எராசுமசு இரீன்கோல்டு

எராசுமசு இரீன்கோல்டு (Erasmus Reinhold) (அக்தோபர் 22, 1511- பிபரவரி 19, 1553) ஒரு செருமானிய வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார்.

இவர் இவரது தலைமுறையின் ஆழ்ந்த தாக்கம் செலுத்திய வானியல் கல்வியியலாளராகக் கருதப்படுகிறார். இவர் சாக்சானில் உள்ள சால்பீல்டில் பிறந்து அங்கேயே இறந்தார்.

எராசுமசு இரீன்கோல்டு
Erasmus Reinhold
பிறப்பு(1511-10-22)அக்டோபர் 22, 1511
சால்பீல்டு, செக்சானி தொகுதி
இறப்புபெப்ரவரி 19, 1553(1553-02-19) (அகவை 41)
சால்பீல்டு, செக்சானி தொகுதி
தேசியம்செருமானியர்
துறைவானியல், கணிதவியல்
பணியிடங்கள்விட்டன்பர்கு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்விட்டன்பர்கு பல்கலைக்கழகம்
Academic advisorsஜேஜோப் மில்ச்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்Michael Beuther
Sebastian Dietrich
Johannes Hommel
Valentine Naibod
Caspar Peucer
Bartholomäus Schönborn
Matthias Stoius

இவர் விட்டன்பர்கு பல்கலைக்கழகத்தில் யாகோபு மிலிச் கீழ் கல்வி கற்று பின்னர் அதன் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட புலத் தலைவராகவும் பின்னர் காஆளராகவும் விளங்கிய இவர் 1536 இல் பிலிப் மெலஞ்சுதானால் உயர்கணிதப் பேராசிரியராகப் பணியில் அமர்த்தப்பட்டார். அக்காலத்தில் கணிதவியல் பயன்முறைக் கணிதவியலையும் உள்ளடக்கியது, குறிப்பாக வானியலையும் உள்ளடக்கியது. இவரது சமகாலப் பணியாளராகிய யோச்சிம் இரெடிகசுவும் விட்டன்பர்கில் படித்தார். இவரும் தாழ்கணிதவியல் பேராசிரியராக 1536 இல் பணியில் அமர்த்தப்பட்டார்.

இவர் பேரளவு விண்மீன்களைப் பட்டியலியலிட்டுள்ளார். இவரது வானியல் சார்ந்த வெளியீடுகளில் ஜார்ஜ் பியூர்பக்கின் Theoricae novae planetarum எனும் நூலுக்கான 1542, 1553 ஆகிய ஆண்டு குறிப்புரைகளும் அடங்கும்.இவர் கோப்பர்னிக்கசு தனது De revolutionibis நூலை வெளியிடுவதற்கு முந்தைய சூரிய மையக் கோட்பாட்டு வடிவத்தை இரீன்கோல்டு அறிந்திருந்தார். இதைப் பின்பற்றி மேற்கோள்களைப் பியூர்பக்கின் நூலுக்கான தனது குறிப்புரையில் இரீன்கோல்டு பயன்படுத்தினார். என்றாலும், இவர் கெப்ளர், கலீலியோ ஆகியோருக்கு முந்தைய வானியலாளர்களைப்போலவெ கோப்பர்னிக்கசுவின் கணிதவியல் முறைகளைத் தன் புறநிலைச் சூழல், இறையியல் காரணங்களுக்காக சூரிய மையக் கோட்பாட்டு அண்டவியலைப் புறக்கணித்துவிட்டு புவி மையக் கோட்பாட்டு வட்டத்துக்குள் கொணர்ந்து மொழிபெயர்த்துள்ளார்.

