கால்வாய்

கால்வாய் எனப்படுவது நீர்ப்பாசனத்துக்காக கால்வாய்கள், கப்பல் போக்குவரத்துக்கான கால்வாய்கள் என இருவகைப்படும்.

போக்குவரத்துக்கான கால்வாய்கள் செயற்கையாக அமைக்கப்படும் நீரிணைகள் ஆகும். இரு கடற்பகுதிகள், ஆற்றுப் பகுதிகள், அல்லது ஏரிப் பகுதிகளை இணைப்பதாக வெட்டப்படும் இவை கடற்போக்குவரத்துத் தூரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு வெட்டப்படுபவை ஆகும்.

கால்வாய்
அயர்லாந்து நாட்டின் ராயல் கால்வாய்
கால்வாய்

சுயஸ் கால்வாய், பனாமாக் கால்வாய் போன்றன கப்பற் போக்குவரத்துக்காக வெட்டப்பட்ட குறிப்பிடத்தக்க கால்வாய்களாகும்.

வரலாறு

கால்நடை விலங்கால் செலுத்தப்படும் வண்டி போக்குவரத்து திறன் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தான் இருந்தது. கோவேறு கழுதை பூட்டப்பட்ட வண்டியில் அதிகபட்சம் 8 டன் 250 pounds (113 kg) என்ற அளவில் உள்ள எடைகொண்ட சரக்குப் பொருட்களை சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ சுமக்க முடியும். இது மிகச் சிறிய இடைவெளிகளுக்கும், காலத்திற்கும் பொருத்தமானது தவிர, வண்டிகள் செல்ல சாலைகள் தேவை. இதற்கு பதிலாக பழங்காலத்தில் எளிமையான, மலிவான போக்குவரத்திற்கு கால்வாய் பொருத்தமானதாக இருந்திருக்கிறது.

பண்டைய வரலாறு

அறியப்பட்ட பழமையான கால்வாய்களில் முதன்மையானது நீர்ப்பாசனக் கால்வாய்கள், இவைகள் பண்டைய மெசொப்பொத்தேமியாவில் சுமார் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது, இப்போது ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் உள்ளது. சிந்து சமவெளி நாகரீகம், பண்டைய இந்தியாவில், கிர்னார் என்னும் இடத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட நவீன பாசன மற்றும் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டது. எகிப்து நாட்டில் உள்ள கால்வாய்கள் குறைந்தபட்சம் பெப்பி I மேரி]] (கி.மு 2332-2283 ஆட்சி காலத்தில்) அஸ்வான் அருகிலுள்ள நைல் மீது கடந்து செல்ல ஒரு கால்வாய் கட்டினார்.

பண்டைய சீனா வரலாற்றில், நதிப் போக்குவரத்திற்கான பெரிய கால்வாய்கள் கி.மு 481-221 வரையான காலத்தில் உருவாக்கப்பட்டது. பண்டைய சரித்திர ஆசிரியரான சிவா கியான் கூற்றுப்படி, மிக நீளமான கால்வாய் ஹாங்கா காௗ என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கால்வாய் சாங், ஜாங், சென், காய், காவ் மற்றும் வேய் போன்ற பகுதிகளை இனைத்திருக்கிறது. இன்றும் உலகின் மிக நீளமான கால்வாய், மற்றும் மிக மிக உயரமான ஒரு கால்வாய்களில் மிக நீண்ட கால்வாய் சீனாவின் பெரும் கால்வாய் இருந்து வருகிறது. இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

கிரேக்க பொறியியலாளர்கள் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கால்வாய் தடுப்புகளைப் முதன்முதலாக பயன்படுத்தி இருந்தனர், இந்தத் தடுப்புகள் மூலம் அவர்கள் பண்டைய சூயஸ் கால்வாயில் நீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

