அமூன்: பண்டைய எகிப்திய கடவுள்

அமூன் அல்லது ஆமோன் (Amun) (also Amon, Ammon, Amen; கிரேக்கம் Ἄμμων Ámmōn, Ἅμμων Hámmōn) பண்டைய எகிப்தியக் கடவுள்களில் முதன்மையானவர்.

இவரது மனைவிருள் ஒருவர் மூத் எனும் பெண் தெய்வம் ஆகும். இவரது மகன் கோன்சு கடவுள் ஆவர்.

அமூன்
அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம்
புது எகிப்திய இராச்சிய ஆட்சியில் நீண்ட மணிமுடியுடன் கூடிய அமூன் கடவுள், வலது கையில் செங்கோல் மற்றும் இடது கையில் ஆங்க் சின்னத்துடன்.
துணை
  • அமனௌநெத்
  • வொஸ்ரெத்
  • மூத்
குழந்தைகள்கோன்சு

பழைய எகிப்திய இராச்சியத்தில் அமூன் கடவுள், தனது மனைவியான அமனௌநெத்துடன் அறியப்படுகிறார். கிமு 21-ஆம் நூற்றாண்டின் எகிப்தின் பதினொன்றாம் வம்ச ஆட்சிக் காலத்தில், அமூன் கடவுள் தீபை நகரத்தின் காவல் தெய்வமாக வழிப்படப்பட்டார்.

கிமு 1650-இல் தீபை நகரத்தை ஆண்ட வெளிநாட்டு மன்னர் மெசொப்பொத்தேமியாவின் ஐக்சோஸ் வம்சத்தினருக்கு எதிரான புரட்சிக்குப் பின்னர், தீபை நகராத்தை ஆண்ட முதலாம் அக்மோஸ் எனும் எகிப்திய பார்வோன் ஆட்சிக் காலத்தில் அமூன் தெய்வம் பண்டைய எகிப்தின் தேசிய முக்கியத்துவமான கடவுளானார். மேலும் இரா எனும் சூரியக் கடவுளுடன் அமூன் கடவுளை இணைத்து அமூன்-ரா எனும் புதிய கடவுள் வழிபாடு தொடங்கியது.

புது எகிப்திய இராச்சியத்தில், எகிப்தின் பல கடவுள் வணக்க முறையில் அமூன் - இரா இணைந்த கடவுள் வழிபாடு சிறந்து விளங்கியது. (அக்கெனதென் நிறுவிய அதின் வழிபாடு தவிர்த்து) கிமு 16 - 11-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பண்டைய எகிப்தில் சுயம்புவாகத் தோன்றிய அமூன் - இரா கடவுள் வணக்க முறை செழித்தோங்கியது.பிரபஞ்சத்தின் படைப்புப் கடவுளான அமூன் - இரா வழிபாட்டை எகிப்தியர்கள் பயபக்தியுடன் மேற்கொண்டனர்.பண்டைய எகிப்தியக் கடவுள்களின் அரசன் எனும் புகழ் அமூன் கடவுளுக்கு கிடைத்தது. எகிப்தின் போர்க் கடவுளான ஓரசுவுடன், அமூன் - இரா கடவுள் ஒப்பிடப்படுகிறார்.

எகிப்தியப் பேரரசின் கடவுளான அமூன் - இராவை, எகிப்தியர் அல்லாத, நூபியா, குஷ் இராச்சியத்தினர் மற்றும் மெசொப்பொத்தேமியாவின் மன்னர்களும், மக்களும் வேறு பெயர்களில் வழிபட்டனர். கிரேக்கத்தில் சியுசு எனும் பெயரில் வழிபட்டனர்.

துவக்க வரலாறு

அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம் 
அமூன் மற்றும் மூத் (பெண் தெய்வம்) கடவுள்களின் சிற்பங்களுக்கு வலது ஓரத்தில் இரண்டாம் இரமசேசின் சிற்பம்

பழைய எகிப்திய பிரமிடு நூல்களில் கடவுள் அமூன் மற்றும் அவரது துணைவி அமௌநெத் கடவுள்களைக் குறிப்புகள் உள்ளது. பண்டைய எகிப்திய மொழியில் அமூன் என்பதற்கு அறியப்படாதவர் என்று பொருளாகும். எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் முடிவில், பதினொன்றாம் வம்ச ஆட்சியின் போது தீபை நகர மக்களின் குல தெய்வமாக கடவுள் அமூன் கடவுள் வழிபடப்பட்டார். தீபை நகரத்தின் காவல் தெய்வமான அமூன் கடவுளின் மனைவியாக மூத் எனும் பெண் தெய்வமும், இத்தம்பதியர் குழந்தையாக சந்திரக் கடவுளாக கோன்சு கடவுள் அறியப்பட்டார்.

