ஒளிக்கோளம்

ஒளிக்கோளம் (Photosphere) என்பது ஒளியை வெளிப்படுத்தும் விண்மீனின் வெளிக்கூட்டைக் குறிக்கிறது.

பண்டைய கிரேக்க வேர் சொல்லான φῶς, φωτός/ என்பதின் பொருள் ஒளி என்பதாகும். σφαῖρα என்ற சொல்லின் பொருள் கோளம் என்பதாகும். வெளிச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு கோளத்தின் மேற்பரப்பு என்பதையே ஒளிக்கோளம் என்ற சொல் குறிக்கிறது.பிளாசுமாவில் ஒளிபுகும் வரை தோராயமாக 2/3 என்ற ஒளியியல் ஆழத்திற்கு சமமான தொலைவு வரைக்கும் ஒரு நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இது பரவியுள்ளது. வேறுவிதமாக கூறினால், ஓர் ஒளிரும் பொருளின் ஆழமான பகுதியை ஒளிக்கோளம் என்று கூறலாம். பொதுவாக விண்மீன்களை ஒளிரும் பொருள் என்று அழைக்கலாம். ஒருசில அலைநீளம் கொண்ட ஒளியணுக்கள் ஒளிக்கோளத்தின் வழியே ஊடுறுவுகின்றன.

ஒளிக்கோளம்
சூரியனின் கட்டமைப்பு 1-சூரிய உள்ளகம் 2-கதிர்வீச்சு மண்டலம் 3-சுழலியக்க மண்டலம் 4-ஒளிக்கோளம் 5-நிறமண்டலம் 6-ஒளிவட்டம் 7-சூரியப்புள்ளி 8-ஒளிமணிகள் 9-சூரியப் பிழம்புகள் பெயரிடப்படாத சூரியக்காற்று

சிடீபன் போல்ட்சுமானின் விதியில் உள்ள பயனுறு வெப்பநிலையால் ஒரு விண்மீனின் மேற்பரப்பு வெப்பநிலை வரையறுக்கப்படுகிறது. நியூட்ரான் நட்சத்திரங்கள் தவிர்த்து பிற நட்சத்திரங்களுக்கு திடநிலை மேற்பரப்பு கிடையாது. எனவே ஒளிக்கோளத்தைக் கொண்டு சூரியனின் அல்லது மற்றொரு விண்மீனின் பார்க்கும் மேற்பரப்பையே விவரிக்கமுடியும்.

உட்கூறுகள்

வேதித் தனிமங்களான ஐதரசனும் ஈலியமும் சூரியனின் முதன்மையான உட்கூறுகளாகும். ஒளிக்கோளத்தில் சூரியனின் நிறையில் அவை முறையே 74.9% மற்றும் 23.8% அளவுக்கு சூரியனில் நிரம்பியுள்ளன. விண்வெளியில் உள்ள கன உலோகங்கள் யாவும் சூரியனின் நிறையில் 2% அளவு உள்ளன. இதில் ஆக்சிசன் தோராயமாக சூரியனின் நிறையில் 1% அளவும், கார்பன் 0.3% அளவும், நியான் 0.2% அளவும், இரும்பு 0.2% அளவும் பெரும்பாலும் கலந்துள்ளன.

சூரியன்

ஒளிக்கோளம் 
சூரிய வளிமண்டலம்: வெப்பநிலையும் அடர்த்தியும்

சூரியனின் பிரம்மாண்டமான ஒளிக்கோளம் 4,500 மற்றும் 6,000 கெல்வின் வெப்பநிலை (4,230 மற்றும் 5,730 ° செல்சியசு வெப்பநிலை) கொண்டுள்ளது. இது பயனுறு வெப்பநிலை 5777° கெல்வின் அல்லது 5504° செல்சியசு அளவுக்குச் சமமாகும். சூரியனின் அடர்த்தி 2×10−4 கிலோகிராம்/மீ3;ஆகும். மற்ற விண்மீன்கள் சூடான அல்லது குளிர்ச்சியான ஒளிக்கோளத்தைப் பெற்றுள்ளன.

