இலதா சாளுக்கியர்கள்

இலதா சாளுக்கியர்கள் ( Chalukyas of Lata ) என்பது ஒரு இந்திய வம்சமாகும்.

இது 10-11 ஆம் நூற்றாண்டுகளில் இன்றைய குசராத்தின் இலதா பகுதியை ஆண்டது. இவர்கள் ஆரம்ப ஆண்டுகளில் மேலைச் சாளுக்கியர்களின் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்தனர். இறுதியில் குசராத்தின் சோலாங்கியர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

இலதா சாளுக்கியர்கள்
மேலைச் சாளுக்கியர்களின் நிலப்பிரபுக்கள்
சுமார் 970 பொ.ச.–சுமார் 1070 பொ.ச.
இலதா சாளுக்கியர்களின் கல்வெட்டுகள் காணப்பட்ட இடங்கள்
வரலாறு 
• தொடக்கம்
சுமார் 970 பொ.ச.
• முடிவு
சுமார் 1070 பொ.ச.
முந்தையது
பின்னையது
இலதா சாளுக்கியர்கள் மேலைச் சாளுக்கியர்கள்
சாளுக்கிய வம்சம் இலதா சாளுக்கியர்கள்
தற்போதைய பகுதிகள்இந்தியா

வரலாறு

வம்சத்தின் முதல் ஆட்சியாளரான பாரப்பன், மேலைச் சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலப்பனின் தளபதியாக அடையாளம் காணப்படுகிறார். அவர் தைலப்பனால் இலதா பிராந்தியத்தின் ஆளுநராக ஆக்கப்பட்டிருக்கலாம். மெருதுங்காவின் 'பிரபந்த-சிந்தாமணியின்'படி, பாரப்பனும் சபடலக்சத்தின் ஆட்சியாளரும் ( சாகமான மன்னர் இரண்டாம் விக்ரஹராஜா ) கூட்டாகச் சேர்ந்து ஒரு முறை குசராத்தைத் தாக்கினர். குசராத்தின் சோலங்கி மன்னன் மூலராஜா, சபடலக்ச ஆட்சியாளரிடம் பாரப்பனைக் கையாளும் வரை அவரைத் தாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் பாரப்பனை தோற்கடித்தார். இது சபடலக்ச மன்னரை குசராத்தில் இருந்து தப்பி ஓட தூண்டியது. மெருதுங்கா குசராத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் கணக்கு பாரபட்சமாக இருக்கலாம். விக்ரஹராஜா மூலராஜாவைத் தோற்கடித்து, பரூச் வரை அணிவகுத்துச் சென்றார். அங்கு அவர் தனது குல தெய்வமான ஆஷாபுர மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவிலைக் கட்டினார் என்று சாகமான வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஒரு கோட்பாட்டின் படி, இரண்டாம் விக்ரஹராஜா பாரப்பனுடன் கூட்டணி வைத்து, சுதந்திரம் அடைய அவருக்கு உதவினார்.

ஹேமச்சந்திரனின் 'திவ்யாஷ்ரயா காவ்யத்தின்'படி, மூலராஜாவின் மகன் சாமுண்டராஜா இலதா மீது படையெடுத்து பாரப்பனைக் கொன்றார். பாரப்பனின் மகன் கோகி-ராஜா இலதா பிராந்தியத்தில் குடும்ப ஆட்சியை மீட்டெடுத்திருக்கலாம். ஆனால், பொ.ச.1074 சோலங்கியர்களால் வம்சம் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கல்வெட்டுகள்

940 சாலிவாகன ஆண்டு (1018 பொ.ச.) தேதியிட்ட கீர்த்திராஜாவின் செப்புத்தகடு கல்வெட்டு சூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அவரது முன்னோர்களுக்கு கோகி, பாரப்பன் மற்றும் நிம்பர்கன் என்று பெயரிடுகிறது.

