எழுதுகோல்: எழுதுவதற்குப்பயன்படும் கருவி

எழுதுகோல் அல்லது எழுதி அல்லது பேனா எனப்படுவது, எழுத உதவும் ஒரு கருவி அகும்.

பேனா என்னும் சொல் ஆங்கிலத்தில் pen (பென்) என்னும் சொல்லில் இருந்து பெற்றது

இதில் பலவகையன எழுதுகோல்களும் உண்டு. அவை குமிழ் முனை எழுதுகோல் குமிழ்முனைப் பேனா, ஊற்று எழுதுகோல், மை பேனா மற்றும் பல வகைகளும் உண்டு.

எழுதுகோல்: வரலாறு, இதையும் பார்க்க‌, மேற்கோள்கள்
ஒரு பந்து முனைப் பேனா
எழுதுகோல்: வரலாறு, இதையும் பார்க்க‌, மேற்கோள்கள்
ஒரு ஆடம்பர பந்து பேனா

வரலாறு

பழங்காலத்து எகிப்தியர் பாப்பிரசு (papyrus) சுருள்களில் எழுத சிறு நாணலால் (reed) ஆன எழுதுகோல்களைப் பயன்படுத்தினர். இந்த நாணல் போன்ற செடிக்கு சங்க்கசு மாரிட்டிமசு (Juncus Maritimus) என்று பெயர். சிட்டீவன் ரோச்சர் ஃவிசர் (Steven Roger Fischer) தான் எழுதிய எழுதுதலில் வரலாறு (A History of Writing) என்னும் நூலில் எகிப்தில் சக்காரா என்னும் இடத்தில் கிடைத்துள்ள சான்றுகளின்படி நாணல்-போன்ற எழுதுகோல்கள் எகிப்திய அரசர்களின் முதற்பரம்பரையினர் காலத்திலேயே, அதாவது கி.மு 3000 ஆண்டு தொடக்கத்திலேயே வழக்கில் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றார். ஏறத்தாழ இன்றைக்கு 300-400 ஆண்டுகளுக்கும் முன் வரை, கி.பி. 17 ஆவது நூற்றாண்டு வரை, இந்த நாணல்-போன்ற எழுதுகோல்கள் இருந்தன.

பறவைகளின் இறகாகிய தூவல் (quill) எழுதுகோல்கள் இசுரேல்-பாலசுத்தீனத்தில், மேற்குக் கரை என்னும் பகுதிக்கு அருகே உள்ள கும்ரான் (Qumran) என்னும் இடத்தில் இருந்து கிடைத்த செத்தக் கடல் சுருள்கள் (Dead Sea Scrolls) எழுதப் பயன்படுத்தப்பட்டன. ஐரோப்பாவில் இப்பழக்கம் கி.பி 700களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வகை தூவல் எழுதுகோலே 1787 இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் சட்டம் எழுதவும், கையெழுத்திடவும் பயன்பட்டது. செத்த கடல் சுருள்கள் 1947 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அது கி.மு 100 இல் எழுதியதாகக் கருதப்படுகின்றது. ஐரோப்பியர்கள் நாணல் போன்ற குழல்கள் கிடைக்காததால் தூவல் எழுதுகோலை வரவேற்றனர். செவில்லைச் சேர்ந்த கி. பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித இசிடோர் (St. Isidore of Seville) அவர்கள் எழுதி வைத்துள்ளதில், தூவல் எழுதுகோலைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. . தூவல் எழுதுகோல்கள் 19 ஆம் நூற்றாண்டு வரையில் வழக்கில் இருந்தன

வெண்கலத்தால் ஆன எழுதுகோல் நுனி உடையது ஒன்று கி.பி 79 ஆம் ஆண்டிலேயே பயன்பாட்டில் இருந்தது என்பற்கான சான்றுகோள் அழிந்து பட்ட பாம்ப்பை நகரில் கிடைத்துள்ளது. . சாமுவேல் பெப்பீசு என்பாரின் தன்வாழ்க்கைக் குறிப்பேட்டில் ஆகசட்டு 1663 ஆம் ஆண்டிற்கான பதிவில் இது பற்றிய குறிப்பொன்றும் உள்ளது. 1803 இல் மாழையால் (உலோகத்தால்) ஆன எழுதுகோல் நுனிக்கான காப்புரிமம் ஒன்று உள்ளது ஆனால் செய்து விற்பனை செய்யவில்ல்லை. 1822இல் பர்மிங்காம் என்னும் இடத்தைச் சேர்ந்த சான் மிட்செல் (John Mitchell) மாழை நுனி உடைய எழுதுகோல்களை அதிக எண்ணிக்கையில் படைத்து விற்பனை செய்தார்.

இதையும் பார்க்க‌

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

எழுதுகோல் வரலாறுஎழுதுகோல் இதையும் பார்க்க‌எழுதுகோல் மேற்கோள்கள்எழுதுகோல் வெளி இணைப்புகள்எழுதுகோல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முக்கூடற் பள்ளுகற்றாழைநல்லெண்ணெய்இந்தியக் குடியரசுத் தலைவர்ஜி. யு. போப்ஆண்டு வட்டம் அட்டவணைதமிழ்நாட்டின் நகராட்சிகள்நாடார்ஆறுமுக நாவலர்கூத்தாண்டவர் திருவிழாஉடுமலை நாராயணகவிசினேகாநான் அவனில்லை (2007 திரைப்படம்)சங்ககால மலர்கள்மதுரைக் காஞ்சிஅயோத்தி தாசர்சிவனின் 108 திருநாமங்கள்இந்திய தேசிய காங்கிரசுமாற்கு (நற்செய்தியாளர்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்சிறுதானியம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஅவிட்டம் (பஞ்சாங்கம்)மதராசபட்டினம் (திரைப்படம்)கல்விகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்விசாகம் (பஞ்சாங்கம்)வினைச்சொல்சங்க காலப் புலவர்கள்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்தெலுங்கு மொழிதமிழ்நாடு அமைச்சரவைகார்த்திக் (தமிழ் நடிகர்)கம்பராமாயணம்வெண்பாஇரசினிகாந்துஒன்றியப் பகுதி (இந்தியா)ஆளி (செடி)இயற்கைதேவேந்திரகுல வேளாளர்நாடகம்சாத்துகுடிகன்னியாகுமரி மாவட்டம்கலிங்கத்துப்பரணிமனித உரிமைதிருத்தணி முருகன் கோயில்வே. செந்தில்பாலாஜிகுகேஷ்புதன் (கோள்)கலம்பகம் (இலக்கியம்)குருதி வகைதிராவிட மொழிக் குடும்பம்முத்துராஜாதிரிகடுகம்புதினம் (இலக்கியம்)சுற்றுச்சூழல்மூகாம்பிகை கோயில்நாயன்மார்மார்பகப் புற்றுநோய்தமிழர் அளவை முறைகள்மருதம் (திணை)பஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்இந்தியாவில் பாலினப் பாகுபாடுதிணைவிண்ணைத்தாண்டி வருவாயாபுனித ஜார்ஜ் கோட்டைபுதுச்சேரிதலைவி (திரைப்படம்)தமிழக வரலாறுமே நாள்குறிஞ்சி (திணை)முடக்கு வாதம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பாரிஅன்புமணி ராமதாஸ்ஆசிரியர்🡆 More