ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர்

ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் (Vice President of the United States, VPOTUS) அமெரிக்க ஐக்கிய நாட்டின் செயலாக்கப் பிரிவின் இரண்டாவது மிக உயரியப் பதவி ஆகும்; குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையாகும்.

குடியரசுத் தலைவருக்கும் துணைக் குடியரசுத் தலைவருக்குமான அதிகாரங்கள் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாவது சட்டவிதியில் பிரிவு ஒன்றில் வரையறுக்கப்பட்டுள்ளன. துணைக் குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் போலவே மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அமெரிக்க வாக்காளர்கள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர் குழுக்கள் மூலமாக இவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவரே குடியரசுத் தலைவர் பதவிக்கான முதல் வாரிசு ஆகையால் குடியரசுத் தலைவரின் மரணம்,பதவி விலகல், பதவி நீக்கம் போன்ற சமயங்களில் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.


ஐக்கிய அமெரிக்க நாடு துணை-குடியரசுத் தலைவர்
ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர்
துணைக் குடியரசுத் தலைவரின் முத்திரை
ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர்
துணைக் குடியரசுத் தலைவரின் கொடி
ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர்
தற்போது
கமலா தேவி ஆரிசு

சனவரி 20, 2021 முதல்
அமெரிக்க அரசின் செயலாக்கப் பிரிவு
துணைக் குடியரசுத் தலைவரின் அலுவலகம்
உறுப்பினர்அமைச்சரவை
தேசிய பாதுகாப்பு மன்றம்
வாழுமிடம்எண் ஒன்று, கடற்படை கூர்நோக்கு வட்டம், வாஷிங்டன்
அலுவலகம்வாசிங்டன், டி. சி., ஐ.அ.
நியமிப்பவர்வாக்காளர் குழு
பதவிக் காலம்நான்காண்டுகள்
வரைமுறை இல்லை
அரசமைப்புக் கருவிஅமெரிக்க அரசியலமைப்பு
முதலாவதாக பதவியேற்றவர்ஜான் ஆடம்ஸ்
(ஏப்ரல் 21, 1789)
உருவாக்கம்மார்ச் 4, 1789
அடுத்து வருபவர்குடியரசு தலைவர் இப்பதவிக்கான வேட்பாளரை முன்மொழிவார்
ஊதியம்ஆண்டுக்கு $230,700
இணையதளம்துணைக் குடியரசுத் தலைவர் ஜோ பிடென்

துணைக் குடியரசுத் தலைவரே மேலவைக்குத் தலைமை தாங்குகின்றார். இப்பொறுப்பில் இருப்பதால் மேலவையில் ஏதேனும் வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும்போது மட்டுமே வாக்களிக்கிறார். மேலவை மரபுகள் இத்தகைய அதிகாரத்தை பெரிதும் மட்டுப்படுத்திய போதிலும் சட்டவாக்கலில் இவரது தாக்கம் குறிப்பிடத்தக்கது. காட்டாக 2005இல் நிதிப் பற்றாக்குறை குறைப்பு சட்டம் நிறைவேற்ற மேலவையில் சமநிலை நிலவியபோது துணைக் குடியரசுத் தலைவரின் சமன் முறிப்பு வாக்கே சட்டமாக்க உதவியது. தவிரவும் அரசியலமைப்பின் 12ஆவது திருத்தத்தின்படி துணைக் குடியரசுத் தலைவர் சட்டமன்றத்தின் கூட்டமர்விற்கு தலைமையேற்கிறார்.

துணைக் குடியரசுத் தலைவரின் பதவி அரசியலமைப்பின்படி வாரிசுப் பதவியே மட்டுமேயானாலும் கூட்டரசின் செயற்பாட்டுப் பிரிவின் அங்கமாக கருதப்படுகின்றது. அமெரிக்க அரசியலமைப்பு இப்பதவிக்கு எந்தவொரு பணியையும் வரையறுக்கவில்லை; இதனால் அறிஞர்களிடம் இப்பதவி செயற்பாட்டுப் பிரிவைச் சேர்ந்ததா அல்லது சட்டவாக்கல் பிரிவைச் சேர்ந்ததா அல்லது இரண்டுக்குமானதா என்ற விவாதம் நடைபெற்று வந்துள்ளது. தற்போதைய நிலையில் அண்மைய வரலாற்று நிகழ்வுகளால் குடியரசுத் தலைவரோ சட்டமன்றமோ இவருக்கு செயற்பாட்டுப் பணிகளை ஒதுக்குவதால் இப்பதவி செயற்பாட்டுப் பிரிவைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றது.

