கமலா ஆரிசு

கமலா தேவி ஆரிசு (Kamala Devi Harris, கமலா ஹாரிஸ் பிறப்பு: அக்டோபர் 20, 1964) அமெரிக்க அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தற்போதைய அமெரிக்கத் குடியரசுத் துணைக் தலைவர் ஆவார்.

மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரான இவர், 2021 சனவரி 20 இல் துணைக் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். இவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனும் 2020 குடியரசுத் தலைவர் தேர்தலில் நடப்புத் தலைவர் டோனால்ட் டிரம்ப்பையும், துணைத் தலைவர் மைக் பென்சையும் தோற்கடித்தனர். கமலா ஆரிசு 2017 முதல் கலிபோர்னியாவுக்கான அமெரிக்க மூதவை (மாநிலங்களவை ) உறுப்பினராக இருந்தவர். இந்தியத் தமிழ் மற்றும் ஆப்பிரிக்க-யமெய்க்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா பல்லின அமெரிக்கராவார். அமெரிக்க வரலாற்றில், கமலா ஆரிசு முதலாவது ஆசிய-அமெரிக்க, முதலாவது ஆபிரிக்க அமெரிக்க, மற்றும் முதலாவது பெண் துணைக் குடியரசுத் தலைவராக விளங்குவார். அத்துடன், இவர் அமெரிக்க வரலாற்றில், இத்தகைய அதியுயர் பதவி ஒன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண்ணும் ஆவார்.

கமலா ஆரிசு
Kamala Harris
கமலா ஆரிசு
ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர்
பதவியில்
சனவரி 20, 2021
குடியரசுத் தலைவர்ஜோ பைடன்
Succeedingமைக் பென்சு
கலிபோர்னியாவுக்கான அமெரிக்க மேலவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 3, 2017
Serving with டயான் பைன்சுடைன்
முன்னையவர்பார்பரா பாக்சர்
கலிபோர்னியாவின் 32-வது அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
சனவரி 3, 2011 – சனவரி 3, 2017
ஆளுநர்செரி பிரவுன்
முன்னையவர்செரி பிரவுன்
பின்னவர்சேவியர் பெசேரா
சான் பிரான்சிஸ்கோவின் 27-வது மாவட்ட சட்டமா அதிபர்
பதவியில்
சனவரி 8, 2004 – சனவரி 3, 2011
முன்னையவர்டெரன்சு ஆலினன்
பின்னவர்சியார்ச் காசுகோன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கமலா தேவி ஆரிசு

அக்டோபர் 20, 1964 (1964-10-20) (அகவை 59)
ஓக்லண்ட், கலிபோர்னியா, ஐ.அ.
அரசியல் கட்சிசனநாயகக் கட்சி
துணைவர்டக்லசு எம்கோஃப் (தி. ஆகத்து 22, 2014)
பெற்றோர்(கள்)
  • டொனால்டு ஜே. ஆர்சு
  • சியாமளா கோபாலன்
உறவினர்கள்மாயா ஹாரீஸ் (சகோதரி)
கல்வி
  • அவார்டு பல்கலைக்கழகம் (இளங்கலை)
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் (முனைவர்)
கையெழுத்துகமலா ஆரிசு
இணையத்தளம்பிரச்சார இணையதளம்

கலிபோர்னியா மாகாணத்தின் , ஆக்லாந்தில் பிறந்த கமலா ஆரிசு, அவார்டு பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பயின்று சட்டக் கல்வியில் பட்டம் பெற்றார். இவர் தனது பணியை அலமேடா கவுண்டி உள்ளூர் அரசு வழக்குரைஞர் அலுவலகத்தில் ஆரம்பித்து, பின்னர் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட, மற்றும் சான் பிரான்சிசுக்கோ நகர அரசு வழக்குரைஞர் அலுவலகத்திலும் பணியாற்றினார். 2003 இல், சான் பிரான்சுக்கோ மாவட்ட தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 இலும், பின்னர் 2014 இலும் கலிபோர்னியா மாநில தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2016 அமெரிக்க மேலவைத் தேர்தலில் லொரெட்டா சான்செசைத் தோற்கடித்து கலிபோர்னியாவுக்கான மேலவை உறுப்பினரானார். இதன் மூலம், கலிபோர்னியா மாகாணத்திலிருந்து அமெரிக்க மேலவைக்குத் (மாநிலங்களவை) தெரிவான முதலாவது ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண், மற்றும் முதலாவது தெற்காசிய-அமெரிக்கர் என்ற சிறப்புகளையும் பெற்றார். மேலவை உறுப்பினராக, சுகாதார சீர்திருத்தம், கட்டுப்பாட்டுப் பொருட்கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குதல், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமைக்கான வழிவகைகள், தாக்குதல் ஆயுதங்களுக்கு தடை, மற்றும் வளர்விகித வரி சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு ஆதரவளித்தார். பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரட் கவானா என்பவரை குடியரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றத் இணை நீதிபதி பதவிக்கு வேட்பாளராக அறிவித்த போது, இவர் அவருக்கு எதிராகக் குரல் கொடுத்தது மூலம் நாட்டளவில் அறியப்பட்டார்.