முக்கியத்துவம்

வரலாற்று ரீதியாக கால்வாய்கள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி, மற்றும் ஒரு நாகரிகத்தின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1855 ஆம் ஆண்டில் லேஹீ கால்வாய் 1.2 மில்லியன் டன் சுத்தமான எரியும் அனல்மின் நிலக்கரி சுரங்கத்தை நடத்தியது; சுமார் ஒரு நூற்றாண்டிற்கு செயல்பட்டு வந்த இந்தக் கால்வாய் 1930 களில் இதை உருவாக்கிய் நிறுவனத்தால் இதன் சேவை நிறுத்தப்பட்டது. நமது நவீன காலத்தில் சில கால்வாய்கள் இன்னும் செயல்படுகின்றன, அவை பொருளாதாரத்திற்குத் தேவையான உந்து சக்தியாக இருந்திருக்கிறது, உண்மையில் நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்குதல் ஆகியவற்றிற்கு கால்வாய்களின் தேவை இருந்தது. நிலக்கரி மற்றும் தாதுக்கள் போன்ற மொத்த மூலப்பொருட்களின் போக்குவரத்து நீர் போக்குவரத்து இல்லாமல் கடினமானதாகவும் பிற போக்குவரத்து செலவை ஒப்பிடும்போது ஓரளவு குறைவாகவும் இருக்கிறது. 17 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் போது அதிகரித்த இயந்திரமயமாக்கல் சுழற்சியின் விளைவாக தொழில்துறை வளர்ச்சிகள் மற்றும் புதிய உலோகங்கள் இத்தகைய மூலப்பொருட்களுக்கு எரிபொருளாக கால்வாய்கள் செயல்பட்டது. புதிய ஆராய்ச்சி துறைகளில், புதிய தொழிற்சாலைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றதிற்கு வழிவகுத்தது, எந்தவொரு தொழில்மயமான சமுதாயத்திற்கும் வாழ்க்கை தரத்தை உயர்த்த கால்வாய்களின் தேவை முக்கியமானதாகும்.

பெரும்பாலான கப்பல் கால்வாய்கள் உள்ளிட்ட எஞ்சியிருக்கும் கால்வாய்கள் இன்று முதன்மையாக சரக்கு மற்றும் பெரிய கப்பல் போக்குவரத்துத் தொழில்களுக்கு சேவை செய்கின்றன, அதேசமயம் முன்னர் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துக்கு உதவிய கால்வாய்கள் பின்நாட்களில் கைவிடப்பட்டும், பாராமரிப்பில்லாமலும், நீரோட்டம் மின்றி தூர்ந்துபோயிற்று. அதேசமயம் அணைகள் வெள்ள நீரை கட்டுப்படுத்தவும் சேமிக்கவும் மற்றும் உல்லாச படகு போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டது. 1850 களின் நடுவில் அமெரிக்காவில் முதன்முதலாக துவங்கிய கால்வாய் கப்பல் போக்குவரத்து முதன்முதலில் அதிகரித்தது, நாளைடைவில் கால்வாய் போக்குவரத்து, விலை மலிவான இரயில் போக்குவரத்து வந்தவுடன் குறைந்து முற்றிலும் கைவிடப்பட்டது.

1880 களின் முற்பகுதியில், இரயில் போக்குவரத்துடன் பொருளாதாரரீதியாக போட்டியிடும் திறனைக் கொண்ட கால்வாய்கள் வரைபடத்தில் இருந்து வந்தன. அடுத்த இரண்டு தசாப்தங்களில், நிலக்கரி ஏற்றுமதி அதிகப்படியாக குறைந்து எண்ணெயை எரிபொருளாக கொண்டு வெப்ப உற்பத்தியின் தொடக்கம், மற்றும் நிலக்கரியின் தேவை இதனால் குறைந்து. பின்னர், முதலாம் உலகப் போருக்குப் பிறகு, மோட்டார் வண்டிகள் வந்தபோது, சிறிய அமெரிக்கா கரைகள் கொண்ட கால்வாய்கள் மற்றும் பல ரயில்களுடனான சரக்கு போக்குவரத்து பத்து-மைல்களில் நிலையான சரிவைக் கண்டது, நெகிழ்வுத்தன்மை மற்றும் செங்குத்தான சரிவுகளில் சரக்குகளை எடுத்துச் செல்லக்கூடிய தன்மையால் சாலை போக்குவரத்து நெடுகிலும் அதிகரித்தது, மேலும் குளிர்காலத்தில் செயல்பட முடியாத சரக்கு இரயில் போக்குவரத்துக்கு பதிலாக சாலை போக்குவரத்து அதிகரித்தது.

