அலி ஜாபர்

அலி ஜாபர் (ஆங்கிலம்: Ali Zafar) ( உருது: علی ظفر ) இவர் 1980 மே 18 அன்று பிறந்த ஒரு பாகிஸ்தான் பாடகர்-பாடலாசிரியர், விளம்பர மாதிரி, நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஓவியர் ஆவார்.

பிரபல இசைக்கலைஞராக மாறுவதற்கு முன்பு ஜாபர் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் தோன்றத் தொடங்கினார். பின்னர் அவர் பாலிவுட்டில் தனது தொழிலை நிறுவினார் மற்றும் அவரது வெற்றி பல பாக்கித்தான் நடிகர்களை இந்தி படங்களில் ஈடுபட வழிவகுத்தது. அவர் ஐந்து லக்ஸ் ஸ்டைல் விருதுகளையும் பிலிம்பேர் விருது பரிந்துரைகளையும் பெற்றுள்ளார்.

அலி ஜாபர்
தேரே பின்லேடன், 2010 இன் முதல் காட்சியில் ஜாபர்

ஜாபர் ஒரு இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் அவரது முதல் பாடல் தொகுப்பான ஹூகா பானியில் இருந்து அவரது "சன்னோ" என்ற பாடல் மூலம் பிரபலமடைந்தார் , இது உலகளவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. "சன்னோ" மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, பல இசை தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது மற்றும் சிறந்த இசை தொகுப்பு மற்றும் சிறந்தக் கலைஞருக்கான பல விருதுகளைப் பெற்றது. 2010 ஆம் ஆண்டு பாலிவுட் நையாண்டி படமான தேரே பின்லேடன் ஒரு மிதமான திரையரங்க வசூலில் வெற்றி பெற்றதன் மூலம் ஜாபர் தனது நடிப்பில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது மற்றும் பிலிம்பேர் உட்பட சிறந்த ஆண் அறிமுகப் பிரிவில் பல பரிந்துரைகளைப் பெற்றது. பின்னர் மேரே பிரதர் கி துல்ஹான், சாஷ்மே படூர், மற்றும் டியர் ஜிந்தகி உள்ளிட்ட பல படங்களிலும் பணியாற்றினார்.

அவரது நடிப்பு மற்றும் பாடும் வாழ்க்கையுடன், ஜாபர் சுற்றுப்பயணங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார், மனிதாபிமானப் பணிகளில் தீவிரமாக உள்ளார் மற்றும் பல ஒப்புதல் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளார். ஈஸ்டர்ன் ஐ என்ற பிரித்தன் செய்தித்தாளின் உலகளாவிய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டில், ஜாபர் "கிரகத்தின் கவர்ச்சியான ஆசிய மனிதர்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டார் .

ஆரம்பகால வாழ்க்கை

அலி ஜாபர் 1980 மே 18 அன்று பாக்கித்தானிலுள்ள பஞ்சாபியின் லாகூரில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்களான முகமது ஜாபருல்லா மற்றும் கன்வால் அமீன் ஆகியோர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருந்தனர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர்; ஜெய்ன் மற்றும் தான்யல், இவர்களில் பிந்தையவர் ஒரு வணிக மாதிரியாகும், அவர் விரைவில் பாடகர் மற்றும் நடிகராக ஒரு தொழிலைத் தொடங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். ஜாபர் தனது ஆரம்பக் கல்வியை சி.ஏ.ஏ பொதுப் பள்ளியில் பயின்றார். லாகூர் அரசு கல்லூரி மற்றும் தேசிய கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

தொழில்

ஜாபர் லாகூரில் உள்ள பேர்ல் கான்டினென்டல் விடுதியில் வரிவடிவ கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் தொலைக்காட்சித் ஹொடர்களில் நடிக்கத் தொடங்கினார். கொலேஜ் ஜீன்ஸ், காஞ்ச் கே பர் மற்றும் லாண்டா பஜார் ஆகிய நாடகத் தொடர்களில் நடித்து தொலைக்காட்சி நடிகராக அறிமுகமானார்.

சொந்த வாழ்க்கை

இந்திய நடிகர் அமீர்கானின் தொலைதூர உறவினரான ஆயிஷா ஃபஸ்லியை ஜாபர் 2009 ஜூலை 28 அன்று பாக்கித்தானின் லாகூரில் மணந்தார், அவர்களுக்கு 2010 இல் ஒரு பையனும், 2015 இல் ஒரு பெண்ணும் பிறந்தனர். இவரது மைத்துனர் உமைர் பாஸ்லி 2016 இல் வெளிவந்து திரையரங்க வசூலில் வெற்றி பெற்ற சயா இ குடா இ சுல்ஜலால் என்ற படத்தின் இயக்குனர் ஆவார்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

அலி ஜாபர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அலி ஜாபர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அலி ஜாபர் ஆரம்பகால வாழ்க்கைஅலி ஜாபர் தொழில்அலி ஜாபர் சொந்த வாழ்க்கைஅலி ஜாபர் குறிப்புகள்அலி ஜாபர் வெளி இணைப்புகள்அலி ஜாபர்உருதுபாலிவுட்பிலிம்பேர் விருதுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்சடுகுடுவிளையாட்டுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்நாயக்கர்கங்கைகொண்ட சோழபுரம்உயிர்மெய் எழுத்துகள்மதயானைக் கூட்டம்தேவநேயப் பாவாணர்பரிதிமாற் கலைஞர்மீனா (நடிகை)கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிமட்பாண்டம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிபதுருப் போர்ரமலான்ஔவையார் (சங்ககாலப் புலவர்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்அண்ணாமலை குப்புசாமிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005குருதன்னுடல் தாக்குநோய்சப்தகன்னியர்ஐக்கிய நாடுகள் அவைஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)கொன்றைசாகித்திய அகாதமி விருதுநிர்மலா சீதாராமன்நரேந்திர மோதிவெ. இராமலிங்கம் பிள்ளைஇந்தியன் (1996 திரைப்படம்)நவரத்தினங்கள்பழனி பாபாவிஜய் ஆண்டனிஇயேசுவின் சாவுமுத்துராமலிங்கத் தேவர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்நேர்பாலீர்ப்பு பெண்மதுரை மக்களவைத் தொகுதிஎலுமிச்சைதிருச்சிராப்பள்ளிஇந்திய நாடாளுமன்றம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிடைட்டன் (துணைக்கோள்)நுரையீரல் அழற்சிவரிதமிழ் இலக்கணம்சூரரைப் போற்று (திரைப்படம்)ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்குண்டலகேசிஇராமச்சந்திரன் கோவிந்தராசுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்லோகேஷ் கனகராஜ்தமிழர் நெசவுக்கலைஆறுமுக நாவலர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பாக்கித்தான்மனத்துயர் செபம்முக்குலத்தோர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பணவீக்கம்நயன்தாராசவாய் மான்சிங் விளையாட்டரங்கம்தமிழக மக்களவைத் தொகுதிகள்இட்லர்உட்கட்டமைப்புதிருவிளையாடல் புராணம்நீரிழிவு நோய்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தமிழ்பிரபுதேவாபுலிதமிழர் நிலத்திணைகள்விருத்தாச்சலம்அரவிந்த் கெஜ்ரிவால்இந்தியாவின் செம்மொழிகள்கரூர் மக்களவைத் தொகுதிஇந்தியன் பிரீமியர் லீக்🡆 More