கர்னாக் கோயில்

கிமு இருபதாம் நூற்றாண்டு முதல் தீபை நகரத்தின் காவல் தெய்வமாக அமூன் கடவுளுக்கு, முதலாம் செனுஸ்ரெத் ஆட்சியில், கர்னாக் எனுமிடத்தில் சூரியக் கடவுளான இராவுடன் கோயில் கட்டினர். புது எகிப்திய இராச்சியத்தின், எகிப்தின் பதினெட்டாம் வம்ச ஆட்சியின் போது, தலைநகரான தீபை நகரத்தில், அமூன் - இரா கடவுள்களுக்கு பெரிய அளவிலான கோயில்கள் எழுப்பட்டது. எகிப்திய பார்வோன்களான முதலாம் சேத்தி மற்றும் இரண்டாம் ராமேசஸ் ஆட்சிக் காலங்களில், கர்னாக் நகரத்தில், அமூன் கடவுளுக்கு பெரிய மண்டபத்துடன் கூடிய கோயில் நிறுவப்பட்டது.

அக்கோயில் வளாகத்தின் சுவர்களில், எகிப்திய பார்வோன் மெரன்பதே, கடல் மக்களை வெற்றி கொண்ட செய்திகளை பதிவு செய்துள்ளார். மெரெனப்தேவின் மகன் இரண்டாம் சேத்தி, இவ்வளாகத்தில் அமூன், மூத் மற்றும் கொன்சு கடவுளர்களின் சிற்பங்களை வடித்துள்ளான்.

புது எகிப்திய இராச்சியம்

அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம் 
எகிப்திய பார்வோன் தோற்றத்தில் அமூன் கடவுள்

மின் மற்றும் இராவுடனான அமூன் கடவுளின் தொடர்புகள்

அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம் 
அமூன் கடவுளை அமூன் - இரா கடவுளாக காட்சிப்படுத்துதல்

எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தை நிறுவிய முதலாம் அக்மோஸ், எகிப்தை ஆண்ட வெளிநாட்டு மன்னராக ஹைக்சோசை தீபை நகரத்திலிருந்து விரட்டியடித்து, புது எகிப்திய இராச்சியத்தை நிறுவினார். அதன் பின் தீபை நகரத்தின் காவல் தெய்வமாக இருந்த அமூன் கடவுள், எகிப்தின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கடவுளாக வழிப்படப்பட்டார்.

புது எகிப்திய இராச்சிய ஆட்சியாளர்களின் அக்கெனதென் தவிர பிற அனைவரும் அமூன் கடவுளுக்கு எகிப்து முழுவதும் கோயில்கள் எழுப்பினர்.ஆனால் பார்வோன் அக்கெனதென் மட்டும் தன் இஷ்ட தெய்வமான அதின் எனும் கதிரவக் கதிர் தெய்வத்திற்கு மட்டும் பல கோயில்கள் எழுப்பினார். அக்கெனதெனின் இறப்பிற்குப் பின்னர் அதின் வழிபாடு எகிப்தில் முற்றிலும் மறைந்தது.

அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம் 
அமூன் - மின் கடவுளாக சித்திரிக்கப்படும் அமூன் கடவுள்

மெசொப்பொத்தேமியாவின் ஐக்சோஸ் வம்சத்தவர்கள் எகிப்தை கைப்பற்றி ஆண்டனர். எகிப்திலிருந்து இந்த வெளிநாட்டவர்களை, எகிப்தியபார்வோன்கள் அமூன் கடவுளின் ஆசியுடன் வெற்றி கொண்டதாக கருதினர்.

அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம் 
அமூன் - இரா மற்றும் மூத் கடவுளர்கள்
அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம் 
ஆட்டுத் தலையுடன், சிங்க உடலுடன் ஸ்பிங்க்ஸ், கர்னாக் கோயில்

எகிப்தியர்கள் குஷ் இராச்சியத்தின் மீது படையெடுத்து கைப்பற்றிய போது, அங்கு குஷ் மக்களின் கடவுளான அமூன், தலைமைக் கடவுளராக வழிபட்டதை எகிப்தியர்கள் கண்டனர். குஷ் இராச்சியத்தில் அமூன் கடவுள் ஆட்டுத் தலை மற்றும் கொம்புகளுடன் கூடிய சிங்க உடல் உருவத்தில் வழிபட்டனர். பழைய எகிப்திய இராச்சியத்தினர் போன்று நூபியாவின் கேர்மா பண்பாட்டுக் காலத்தின் போது சூரியக் கடவுளான அமூனை வழிபட்டனர். எனவே ஆடு உருவம் வீரம் மற்றும் செழிமையின் அடையாளமாக எகிப்தியர்கள் அமூன் கடவுளை உருவகப்படுத்தினர்.

அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம் 
புது எகிப்திய இராச்சியத்தில் இரா - ஓரசு கடவுளர்கள் இணைந்த சிற்பம், இதில் இரா, அமூன் கடவுளாக சித்திரிக்கப்படுகிறார்

எகிப்தில் அமூன் கடவுளின் வழிபாட்டு மரபு பெருகியதுடன், எகிப்தியர்கள் அமூன் கடவுளை தலைமைக் கடவுளான சூரியக் கடவுள் இராவுடன் அடையாளப்படுத்தப்பட்டார். பின்னர் இரு கடவுளர்களை இணைத்து அமூன் - இரா கடவுளை உருவாக்கி எகிப்தியர்கள் வழிபட்டனர்.

அதின் கடவுள் வழிபாடு

அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம் 
அக்கெனதென் ஆட்சியில் பார்வோன் மூன்றாம் அமென்கோதேப் சிற்பத் தூணில் அமூன் கடவுள் உருவம் அழிக்கப்பட்டு, அதனிடத்தில் அதின் கடவுள் உருவம் பொறிக்கப்பட்டதை காணலாம்

எகிப்தின் பதினெட்டாம் வம்ச ஆட்சியின் இறுதிக் காலத்தில், எகிப்தை ஆண்ட பார்வோன் அக்கெனதென் ஆட்சியில், அமூன் மற்றும் இரா போன்ற அனைத்து கடவுளர்களின் வழிபாடு தடை செய்ததுடன், அதின் கடவுளை மட்டும் வழிபடும் கொள்கை எகிப்தில் கடைபிடிக்கப்பட்டது.

அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம் 
செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும் அமூனின் உருவம், அமர்னா காலத்திற்குப் பின்னர் நீலநிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டார்.

அக்கெனதேனின் மறைவிற்குப் பின்னர், அமூன் - இரா கடவுளரின் முந்தைய பூசாரிகளால் மீண்டும் அமூன் -இரா வழிபாடு எகிப்து முழுவதும் பரவியதுடன், அதின் கோயில்களை இடித்ததுடன், அதின் வழிபாடு எகிப்திலிருந்து நீக்கப்பட்டது. பார்வோன் துட்டன்காமன் அமூனின் வாழும் உருவமாக சித்தரிக்கப்பட்டார்.

எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்

தீபை நகர அமூன் கடவுளின் தலைமைப் பூசாரிகள்

எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது தீபை நகரத்தின் அமூன் கோயிலின் தலைமைப் பூசாரிகள் எகிப்து இராச்சியத்தை கைப்பற்றி கிமு 1080 முதல் 943 முடிய ஆண்டனர். அமூன் கோயில் பூசாரி ஆட்சியாளர் 11-ஆம் இரமேசேஸ் மூன்றில் இருபங்கு எகிப்தியக் கோவில்களையும், நிலங்களில் 90% விழுக்காட்டையும் கைப்பற்றினர்.தீபை நகரத்தின் அமூன் கோயிலின் தலைமைப் பூசாரி இரண்டாம் சுசென்னெஸ் தன்னை எகிப்தின் இருபத்தி ஒன்றாம் வம்ச பார்வோனாக முடிசூட்டிக் கொண்டார்.

அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம் 
மூன்றாம் இடைநிலைக் காலத்தில் பார்வோன் மூன்றாம் அமென்கோதேப் அமூன் கடவுளை, சூரியக் கடவுளான இராவுடன் இணைத்து நிறுவிய அமூன் - இரா எனும் புதிய தலைமைக் கடவுளின் சிற்பம்

அமூன் கடவுள் வழிபாட்டின் வீழ்ச்சி

கிமு பத்தாம் நூற்றாண்டில் அமூன் கடவுள் வழிபாடு எகிப்தில் வீழ்ச்சியடைந்தது. இருப்பினும் தீபை நகரத்திலும், நூபியா மற்றும் குஷ் இராச்சியங்களில் மட்டும் அமூன் வழிபாடு தொடர்ந்தது.