கட்டுமானம்

கால்வாய்கள் கீழ் உள்ள மூன்று வழிகளில் ஒன்று அல்லது மூன்றின் கலவையாக, கிடைக்கக்கூடிய தண்ணீர் மற்றும் கிடைக்கக்கூடிய பாதையைப் பொறுத்து இருக்கும்:

மனிதனால் உருவாக்கப்பட்ட நீரோடைகள்

  • கால்வாய்கள் இயற்கையான நீரோடைகள் இல்லாத இடத்திலும் செயற்கையாக உருவாக்க முடியும். எப்படி என்றால்? கால்வாய்கள் செயற்கையாக ஆழமாக தோண்டப்பட்டும் மற்றும் அதன் கரைகள் கல், சிமின்ட் கான்கிரீட் கலவைகளால் பலப்படுத்தப்பட்டும் உருவாக்க முடியும். கால்வாய்க்கான தண்ணீர் வெளிப்புற மூலத்திலிருந்து நீரோடைகள் அல்லது நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் இருந்து வழங்க வேண்டும். புதிய நீர்வழி பாதைகளில் தடுப்புகள், தூக்கி அல்லது மின் தூக்கிகல் (elevators) போன்ற நுட்பமான பொறியியல் வேலைகள் மூலம், கால்வாய்களில் கப்பல்கள் உயர்த்தப்படுவதற்காகவும் குறைப்பதற்காகவும் கட்டப்பட்டுள்ளன. எ.கா. ஒரு உயர்ந்த நிலத்தின் மீது பள்ளத்தாக்குகளை இணைக்கும் கால்வாய்கள், கால்வாய் டூ மிடி, கால்வாய் டி ப்ரைரே மற்றும் பனாமா கால்வாய் போன்றவை.
  • தற்போதுள்ள ஏரியின் அடிவாரத்தில் உள்ள மணற்பகுதியை தூர்வாறி ஆழப்படுத்தி துளைப்பதன் மூலம் ஒரு கால்வாய் கட்டப்பட முடியும். கால்வாய் ஆழபடுத்தல் முடிந்ததும், ஏரியின் நீர் குறைக்கப்பட்டு கால்வாய்குள் நீர் நிரபப்படும் இதன் மூலம் சுற்றியுள்ள பகுதியின் நீரை வடிப்பதற்கு வடிகால்வாயாகவும் மற்றும் நீர் வழிப் போக்குவரத்திற்கும் பயன்படும். எ.கா. லேஜ் வார்ட் (nl). ஒரு ஏரிக்குள் இரண்டு இணை அணைக்கரைகள் உருவாக்கவும், புதிய கால்வாயை கரைகளின் இடையில் அமைக்கவும், பின்னர் ஏரியின் மீதமுள்ள நீரை வடிகட்டவும், இதனால் கால்வாய்குள் மட்டும் அதிக நீர் இருக்கும் மற்றும் ஏரியின் பிற பகுதியில் நீர் வடிகட்டப்படும். கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் உள்ள வடக்கு கடல் கால்வாய் இந்த முறையில் தான் கட்டப்பட்டன.

கால்வாய் மற்றும் நீர் வழி போக்குவரத்து அமைத்தல்

  • ஒரு இயற்கை நீரோடையை கால்வாயாக மாற்றம் செய்தால் அதில் எளிதாக கணிக்கக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட நீர் வழிப்போக்குவரத்தை உருவாக்க முடியும். இது எப்படி சாத்தியம் என்றால்? நீரோடையின் பாதையைத் ஆழப்படுத்தி தடுப்புகள் அமைத்து திசை திருப்புவதும், மாற்றுவதன் மூலமும் கட்டுப்படுத்துவதன் மூலம் நீரின் ஓட்டம் சீராக மாற்றப்படுகிறது. இதன் மூலம் சரக்குகளை சிறிய படகுகள் மற்றும் பெரிய கப்பல்கள் கொண்டு மிக எளிதாக எடுத்துச் செல்ல இயலும். எ.கா. வடகிழக்கு பென்சில்வேனியாவின் நிலக்கரிப் பகுதி, பாஸ்ஸோ சாவ்ன், கால்வாய் டி மைன்ஸ் டி ஃபெர் லா லாஸ் மோஸெல்லெ மற்றும் ஐசென் நதி ஆகியவற்றில் உள்ள லேஹி கால்வாய் அடங்கும்.

