கனடா நாள்

கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு மொழி: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும்.

1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் "பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்" கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.

கனடா நாள்
Canada Day
கனடா நாள்
மொண்ட்ரியாலில் கனடா நாள் அணிவகுப்பைப் பார்வையிடும் சிறுவர்கள்
பிற பெயர்(கள்)Fête du Canada;
முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது
கடைபிடிப்போர்கனடா
வகைவரலாற்று, கலாசார, தேசிய அளவில்
கொண்டாட்டங்கள்வாணவேடிக்கை, அணிவகுப்புகள், இசைநிகழ்ச்சிகள், கேளிக்கைகள், சுற்றுலாக்கள்
நாள்சூலை 1
கனடா நாள்
நியூஃபவுண்ட்லேண்டின் செயின்ட் ஜான்ஸ், க்விடி விடியில் கனடா தின பட்டாசு

நினைவு விழா

பொதுவாக ஊடகங்களில் "கனடாவின் பிறந்த நாள்" என அழைக்கப்படும் 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் பிரித்தானிய வட அமெரிக்கக் குடியிருப்புகளான நோவா ஸ்கோசியா, நியூ பிரன்சுவிக், மற்றும் கனடா மாகாணம் ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு நான்கு மாகாணங்களைக் (கனடா மாகாணம் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன) கொண்ட தனி நாடாக உருவாக்கப்பட்டு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது.

நடுவண் அரசின் விடுமுறை நாட்கள் குறித்த சட்டத்தின் படி, கனடா நாள் சூலை 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஞாயிற்றுக்கிழமையாக அமையும் பட்சத்தில், விடுமுறை நாள் சூலை 2 ஆம் நாளாக இருக்கும். இவ்வாறு சூலை 2 ஆம் நாள் விடுமுறை நாளாக அமையும் ஆண்டுகளில், கொண்டாட்டங்கள் பொதுவாக சூலை 1 ஆம் நாளே நடைபெறுகின்றன. சூலை 1 சனிக்கிழமையாக அமையும் ஆண்டுகளில் அடுத்த தொழில் நாள் (அதாவது திங்கட்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

கனடா நாள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கனடா நாள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கனடா நாள் நினைவு விழாகனடா நாள் குறிப்புகள்கனடா நாள் மேற்கோள்கள்கனடா நாள் வெளி இணைப்புகள்கனடா நாள்1867கனடாசூலை 1பிரித்தானியப் பேரரசுபிரெஞ்சு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

விழுப்புரம் மக்களவைத் தொகுதிகந்த புராணம்தீரன் சின்னமலைஇராமர்மருது பாண்டியர்கருப்பை வாய்மேழம் (இராசி)ஔவையார் (சங்ககாலப் புலவர்)நாடாளுமன்றம்2014 உலகக்கோப்பை காற்பந்துபுதுமைப்பித்தன்முத்தரையர்அல் அக்சா பள்ளிவாசல்செம்பருத்திவேதம்அக்கி அம்மைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ்நாடு சட்டப் பேரவைமொரோக்கோசிவனின் 108 திருநாமங்கள்சூரைகுண்டலகேசிபீப்பாய்தாயுமானவர்மலைபடுகடாம்ஹதீஸ்எஸ். சத்தியமூர்த்திதிதி, பஞ்சாங்கம்மார்பகப் புற்றுநோய்சிற்பி பாலசுப்ரமணியம்பிரேமலுதிருத்தணி முருகன் கோயில்பகத் சிங்கர்ணன் (மகாபாரதம்)வி.ஐ.பி (திரைப்படம்)யாவரும் நலம்மரபுச்சொற்கள்நான் அவனில்லை (2007 திரைப்படம்)உருசியாசித்தார்த்பிரீதி (யோகம்)பஞ்சபூதத் தலங்கள்புனித வெள்ளிகொள்ளுசட் யிபிடிஇரட்டைக்கிளவிமக்களவை (இந்தியா)ஆ. ராசாநருடோதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தங்கம்முத்தொள்ளாயிரம்தமிழக வெற்றிக் கழகம்இயேசுதேவாரம்ஊரு விட்டு ஊரு வந்துதேர்தல் நடத்தை நெறிகள்காம சூத்திரம்இயேசுவின் இறுதி இராவுணவுசேரர்குத்தூசி மருத்துவம்சோழர்உயிர்மெய் எழுத்துகள்சிவாஜி (பேரரசர்)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்குடும்பம்தேசிக விநாயகம் பிள்ளைதிருநாவுக்கரசு நாயனார்ஆதலால் காதல் செய்வீர்தமிழ் எண் கணித சோதிடம்விருத்தாச்சலம்இந்திபோயர்பெண்பிள்ளைத்தமிழ்இயேசுவின் உயிர்த்தெழுதல்முலாம் பழம்சிதம்பரம் மக்களவைத் தொகுதி🡆 More