சீனத் திரைப்படத்துறை

சீனத் திரைப்படம் (cinema of China) என்பது முதன்மையான மூன்று சீன மொழித் திரைப்பட வரலாற்றிழைகளில் ஒன்றாகும்.

அதில் ஆங்காங் திரைப்படத்துறை, தைவானியத் திரைப்படத்துறை என்பனவாகும். வணிக, பரப்புரை, கலைப் படங்கள் என மூன்று பிரிவுகளில் படங்கள் வெளி வருகின்றன. அதிகார பூர்வ சீன மொழியிலும் (மாண்டரின்), கண்டோனீயம் மொழியிலும் படங்கள் வெளி வருகின்றன்ன. அரசியல் திரைப்படங்களுக்கு சீனாவில் ஒரு கடுமையான தணிக்கை உள்ளது.

சீனத் திரைப்படத்துறை
சீனத் திரைப்படத்துறை
A frame from the 1941 film Princess Iron Fan, Asia’s first feature-length animated film
திரைகளின் எண்ணிக்கை44,179 (2016)
 • தனிநபருக்கு2.98 per 100,000 பேருக்கு 2.98 பேர் (2016)
முதன்மை வழங்குநர்கள்China Film (32.8%)
Huaxia (22.89%)
Enlight (7.75%)
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2016)
புனைவு772
அசைவூட்டம்49
ஆவணப்படம்32
Number of admissions (2016)
மொத்தம்1,370,000,000
 • தனி நபருக்கு1
நிகர நுழைவு வருமானம் (2016)
மொத்தம்CN¥ 45.71 பில்லியன் (6.58 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
தேசியத் திரைப்படங்கள்58.33%

திரைப்படம் சீனாவில் 1896 இல் அறிமுகப் படுத்தப்பட்ட்து. திங்யுசான் போர் எனும் முதல் சீனத் திரைப்படம் 1905 இல் வெளியிடப்பட்ட்து. முதல் பத்தாண்டுகளில் சீனத் திரைப்படத் தொழில் சாங்காய் நகரில் நிலைகொண்டிருந்தது. முதல் பேசும் படமாகிய பாட்டுபாடும் பெண் செம்பியோனி ஒலித்தட்டுத் தொழில்நுட்பத்தில் 1931 இல் வெளியிடப்பட்டது. சீனத் திரைப்பட வரலாற்ரில் முதல் பொற்காலமாகக் கருதப்படும் 1930 களில் இடதுசாரி திரைப்பட இயக்கம் எழுச்சி கண்டது. தேசியவாதிகளுக்கும் பொதுவுடைமையாளர்களுக்கும் இடையிலான சிந்தனைப் போராட்டங்களை இப்படங்கள் விவரித்தன.இரண்டாம் சீன யப்பானியப் போருக்குப் பிறகு (யப்பான் சீனாவை முற்றுகையிட்ட பிறகு, சாங்காயில் அமைந்த திரைப்பட்த்தொழில் சிதையலானது. திரைப்பட்த் தொழில் ஆங்காங், சாங்குவிங், மற்ற இடங்களுக்கு நகர்ந்தது. எஞ்சியிருந்தவரும் அயல்நாட்டுச் சலுகைகளும் தனியாக சாங்காயில் திரைப்படங்களை உருவாக்கினர். இரும்பு இளவரசி பேன் (1941) எனும் முதல் சீன அசைவூட்டப்படம் இந்த கால முடிவில் சாங்காயில் வெளியிடப்பட்டது. இப்படம் போர்க்கால யப்பானிய அசைவூட்டத் திரைப்படங்களின் மீதும் பிறகு ஒசாமு தேழூக்கா என்ற திரைப்படத்தின் மீதும் \பெருந்தாக்கம் விளைவித்தது. யப்பான் சீனாவை 1941 இல் முற்றுகையிட்டதில் இருந்து 1945 வரை சங்காய் நகரத் திரைப்பட்த்தொழில் யப்பானியக் கட்டுபாட்டில் இருந்தது.

சீனா தேசியப் பேராய நிலைக்குழுவின் ஒப்புதலுடன் 2016 நவம்பரில் ஒரு திரைப்படச் சட்ட்த்தை இயற்றி வெளியிட்டது. இச்சட்டம் சீன மக்கள் குடியரசின் மதிப்புகள், தகைமைகள், ஆர்வங்களுக்கு ஊறு விளைவிக்கும் திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டு, சமவுடைம் வி௳உமியங்களைத் தாங்கிநிற்கும் திரைப்படங்கள் ஊக்குவிக்கப்பட்டன.