பக்கவாட்டு கால்வாய்கள்

இயற்கை நீரோடைகளை கால்வாயாக மாற்றம் செய்ய இயலாத போது அதன் அருகில் பக்கவாட்டில் இணையான செயற்கையாக கால்வாய் அமைத்து இரண்டாவது நீரோட்டத்திற்கு வழி ஏற்படுத்தித் தருவது. இது பக்கவாட்டு கால்வாய் என்று அழைக்கப்படுகிறது. இயற்கை நீரோடைகள் சில சமயங்களில் தொடர்ச்சியான வளைவுகள், குதிரை குழம்பு வடிவ வளைவுகள் கொண்டதாகவும் சீர்படுத்த முடியாத அளவில் இருக்கும் பொழுது பக்கவாட்டு கால்வாய்களால் எளிதாக சீரான நீரோட்டப் பாதை கொண்டதாக கட்டமைக்க முடியும் அவ்வாறு அமைக்கப்படும் கால்வாய்க்கு தேவையான நீர் ஆதாரமாய் இயற்கை நீரோடை செயல்படும். எ.கா. சாசபீக் மற்றும் ஓஹியோ கால்வாய், கால்வாய் லாடெரல் லா லா லோயர், கேரோன் லேட்னல் கேனல் மற்றும் ஜூலியானா கால்வாய் ஆகியவை இதில் அடங்கும்.

நீர் பாசானக் கால்வாய்கள்

ஆற்று நீர் பாசானக் கால்வாய்கள், வரத்துக் கால்வாய், மாறுகால் கால்வாய், பாசனக் கால்வாய் அல்லது கழனிக்கால் என மூன்று வகைப்படும்.

வரத்துக் கால்வாய் (Supply Channel)

ஆறுகளில் குறிப்பிட்ட வளைவுகளில் மட்டுமே வரத்துக் கால்வாய்களின் தலைப்பகுதி வெட்டப்படும். அவ்வாறு வெட்டும் போது ஆற்றிலிருந்து தண்ணீர் மட்டுமே கால்வாய்க்குள் செல்லும். மணல் புகாமல் தடுக்கப்படும். மேலும் ஆற்றில் நீர்வரத்து குறையும் காலத்தில் கூட, தடையின்றி கால்வாய்க்குள் தண்ணீர் செல்லும். இதற்கு உதாரணமாக இருக்கிறது வைகை ஆற்றில் இருந்து வட ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்.

மறுகால் அல்லது வெள்ள வடிகால் கால்வாய் (Surplus Channel)

வெள்ளக் காலங்களில் ஏரிகளின் உபரி நீரை கலிங்கல் வழியாக வெளியேற்றும் கால்வாய்தான் மறுகால்வாய். இவற்றின் கொள்ளளவும் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயின் கொள்ளளவும் சமமாக இருக்கும். நீர்வரத்தும் நீர் வெளியேற்றமும் சரிசமமாக அமைந்து வெள்ளப் பெருக்கை தடுக்க உதவும்.

பாசனக் கால் அல்லது கழனிக்கால் (Distribution Channel)

ஏரி மடையின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட இக்கால்வாய்கள் மூலம் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பபடும். நிலங்களின் அளவுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இந்த கால்வாய்கள் கண்ணாறு, வதி, பிலாறு என அழைக்கப்பட்டது.

மிதக்கும் நகரங்கள்

கால்வாய் 
இரண்டு கால்வாய்களின் சந்திக்கும் இடம்,ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
கால்வாய் 
கிர்பிய்டியோவ் கால்வாய் in செயிண்ட் பீட்டஸ்பர்க், ரசியா

கால்வாய்கள் வெனிஸ் நகரத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது, பல (கால்வாய்) மிதக்கும் நகரங்கள் "வெனிஸ் ஆஃப் ..." என்ற பெயரிடப்பட்டது. நகரம் சதுப்பு தீவுகளில் கட்டப்பட்டுள்ளது, கட்டடங்களை ஆதரிக்கும் மரச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது, மனிதனால் இந்த நகரம் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். தீவுகளுக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு; 12 ஆம் நூற்றாண்டில், வெனிஸ் ஒரு சக்தி வாய்ந்த நகரமாக இருந்தது.

