ஆரிய சமாஜம்

ஆரிய சமாஜம் கி.பி.

1875ல் தோற்றுவிக்கப்பட்டது. இதைத் தோற்றுவித்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார்.

ஆரிய சமாஜம்

கடவுளின் குழந்தைகள்

‘ஆரியா’ என்பதன் பொருள் கடவுளின் குழந்தை என்பதாகும்.அனைத்து ஆன்மாக்களும், கடவுளின் குழந்தைகள் என்றும், அவை கடவுளுக்கு கீழ்படிதல் உள்ளவையாக இருக்க வேண்டும் என்பதும் தயானந்தரின் கருத்துகளாகும்.

உண்மையைத் தேடி

தயானந்தரின் இயற்பெயர் மூலசங்கரன். கி.பி. 1824ல் குஜராத்தில் வசதியுள்ள பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் அம்பா சங்கரர் ஆகும். இவரது 20வது வயதில் திருமணம் முடிக்க இவரது தந்தை விரும்பினார். அதில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். உண்மையைத் தேடி இந்தியா முழுமைக்கும் சுற்றி பல இடங்களில் கல்வி கற்றார்.

சத்தியார்த்த பிரகாசம்

15 ஆண்டுகள் அலைந்து, திரிந்து இறுதியாக மதுராபுரிக்குச் சென்றார். அங்கு சுவாமிஜி வீராஜானந்தரிடம் சீடராக ஆனார். அதன் பின்பு ‘சத்தியார்த்த பிரகாசம்’ என்ற நூலை எழுதினார்.

இந்து, சமய, சமுதாயப் பணி

தயானந்த சரஸ்வதி சுவாமிகள் தம் வாழ்நாளை வேத சமயத்தைப் பரப்புவதிலும் இந்து, சமய, சமுதாயப் பணிகளிலும் கழித்தார். ஐந்தாண்டுகளுக்குள் பல்லாயிரக் கணக்கானோர் இவரைப் பின்பற்றத் தலைப்பட்டனர்.

உருவ வழிபாட்டை எதிர்த்த இவர், வேதங்களை நம்பினார்.

ஆரிய சமாஜத்தின் சமுதாயப் பணி

ஆரிய சமாஜம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் மனித சமுதாய மேம்பாட்டிற்கு பல சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது. இந்து சமயத்தில் இருந்து வரும் தீமைகளைக் களையவும் வேத சமயத்திற்கு புத்துயிர் அளிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

ஜாதிக்கொடுமை, பெண்கள் மீதான அடக்குமுறை ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தது. மும்பையில் இந்த சமாஜம் ஆற்றல் பெற்றிருந்தது.

மேற்கோள்கள்

Tags:

ஆரிய சமாஜம் கடவுளின் குழந்தைகள்ஆரிய சமாஜம் உண்மையைத் தேடிஆரிய சமாஜம் சத்தியார்த்த பிரகாசம்ஆரிய சமாஜம் இந்து, சமய, சமுதாயப் பணிஆரிய சமாஜம் மேற்கோள்கள்ஆரிய சமாஜம்சுவாமி தயானந்த சரஸ்வதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியத் தலைமை நீதிபதிரயத்துவாரி நிலவரி முறைபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)தீபிகா பள்ளிக்கல்இடிமழைமீனம்கூத்தாண்டவர் திருவிழாஅனுஷம் (பஞ்சாங்கம்)சீரகம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்இயற்கை வளம்மதுரை நாயக்கர்ஆல்உயிர்மெய் எழுத்துகள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்வ. உ. சிதம்பரம்பிள்ளைசுபாஷ் சந்திர போஸ்கோயம்புத்தூர்தொல்காப்பியம்நற்கருணைசைவ சமயம்அறிவுசார் சொத்துரிமை நாள்விளம்பரம்கட்டுவிரியன்பூக்கள் பட்டியல்செப்புசங்க காலப் பெண்பாற் புலவர்கள்திருவள்ளுவர்பத்து தலஅயோத்தி இராமர் கோயில்நாயன்மார்விஜய் (நடிகர்)குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்யாழ்தனிப்பாடல் திரட்டுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மதுரை வீரன்தமிழர் கப்பற்கலைபாம்புவேதம்மரபுச்சொற்கள்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)பாரிஇந்தியன் பிரீமியர் லீக்கலித்தொகைஅருந்ததியர்சீனாதினமலர்தாய்ப்பாலூட்டல்சிவபெருமானின் பெயர் பட்டியல்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பிள்ளைத்தமிழ்நாயக்கர்கருப்பையாதவர்திருமலை (திரைப்படம்)பெயர்ச்சொல்வேலு நாச்சியார்மு. வரதராசன்குலசேகர ஆழ்வார்வன்னியர்சிவாஜி கணேசன்இந்திய இரயில்வேஆய்வுமாசாணியம்மன் கோயில்சுரைக்காய்மதுரைபொதுவுடைமைஜவகர்லால் நேருவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்மீராபாய்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கங்கைகொண்ட சோழபுரம்குப்தப் பேரரசுஅரவான்🡆 More