1947 இந்தியப் பிரிவினைக்கு முன்னர், இந்தியாவில் மொத்தம் 562 இந்திய மன்னராட்சி அரசுகள் (Princely States) அல்லது சமஸ்தானங்கள் காணப்பட்டன.
இவை பிரித்தானிய இந்திய அரசின் ஆளுகைக்கு உட்படாதவை ஆகும். இருப்பினும் இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி தத்தம் பகுதிகளை ஆண்டு வந்தன.
பிரித்தானிய இந்தியாவில் 562 சுதேச சமஸ்தானங்களில் 119 சமஸ்தானங்களின் மன்னர்களுக்கு மட்டுமே பிரித்தானிய அரசினர் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை வழங்கினர். சுதேச சமஸ்தான மன்னர்கள் ஆளும் நிலப்பரப்பு, ஆண்டு வருமானம், செலுத்தும் திறை மற்றும் மக்கள் தொகை பொறுத்து, வணக்கத்திற்காக வெடிக்க வைக்கும் துப்பாக்கி குண்டுகளின் எண்ணிக்கை 9 முதல் 21 வரை இருந்தது.
இந்தியா-பாகிஸ்தான் விடுதலைக்குப் பின்னர், சிக்கிம் தவிர்த்த பிற அனைத்து சுதேச சமஸ்தானங்கள் இந்தியா, பாக்கித்தான் மற்றும் பர்மாவில் இணைந்தது.
சுதந்திர இந்திய அரசுடன் இணைந்த மன்னராட்சி அரசுகள் பட்டியல்:
அரசு | பிரித்தானியப் பிரதிநிதி | இன்று இணைந்திருப்பது | கடைசி அல்லது இன்றைய ஆட்சியாளர் |
---|---|---|---|
ஐதராபாத் நிசாம் | தனி மன்னராட்சி | இந்தியா தெலுங்கானா, மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், கருநாடகம், இந்தியா | ஒஸ்மான் அலிகான், ஏழாம் அசப்ஜா |
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் | தனி மன்னராட்சி | இந்தியா சம்மு காசுமீர், இந்தியா; பாக்கித்தான் | குலாப் சிங், ஹரி சிங், கரண் சிங் |
மைசூர் | தனி மன்னராட்சி | இந்தியா கருநாடகம், இந்தியா | ஜெயசாமராஜா உடையார் |
சிக்கிம் இராச்சியம் | தனி மன்னராட்சி | இந்தியா சிக்கிம் இராச்சியம் | சோக்யால் வாங்சுக் நம்கியால் |
திருவிதாங்கூர் திருவிதாங்கூர் | தனி மன்னராட்சி | இந்தியா தென் கேரளம், மற்றும் வட்டங்கள் (கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழ்நாடு, இந்தியா | சித்திரைத் திருநாள் பாலராம வர்மா, திருவாங்கூர் மகாராஜா |
பரோடா அரசு | தனி மன்னராட்சி | இந்தியா காதி பரோடா, அம்ரேலி, நவ்சாரி (குசராத்து) | கெயிக்வாட் மகாராஜா |
டல்ஹவுசி பிரபு அறிவித்த ஆண் வாரிசு இல்லா இராச்சியங்களை அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்ட இந்திய மன்னராட்சி நாடுகள் பட்டியல்:
This article uses material from the Wikipedia தமிழ் article இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.