கீலிங் தீவுகள் கொக்கோசு

கொக்கோசு (கீலிங்) தீவுகள் (Cocos (Keeling) Islands) அல்லது கொகோசு தீவுகள் மற்றும் கீலிங் தீவுகள் அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சிப்பகுதியாகும்.

இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையான தூரத்தின் அண்ணளவாக நடுப்பகுதியில் அமைந்துள்ளன.

கொக்கோசு (கீலிங்) தீவுகள் ஆட்சிப்பகுதி
கொடி of கொக்கோசு (கீலிங்) தீவுகளின்
கொடி
கொகோசு (கீலிங்) தீவுகள் அவுஸ்திரேலியாவின் ஆட்சிப்பகுதிகளில் ஒன்றாகும்.
கொகோசு (கீலிங்) தீவுகள் அவுஸ்திரேலியாவின் ஆட்சிப்பகுதிகளில் ஒன்றாகும்.
தலைநகரம்மேற்குத் தீவு
பெரிய கிராமம்பன்டம், ஓம் தீவுகள்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் (de facto)
அரசாங்கம்கூட்டாட்சி அரசியலமைப்பு முடியாட்சி
• அரசி
இரண்டாம் எலிசபெத்
• நிர்வாகி
நெலி லூகஸ்
அவுஸ்திரேலியாவின் ஆட்சிப் பகுதி
• பிரித்தானிய பேரரசோடு
இணைப்பு

1857
• அவுஸ்திரேலியாவுக்கு
ஆட்சி மாற்றம்

1955
பரப்பு
• மொத்தம்
14 km2 (5.4 sq mi)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• 2004 மதிப்பிடு
628 (n/a)
• அடர்த்தி
[convert: invalid number] (n/a)
நாணயம்அவுஸ்திரேலிய டொலர் (AUD)
நேர வலயம்ஒ.அ.நே+6½
அழைப்புக்குறி61 891
இணையக் குறி.cc

இந்த ஆட்சிப் பகுதியில் இரண்டு பவளத்தீவுகளும் 27 முருகைத் தீவுகளும் காணப்படுகின்றன. இவற்றில் மேற்குத் தீவு, ஹோம் தீவு ஆகியவற்றில் மக்கள் தொகை ஏறத்தாழ 600 ஆகும்.

பெயர்

இத்தீவுகள் 1622 முதல் கோக்கோசு தீவுகள் எனவும், 1703 முதல் கீலிங்கு தீவுகள் எனவும், 1805 முதல் கோக்கோசு கீலிங்கு தீவுகள் எனவும், 19-ஆம் நூற்றாண்டில் கீலிங்கு-கோக்கோசு தீவுகள் எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இங்கு அதிகளவு தென்னை மரங்கள் உள்ளதால் கோக்கோசு எனப் பெயரிடப்பட்டது. 1609 இல் இத்தீவுகளை முதன் முதல் கண்ணுற்ற ஐரோப்பியரான வில்லியம் கீலிங் என்பவரின் பெயரால் இது கீலிங்கு என அழைக்கப்பட்டது. 1825 இல் இங்கு வந்த ஜோன் குளூனீசு-ரொஸ் என்பவர் இத்தீவுக் கூட்டத்தை போர்னியோ பவளத் தீவுகள் எனவும், வடக்கு கீலிங் தீவை கீலிங்கு எனவும், தெற்கு கீலிங்கை கோகோசு எனப் பெயரிட்டார். 1916 ஆம் ஆண்டு முதல் இத்தீவுகள் கோக்கோசு (கீலிங்கு) தீவுகள் என அழைக்கப்படுகிறது. இப்பெயர் 1955 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக்கப்பட்டது.

