கிட்டிப் புள்ளு

கிட்டிப் புள்ளு என்பது தமிழரின் பழமையான ஒரு விளையாட்டு ஆகும்.

பொதுவாகச் சிறுவர் மட்டுமே விளையாடும் விளையாட்டாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களுடன் 1950-ஆம் ஆண்டு வரையில் நாட்டுப்புறங்களில் விளையாடப்பட்டுவந்தது.

கிட்டிப் புள்ளு
கிட்டிப்புல் விளையாடுதல்
கிட்டிப் புள்ளு
கிட்டிப்புள்ளு ஆட்டப் பாங்குகள்

பெயர்கள்

    கரகொட்டி, குட்டி-கோல் – கேரளம்
    கிட்டிதக்கா – இந்தி மொழி
    கிட்டிப்புள் – திருச்சி மாவட்டம்
    கில்லி-தண்டா – மகாராட்டிரம்
    கில்லி-தண்டு – கோவை மாட்டம்
    குச்சிக்கம்பு, குச்சி-அடித்தல் – தமிழகப் பொதுவழக்கு
    குல்லி-தண்டா – வங்கம்
    சிலதா – நீலகிரித் தொதுவர்
    சில்லாங்குச்சி – நெல்லை மாவட்டம்
    திப்லி – ஆந்திர மாநிலக் கோண்டு மக்கள்
    புள்ளுக்கிட்டி, சிங்காம்புள் – குமரி மாவட்டம்

விளையாடும் முறை

கிட்டிப் புள்ளு சிறுவர்கள் ஆடும் ஒரு விளையாட்டு.

கிட்டிப்புள், கிட்டிக்கோல் ஆகியவை இந்த விளையாட்டுக்குப் பயன்படும் கருவிகள்.

கிட்டிப்புள் சுமார் மூன்றுவிரல் பருமனில் 20 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. கீந்துகுழி ஆட்டத்துக்கு அதன் இரு முனைகளும் கூராக இருக்கும். அடிகோல் ஆட்டத்துக்கு முனைக்கூர் இருக்காது
கிட்டிக்கோல் ஒருவிரல் அல்லது இருவிரல் பருமனும் சுமார் 50 செனடிமீட்டர் நீளமும் கொண்டது.

ஆட்ட வகை

கிட்டிப்புள்ளு விளையாட்டில் இரண்டு முறைகள் தமிழத்தில் இருந்துவந்தன.

  1. கீந்து-குழி ஆட்டம் (இந்தியாவிலும், இலங்கையிலும்)
  2. அடிகோல் ஆட்டம்
    ஆடிவோர் வகை
    குழு ஆட்டம்
    அணி ஆட்டம்

குழு ஆட்டத்தில் ஒருவர் அடிக்க ஏனையோர் எதிராளி ஆவர்.
அணி ஆட்டத்தில் ஆடும்-அணி, எதிர்-அணி என இரு குழுக்கள் அமையும்.

கீந்துகுழி ஆட்டம்

ஆட்ட அரங்காகக் குதிக்காலால் திருகிய குழி, அல்லது சுமார் ஒருமுழம் நீளத்தில் செய்யப்பட்ட குழி அமைக்கப்படும்.
குழியில் ஒருமுனை இருக்கும்படி கிடைமட்டமாகக் கிட்டிப்புள் வைக்கப்படும்.
இந்தப் புள்ளைக் கிட்டிக்கோலால் தட்டிவிடுவர். இதற்குத் தெண்டுதல் என்று பெயர்.
புள் பறக்கும்போது கிட்டிக்கோலால் அடிப்பர். புள் தொலைதூரம் செல்லும். எதிரில் உள்ளவர், அல்லது எதிர்-அணியினர் பறந்துவரும் புள்ளைப் பிடிக்கவேண்டும். இவ்வாறு தடியால்(கிட்டிக்கோலால்) குழியிலிருந்து தெண்டி(கிளப்பி) விளையாடுவதே கிட்டிப்புள் விளையாட்டாகும்.  

