உலுசைல் விளையாட்டரங்கம்

உலுசைல் விளையாட்டரங்கம் (Lusail Stadium) கத்தார் நாட்டின் உலுசைல் நகரத்தில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டரங்கமாகும்.

உலுசைல் சிறப்பு விளையாட்டரங்கம் என்றும் இது அழைக்கப்படுகிறது. 2022 பீஃபா உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் உட்பட பத்து உலகக் கோப்பை போட்டிகள் உலுசைல் காற்பந்து விளையாட்டரங்கில் நடைபெறுகின்றன.

உலுசைல் சிறப்பு விளையாட்டரங்கம்
Lusail Iconic Stadium
முழுமையான பெயர்உலுசைல் சிறப்பு விளையாட்டரங்கம்
அமைவிடம்உலுசைல், கத்தார்
ஆட்கூற்றுகள்25°25′15.1″N 51°29′25.4″E / 25.420861°N 51.490389°E / 25.420861; 51.490389
பொது போக்குவரத்துஉலுசைல்
இருக்கை எண்ணிக்கை80,000
தரைப் பரப்புபொவேசி
Construction
Broke ground11 ஏப்ரல் 2017
கட்டப்பட்டதுஏப்ரல் 2021
திறக்கப்பட்டது22 நவம்பர் 2021
வடிவமைப்பாளர்பாசுட்டர் மற்றும் பங்குதாரர்களுடன் பாப்புலசு நிறுவனம்
General contractorஎச்.பி.கே ஒப்பந்ததாரர்
சீன இரயில்வே கட்டுமான நிறுவனம்
குடியிருப்போர்
கத்தார் தேசிய கால்பந்து அணி

கத்தார் கால்பந்து சங்கத்திற்குச் சொந்தமான உலுசைல் விளையாட்டரங்கம் கத்தார் நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமாகும். 2022 உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறும் எட்டு விளையாட்டு மைதானங்களில் இதுவும் ஒன்றாகும்.

உலுசைல் விளையாட்டு மைதானம் தலைநகரம் தோகாவிற்கு வடக்கே 23 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. உலுசைல் காற்பந்து விளையாட்டரங்கம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று எகிப்து மற்றும் சவுதி நாட்டு அணிகள் மோதிய உலுசைல் சிறப்பு கோப்பை ஆட்டத்துடன் திறக்கப்பட்டது.

கட்டுமானம்

உலுசைல் விளையாட்டரங்கத்தின் கட்டுமான செயல்முறைகள் 2014 ஆம் ஆண்டில் தொடங்கின. எச்.பி.கே கட்டுமான நிறுவனமும் சீனா இரயில்வே கட்டுமான கழகமும் இணைந்து கூட்டு முயற்சியாக மைதானத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டன. இயந்திரம், மின்சாரம் மற்றும் குழாய் அமைப்பு பணிகளை எச்.பி.கே கட்டுமான நிறுவனம் மேற்கொண்டது.

பிரித்தானிய நிறுவனங்களான பாசுட்டர்+ பங்குதாரர்கள் மற்றும் பாப்புலசு நிறுவனம் ஆகியோரால் உலுசைல் விளையாட்டரங்கம் வடிவமைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரங்கம் 2022 உலகக் கோப்பைக்கு திட்டமிடப்பட்ட மற்ற மைதானங்களைப் போலவே, சூரிய சக்தியைப் பயன்படுத்தி குளிர்விக்கப்படும் வசதியையும் சுழியக்கார்பன் தட மேற்பரப்பையும் கொண்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி முதல் விளையாட்டரங்கின் கட்டுமானம் தொடங்கியது. 2020 ஆம் ஆண்டுக்குள் விளையாட்டரங்கம் கட்டி முடிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டது. 2022 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக மூன்று நட்புரீதியான போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால் மைதானத்தின் நிறைவுப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டதால் ஒரேயொரு போட்டிமட்டும் நடைபெற்றது.

உலகக் கோப்பை காற்பந்து போட்டிகளைத் தொடர்ந்து அரங்கமானது 40,000 இருக்கைகள் கொண்ட மைதானமாக மறுகட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்படியான இருக்கைகள் அகற்றப்பட்டு, கட்டிடத்தின் மற்ற பகுதிகள் கடைகள், உணவு விடுதிகள், தடகளம், கல்வி வசதிகள் மற்றும் சுகாதார மருத்துவமனையுடன் கூடிய ஒரு சமூக இடமாக மீண்டும் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

2022 பிபா உலகக் கோப்பைக்காகக் கட்டப்பட்ட மற்ற மைதானங்களைப் போலவே, உலுசைல் விளையாட்டரங்கமும் இதன் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்திற்காக 16 ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 16 ஆம் தேதியன்று உலகளாவிய நிலைத்தன்மை மதிப்பீட்டு அமைப்பு வழங்கும் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது.

செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஓர் அறிக்கையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மரணத்தை விசாரிக்கத் தவறியதற்காக கத்தாரை பன்னாட்டு மன்னிப்பு அவை விமர்சித்துள்ளது.

செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 15 நாடுகளைச் சேர்ந்த 17,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கால்பந்து ரசிகர்களின் கருத்துக் கணிப்பின் முடிவுகளை பன்னாட்டு மன்னிப்பு அவை வெளியிட்டது. இதில் 73% மனித உரிமை மீறல்களுக்காக கத்தாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிபா அமைப்பு இழப்பீடு வழங்குவதை ஆதரித்ததைக் காட்டியது. பன்னாட்டு மன்னிப்பு அவையின் கருத்துக்கணிப்புக்குப் பிறகு பிபா ஓர் அறிக்கையை வெளியிட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு செய்யப்பட்ட முன்னேற்றங்கள் இவ்வறிக்கையில் மேற்கோளாகக் காட்டப்பட்டது.

