அருணா ஆசப் அலி

அருணா ஆசப் அலி (Aruna Asaf Ali, வங்காள மொழி: অরুণা আসফ আলী; சூலை 16, 1909 — சூலை 29, 1996) ஓர் இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர்.

1942ஆம் ஆண்டு வெளையனே வெளியேறு இயக்கத்தின் போது மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை ஏற்றியதற்காக பரவலாக அறியப்பட்டவர்.

அருணா ஆசப் அலி

இளமைக் காலம்

அருணாவின் இயற்பெயர் அருணா கங்குலி. பிரித்தானிய பஞ்சாப் மாநிலத்தின் (இன்றைய அரியானா மாநிலம்) கல்காவில் வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். லாகூர் மற்றும் நைனிதாலில் படித்தவர். பட்டம் பெற்ற பின்னர் கொல்கத்தாவின் கோபால கிருஷ்ண கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். காங்கிரசுத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஆசப் அலியை அலகாபாத்தில் சந்தித்தப்பிறகு பெற்றோர்களின் எதிர்ப்பையும் சமயவாதிகளின் எதிர்ப்பையும் இருபது ஆண்டுகளுக்கும் கூடுதலான அகவை வேறுபாட்டையும் மீறி 1928ஆம் ஆண்டு அவரை திருமணம் புரிந்து கொண்டார்.

அரசியல் வாழ்வு

அருணா இந்திய தேசிய காங்கிரசின் துடிப்பான அங்கத்தினராக விளங்கினார். உப்பு சத்தியாக்கிரகத்தின்போது சிறை சென்றார். அரசியல் கைதிகளை விடுவித்தபோது இவரை விடுவிக்காததால் மக்கள் போராட்ட நடந்தது. அதன்பின்னரே விடுவிக்கப்பட்டார். 1942ஆம் ஆண்டு வெளையனே வெளியேறு இயக்கத்தின் போது பல தலைவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை பலத்த தடைகளை மீறி ஏற்றினார். விடுதலைக்குப் பின்னர் காங்கிரசிலிருந்து வெளியேறி பல சோசலிச இயக்கங்களில் பங்காற்றி உள்ளார். 1958ஆம் ஆண்டு தில்லியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் எடதாதா நாராயணனுடன் இணைந்து பேட்ரியட் இதழையும் பல நூல்களை வெளியிட்டுள்ளார். 1964ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரசில் இணைந்தார். இருப்பினும் அரசியலில் முழுமையாக ஈடுபடவில்லை.

அருணா ஆசஃப் அலிக்கு 1997ஆம் ஆண்டு மறைவிற்கு பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

அருணா ஆசப் அலி இளமைக் காலம்அருணா ஆசப் அலி அரசியல் வாழ்வுஅருணா ஆசப் அலி மேற்கோள்கள்அருணா ஆசப் அலி வெளியிணைப்புகள்அருணா ஆசப் அலி1942இந்திய தேசிய காங்கிரசுஇந்திய தேசியக் கொடிஇந்திய விடுதலை இயக்கம்இந்தியாமும்பைவங்காள மொழிவெள்ளையனே வெளியேறு இயக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெட்சித் திணைஇராமாயணம்ஐம்பெருங் காப்பியங்கள்சதுரங்க விதிமுறைகள்உயிர்மெய் எழுத்துகள்சைவ சமயம்சிங்கம் (திரைப்படம்)பரிபாடல்இலங்கைபரதநாட்டியம்கும்பகோணம்திரு. வி. கலியாணசுந்தரனார்காடழிப்புமுகலாயப் பேரரசுகுறை ஒன்றும் இல்லை (பாடல்)சூர்யா (நடிகர்)சித்திரைத் திருவிழாஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சங்குதிருநாவுக்கரசு நாயனார்ஐந்திணைகளும் உரிப்பொருளும்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்குருதி வகைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைபொருநராற்றுப்படைமழைநீர் சேகரிப்புஅறுசுவைஜே பேபிசே குவேராமியா காலிஃபாதேவாங்குபுலிபழனி முருகன் கோவில்காற்று வெளியிடைமுக்குலத்தோர்விநாயகர் அகவல்பி. காளியம்மாள்வேதாத்திரி மகரிசிவேற்றுமையுருபுஆந்தைவேலுப்பிள்ளை பிரபாகரன்அய்யா வைகுண்டர்தமிழர் பருவ காலங்கள்ரச்சித்தா மகாலட்சுமிதிருச்சிராப்பள்ளிபாண்டவர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சேலம்மதீச பத்திரனஇந்திய மக்களவைத் தொகுதிகள்காயத்ரி மந்திரம்பட்டினத்தார் (புலவர்)உரைநடைமுதுமலை தேசியப் பூங்காநாலடியார்கல்லீரல்பெண்சிவாஜி கணேசன்விளையாட்டுமெய்ப்பொருள் நாயனார்இயேசுசுரதாமூகாம்பிகை கோயில்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சட் யிபிடிவானிலைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்வல்லினம் மிகும் இடங்கள்விண்டோசு எக்சு. பி.வெப்பநிலைஇன்ஸ்ட்டாகிராம்நுரையீரல் அழற்சிராதிகா சரத்குமார்அட்சய திருதியைதிரவ நைட்ரஜன்🡆 More