குடியரசுத் தலைவர் பதவி போலவே இப்பதவிக்கு வருபவரும் அமெரிக்க இயற் குடிமகனாகவும் 35 அகவைகளுக்கு மேற்பட்டவராகவும் 14 ஆண்டுகள் ஐக்கிய அமெரிக்க நாட்டில் வசித்தவராகவும் இருக்க வேண்டும். தற்போதைய துணைக் குடியரசுத் தலைவராக கமலா ஆரிசு உள்ளார்.

குடியரசுத் துணை தலைவர் பணிகள் மற்றும் பொறுப்புக்கள்

19ஆம் நூற்றாண்டின் முடிவு வரை பெரும்பாலும், பொது தேர்தலில் பலதரப்பட்ட மக்களை கவரவே குடியரசு தலைவர் வேட்பாளர்களால் "துணை-குடியரசு தலைவர்" வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். குடியரசு தலைவர் வேட்பாளரின் பரிந்துரையை கட்சிகளும் அப்படியே ஏற்பதால், அந்த பதவி அலங்கார பதவியாகவே இருந்தது. இன்றும், அமெரிக்க அரசியலமைப்பு பிரிவு ஒன்றின்படி, குடியரசு துணை-தலைவர் அமெரிக்க நாடாளுமன்ற மேல் சபையின் (மாநிலங்கள் சபை) சபாநாயகராக இருப்பார்.  ஒரு தீர்மானத்தில் மேல் சபையானது சமமாக பிரிந்து இருந்தால் மட்டுமே, குடியரசு துணை-தலைவர் அதில் வாக்களிக்க முடியும் என்ற கட்டுப்படும் உள்ளது. இதனால் அமெரிக்க குடியரசு தலைவரின் நாடாளுமன்ற செயலாக்க அதிகாரியாகவே துணை-குடியரசு தலைவர் பார்க்கப்பட்டார்.

தொழிற் புரட்சிக்கு பின், அமைச்சரவைக்கு பணிகள் பன்மடங்கானதால், துணை-குடியரசு தலைவர் பதவி முக்கியத்துவம் பெற்றது. 1947ஆம் ஆண்டு வந்த 25ஆவது அரசியல் திருத்தத்தின் பின், துணை-குடியரசு தலைவர் பதவி அதிக பலம் வாய்ந்த பதவியாக மாறியுள்ளது. அதற்கு பின், 5 முன்னாள் குடியரசு துணை-தலைவர்கள் பின்னாளில் குடியரசு தலைவர் பதவிக்கு சென்றுள்ளனர். இதில், இருவர் இடையில் தேர்தலை சந்திக்காமல் பதவி உயர்வு பெற்றனர். இப்போது, துணை-குடியரசு தலைவர் பதவி அரசியலில் குடியரசு தலைவர் பதவிக்கான பாதையில் கடைசி படியாகவே பார்க்கப்படுகிறது. கடந்த இரு தேர்தலில், குடியரசு தலைவர் வேட்பாளர் மற்றும் அவரின் துணை-குடியரசு தலைவர் வேட்பாளர் ஆகிரியோருக்குள் வயது வேற்றுமை அதிகரித்துள்ளது. மேலும், வெளியுறவை மேம்படுத்த துணை-குடியரசு தலைவர் தற்காலங்களில் அதிக பயணங்கள் மேற்கொள்கிறார்.