பிரசிய மன்னர் ஆல்பெர்ட் இரீன்கோல்டுக்கு நிதிஏற்பாடு செய்து இரீன்கோல்டை ஆதரித்தார். இரீன்கோல்டின் Prutenicae Tabulae அல்லது பிரசிய அட்டவணைகள் எனும் நூலை வெளியிட நிதியளித்தார். இந்த அட்டவணைகள் பிரசியா எங்கும் கோப்பர்னிக்கசுவின் கணக்கீட்டு முறையை பரப்பிட உதவியது. என்றாலும் கிங்கெரிச் என்பார் அவை உண்மையான சூரிய மையக் கோட்பாட்டுக் கடப்பாடின்மையைக் காட்டுவனவாக குறிப்பிடுகிறார், மேலும், அவை புவி தனித்து இயங்குவதாகக் காட்டுவதற்காக கவனமாக புனைந்த்தாகத் தெரிகிறது எனவும் கருதுகிறார். இரீன்கோல்டின் பிரசிய அட்டவணைகளும் கோப்பர்னிக்கசுவின் ஆய்வுகளும் ஆகிய இரண்டுமே பதின்மூன்றாம் போப் கிரிகொரியின் நாட்காட்டிச் சீர்திருத்தத்துக்கு 1582 இல் அடைப்படையாகின.

எடின்பர்கில் அமைந்த அரசு வான்காணகத்தில் உள்ள இரீன்கோல்டின் பரவலான குறிப்புரையுள்ள De revolutionibus படிதான், ஓவன் கிங்கெரிச்சை அதன் முத்லிரு பதிப்புகளைத் தேட்த் தூண்டியுள்ளது. இவற்ரைப் பற்றி, இவர் தன் எவராலும் படிக்கப்படாத நூல்கள். இரீன்கோல்டு தனது வெளியிடப்படாத De revolutionibus எனும் நூலின் குறிப்புரையை வைத்து புவிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவைக் கணித்துள்ளார். தாலமியின் மதிப்பைக் கொணரப் பெரிதும் பூசி மெழுகியுள்ளார்.

நிலாவில் மேர் இன்சுலாரத்தில் அமைந்த கோப்பர்னிக்கசு குழிப்பள்ளத்துக்குத் தென் தென்மேற்கில் உள்ள நிலாவின் குழிப்பள்ளம் ஒன்று இவரது நினைவாக இரீன்கோல்டு குழிப்பள்ளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருத்தரிப்புவிண்ணைத்தாண்டி வருவாயாபீப்பாய்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஜோதிமணிநஞ்சுக்கொடி தகர்வுதமிழ்ஒளிகுலுக்கல் பரிசுச் சீட்டுசுந்தரமூர்த்தி நாயனார்பத்துப்பாட்டுசுபாஷ் சந்திர போஸ்தொல்காப்பியம்அறுசுவைஇலங்கைசுலைமான் நபிதமிழ் இலக்கணம்அக்பர்கேரளம்திருவண்ணாமலைமண் பானைவரலாறுஉயிர்மெய் எழுத்துகள்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அகமுடையார்ஆற்றுப்படைலொள்ளு சபா சேசுபண்பாடுமீன்உஹத் யுத்தம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஅன்னை தெரேசாசூரரைப் போற்று (திரைப்படம்)சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)தண்டியலங்காரம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஹாட் ஸ்டார்ஆசாரக்கோவைகுறுந்தொகைமலக்குகள்அமலாக்க இயக்குனரகம்அயோத்தி தாசர்திருநெல்வேலிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்நருடோஉரிச்சொல்பூப்புனித நீராட்டு விழாபசுபதி பாண்டியன்சிலம்பம்தேசிக விநாயகம் பிள்ளைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்காப்பியம்திருத்தணி முருகன் கோயில்குருதி வகைஎன்விடியாஇரட்சணிய யாத்திரிகம்சிவகங்கை மக்களவைத் தொகுதிநீலகிரி மக்களவைத் தொகுதிமதுராந்தகம் தொடருந்து நிலையம்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைமுதலாம் உலகப் போர்குற்றியலுகரம்வால்ட் டிஸ்னிஉத்தரகோசமங்கைதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்முக்கூடற் பள்ளுநாயக்கர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)கல்லணைஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)வடிவேலு (நடிகர்)எம். ஆர். ராதாசிற்பி பாலசுப்ரமணியம்தாய்ப்பாலூட்டல்கீர்த்தி சுரேஷ்அ. கணேசமூர்த்திகம்பராமாயணம்கிறிஸ்தவம்பரிபாடல்🡆 More