2020 குடியரசுத் தலைவர் தேர்தலில் தேர்தலில் போட்டியிடுவதற்கான மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராக உட்கட்சி தேர்தலில் கமலா போட்டியிட்டார். 2019 டிசம்பர் 3 இல் தொடர் நிதிப் பற்றாக்குறை காரணமாக தனது பிரச்சாரத்தை முடிப்பதற்கு முன்னர் கருத்துக்கணிப்புகளில் சில காலம் இவர் முன்னணியில் இருந்தார். 2020 ஆகத்து 11 அன்று 2020 தேர்தலில் ஜோ பைடனின் துணைக் குடியரசுத் தலைவர்- வேட்பாளராக கமலா அறிவிக்கப்பட்டார். 2020 நவம்பர் 3ஆம் நாள் குடியரசு தலைவர், துணைத் தலைவருக்கான பொது தேர்தல் நடந்தது. நான்கு நாட்கள் இழுபறிக்கு பின் நவம்பர் 7 ஆம் நாள், பிடென்-ஆரிசு இணை 306 இடங்களையும், அப்போது பதவியிலிருந்த டிரம்ப்-பென்சு இணை 232 இடங்களையும் கைப்பற்றி இருந்தனர். மொத்தம் 538 இடங்கள் கொண்ட தேர்தல் சபையில் பெரும்பான்மையை வென்ற பிடென்-ஆரிசு இணை முறையே குடியரசு தலைவராகவும், குடியரசு துணை-தலைவராகவும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. 2021 ஜனவரி ஆறாம் நாள் அமெரிக்க தேசிய சபையும் இந்த தேர்தல் முடிவை அங்கீகரித்தது. அமெரிக்க மாநிலங்கள் சபை உறுப்பினர் பதவியை விட்டு ஜனவரி 18 2021 அன்று கமலா ஆரிசு விலகினார். 2021 ஜனவரி 20ஆம் நாள், கமலா ஆரிசு அமெரிக்காவின் முதல் பெண் துணை-குடியரசு தலைவராக வாஷிங்டனில் பதவி ஏற்றார். ஐரோப்பியரல்லாத வம்சாவளியைச் சேரா ஒருவர் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும், முன்னதாக 1929 முதல் 1932 வரை சார்லசு கேர்ட்டிசு அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். குடியரசு துணை தலைவர் என்ற முறையில், அவர் முன்பு பதவி வகித்த அமெரிக்க மாநிலங்கள் சபையின் (பகுதி நேர ) தலைவராகவும் கமலா பணியாற்றுவார்.

இளமைக்காலம்

கமலா 1964 அக்டோபர் 20 இல், கலிபோர்னியா, ஓக்லாந்தில் பிறந்தார். தாயார் சியாமளா கோபாலன், ஓர் உயிரியலாளர், மார்பகப் புற்றுநோய் புரோஜெஸ்ட்டிரோன் ஏற்பி மரபணு ஆய்வில் ஈடுபட்டவர். சியாமளா 1958 இல் தனது 19-வது அகவையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் உட்சுரப்பியலில் பட்டப் படிப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா வந்து, தனது முனைவர் பட்டத்தை 1964 இல் பெற்றார். கமலாவின் தந்தை டொனால்டு ஜே. ஹாரிசு யமேக்காவைச் சேர்ந்தவர். இவர் யமேக்காவில் இருந்து 1961 இல் அமெரிக்கா வந்து கலிபோஒர்னியா பல்கலைக்கழகத்தில் 1964 இல் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்று, இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

