குடி நீர்

குடி நீர் என்பது மனிதர்களால் உட்கொள்ளப்பட்டால் எவ்வகை பாதிப்பும் ஏற்படுத்தாத நீர் ஆகும்.

வளர்ந்த நாடுகளில் குடி நீர் குழாய் நீராக வீடுகளில் உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், வணிகம் மற்றும் தொழில்துறையிலேயே குழாய் நீர் அதிகம் பயன்படுகின்றது. இவற்றிற்கு அளிக்கப்படும் நீர், தரக் கட்டுப்பாட்டுகளின் வரையறைகளை எட்டியிருக்கவேண்டும். கழிவறையினைச் சுத்தம் செய்யவோ, நீர்ப்பாசனத்துக்கோ குடி நீர் பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில், சாம்பல் நீர் இவற்றிற்கு ஒரு மாற்றாக அமைந்துள்ளது.

குடி நீர்
பல நாடுகளில் குழாய் நீரே குடி நீரின் முதன்மை ஊற்றாக அமைந்துள்ளது

உலகின் பெரும் பகுதிகளில், மனிதர்களுக்குப் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. கிடைக்கும் நீர் நோய்க்காவிகளாலும் நோய்க்காரணிகளாலும் மாசுபட்டுள்ளது. பல நாடுகளில் இவ்வகை மாசுபட்ட நீரினை அருந்துவது உடல்நலக்கேட்டுக்கும், இறப்புக்கும் காரணமாக அமைகின்றது. வளர்ந்துவரும் நாடுகள் தூய குடிநீரினை மக்களுக்கு வழங்குவதையும், அதனால் பொது நலத்தினைக் காப்பதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

நீர் மனிதர்களின் வாழ்வுக்கும் பிற உயிரினங்களின் வாழ்வுக்கும் இன்றியமையாதது ஆகும். கொழுப்பைத் தவிர்த்து, நீர் நிறை மூலம், மனித உடலில் சுமார் 70% இருக்கின்றது. வளர்சிதைமாற்றத்திலும், கரைசல்களைக் கரைக்க கரைப்பானாகச் செயல்படுவதிலும் நீருக்குக் குறிக்கத்தக்க பங்கு உண்டு. ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம், ஒரு சராசரி அமெரிக்கர் ஒரு நாளில் 2.0 லிட்டர் நீரினை அருந்துவதாக முன்னர் அறிக்கையிட்டாலும், இப்போது வயதுக்கு ஏற்றாற்போல் உட்கொள்ளும் அளவு மாறுபடுவதாகத் தெரிவிக்கின்றது.

புட்டித் தண்ணீர் பல இடங்களில் குடிநீராக பொது நுகர்வுக்காக விற்கப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

குழாய் நீர்சாம்பல் நீர்நீர்நீர்த் தரம்நீர்ப்பாசனம்வளர்ந்த நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜெயம் ரவிபீப்பாய்சீமான் (அரசியல்வாதி)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மறைமலை அடிகள்அவுரி (தாவரம்)திருநெல்வேலிபழனி முருகன் கோவில்பரதநாட்டியம்செம்மொழிவேலுப்பிள்ளை பிரபாகரன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மண் பானைகுற்றியலுகரம்பள்ளுதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வடிவேலு (நடிகர்)விராட் கோலிதைராய்டு சுரப்புக் குறைதனுசு (சோதிடம்)மொழிகருப்பசாமிபெரியாழ்வார்மு. வரதராசன்தொல்காப்பியம்திருப்பூர் குமரன்அயோத்தி தாசர்புறநானூறுஎயிட்சுமூலம் (நோய்)காற்றுதிருவிளையாடல் புராணம்சினேகாஆந்தைஇந்திய நாடாளுமன்றம்ஆண்டாள்ஹரி (இயக்குநர்)வெப்பநிலைசூரைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சுப்பிரமணிய பாரதிசுபாஷ் சந்திர போஸ்2019 இந்தியப் பொதுத் தேர்தல்இனியவை நாற்பதுஅரண்மனை (திரைப்படம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்கணம் (கணிதம்)கண்ணகிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்திருவண்ணாமலைஜி. யு. போப்புறாசங்கம் (முச்சங்கம்)சூரரைப் போற்று (திரைப்படம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்விசாகம் (பஞ்சாங்கம்)தினமலர்பசுமைப் புரட்சிதேர்தல்அணி இலக்கணம்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)சிதம்பரம் நடராசர் கோயில்சேக்கிழார்பி. காளியம்மாள்தமிழ்நாடு காவல்துறைஅமலாக்க இயக்குனரகம்இந்திய நிதி ஆணையம்தீரன் சின்னமலைஅருந்ததியர்அரவான்திருப்பாவைரோகிணி (நட்சத்திரம்)ஆய்வுபிரேமலுகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)இலங்கை தேசிய காங்கிரஸ்வினோஜ் பி. செல்வம்ஆகு பெயர்🡆 More