ஆம்ஸ்டர்டாம் நகரமும் வெனிஸ் போன்று கட்டப்பட்டது. 1300 ஆம் ஆண்டுகளில் இது ஒரு நகரமாக மாறியது. பல கால்வாய்கள் ஆம்ஸ்டர்டாமின் பலமான ஒரு பகுதியாக கட்டப்பட்டன. நகரம் விரிவடைந்து, வீடுகள் கால்வாய்களை ஒட்டியே கட்டப்பட்டது.

கால்வாய் 
லா பெரேட் கால்வாய்,செடே, பிரான்ஸ்.

விரிவான கால்வாய் கட்டமைப்புடன் உள்ள மற்ற நகரங்கள்: நெதர்லாந்தில் உள்ள ஆல்மாமார், அமர்ஸ்போர்ட், போல்வார்ட், பிரெய்ல், டெல்ஃப்ட், டென் பாஷ், டோக்மும், டார்ட்ரெச்ச்ட், என்குயூஜன், ஃபிரான்கெர், கௌடா, ஹார்லெம், ஹர்லிங்கென், லீவார்டன், லெய்டன், ஸ்னெக் மற்றும் யூட்ரெட்ச் நகரங்கள்; பிரஜி மற்றும் ஜெண்ட்ஸ் ப்ளாண்டர்ஸ், பெல்ஜியம்; இங்கிலாந்தில் பர்மிங்காம்; ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்; போர்ச்சுகில் ஏவிரோ; ஜெர்மனியில் ஹாம்பர்க் மற்றும் பெர்லின்; ஃபோர்ட் லாடெர்டேல் மற்றும் கேப் கோரல், புளோரிடா, அமெரிக்கா மற்றும் லாஹோர் பாக்கிஸ்தான்.

லிவர்பூல் கடல் வானிப நகரம் இங்கிலாந்தின் லிவர்பூலின் மையப்பகுதியில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக உள்ளது, இங்கு முக்கியமாக குடியிருப்பு மற்றும் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக ஊடுருவிவரும் நீர்வழிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

Tags:

கால்வாய் வரலாறுகால்வாய் பண்டைய வரலாறுகால்வாய் முக்கியத்துவம்கால்வாய் கட்டுமானம்கால்வாய் நீர் பாசானக் கள்கால்வாய் மிதக்கும் நகரங்கள்கால்வாய் மேற்கோள்கள்கால்வாய்ஆறுஏரிகடல்கப்பல்நீரிணை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சார்பெழுத்துபயில்வான் ரங்கநாதன்கல்லணைமீனா (நடிகை)தாயுமானவர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்நீர்நிலைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்திருக்குறள்கிராம நத்தம் (நிலம்)குகேஷ்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்குறுந்தொகைவண்ணார்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்கன்னி (சோதிடம்)திணை விளக்கம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மதுரை வீரன்தங்கம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்நஞ்சுக்கொடி தகர்வுமாணிக்கவாசகர்நீதிக் கட்சிஆண் தமிழ்ப் பெயர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சுயமரியாதை இயக்கம்பால் (இலக்கணம்)ஒற்றைத் தலைவலிமுல்லைக்கலிசுற்றுச்சூழல்ரோகிணி (நட்சத்திரம்)சேரன் செங்குட்டுவன்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வசுதைவ குடும்பகம்இன்குலாப்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மே நாள்கண் (உடல் உறுப்பு)திருமங்கையாழ்வார்நேர்பாலீர்ப்பு பெண்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இந்திரா காந்திஇளையராஜாஇந்திய அரசியலமைப்புசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்தேவகுலத்தார்உடுமலைப்பேட்டைஅன்னை தெரேசாஏலாதிஆழ்வார்கள்தங்க மகன் (1983 திரைப்படம்)பெயர்ச்சொல்வன்னியர்நீ வருவாய் எனஇந்தியப் பிரதமர்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஆப்பிள்இந்திய ரிசர்வ் வங்கிஉள்ளீடு/வெளியீடுமேகக் கணிமைநுரையீரல் அழற்சிஅறிவுசார் சொத்துரிமை நாள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)ஈ. வெ. இராமசாமியானையின் தமிழ்ப்பெயர்கள்மலேரியாபோதைப்பொருள்கிறிஸ்தவம்அவிட்டம் (பஞ்சாங்கம்)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிநெசவுத் தொழில்நுட்பம்ஒன்றியப் பகுதி (இந்தியா)குறவஞ்சிபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)சிந்துவெளி நாகரிகம்முள்ளம்பன்றி🡆 More