புவியியல்

கீலிங் தீவுகள் கொக்கோசு 
கொக்கோசு கீலிங் தீவுகள்

கொக்கோசு கீலிங் தீவுகளில் வடக்கு கீலிங் தீவு, மற்றும் தெற்கு கீலிங் தீவு என இரண்டு சமதரையான தாழ்நில பவள, முருகைத் தீவுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் பரப்பளவு 14.2 சதுரகிமீ, மற்றும் கரையோர நீளம் 26 கிமீ உம் ஆகும். மிகவும் செறிந்த தென்னை மரங்களைக் கொண்டுள்ளன. வடக்கு கீலிங் தீவில் ஒரே ஒரு C-வடிவ தீவே உள்ளது. இங்கு மக்கள் வசிப்பதில்லை. தெற்கு கீலிங் தீவுகளில் 24 தனித்தனியான தீவுகள் உள்ளன. இவற்றில் மேற்குத் தீவு, ஹோம் தீவு ஆகியவற்றில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.

இங்கு ஆறுகளோ அல்லது ஏரிகளோ எதுவும் இல்லை. நன்னீர்த் தேக்கங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உண்டு.

மக்கள் பரம்பல்

2010 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மொத்த மக்கள் தொகை 600 இற்கும் சற்று அதிகமாகும். மேற்குத் தீவில் ஐரோப்பிய இனத்தவரும் (100), ஹோம் தீவில் உள்ளூர் மலாய் இனத்தவரும் (500) வசிக்கின்றனர். மலாய் மொழி, மற்றும் ஆங்கிலம் இங்கு அதிகமாகப் பேசப்படுகிறது. கொக்கோசுத் தீவினரில் 80 விழுக்காட்டினர் சுணி இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்



Tags:

கீலிங் தீவுகள் கொக்கோசு பெயர்கீலிங் தீவுகள் கொக்கோசு புவியியல்கீலிங் தீவுகள் கொக்கோசு மக்கள் பரம்பல்கீலிங் தீவுகள் கொக்கோசு மேற்கோள்கள்கீலிங் தீவுகள் கொக்கோசு வெளி இணைப்புகள்கீலிங் தீவுகள் கொக்கோசுஅவுஸ்திரேலியாஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்இந்தியப் பெருங்கடல்இலங்கைதீவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

முடியரசன்புதிய ஏழு உலக அதிசயங்கள்வெந்தயம்மலையாளம்பர்வத மலைதொழிலாளர் தினம்இரட்டைக்கிளவிஅக்கினி நட்சத்திரம்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புவிளம்பரம்கருக்கலைப்புகல்லணைஈரோடு தமிழன்பன்திருவாசகம்பெரும்பாணாற்றுப்படைஅறுபடைவீடுகள்நம்பி அகப்பொருள்இந்திய அரசியலமைப்புதமிழர் நிலத்திணைகள்கல்விக்கோட்பாடுஅருணகிரிநாதர்வேலுப்பிள்ளை பிரபாகரன்வாலி (கவிஞர்)புறப்பொருள் வெண்பாமாலைஇரண்டாம் உலகம் (திரைப்படம்)இணையம்பெண்வராகிமுடக்கு வாதம்நெடுஞ்சாலை (திரைப்படம்)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அம்பேத்கர்தெலுங்கு மொழிபரிபாடல்கண்ணப்ப நாயனார்கம்பர்மூகாம்பிகை கோயில்கிளைமொழிகள்மண் பானைஇந்திய தேசியக் கொடிமூலம் (நோய்)புலிஇந்திய புவிசார் குறியீடுதமிழ்நாட்டின் அடையாளங்கள்கன்னி (சோதிடம்)யூடியூப்ரத்னம் (திரைப்படம்)முத்தரையர்அகரவரிசைதிருமலை நாயக்கர்திருவள்ளுவர் ஆண்டுதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்அமலாக்க இயக்குனரகம்தேவாரம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்கொடுக்காய்ப்புளிவ. உ. சிதம்பரம்பிள்ளைமண்ணீரல்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தேவேந்திரகுல வேளாளர்யாவரும் நலம்எஸ். ஜானகிபறவையாதவர்நயன்தாராகருப்பைஏப்ரல் 26நாயன்மார் பட்டியல்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பரணி (இலக்கியம்)மு. க. ஸ்டாலின்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்உளவியல்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)பாரிதைப்பொங்கல்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்🡆 More