போர் முடிந்த்தும், சாங்காய் திரைப்படத் தொழில் புத்துயிர்ர்ப்பு பெற்று இரண்டாம் பொற்காலம் தொடங்கியது. அப்போது சிறுநகரின் இளவேனில் (1948)போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இந்தப் படம் ஆங்காங்கின் அரிய நூறு சீனமொழிப் பேசும்படங்களில் ஒன்றாக 24 ஆவது ஆங்காங் திரைப்பட விருதுகளில் தேர்வானது. 1949 சீனப் பொதுவுடைமைப் புரட்சிக்குப் பிறகு, முந்தைய திரைப்படங்களும் சில அயலகத் திரைப்படங்களும் 1951 இல் தடைக்குள்ளாயின. திரைப்படம் பார்ப்போர் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. 1967 முதல் 1972 வரையிலான சீனப் பண்பாட்டுப் புரட்சியின்போது, திரைப்படத் தொழில் மிகவும் கட்டுபடுத்தப்பட்டு முழுமையாக முடக்கப்பட்டது. பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்ததும் திரைப்படத் தொழில் மீண்டும் செழுமை அடைந்தது. அப்போது மாலைநேர மழை (1980), தியான்யுன் மலை கதை (1980), காகிதப் பூநகரம் (1986) போன்ற 1980 களின் விழுப்புண் நாடகங்கள் அக்கால இடதுசாரி இயக்க உணர்ச்சிவயமான துன்பதுயர உச்சங்களை விவரித்தன. 1980 களின் நடுப்பகுதி முதல் இறுதிகாலம் வரையில், சீன ஐந்தாம் தலைமுறைப்படங்களாகிய ஒன்றும் எட்டும்]] (1983), மஞ்சள் புவி (1984) போன்றவை எழுச்சிகண்டு வெளிநாடுகளில் சீனத் திரைப்படங்களுக்கு, குறிப்பாக மேலைநாடுகளின் திரையரங்குகளிலும் பார்வையாளரிடமும் கோலோச்சலாயின. மேலும், செஞ்சோளம் (1987), கியூ யூவின் கதை (1992), என் பரத்தைக்கான வழிவிடல் (1993) போன்றன பல பன்னாட்டு விருதுகளைப் பெற்றன. 1989 இன் தின்னமன் சதுக்க எதிர்ப்புகளுக்குப் பிறகு திரைப்பட இயக்கம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. என்றாலும், 1990 களுக்குப் பின்னர் சீன ஆறாம் தலைமுறையும் பின்னை ஆறாம் தலைமுறையும் எழுச்சிகண்டன. இவை திரைப்படங்களைச் சீனாவின் முதன்மைப் போக்குக்கு அப்பாலான கருக்களைக் கையாண்டு எடுத்தன. இவை பெரும்பாலும் பன்னாட்டு அரங்கச் சுற்றுவட்டத்திலேயே காட்டப்பட்டன.

வரலாறு

துரித வளர்ச்சி

சீனத் திரைப்படத்துறை 2009, 2010 இல் துரித வளர்ச்சி காணத் தொடங்கி உள்ளது. திரைப்பட வருமானம் 2010 இல் 2009 விட 64 வீதத்தால் அதிகரித்தது. சீனாவில் 2010 இல் சுமார் 1.53 பில்லியன் டொலர்கள் வருமானம் பெறப்பட்டது. உலகில் அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் வரிசையில் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்ததாக சீனா முன்னேறி உள்ளது. இந்த வளர்ச்சி சில ஆண்டுகளுக்கு முன்னரோடு ஒப்பிடும் போது பல நூறுமடங்கு வளர்ச்சி ஆகும்.

மேற்கோள்கள்

Tags:

ஆங்காங் திரைப்படத்துறைகண்டோனீயம்சீன மொழிசீனாதைவானியத் திரைப்படத்துறைமாண்டரின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சூரைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்யூலியசு சீசர்கௌதம புத்தர்சோழர்முதலாம் இராஜராஜ சோழன்நபிசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகோலாலம்பூர்வரலட்சுமி சரத்குமார்திருக்குர்ஆன்செம்மொழிஇலட்சம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்இந்திய நாடாளுமன்றம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்குண்டலகேசிவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்பதினெண் கீழ்க்கணக்குமாத்திரை (தமிழ் இலக்கணம்)கிராம சபைக் கூட்டம்ஈரோடு மக்களவைத் தொகுதிஐங்குறுநூறுசங்க காலப் புலவர்கள்விஷ்ணுதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிபொன்னுக்கு வீங்கிதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்பாக்கித்தான்தமிழக வெற்றிக் கழகம்உலக நாடக அரங்க நாள்சாகித்திய அகாதமி விருதுமூசாகங்கைகொண்ட சோழபுரம்அமேசான்.காம்தமிழ்நாடு அமைச்சரவைசெஞ்சிக் கோட்டைதேவநேயப் பாவாணர்விழுப்புரம் மக்களவைத் தொகுதிசொல்லாட்சிக் கலைமெய்யெழுத்துசீரடி சாயி பாபாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சைவ சித்தாந்த சாத்திரங்கள்நயன்தாராநான்மணிக்கடிகைசுலைமான் நபிநீலகிரி மாவட்டம்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஅளபெடைஅழகர் கோவில்அதிமதுரம்மியா காலிஃபாவெண்குருதியணுதட்டம்மைஜன கண மனஇளையராஜாதமிழச்சி தங்கப்பாண்டியன்திருமந்திரம்உத்தரகோசமங்கைஆடுஜீவிதம் (திரைப்படம்)கண்ணாடி விரியன்கிராம ஊராட்சிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)குடும்பம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பிரீதி (யோகம்)அபூபக்கர்கனிமொழி கருணாநிதிமூன்றாம் பானிபட் போர்ஜெயகாந்தன்வெள்ளியங்கிரி மலைசிதம்பரம் நடராசர் கோயில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்முன்னின்பம்திருவாசகம்முக்கூடற் பள்ளுகள்ளர் (இனக் குழுமம்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்🡆 More