அக்கினேனி நாகேஸ்வர ராவ்

அக்கினேனி நாகேஸ்வர ராவ் (Akkineni Nageswara Rao, செப்டம்பர் 20, 1924 - சனவரி 22, 2014) ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமாவார்.

ஆந்திரத் திரைப்படத்துறையில், குறிப்பாகத் தெலுங்கு மொழிப் படங்களில் அதிகமாக நடித்தவர். வேளாண்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு நாடகங்கள் மூலமாக வந்தடைந்தவர். தர்மபத்தினி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். தொடர்ந்து 75 ஆண்டுகளாகப் பல்வேறு வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மூன்று முறை தெலுங்கு மொழிக்கான பிலிம்பேரின் சிறந்த நடிகர் விருதை வென்றிருக்கிறார். இந்திய அரசின் பத்ம விபூசண், தாதாசாஹெப் பால்கே விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

அக்கினேனி நாகேஸ்வர ராவ்
அக்கினேனி நாகேஸ்வர ராவ்
அ. நாகேசுவர ராவ் (1951 இல்)
பிறப்பு(1924-09-20)20 செப்டம்பர் 1924
வெங்கட ராகவ புரம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது இராமாபுரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு22 சனவரி 2014(2014-01-22) (அகவை 89)
ஐதராபாத்து
இருப்பிடம்ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்நடசாம்ராட், ஏஎன்ஆர்
பணிநடிகர், தயாரிப்பாளர், திரைபிடி வளாக உரிமையாளர்
உயரம்5'7"
வாழ்க்கைத்
துணை
அன்னபூர்ணா அக்கினேனி (1953–2011;அவரது மறைவு)
பிள்ளைகள்வெங்கட் அக்கினேனி
அக்கினேனி நாகார்ஜுனா
சத்தியவதி அக்கினேனி
நாக சுசீலா A.
சரோஜா அக்கினேனி
உறவினர்கள்சுமந்த் (நடிகர்) (பேரர்)
சுசாந்த் (பேரர்)
நாக சைதன்யா (பேரர்)
அகில் அக்கினேனி (பேரர்)
அமலா அக்கினேனி (மருமகள்)

வாழ்க்கைச் சுருக்கம்

நாகேசுவரராவ் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடாவுக்கு அருகில் உள்ள வேங்கடராகவபுரம் (இப்போது ராமாபுரம் என அழைக்கப்படுகிறது) என்ற ஊரில் அக்கினேனி வேங்கடரத்தினம், அக்கினேனி புன்னம்மா ஆகிய தம்பதியருக்கு ஐந்தாவது கடைசி மகனாக நாகேசுவர ராவ் பிறந்தார். இவர் பிறந்த சில ஆண்டுகளிலேயே தந்தை இறந்து விட்டார். சகோதரர்களும் தந்தையின் வேளாண்மைத் தொழிலைக் கவனித்து வந்தனர்.

நடிப்பு

நாகேசுவரராவ் தொடக்கப்பள்ளி வரையே படித்தார். பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நாடகங்களில் நடிப்பதற்கு இவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. சிறு வயதில் மிக அழகாக இருப்பார். இதனால் இவருக்குப் பெண் வேடங்களே அதிகமாகக் கிடைத்தன. பள்ளிப்படிப்பில் அக்கறை கொள்ளாமல் பொழுதுபோக்காக வெளியில் நடக்கும் நாடகங்களிலும் நடித்து வந்தார். ஸ்தானம் நரசிம்மராவ் என்ற பிரபல நாடக நடிகருடன் சிறு சிறு பாகங்களை ஏற்று நடித்து வந்தார். தம்பியின் நாடக நடிப்பில் கிடைத்த புகழை எண்ணிப் பெருமைப் பட்ட அவரது தமையனார் அவரைத் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர எண்ணினார்.

தர்ம பத்தினி என்ற திரைப்படத்தின் காட்சிகள் சில கோலாப்பூர் நகரில் எடுக்கப்பட்டன. படப்பிடிப்பைக் காண தமையனாருடன் சென்றார் நாகேஸ்வரராவ். படத்தில் ஒரே ஒரு நிமிடம் தோன்ற ஒருவர் தேவையாக இருந்தது. கூட்டத்தில் இருந்த நாகேசுவரராவ் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டார். இதுவே இவர் நடித்த முதலாவது திரைப்படம் ஆகும். அடுத்ததாக, சிறீ இராஜேசுவரி பிலிம் கம்பனி தயாரித்த தல்லி ப்ரேமா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டு சில காட்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனாலும் அவரது காட்சிகள் எதுவுமில்லாமலேயே இத்திரைப்படம் 1941 இல் வெளிவந்தது.

