உலங்கு வானூர்தி

உலங்கு வானூர்தி (helicopter) அல்லது உலங்கூர்தி என்பது வானூர்தி வகைகளில் ஒன்று.

விமானத்திற்கும் உலங்கு வானூர்திக்கும் உள்ள வேறுபாடு எவ்வாறு மேலே எழும்புகிறது என்பதில் உள்ளது. ஓர் விமானம் மேலெழும்பு விசையை தனது இறக்கைகளின் வடிவமைப்பு மற்றும் முன்னோக்கு நகர்வினால் பெறுகிறது. இந்த முன்னோக்கு நகர்வு இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள விசிறிகளின் மூலமோ வளி உந்திகளின் மூலமாகவோ ஏற்படுகிறது. ஓர் உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் இந்த மேலெழும்பு விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ரோடர்கள் என்றும் இவ்வானூர்தி ரோடரி விங் வானூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.

உலங்கு வானூர்தி 1922
உலங்கு வானூர்தி
HH-43 ஹஸ்கி உலங்கு வானூர்தி

ஓர் விமானம் காற்றில் மிதக்க முன்னோக்கிய நகர்வு தேவை, ஆனால் உலங்கு வானூர்திக்கு தேவையில்லை. இதனால் ஒரே இடத்தில் நின்று மிதக்க முடியும். அவை தங்கள் ரோடர்களை சற்றை சாய்த்து, தனக்கு கீழே உள்ள காற்றை வேண்டும் திசையில் தள்ளி நகர்கின்றன.

உலங்கு வானூர்தி
டா வின்சியின் "ஏரியல் ஸ்க்ரூ"
உலங்கு வானூர்தியின் இயக்கக் காணொளி

இவ்வானூர்திகளை 1490ஆம் ஆண்டில் இத்தாலிய அறிஞர் லியொனார்டோ டா வின்சி முதலில் கற்பனை செய்தார், ஆனால் பல நூற்றாண்டுகள் கழித்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள் வரை ஒருவரும் வடிவமைக்கவில்லை. பிரெஞ்ச் நாட்டு எதியன் ஓமிசேன் (Etienne Oehmichen) முதலில் பறந்தவராவார்.அவரால் ஏழு நிமிடங்கள் நாற்பது வினாடிகள் நேரமே பறக்க முடிந்தது.

உலங்கு வானூர்திகள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரழிவு நேரங்களில் மிகவும் பயனளிக்கின்றன. சாலைகள் மூலம் அடையமுடியாதபோது சிறைபட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள், மருந்து மற்றும் உடைகள் மேலிருந்து வீச உதவுகிறது. தவிர நோயாளிகளையும் காயமடைந்த மக்களையும் இடம்பெயர்க்கவும் துணைபுரிகிறது. இராணுவ நடமாட்டத்திற்கும் போர்செயல்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

குறைந்த உயரத்தில் பறப்பதால் இயற்கைசேதங்களை பார்வையிடவும் அரசியல் பணிகளுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

வானூர்திவிமானம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேற்றுமையுருபுவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பாரதிதாசன்திருவள்ளுவர்வணிகம்பூக்கள் பட்டியல்பகிர்வுசதுரங்க விதிமுறைகள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ம. பொ. சிவஞானம்இலட்சம்அத்தி (தாவரம்)கார்த்திக் (தமிழ் நடிகர்)பி. காளியம்மாள்பிரியா பவானி சங்கர்கூலி (1995 திரைப்படம்)சிவனின் 108 திருநாமங்கள்அறுசுவைதமிழ் தேசம் (திரைப்படம்)கொன்றை வேந்தன்அரச மரம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்உயிர்மெய் எழுத்துகள்செண்டிமீட்டர்முன்மார்பு குத்தல்பிரபஞ்சன்கண்ணப்ப நாயனார்டிரைகிளிசரைடுகாளமேகம்திருமந்திரம்அபினிபசுமைப் புரட்சிஇதயம்மத கஜ ராஜாசப்தகன்னியர்சித்தர்பதினெண் கீழ்க்கணக்குமுடக்கு வாதம்நல்லெண்ணெய்ஆபுத்திரன்விருமாண்டிவிஸ்வகர்மா (சாதி)புதினம் (இலக்கியம்)குண்டூர் காரம்முகுந்த் வரதராஜன்திருத்தணி முருகன் கோயில்வெங்கடேஷ் ஐயர்சொல்சினேகாஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஔவையார்ஆனந்தம் (திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுவிவேகானந்தர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தினகரன் (இந்தியா)கம்பராமாயணம்திருமங்கையாழ்வார்வெண்குருதியணுதமிழ்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்திணை விளக்கம்சிலம்பரசன்மரகத நாணயம் (திரைப்படம்)சூரியக் குடும்பம்கல்விக்கோட்பாடுமறவர் (இனக் குழுமம்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கலம்பகம் (இலக்கியம்)சிறுநீரகம்சின்னம்மைஒன்றியப் பகுதி (இந்தியா)கலித்தொகைஈ. வெ. இராமசாமிகல்லீரல்🡆 More