கமலா ஆரிசு 
மேற்கு பெர்க்லி, பான்குரொஃப்ட் சாலையில் கமலா வசித்து வந்த வீடு

கமலா தனது தங்கை மாயாவுடன் கலிபோர்னியாவில் பெர்க்லி நகரில் வசித்து வந்தார். இவர் வசித்த மேற்கு பெர்க்லியில் உள்ள பான்குரொஃப்ட் சாலை குறிப்பிடத்தக்க அளவு கறுப்பினத்தவர்கள் வாழ்ந்துவந்த இடமாகும்.

மேலவை உறுப்பினர்

கமலா ஹாரிஸ், மக்களாட்சிக் கட்சியின் சார்பாக, கலிஃபோர்னியாவிலிருந்து, நாட்டின் மேலவை உறுப்பினராக நவம்பர் 2016இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். கமலா அமெரிக்க தேசிய துணை-குடியரசு தலைவராய் தேர்வானதால், தன் மேல் சபை உறுப்பினர் பதவியை விட்டு ஜனவரி 18 2021அன்று விலகினார். துணை-குடியரசு தலைவராய் கமலா இருப்பதால், அதே மேல் சபையின் தலைவராய் தற்போது கமலா உள்ளார்.

மேற்கோள்கள்

    குறிப்புகள்
    மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

கமலா ஆரிசு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கமலா ஆரிசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கமலா ஆரிசு இளமைக்காலம்கமலா ஆரிசு மேலவை உறுப்பினர்கமலா ஆரிசு மேற்கோள்கள்கமலா ஆரிசு வெளி இணைப்புகள்கமலா ஆரிசுஆபிரிக்க அமெரிக்கர்ஐக்கிய அமெரிக்க மூப்பவைஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2020ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர்ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர்கலிபோர்னியாஜோ பைடன்டோனால்ட் டிரம்ப்தமிழர்மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)மைக் பென்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

குணங்குடி மஸ்தான் சாகிபுமயக்கம் என்னமுதுமொழிக்காஞ்சி (நூல்)தஞ்சாவூர்ஆளுமைசுற்றுச்சூழல் மாசுபாடுபுதினம் (இலக்கியம்)மயில்பித்தப்பைஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்அன்புவளைகாப்புவேதம்யோகம் (பஞ்சாங்கம்)வெ. இறையன்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்களவழி நாற்பதுஇந்திய புவிசார் குறியீடுமலையாளம்தோட்டம்சகுந்தலாதுணிவு (2023 திரைப்படம்)முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்விண்ணைத்தாண்டி வருவாயாஉத்தராகண்டம்புறாபதினெண்மேற்கணக்குவேல ராமமூர்த்திபாக்டீரியாமருதமலை முருகன் கோயில்காதல் கொண்டேன்விரை வீக்கம்வே. செந்தில்பாலாஜிநந்தி திருமண விழாகடல்திராவிட மொழிக் குடும்பம்ஜலியான்வாலா பாக் படுகொலைஅபூபக்கர்மணிமேகலை (காப்பியம்)கரிசலாங்கண்ணிபணவீக்கம்சமூகம்யாழ்இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்பூக்கள் பட்டியல்ஏறுதழுவல்பாம்பாட்டி சித்தர்மலக்குகள்எடுத்துக்காட்டு உவமையணிதிரைப்படம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)காதலன் (திரைப்படம்)நாலடியார்சத்ய ஞான சபைகாவிரிப்பூம்பட்டினம்அதியமான் நெடுமான் அஞ்சிபவுனு பவுனுதான்பௌத்தம்திரு. வி. கலியாணசுந்தரனார்கற்றாழைகிரியாட்டினைன்காலிஸ்தான் இயக்கம்தமிழர் சிற்பக்கலைசைவ சமயம்சிவகார்த்திகேயன்டிரைகிளிசரைடுமுப்பரிமாணத் திரைப்படம்வீணைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)பொன்னியின் செல்வன் 1முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்கல்லீரல்நாட்டு நலப்பணித் திட்டம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்பஞ்சாபி மொழிநாய்🡆 More