அரிச்சந்திரா, கனகதாரா, விப்ரநாராயணா, தெலுகு தல்லி, ஆசைஜோதி, சத்யான் வேஷணம் ஆகியன இவர் நடித்த பிரபல நாடகங்களாகும்..

திரைஉலகப் பங்களிப்புகள்

நடிகராக

தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் 256 படங்களில் நடித்துள்ளார். தேவதாசு, லைலா மஜுனு, அனார்க்கலி, பிரேமாபிசேகம், பிரேம நகர், மேக சந்தேசம் என்பன அவர் நடித்த பிரபல திரைப்படங்களில் சிலவாகும்.

தயாரிப்பாளராக

1956ல் ஆந்திர மாநிலம் அமைக்கப் பட முன்னதாக தெலுங்கு மொழிப் படங்கள் அப்போதைய மதராசு மாகாணத் தலை நகராக இருந்த சென்னையிலேயே தயாரிக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் அமைந்த பின்னர் தெலுங்குப் படத் தயாரிப்பை ஐதராபாத்துக்கு மாற்ற வேண்டுமென பல தலைவர்கள் விரும்பினார்கள். 1963ல் நாகேசுவர ராவ் தெலுங்குப் படத் தொழிலை எவ்வாறு மேம்படுத்துவது என ஐந்து அம்ச திட்டமொன்றை ஆந்திர மாநில அரசுக்குக் கொடுத்தார். ஐதராபாத்தில் 22 ஏக்கர் பரப்பளவில் ஒரு திரைப்பட தயாரிப்பு கலைக்கூடத்தை உருவாக்கினார். அவரது மனைவி பெயரில் இந்த அன்னபூரணா ஸ்டூடியோ (Annapurna Studio) ஆகத்து 13, 1975ல் நிறுவப்பட்டது .

விருதுகள்

இறப்பு

தமது 90வது அகவையில் புற்றுநோய் வாய்ப்புற்றிருந்த நாகேசுவரராவ் 2014 சனவரி 22, அன்று ஐதராபாதில் காலமானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அக்கினேனி நாகேஸ்வர ராவ் வாழ்க்கைச் சுருக்கம்அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடிப்புஅக்கினேனி நாகேஸ்வர ராவ் திரைஉலகப் பங்களிப்புகள்அக்கினேனி நாகேஸ்வர ராவ் விருதுகள்அக்கினேனி நாகேஸ்வர ராவ் இறப்புஅக்கினேனி நாகேஸ்வர ராவ் மேற்கோள்கள்அக்கினேனி நாகேஸ்வர ராவ் வெளி இணைப்புகள்அக்கினேனி நாகேஸ்வர ராவ்ஆந்திரத் திரைப்படத்துறைதாதாசாஹெப் பால்கே விருதுநாடகம்பத்ம விபூசண்பிலிம்பேர் விருது

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாத்திரை (தமிழ் இலக்கணம்)கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்விருதுநகர் மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்பிரேமலதா விஜயகாந்த்மரவள்ளிஅருங்காட்சியகம்பத்து தலபோயர்ஹதீஸ்மாநிலங்களவைகவிதைபுறநானூறுமட்பாண்டம்வளையாபதிஇலிங்கம்வாணிதாசன்பட்டினப் பாலைதமிழக மக்களவைத் தொகுதிகள்சிவகங்கை மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிவிசயகாந்துபெரிய வியாழன்ரோபோ சங்கர்தங்கம்ஆண்டாள்சமந்தா ருத் பிரபுகாம சூத்திரம்திருநெல்வேலிபக்தி இலக்கியம்ஆண் தமிழ்ப் பெயர்கள்தற்குறிப்பேற்ற அணிஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்திருவண்ணாமலைவீரமாமுனிவர்வாட்சப்இந்திய தேசிய சின்னங்கள்ஆற்றுப்படைதிருப்பாவைஅக்கி அம்மைதேவேந்திரகுல வேளாளர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழ்நாடுதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்பிரீதி (யோகம்)காயத்ரி மந்திரம்நபிஇந்திய உச்ச நீதிமன்றம்மொழிசிறுகதைஅயோத்தி இராமர் கோயில்தமிழர் அளவை முறைகள்வே. தங்கபாண்டியன்இந்தியப் பிரதமர்மெட்ரோனிடசோல்ஈ. வெ. இராமசாமிஉயிர்ப்பு ஞாயிறுநற்கருணை ஆராதனைகட்டுரைஹஜ்சிறுநீரகம்சங்க காலப் புலவர்கள்ஹோலிவினைத்தொகைகுடமுழுக்குசிறுதானியம்யானைநந்திக் கலம்பகம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்வெள்ளையனே வெளியேறு இயக்கம்நீதிக் கட்சிசிவாஜி (பேரரசர்)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சரத்குமார்சிறுபஞ்சமூலம்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதென்காசி மக்களவைத் தொகுதிராதாரவி🡆 More