சீரீ ஆ

சீரீ ஆ (Serie A,இத்தாலிய ஒலிப்பு: ) என்பது இத்தாலியின் கால்பந்துக் கழகங்களுக்கான கூட்டிணைவுப் போட்டித்தொடராகும்.

அந்நாட்டின் கால்பந்துப் போட்டித்தொடர் கூட்டிணைவுகளில் முதல்நிலையில் இருப்பதாகும். விளம்பர ஆதரவின் காரணமாக சீரீ ஆ டிஐஎம் (Serie A TIM) என்றறியப்படுகிறது. இது 1929-30 பருவத்திலிருந்து செயல்பட்டு வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்று வாகையர் பட்டத்துக்குப் போட்டியிடும். உலக அளவில் புகழ்பெற்ற அணிகளான யுவென்டசு, ஏசி மிலான் மற்றும் இன்டர்நேசனல் ஆகிய கழகங்கள் சீரீ ஆ-வைச் சேர்ந்தவையாகும்.

சீரீ ஆ
சீரீ ஆ
நாடுகள்இத்தாலி
கால்பந்து
ஒன்றியம்
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
தோற்றம்1898 officially
1929 as round-robin tournament
அணிகளின்
எண்ணிக்கை
20
Levels on pyramid1
தகுதியிறக்கம்சீரீ பி
உள்நாட்டுக்
கோப்பை(கள்)
இத்தாலியக் கோப்பை
இத்தாலிய உன்னதக்கோப்பை
சர்வதேச
கோப்பை(கள்)
யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு
யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு
தற்போதைய
வாகையர்
யுவென்டசு (28வது வாகையர் பட்டம்)
(2011–12)
அதிகமுறை
வாகைசூடியோர்
யுவென்டசு (28 பட்டங்கள்)
தொலைக்காட்சி
பங்குதாரர்கள்
SKY Italia
Mediaset Premium
இணையதளம்legaseriea.it
சீரீ ஆ 2012–13 Serie A

உலக அளவில் கால்பந்துக் கூட்டிணைவுப் போட்டித்தொடர்களில் சீரீ ஆ முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 90-களிலும் 2000-களின் மத்திவரையிலும் சீரீ ஆ-வே சிறந்த கால்பந்துக் கூட்டிணைவுத் தொடராகக் கருதப்பட்டது. ஐரோப்பியக் கோப்பைப் போட்டிகளின் இறுதியாட்டத்தை எட்டிய அணிகளில் அதிகமானவை சீரீ ஆ-வைச் சேர்ந்தவையாகும்; இத்தாலிய கால்பந்துக் கழகங்கள் மொத்தம் 26 முறை ஐரோப்பியக் கோப்பை இறுதியாட்டங்களில் விளையாடி 12 முறை வென்றிருக்கின்றன. (இறுதிப் போட்டியை இத்தனை முறை எட்டியிருப்பது இதுவரை விஞ்சப்படாத சாதனையாகும்.)

யூஈஎஃப்ஏ-வின் கூட்டிணைவுக் குணகங்களின்படி சீரீ ஆ, ஐரோப்பாவில் இங்கிலாந்தின் பிரீமியர் லீக், எசுப்பானியத்தின் லா லீகா, செருமனியின் புன்டசுலீகா ஆகியவற்றுக்குப் பிறகு 4-ஆம் இடத்தைப் பிடிக்கிறது. இக்குணகம், அக்குறிப்பிட்ட கூட்டிணைவைச் சேர்ந்த கழகங்கள் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு மற்றும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு ஆகியவற்றில் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து கணக்கிடப்படும்.

உசாத்துணைகள்

Tags:

en:WP:IPA for Italianஇத்தாலிஇன்டர் மிலான்யுவென்டசு கால்பந்துக் கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்திரம் பேசுதடி 2மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதமிழச்சி தங்கப்பாண்டியன்திருவிழாஅறம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்திருவள்ளுவர்கவிதையோகிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)பிரியங்கா காந்திஅன்னி பெசண்ட்தரணிதங்கராசு நடராசன்திருத்தணி முருகன் கோயில்பிலிருபின்சிவபுராணம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பிக் பாஸ் தமிழ்குற்றாலக் குறவஞ்சிசெஞ்சிக் கோட்டைதொழினுட்பம்சச்சின் டெண்டுல்கர்வெ. இறையன்புமட்பாண்டம்கார்ல் மார்க்சுகருச்சிதைவுதிருக்குறள் பகுப்புக்கள்திதி, பஞ்சாங்கம்பெரியபுராணம்முக்கூடற் பள்ளுசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதூது (பாட்டியல்)விந்துமயக்கம் என்னஅறுவகைப் பெயர்ச்சொற்கள்குப்தப் பேரரசுதிரிசாவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்செயற்கை நுண்ணறிவுபரதநாட்டியம்பெண் தமிழ்ப் பெயர்கள்பொன்னுக்கு வீங்கியூடியூப்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மத கஜ ராஜாதிருமலை நாயக்கர் அரண்மனைகுண்டலகேசிமுத்துராமலிங்கத் தேவர்பஞ்சபூதத் தலங்கள்சுரதாஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சென்னைகௌதம புத்தர்அய்யா வைகுண்டர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்தமிழ் தேசம் (திரைப்படம்)தமிழ் எழுத்து முறைமதீச பத்திரனஇனியவை நாற்பதுசாய் சுதர்சன்செக்ஸ் டேப்மீனா (நடிகை)சிவாஜி (பேரரசர்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்பாட்டாளி மக்கள் கட்சிஅடல் ஓய்வூதியத் திட்டம்வினைச்சொல்பெரியாழ்வார்செவ்வாய் (கோள்)விஜய் (நடிகர்)முல்லைக்கலிகல்லீரல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)பள்ளர்நாம் தமிழர் கட்சிமுல்லை (திணை)🡆 More