972 சா. ஆ (1050 பொ.ச. எக்லகரே மற்றும் 1051 பொ.ச சூரத்து) தேதியிட்ட திரிலோச்சனா-பாலனின் இரண்டு செப்புத் தகடு கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள் சாளுக்கியர்களின் புராண தோற்றம் பற்றிய கணக்கை வழங்குகின்றன: குடும்பத்தின் முன்னோடி படைப்பாளி தெய்வமான விரிஞ்சியின் சுலுகாவிலிருந்து (தண்ணீர் வைத்திருக்கும் ஒரு பாத்திரம் அல்லது மடிந்த பனை) உருவானது. தெய்வத்தின் ஆலோசனையின் பேரில், அவர் கன்னோசியின் இராஷ்டிரகூட இளவரசியை மணந்தார். திரிலோச்சனபாலனின் கல்வெட்டுகள் அவரது மூதாதையர்களான வத்சா, கீர்த்தி, கோகி மற்றும் பாரப்பாவைக் குறிப்பிடுகின்றன. வத்சா சோமநாதக் கடவுளுக்கு தங்கக் குடை கட்டியதாகவும், இலவச உணவுகாக சத்திரத்தை நிறுவியதாகவும் கூறுகிறது. இந்தக் கல்வெட்டுகளில் 'திரிலோச்சனபாலன் மகா-மண்டலேசுவரன்' என்று அழைக்கப்படுகிறார். 1050 பொ.ச. கல்வெட்டு அவர் ஏகல்லகரம் கிராமத்தை (நவீன எக்லகரே ) தாராதித்யன் என்ற பிராமணருக்கு நன்கொடையாக அளித்ததை பதிவு செய்கிறது.

சான்றுகள்

Tags:

இலதா (பிராந்தியம்)குசராத்துசோலாங்கிப் பேரரசுமேலைச் சாளுக்கியர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அபூபக்கர்பெரிய வியாழன்சுக்ராச்சாரியார்கருக்காலம்மூதுரைஜோதிகாஅருணகிரிநாதர்நாளந்தா பல்கலைக்கழகம்கோத்திரம்ஆந்திரப் பிரதேசம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அறுபடைவீடுகள்நவக்கிரகம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)ரோபோ சங்கர்சூரிசிலப்பதிகாரம்அளபெடைஇடைச்சொல்குப்தப் பேரரசுசே குவேராசுலைமான் நபிதயாநிதி மாறன்சுந்தர காண்டம்சிவபெருமானின் பெயர் பட்டியல்இசுலாமிய வரலாறுகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஇந்திய தேசியக் கொடிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஹர்திக் பாண்டியாமத்திய சென்னை மக்களவைத் தொகுதிஉருவக அணியானைஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஎட்டுத்தொகை தொகுப்புசப்ஜா விதைஇந்திய வரலாறுபுறப்பொருள்உவமைத்தொகைஉ. வே. சாமிநாதையர்விலங்குஅக்கி அம்மைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்குலுக்கல் பரிசுச் சீட்டுஉன்னை நினைத்துகவிதைகள்ளுசங்க காலம்திராவிட மொழிக் குடும்பம்பரணி (இலக்கியம்)புரோஜெஸ்டிரோன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பரிவர்த்தனை (திரைப்படம்)கணினிகருப்பைமு. க. ஸ்டாலின்தமிழ் தேசம் (திரைப்படம்)தனுசு (சோதிடம்)மலைபடுகடாம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)முன்னின்பம்மயங்கொலிச் சொற்கள்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)பழனி பாபாநன்னூல்கடல்செஞ்சிக் கோட்டைஅன்புமணி ராமதாஸ்கட்டுரைதிருநங்கைகிருட்டிணன்வட சென்னை மக்களவைத் தொகுதிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்நீர் மாசுபாடுமுதுமொழிக்காஞ்சி (நூல்)முருகன்மூவேந்தர்உயிர் உள்ளவரை காதல்🡆 More