சூரியனின் ஒளிக்கோளம் ஒளிமணிகள் எனப்படும் வெப்பச்சலன செல்களை உட்கூறுகளாகக் கொண்டுள்ளது. பிளாசுமாவின் செல்கள் ஒவ்வொன்றும் 1000 கிலோமீட்டர் விட்டமுள்ளவையாகும் . மையத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் பிளாசுமாவும் அவற்றுக்கிடையே உள்ள குறுகிய இடைவெளிகளில் குளிர்ந்த பிளாசுமாவும் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு ஒளிமணியும் எட்டு நிமிடங்கள் மட்டுமே நிலைத்திருக்கின்றன. இதனால் நிரந்தரமாக தொடர் கொதித்தல் தோற்றம் தோன்றுகிறது. அதிகபசம் 30000 கிலோமீட்டர் விட்ட அளவுள்ள மீயொளிமணிகள் 24 மணிநேர ஆயுளுடன் காணப்படுகின்றன. இப்புள்ளி விவரங்களை மிகக்குறைவாக மற்ற விண்மீன்களில் காணமுடியும்.

இதர அடுக்குகள்

சூரியனின் கட்புலனாகும் வளிமண்டலத்தில் ஒளிக்கோளத்திற்கு மேல் இதர அடுக்குகள் காணப்படுகின்றன. 2,000 கிலோமீட்டர் ஆழமான நிறமண்டலம் (வழக்கமாக வடிகட்டப்பட்ட ஒளி மூலம் காணப்படுகிறது, உதாரணமாக எச்-ஆல்பா) ஒளிக்கோளத்திற்கும் மிகவும் சூடான ஆனால் மிகவும் மெல்லிய ஒளிவட்டத்திற்கும் இடையில் உள்ளது. ஒளிக்கோளத்தின் மேற்பரப்பில் சூரியபிழம்பு, சூரியப்புள்ளிகள் போன்றவை காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

ஒளிக்கோளம் உட்கூறுகள்ஒளிக்கோளம் சூரியன்ஒளிக்கோளம் இதர அடுக்குகள்ஒளிக்கோளம் மேற்கோள்கள்ஒளிக்கோளம் புற இணைப்புகள்ஒளிக்கோளம்அலைநீளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விளக்கெண்ணெய்மருது பாண்டியர்திருநங்கைஅப்துல் ரகுமான்காற்று வெளியிடைஅவதாரம்விந்துஇளையராஜாபல்லவர்ஆந்தைஆனந்தம் (திரைப்படம்)இங்கிலாந்துசெண்டிமீட்டர்வாற்கோதுமைமெய்ப்பொருள் நாயனார்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கழுகுநாயன்மார் பட்டியல்மலைபடுகடாம்உப்புச் சத்தியாகிரகம்நாழிகைதண்டியலங்காரம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்மழைகருப்பைஅபிராமி பட்டர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பத்து தலஇயேசு காவியம்மறவர் (இனக் குழுமம்)ஏப்ரல் 26அறிவுசார் சொத்துரிமை நாள்நன்னூல்நிதிச் சேவைகள்சீனாபித்தப்பைமேலாண்மைதமிழ் இலக்கியம்திருவிழாசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்வராகிகாவிரி ஆறுஎஸ். பி. பாலசுப்பிரமணியம்நுரையீரல் அழற்சி2019 இந்தியப் பொதுத் தேர்தல்பறம்பு மலைசிறுபஞ்சமூலம்ஆற்றுப்படைசிவன்கூர்ம அவதாரம்பிரியா பவானி சங்கர்பஞ்சாங்கம்இடிமழைநிலக்கடலைசுய இன்பம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்கொங்கு வேளாளர்இன்று நேற்று நாளைபாளையத்து அம்மன்கம்பராமாயணத்தின் அமைப்புசிறுநீர்ப்பாதைத் தொற்றுநற்றிணைமேற்குத் தொடர்ச்சி மலைஇந்திரா காந்திதிவ்யா துரைசாமிஇயற்கை வளம்தினகரன் (இந்தியா)நயினார் நாகேந்திரன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சோழர்காடழிப்புதமிழர் நெசவுக்கலைசுபாஷ் சந்திர போஸ்திரவ நைட்ரஜன்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்முன்னின்பம்கள்ளு🡆 More