புள் வீழ்ந்த இடத்திலிருந்து குழியை நோக்கிப் புள்ளு வீசப்படும்,
அப்போது நிலத்தோடு கிட்டியை விசுக்கி புள்ளு குழிக்குள் வீழாமல் பார்க்க வேண்டும். 
இந்த கிட்டிப் புள் தடியைத் தெண்டில், தாண்டில் என்றெல்லாம் சேலம் மாவட்டத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த ஆட்டம் வேறு வகையிலும் ஆடப்படும்.

    வேறு வகையான விளக்கம்

அடிகோல் ஆட்டம்

அடிகோல் ஆட்டத்தில் கீந்துகுழி இல்லை. கிட்டிப்புள்ளின் முனை கூராக இருக்காது. ஒவ்வொருவரும் 4 முறையில் விளையாடவேண்டும்.

    ஒன்றான் (வெற்றிப்புள்ளி 1)
    ஒருகையால் புள்ளைத் தூக்கிப் போட்டு, மற்றொரு கையிலுள்ள கோலால் அடித்தல்
    இரண்டான் (வெற்றிப்புள்ளி 2)
    ஒரு கையிலுள்ள கோலின்மீது புள்ளை வைத்துத் தூக்கிப்போட்டு அதே கையிலுள்ள கோலால் அடித்தல்
    மூன்றான் (வெற்றிப்புள்ளி 3)
    ஒரு கையின் ஆள்காட்டி-விரல், சுண்டு-விரல் ஆகியவற்றில் புள்ளை நிறுத்தித் தூக்கிப் போட்டு மறுகையில் உள்ள கோலால் அடித்தல்
    நாலான் (வெற்றிப்புள்ளி 4)
    ஒரு காலின் மேல்-பாத்ததில் புள்ளை நிறுத்தி அக்காலால் தூக்கிப்போட்டுக் கையிலுள்ள கோலால் அடித்தல்
ஆடும் முறை

ஒன்றான், இரண்டான், மூன்றான், நாலான் முறைமையை ஒவ்வொருவரும் வரிசையாகப் பின்பற்ற வேண்டும். ஆட்டம் தவறாமல் ஆடினால் ஒருவர் தொடர்ந்தாற்போல் 4 படிநிலைகளையும் முடித்து 10 வெற்றிப் புள்ளிகளையும் ஈட்டலாம். ஒன்றில் ஒருவர் தவறினால் ஆட்டம் அடுத்தவர் கைக்கு மாறும். எல்லாரும் அடித்து முடிந்தபின் மறுமுறை ஆட்டம் வரும்போது ஒவ்வொருவரும் தான் தவறிய படிநிலையில் ஆடவேண்டும். ஒரு படிநிலை முடிந்தால்தான் அடுத்த படிநிலை.

பந்தைப் பிடித்தல்
    ஒருவர் புள்ளை அடிக்கும்போது பிறர் பறந்துவரும் புள்ளைக் கையாலோ, துணியை விரித்தோ பிடிக்கலாம். புள் தரையில் விழாமல் பிடிக்கப்பட்டுவிட்டால் அடித்து-ஆடியவர் ஆட்டம் இழப்பார்.
விழுந்த புள்ளை எறிதல்
    பிடிபடாமல் புள் விழுந்துவிட்டால் அதனை எடுத்து அடித்த உத்திக் குழி அடையாளத்தை நோக்கி எறிவர். எறியும் பந்தை அடித்தவர் தடுத்து அடிக்கலாம். அடித்தாலும் அடிக்காவிட்டாலும் புள் விழுந்த இடத்திலிருந்து உத்திக் குழி வரையில் தான் அடித்த கோலால் அளந்து வரும் எண்ணிக்கையைத் தன் வெற்றிப்புள்ளி ஆக்கிக் கொள்ளலாம். புள் விழுந்த இடத்துக்கும், உத்திக்கும் இடையேயுள்ள இடைவெளி அவரது கோலின் அளவுக்குக் குறைந்தால், அடித்தவர் ஆட்டம் இழப்பர்.

