கைபர் போர்

கைபர் போர் (Battle of Khaybar) முகம்மது நபியின் வாழ்க்கையில் இடம்பெற்ற போர் ஆகும்.

இது 628 மே மாதம் அரேபிய பாலைவனத்தின் மதீனா நகருக்கு 150 கிலோமீட்டர் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் என்னும் பகுதியில் (இன்றைய அராபியாவின் வடமேற்கே) நடந்த போர் ஆகும். இப்போர் முகம்மது நபியின் தலைமையிலான மதினா முசுலிம்களுக்கும், கைபர் பகுதி யூதர்களுக்கும் இடையில் நடைபெற்றது.

கைபர் போர்
கைபர் போர்
கைபர் போரின் ஓவியம்
நாள் கி.பி. 629, மே மற்றும் சூன்
இடம் கைபர்
முசுலிம் படை வெற்றி
பிரிவினர்
முசுலிம் இராணுவம் கைபர் பகுதி யூதர்கள்
தளபதிகள், தலைவர்கள்
முகம்மது நபி

அலீ

ஹாரித் இப்னு ஜைனப்†
மர்கப் இப்னு ஜைனப் †
பலம்
1,600 கைபர்=10,000

பனூ கதபான் = 4,000

இழப்புகள்
20 பேர் இறப்பு.
50 பேர் காயம்.
93 பேர் இறப்பு

போருக்கான காரணங்கள்

கைபர் பகுதியில் வாழ்ந்த பனூ நாதிர் யூதர்கள் பனூ வாடி, பனூ குரா, பனூ தைமா மற்றும் பனூ கபதான் போன்ற அரேபிய பழங்குடி குலங்களுடன் சேர்ந்து மதீனா நகரை தாக்க திட்டமிட்டனர். யூதர்களின் திட்டத்தை அறிந்த மதீனா நகர முசுலிம்களின் படை கைபர் நகர யூதர்கள் அரேபிய பழங்குடி மக்களுடன் இணையும் முன்பே கைபர் நகரை முற்றுகையிட்டது.

சுகாட்லாந்து வரலாற்றாசிரியர் வில்லியம் மான்கோமரி வாட் கூற்றுப் படி மதினாவில் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக அண்டை அரபு பழங்குடியினர் மத்தியில் குரோதங்களை தூண்டிவிட்டுக்கொண்டிருந்த பனூ நாதிர் என்ற அரபு குல கூட்டமும் போர் நடைபெற்ற கைபர் பகுதியில் யூதர்களுடன் இருந்தனர்.

போரின் போக்கு

முஸ்லிம் படை (முஹர்ரம் 7 இசுலாமிய நாட்காட்டி ) கி.பி. 628 மே இல் கைபர் சோலைக்கு வெளியே முற்றுகையிட்டது.

பனூ கபதான்

போரின் போது கைபர் யூதப் படைக்கு ஆதரவாக வந்த 4,000 ஆண்கள் அடங்கிய பனூ கபதான் படையை முஸ்லிம்கள் தடுத்தனர். கைபர் பகுதி பனூ நாதிர் யூதர்களுக்கு ஆதரவாக பனூ கபதான் பழங்குடியினரின் 2,000 ஆண்கள் மற்றும் 300 குதிரை வீரர்களை அனுப்ப யூதர்கள் வற்புறுத்தினர். இதுபோன்று பனூ ஆசாத் பழங்குடி மக்களும் வற்புறுத்தப்பட்டனர்.

பனூ அமீர்

முகம்மது நபியுடன் ஒப்பந்தம் இருந்த காரணத்தினால் பனூ அமீர் பழங்குடியினர் கைபர் யூதர்களுடன் ஒன்று சேர மறுத்தனர்.

பனூ குரைசா

போர் தொடங்கிய பின்னர் கைபர் பகுதி பனூ நாதிர் யூதர்களின் தலைவர் ஹுயை இப்னு அக்தாப் பனூ குரைசா பழங்குடியினரின் ஆதரவை கேட்டார்.

போரில் பனூ குரைசா படை தோல்வி அடைந்து சரணடைந்தபின் பனூ குரைசா படை வீரராலேயே பனூ நாதிர் யூதர்களின் தலைவர் ஹுயை இப்னு அக்தாப் கொல்லப்பட்டார். அதன் பின் அபு ராபி ஹுகைக் பனூ நாதிர் யூதர்களின் தலைவராக பொறுப்பேற்றார். பின்னர் ஹுகைக், உசைர் என்பவரால் வெற்றிகொள்ளப்ப்ட்டார்.

