவில்இந்தியாவேதநாயகம் பிள்ளைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மட்பாண்டம்விஸ்வகர்மா (சாதி)அரவான்மின்னஞ்சல்வெப்பம் குளிர் மழைஜெ. ஜெயலலிதாஇந்தியன் பிரீமியர் லீக்தங்கம்கலம்பகம் (இலக்கியம்)அங்குலம்வேதாத்திரி மகரிசிஆழ்வார்கள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தைப்பொங்கல்பயில்வான் ரங்கநாதன்இந்திய தேசியக் கொடிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)குறுந்தொகைபாரதிய ஜனதா கட்சிதஞ்சைப் பெருவுடையார் கோயில்நாம் தமிழர் கட்சிபாலை (திணை)பனிக்குட நீர்சித்திரைத் திருவிழாதமிழர் நிலத்திணைகள்சித்திரகுப்தர் கோயில்பிலிருபின்சிவாஜி (பேரரசர்)நோட்டா (இந்தியா)அன்னி பெசண்ட்இராமாயணம்யோகிநீரிழிவு நோய்தமிழர் நெசவுக்கலைநிறைவுப் போட்டி (பொருளியல்)தினமலர்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்ஆப்பிள்உயிர்மெய் எழுத்துகள்ஜே பேபிஅறுபடைவீடுகள்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்இந்தியப் பிரதமர்மருது பாண்டியர்மூலம் (நோய்)கும்பம் (இராசி)இலங்கைவீரப்பன்குகேஷ்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்திருச்சிராப்பள்ளிமயில்சிவம் துபேகபிலர் (சங்ககாலம்)சிங்கம்முத்துராஜாசீமையகத்திமலைபடுகடாம்சப்தகன்னியர்இந்திய நிதி ஆணையம்கருத்தரிப்புமூகாம்பிகை கோயில்🡆 More