துணைக் குடியரசுத் தலைவர் இறந்தாலோ குடியரசுத் தலைவர் ஆனாலோ

1967க்கு முன்பாக குடியரசுத் தலைவர் இறந்தால் துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவரா அல்லது அப்பொறுப்பு வகிப்பவரா (Acting President) என்ற தெளிவு இல்லாதிருந்தது. இப்பொறுப்பை ஏற்ற ஜான் டைலர் போன்றவர்கள் தங்களை வெறும் அப்பொறுப்பினை வகிப்பவர்களாக ஏற்கவில்லை. தவிரவும் துணைக் குடியரசுத் தலைவர் இறந்தால், புதியவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் வரை வேறு யாரும் துணைக் குடியரசுத் தலைவராக முடியாது. ஜான் எஃப். கென்னடியின் கொலைக்குப் பிறகு இதில் தெளிவு பெற அரசியலமைப்பில் 25வது சட்டத்திருத்தம் கொணரப்பட்டது. இதன்படி குடியரசுத் தலைவர் இறக்கும்போது துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவராகிறார். மேலும் துணைக் குடியரசுத் தலைவர் இறந்தாலோ, பதவி விலகினாலோ அல்லது குடியரசுத் தலைவர் ஆனாலோ குடியரசுத் தலைவர் புதிய துணைக் குடியரசுத் தலைவரை நியமிக்க முடியும்; இதற்கு சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையினர் ஒப்புமை தரவேண்டும். இந்த சட்டத்திருத்தத்தின்படி இருமுறை இவ்வாறு நிகழ்ந்துள்ளன; முதலாவதாக இசுபைரோ அக்னியூ பதவி விலகியதை அடுத்து கெரால்டு போர்டு துணைக் குடியரசுத் தலைவரானார்; இரண்டாவது நிகழ்வாக ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகி அப்போதைய துணைக் குடியரசுத் தலைவர் கெரால்டு போர்டு குடியரசுத் தலைவராக பதவியேற்றபோது நெல்சன் இராக்பெல்லர் துணைக் குடியரசுத் தலைவரானார்.

தற்போது வாழ்ந்துவரும் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர்கள்

தற்போது வாழ்ந்து வரும் ஐந்து முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர்கள்:

குடியரசுத் தலைவரான துணைக் குடியரசுத் தலைவர்கள்

கீழ்காணும் துணைக் குடியரசுத் தலைவர்கள் குடியரசுத் தலைவர் இறந்தமையாலோ பதவி விலகியதாலோ அல்லது தாங்களே நேரடியாக தேர்தலில் வென்றோ குடியரசுத் தலைவர் ஆனார்கள்:

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத் துணை தலைவர் பணிகள் மற்றும் பொறுப்புக்கள்ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் துணைக் குடியரசுத் தலைவர் இறந்தாலோ குடியரசுத் தலைவர் ஆனாலோஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் தற்போது வாழ்ந்துவரும் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர்கள்ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவரான துணைக் குடியரசுத் தலைவர்கள்ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் மேற்சான்றுகள்ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் வெளி இணைப்புகள்ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர்அமெரிக்க ஐக்கிய நாடுஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசுவாக்காளர் குழு (ஐக்கிய அமெரிக்கா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)தொல்லியல்பால்வினை நோய்கள்விழுமியம்ரெட் (2002 திரைப்படம்)ஆப்பிள்108 வைணவத் திருத்தலங்கள்நந்திக் கலம்பகம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மலைபடுகடாம்கலித்தொகைகருப்பை நார்த்திசுக் கட்டிகள்ளழகர் கோயில், மதுரைஎயிட்சுஇராமர்இரட்சணிய யாத்திரிகம்தேர்தல்மனோன்மணீயம்திருமலை நாயக்கர்சைவத் திருமணச் சடங்குமுதுமொழிக்காஞ்சி (நூல்)இராமானுசர்இரட்டைக்கிளவிஆறுமுக நாவலர்அக்பர்ஆசிரியப்பாதமிழர் கப்பற்கலைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)பர்வத மலைபெயர்ச்சொல்புங்கைபறவைஔவையார் (சங்ககாலப் புலவர்)சிறுத்தைகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்மழைபரிபாடல்நயினார் நாகேந்திரன்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)ஐஞ்சிறு காப்பியங்கள்காச நோய்விசயகாந்துபூலித்தேவன்செஞ்சிக் கோட்டைசுரதாவிஷ்ணுகூத்தாண்டவர் திருவிழாமதுரைக் காஞ்சிஇன்ஸ்ட்டாகிராம்அணி இலக்கணம்முல்லை (திணை)கணையம்குமரகுருபரர்பெரியபுராணம்பதிற்றுப்பத்துஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்உலா (இலக்கியம்)சுற்றுச்சூழல்கர்மாதமிழ்வெந்து தணிந்தது காடுமியா காலிஃபாபாண்டியர்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்முகலாயப் பேரரசுஅழகர் கோவில்பிரசாந்த்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்ஆய்த எழுத்துபாடாண் திணைமாதவிடாய்புலிஉணவுவணிகம்திருநெல்வேலிசித்ரா பௌர்ணமிசீரகம்🡆 More