கைபர் போர்க்களம்

பல்வேறு தகவல்களின் படி முஸ்லிம் படையில் சுமார் 1,400 இலிருந்து 1,800 ஆண் வீரர்களும் சுமார் 100 முதல் 200 வரை குதிரைகளும் இருந்தன. மேலும் உம்மு சல்மா போன்ற சில பெண்கள் வீரர்களுக்கு உதவவும் இருந்தனர். கைபர் பனூ நாதிர் யூதர்கள் படையில் சுமா‌ர் 10,000 வீரர்கள் இருந்தனர். யூதப் படையை விட முசுலிம் படை மிகச் சிறியதாகவே இருந்தது. இதனால் யூதப் படையின் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை காரணமாக மூன்றே நாட்களில் முகம்மது நபி தலைமையிலான முசுலிம் படை வென்றது. யூதர்கள் மத்திய ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்பில் ஏற்பட்ட தோல்வி காரணமாக புற அரண் பாதுகாக்க தவறிவிட்டனர்.இந்த செயலை குறைந்து மதிப்பிட்ட முசுலிம் படை சாதரணமாக அடுத்தடுத்து கைபர் பகுதியை பிடித்தது.

போரின் முடிவு

முகம்மது நபி யூதத் தலைவர்களான இப்னு அபித ஹுகைக், கலீபா மற்றும் வாலித் போன்றவர்களை சரணடைய நிபந்தனைகளைப் பேசினார். கைபர் யூதர்கள் இறுதியாக தமது உற்பத்திப் பொருட்களில் அரை பங்கு முசுலிம்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் சரணடைந்தனர். பின் அங்கேயே வாழ அனுமதிக்கப்பட்டனர்.

பனூ நாதிர் யூதர்களின் தலைவர் ஹுயை இப்னு அக்தாப் மகளான விதவைப்பெண் சபியாவை இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபி திருமணம் செய்து கொண்டார்கள்.

மேற்கோள்கள்

Tags:

கைபர் போர் போருக்கான காரணங்கள்கைபர் போர் போரின் போக்குகைபர் போர் க்களம்கைபர் போர் போரின் முடிவுகைபர் போர் மேற்கோள்கள்கைபர் போர்அராபியத் தீபகற்பம்மதீனாமுகம்மது நபிமுசுலிம்யூதர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொல்கொதாசிந்துவெளி நாகரிகம்மங்கோலியாஇடலை எண்ணெய்இன்னா நாற்பதுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்இலங்கைகலிங்கத்துப்பரணிதமிழச்சி தங்கப்பாண்டியன்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஈ. வெ. இராமசாமிசென்னைமதுராந்தகம் தொடருந்து நிலையம்கருப்பை நார்த்திசுக் கட்டிதஞ்சாவூர்சித்தர்கள் பட்டியல்திருப்பூர் மக்களவைத் தொகுதிதங்க தமிழ்ச்செல்வன்முகலாயப் பேரரசுவிநாயகர் அகவல்சு. வெங்கடேசன்இலவங்கப்பட்டைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அரவிந்த் கெஜ்ரிவால்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024ரமலான்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிகபிலர் (சங்ககாலம்)வங்காளதேசம்வட்டாட்சியர்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இசுலாமிய வரலாறுகீர்த்தி சுரேஷ்குலுக்கல் பரிசுச் சீட்டுபரதநாட்டியம்தங்கம் தென்னரசுசூரியக் குடும்பம்கிராம ஊராட்சிவெள்ளியங்கிரி மலைபிரேசில்இரண்டாம் உலகப் போர்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிபாக்கித்தான்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்திராவிசு கெட்தி டோர்ஸ்சூரரைப் போற்று (திரைப்படம்)குத்தூசி மருத்துவம்பச்சைக்கிளி முத்துச்சரம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மெய்யெழுத்துஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தென்காசி மக்களவைத் தொகுதிதேவதூதர்பழனி பாபாமண்ணீரல்பிரித்விராஜ் சுகுமாரன்தமிழ்நாடு காவல்துறைமீன்ஆசிரியர்மணிமேகலை (காப்பியம்)திருநாவுக்கரசு நாயனார்பாண்டவர்முக்குலத்தோர்சப்தகன்னியர்தேர்தல்திருமூலர்அல் அக்சா பள்ளிவாசல்சிலம்பரசன்சித்த மருத்துவம்அன்புமணி ராமதாஸ்கம்பராமாயணம்திரிகடுகம்குணங்குடி மஸ்தான் சாகிபுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பசுமைப் புரட்சிஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதி🡆 More