ஆசியா-சப்பான் மகளிர் வள மையம்

ஆசியா-சப்பான் மகளிர் வள மையம் (Asia-Japan Women's Resource Center) என்பது 1994-ல் நிறுவப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பாகும்.

இது பாலின சமத்துவம், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு, மிகவும் நியாயமான சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நிலையான வளர்ச்சி ஆகிய கொள்கைகளை ஆதரிக்கிறது.

ஆசியா-சப்பான் மகளிர் வள மையம்
உருவாக்கம்திசம்பர் 1994, சப்பானில் யாயோரி மத்சுயி
வகைஅரசு சாரா இலாப நோக்கமற்ற நிறுவனம்
தலைமையகம்
சேவைகள்கல்வி, ஆலோசனை
துறைகள்மகளிர் உரிமை, சுற்றுச்சூழல் பிரச்சனைகள், சமூக நீதி
வலைத்தளம்www.ajwrc.org/eng

ஆசியா-சப்பான் மகளிர் வள மையம் பெண்களுக்கான அதிகாரமளிக்கும் கருத்தரங்குகள் மற்றும் ஆய்வுக் குழுக்கள், பயிற்சி மற்றும் பட்டறைகள் போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. மேலும் இவர்கள் தங்கள் பணியை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சி மற்றும் பரப்புரைகளை நடத்துகின்றனர். சப்பானியப் பெண்களிடையே உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நடவடிக்கைகள் உதவுகின்றன. சப்பான் ஆசியப் பொருளாதாரம் மற்றும் பன்னாட்டு அரசியலில் முன்னணி நாடாக இருப்பதால், மேம்பட்ட மனித உரிமைகளுக்காக வாதிடுவதில் சப்பானியப் பெண்கள் முன்னிலை வகிப்பதை ஊக்குவிக்க வேண்டிய கடமை உள்ளதாக இந்த அமைப்பு உணர்கிறது. கூடுதலாக, ஆசியாவில் அதிக எண்ணிக்கையிலான எல்லை தாண்டிய மனித கடத்தகையில் பாதிக்கப்பட்டவர்களின் இலக்காகச் சப்பான் உள்ளது. இது ஆசியா-சப்பான் மகளிர் வள மையத்தின் பணிக்கு மேலும் உந்துதலாக உள்ளது.

கடந்த நூற்றாண்டில் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் பாலினங்களுக்கு இடையிலான வேறுபாடு குறைந்து வருகிறது. ஆனால் சப்பான் இந்த போக்கில் பின்தங்கியுள்ளது என்று ஆசியா-சப்பான் மகளிர் வள மையம் கூறுகிறது. உதாரணமாக, சப்பானின் சட்டமன்ற அமைப்பான சப்பானிய நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10% மட்டுமே ஆகும். மேலும் பெண்கள் தொழிலாளர்கள் ஆண்களின் சம்பளத்தில் 60% மட்டுமே சம்பாதிக்கிறார்கள்.

பாலின சமத்துவமின்மை இன்னும் கடுமையாக இருந்தபோது, 1977-ல் நிறுவப்பட்ட ஆசியப் பெண்கள் சங்கத்திலிருந்து ஆசிய-சப்பான் மகளிர் வள மையம் வளர்ந்தது. 1985ஆம் ஆண்டு வரை , சப்பானிய அரசாங்கம் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான ஒரு உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. பெண்களின் நிலை, மற்றும் பாலின இடைவெளியின் அடிப்படையில் தொழில்மயமான உலகின் மிகக் குறைந்த சமமான நாடுகளில் சப்பானும் ஒன்றாகும்.

ஆசியா-சப்பான் மகளிர் வள மையம் ஆரம்பத்தில் பாலியல் வர்த்தகத்தை எதிர்ப்பதில் கவனம் செலுத்தியது. ஆனால் இவர்களின் செல்வாக்கு வளர்ந்தவுடன், இவர்கள் நாட்டில் பெண்களின் பிரச்சினைகளை இன்னும் பரந்த அளவில் கையாள்வதற்கான தங்கள் எல்கையினை விரிவுபடுத்தினர். இறுதியில் ஆசியா-சப்பான் மகளிர் வள மையம் உருவாகியது. குழுவின் வலைத்தளத்தின்படி, இவர்கள் "பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறை மற்றும் பாகுபாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவரவும், மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களாட்சியுடன் கூடிய சப்பானிய சமுதாயத்தை நோக்கி, மற்றும் ஒரு நியாயமான மற்றும் நிலையான உலகளாவிய சமூகத்தை நோக்கி" கடமையாற்றுகின்றனர்.

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அரசு சார்பற்ற அமைப்புபாலினச் சமனிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

காம சூத்திரம்கன்னி (சோதிடம்)முடியரசன்ராஜ்கிரண்பாம்பாட்டி சித்தர்வினையெச்சம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இந்திய உச்ச நீதிமன்றம்குற்றாலக் குறவஞ்சிபனிக்குட நீர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பட்டினப் பாலைபர்வத மலைமதராசபட்டினம் (திரைப்படம்)பொறியியல்தமிழ்நாடு அமைச்சரவைஇந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழ்நாடு காவல்துறைகார்லசு புச்திமோன்கர்மாஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தமிழர் பண்பாடுகுமரகுருபரர்சவுக்கு (இணையதளம்)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்மு. கருணாநிதிபுதினம் (இலக்கியம்)கணினிஇசைகணையம்ஒத்துழையாமை இயக்கம்இல்லுமினாட்டிசிறுத்தொண்ட நாயனார்அகத்தியர்இந்தியப் பிரதமர்கில்லி (திரைப்படம்)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்குற்றியலுகரம்பிலிருபின்சுற்றுச்சூழல்தஞ்சை சரசுவதிமகால் நூலகம்இரசினிகாந்துகடையெழு வள்ளல்கள்தேவாங்குவேர்க்குருஸ்டார் (திரைப்படம்)மாதம்பட்டி ரங்கராஜ்பதிற்றுப்பத்துஅரிப்புத் தோலழற்சிமாத்திரை (தமிழ் இலக்கணம்)கம்பர்மகரம்சூழ்நிலை மண்டலம்இந்தியத் தேர்தல் ஆணையம்இதழ்அயோத்தி இராமர் கோயில்ஐஞ்சிறு காப்பியங்கள்மயங்கொலிச் சொற்கள்கொடைக்கானல்காளை (திரைப்படம்)தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிஅன்னை தெரேசாஜெயம் ரவிநந்திக் கலம்பகம்தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் பட்டியல்கன்னியாகுமரி மாவட்டம்பிளிப்கார்ட்பொருள் இலக்கணம்மார்கழி நோன்புஸ்ரீஈரோடு தமிழன்பன்மண்ணீரல்தற்கொலை முறைகள்புல்வெளிஉள்ளம் கொள்ளை போகுதேஆய்த எழுத்து (திரைப்படம்)குண்டூர் காரம்அட்டமா சித்திகள்எல் நீனோ-தெற்கத்திய அலைவு🡆 More