உலுசைல் சிறப்பு கோப்பை

9 செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று உலுசைல் விளையாட்டரங்கத்தில் சவுதி-எகிப்திய சிறப்பு கோப்பை போட்டி ஒன்று நடைபெற்றது. இது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான ஒத்திகையாக அமைந்தது. 2021-22 சவூதி அரேபிய வாகையாளரான அல் இலால் மற்றும் எகிப்திய வாகையாளரான இயாமாலெக்கு ஆகிய இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. போட்டி 1-1 என்ற கோல் காணக்கில் சமநிலையில் முடிந்தது. இறுதியாக சமநிலை முறிவு ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் அல் இலால் அணி வெற்றி பெற்றது.

2022 உலகக்கோப்பை காற்பந்து

உலுசைல் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள பத்து 2022 உலகக் கோப்பை போட்டிகள் அட்டவணை:.

நாள் நேரம் அணி எண். 1 முடிவு அணி எண். 2 சுற்று வருகை
22 நவம்பர் 2022 13:00 உலுசைல் விளையாட்டரங்கம்  அர்கெந்தீனா உலுசைல் விளையாட்டரங்கம்  சவூதி அரேபியா குழு C
24 நவம்பர் 2022 22:00 உலுசைல் விளையாட்டரங்கம்  பிரேசில் உலுசைல் விளையாட்டரங்கம்  செர்பியா குழு G
26 நவம்பர் 2022 22:00 உலுசைல் விளையாட்டரங்கம்  அர்கெந்தீனா உலுசைல் விளையாட்டரங்கம்  மெக்சிக்கோ குழு C
28 நவம்பர் 2022 22:00 உலுசைல் விளையாட்டரங்கம்  போர்த்துகல் உலுசைல் விளையாட்டரங்கம்  உருகுவை குழு H
30 நவம்பர் 2022 22:00 உலுசைல் விளையாட்டரங்கம்  சவூதி அரேபியா உலுசைல் விளையாட்டரங்கம்  மெக்சிக்கோ குழு C
2 திசம்பர் 2022 22:00 உலுசைல் விளையாட்டரங்கம்  கமரூன் உலுசைல் விளையாட்டரங்கம்  பிரேசில் குழு G
6 திசம்பர் 2022 22:00 வெற்றியாளர் குழு H இரண்டாமிடம் குழு G சுற்று 16
9 திசம்பர் 2022 22:00 போட்டி 49 வெற்றியாளர் போட்டி 50 வெற்றியாளர் காலிறுதி
13 திசம்பர் 2022 22:00 போட்டி 57 வெற்றியாளர் போட்டி 58 வெற்றியாளர் அரை இறுதி
18 திசம்பர் 2022 18:00 போட்டி 61 வெற்றியாளர் போட்டி 62 வெற்றியாளர் இறுதிப்போட்டி

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

உலுசைல் விளையாட்டரங்கம் கட்டுமானம்உலுசைல் விளையாட்டரங்கம் உலுசைல் சிறப்பு கோப்பைஉலுசைல் விளையாட்டரங்கம் 2022 உலகக்கோப்பை காற்பந்துஉலுசைல் விளையாட்டரங்கம் மேற்கோள்கள்உலுசைல் விளையாட்டரங்கம் புற இணைப்புகள்உலுசைல் விளையாட்டரங்கம்2022 உலகக்கோப்பை காற்பந்துகத்தார்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிணநீர்க்கணுஉத்தரகோசமங்கைசத்ய பிரதா சாகுநீரிழிவு நோய்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிதீபிகா பள்ளிக்கல்ஆடு ஜீவிதம்அருணகிரிநாதர்ஆய்த எழுத்துஓம்கொன்றை வேந்தன்பழமொழி நானூறுஇயோசிநாடிவைகோசூல்பை நீர்க்கட்டிகிரியாட்டினைன்இசுலாத்தின் ஐந்து தூண்கள்மண் பானைமுதுமொழிக்காஞ்சி (நூல்)நீலகிரி மாவட்டம்அகழ்ப்போர்தொழுகை (இசுலாம்)அசிசியின் புனித கிளாராஉயிர்ப்பு ஞாயிறுஒலிவாங்கிநரேந்திர மோதிகாவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுசுமேரியாசெங்குந்தர்இந்திய நிதி ஆணையம்போக்கிரி (திரைப்படம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்சுந்தரமூர்த்தி நாயனார்வாக்குரிமைசேலம் மக்களவைத் தொகுதிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஆற்றுப்படைகா. ந. அண்ணாதுரைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)அஸ்ஸலாமு அலைக்கும்காச நோய்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்மூலம் (நோய்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅகோரிகள்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்அமெரிக்க ஐக்கிய நாடுகள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பரிதிமாற் கலைஞர்விநாயகர் அகவல்இந்திய ரூபாய்கோயம்புத்தூர்கணியன் பூங்குன்றனார்அதிதி ராவ் ஹைதாரிபரதநாட்டியம்ஆசாரக்கோவைதமிழ் விக்கிப்பீடியாஅறுபது ஆண்டுகள்வேதம்சிவம் துபேபங்குனி உத்தரம்பழனி முருகன் கோவில்முடியரசன்நீர் மாசுபாடுசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்குறிஞ்சிப் பாட்டுஞானபீட விருதுயூடியூப்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)மக்களாட்சிசிதம்பரம் நடராசர் கோயில்சுற்றுச்சூழல் பாதுகாப்புஐம்பூதங்கள்ஏலாதிமுரசொலி மாறன்புரோஜெஸ்டிரோன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறுநீரகம்🡆 More