ஆட்ட விதிகள்

ஆட்டக்காரர் புள்ளை அடிக்கும் போது எதிர் அணியினரால் புள் பிடிபட்டால் அடிப்பவர் ஆட்டம் இளப்பார்.அது போல் அடிப்பவர் கையில் இருக்கும் அடி கோலை தவற விட்டு விட்டால் எதிர் அணியினர் அடி கோலையோ அல்லது புள்ளையோ எடுத்து குழியில் வைக்க வேண்டும் அவ்வாறு வைத்தால் அடிப்பவர் ஆட்டம் இளப்பார்.அதற்கு முன்பு அடித்தவர் தவறவிட்ட அடி கோலை கையில் எடுத்து விட்டால் ஆட்டத்தை தொடரலாம்.

தண்டனை

    ஆட்டத்தின் முடிவில் குறைந்த புள்ளிகள் பெற்றவருக்குத் தண்டனை உண்டு.
    அதிக புள்ளி பெற்றவர் தன் விருப்பம்போல் புள்ளைப் பிடித்துத் தொலைவுக்கு அடிப்பர். அங்கிருந்து பிறர் ஒவ்வொருவராக அவரவர் அடிக்குப் புள் சென்ற தொலைவிலிருந்து மூச்சுவிடாமல் பாடிக்கொண்டே கிட்டி அடித்த உத்தி-இடத்தைத் தொடவேண்டும்.

மேலும் காண்க்

அடிக்குறிப்பு

வெளியிணைப்புக்கள்

Tags:

கிட்டிப் புள்ளு பெயர்கள்கிட்டிப் புள்ளு விளையாடும் முறைகிட்டிப் புள்ளு மேலும் காண்க்கிட்டிப் புள்ளு அடிக்குறிப்புகிட்டிப் புள்ளு வெளியிணைப்புக்கள்கிட்டிப் புள்ளுவிளையாட்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் சிற்பக்கலைமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)உஹத் யுத்தம்பாத்திமாமதராசபட்டினம் (திரைப்படம்)பால் (இலக்கணம்)காய்ச்சல்சிவன்மு. கருணாநிதிவீணைசகுந்தலாஅதியமான் நெடுமான் அஞ்சிஇரா. பிரியா (அரசியலர்)மருந்துப்போலிகழுகுமலைமருதம் (திணை)கருட புராணம்ஆந்திரப் பிரதேசம்பித்தப்பைசிவாஜி (பேரரசர்)இந்தியாவில் இட ஒதுக்கீடுசௌராட்டிரர்உயிர்ச்சத்து டிபைரவர்போதைப்பொருள்கே. என். நேருபுனர்பூசம் (நட்சத்திரம்)ஐக்கிய நாடுகள் அவைதமிழ்நாடு அமைச்சரவைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கார்லசு புச்திமோன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பால்வினை நோய்கள்மார்ச்சு 28திருப்பதி வெங்கடாசலபதி கோயில்தமிழ்விடு தூதுதாவரம்மனித உரிமைபச்சைக்கிளி முத்துச்சரம்தமிழர் நிலத்திணைகள்உரைநடைஇந்திய விடுதலை இயக்கம்நெல்இன்னா நாற்பதுதிருச்சிராப்பள்ளிசிலம்பம்ஆற்றுப்படைபதினெண் கீழ்க்கணக்குஅல்லாஹ்முகம்மது நபிஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குபாண்டவர்காம சூத்திரம்அக்பர்சீமான் (அரசியல்வாதி)இரத்தப் புற்றுநோய்இலங்கையின் வரலாறுசங்க காலம்நண்பகல் நேரத்து மயக்கம்காதல் கொண்டேன்இளங்கோவடிகள்தற்கொலை முறைகள்கற்பித்தல் முறைஆப்பிள்யாப்பகூவாஆகு பெயர்கட்டற்ற மென்பொருள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்மூசாவெள்ளி (கோள்)இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்இசைஒட்டுண்ணி வாழ்வுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கிளிசூரியக் குடும்பம்பாண்டி கோயில்ஜெ. ஜெயலலிதாதிருக்குர்ஆன்🡆 More