இரும்புக் காலம் மற்றும் பாரம்பரியக் காலத் தொல்பொருட்கள்

அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம் 
கர்னாக் கோயிலின் அமூன் கடவுளின் சிற்பம், கிமு 15-ஆம் நூற்றாண்டு

நூபியா

நூபியா வாழும் எகிப்தியர்கள் அமூன் கடவுள் வழிபாடு பாரம்பரியக் காலத்திலும் தொடர்ந்தனர். அமூன் பெயர் நூபியாவில் அமேனி என்ற பெயருடன் தேசியக் கடவுளாக்கப்பட்டார். இக்கடவுளின் தலைமைப் பூசாரிகள் மெரோயி மற்றும் நொபாட்டியா நகரங்களில் இருந்தனர். இப்பூசாரிகள் குறி சொல்வதும், இராச்சியத்தை ஆளுவது, படைகளை நடத்தும் தொழிலும் மேற்கொண்டனர். இப்பூசாரிகள் பார்வோன்களை தற்கொலைச் செய்யத் தூண்டும் மரபு கிமு மூன்றாம் நூற்றாண்டில் நிறுத்தப்பட்டது.

லெவண்ட்

எபிரேய பைபளில் அமூன் கடவுளைக் குறித்துள்ளது. மேலும் கிமு ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட எபிரேயத்தின் இரண்டாம் நூலான தீர்க்கதரிசிகள் நூலில் தீபை நகரச் செய்திகளை குறிப்பிடும் போது, அமூன் கடவுள் பற்றிய செய்திகளும் உள்ளது.

"சேனைகளின் கர்த்தர், இஸ்ரவேலின் தேவன், “இதோ, நான் தீபையின் அமூன் மீதும், பார்வோன், எகிப்து, தெய்வங்கள், அவளுடைய ராஜாக்கள், பார்வோன் மீதும், அவனை நம்புகிறவர்கள் மீதும் தண்டனை தருவேன்“ என்றார்.

எரேமியா 46:25 (KJV)
அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம் 
கிரேக்க சியுசு அமோன் கடவுள் சிற்பம், கீழ் நைல் ஆற்றின் சமவெளி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

அமூன்: துவக்க வரலாறு, கர்னாக் கோயில், புது எகிப்திய இராச்சியம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amun
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அமூன் துவக்க வரலாறுஅமூன் கர்னாக் கோயில்அமூன் புது எகிப்திய இராச்சியம்அமூன் எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்அமூன் இரும்புக் காலம் மற்றும் பாரம்பரியக் காலத் தொல்பொருட்கள்அமூன் இதனையும் காண்கஅமூன் மேற்கோள்கள்அமூன் உசாத்துணைஅமூன் மேலும் படிக்கஅமூன் வெளி இணைப்புகள்அமூன்கோன்சுபண்டைய எகிப்தியக் கடவுள்கள்பண்டைய கிரேக்கம்மூத் (எகிப்தியக் கடவுள்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு சட்டப் பேரவைஔவையார் (சங்ககாலப் புலவர்)கருக்கலைப்புபஞ்சாயத்து ராஜ் சட்டம்கரகாட்டம்விருத்தாச்சலம்தமிழர்முத்துராஜாதிருவாசகம்பாலை (திணை)சுரைக்காய்நேச நாயனார்ஏ. வி. எம். ராஜன்சிறுதானியம்கண்டேன் காதலைஆய்த எழுத்துசோழர்கால்-கை வலிப்புகுறுந்தொகைரமலான் நோன்புவிஸ்வகர்மா (சாதி)போயர்யோகம் (பஞ்சாங்கம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்டொயோட்டாஇசுலாத்தின் ஐந்து தூண்கள்திருப்பதி வெங்கடாசலபதி கோயில்கவுண்டமணிசீனாவிநாயகர் (பக்தித் தொடர்)விண்ணைத்தாண்டி வருவாயாஎன்டர் த டிராகன்கண்ணதாசன்நான் ஈ (திரைப்படம்)பூலித்தேவன்தமிழ்நாடு காவல்துறைபோகர்புங்கைமதராசபட்டினம் (திரைப்படம்)தோட்டம்வெந்து தணிந்தது காடுமெய்யெழுத்துவீணைகங்கைகொண்ட சோழபுரம்அகழ்ப்போர்நெகிழிவாலி (கவிஞர்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்இடமகல் கருப்பை அகப்படலம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்இராசேந்திர சோழன்கல்லணைஆழ்வார்கள்மாத்திரை (தமிழ் இலக்கணம்)மருந்துப்போலிஇந்திய மொழிகள்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மக்களவை (இந்தியா)முகம்மது நபிகுடமுழுக்குநாலாயிர திவ்வியப் பிரபந்தம்கோயம்புத்தூர்வீரப்பன்தபூக் போர்வரலாறுகிராம ஊராட்சிஉதயநிதி ஸ்டாலின்அறுசுவைஇராம நவமியானைகாடுவெட்டி குருசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைமுக்குலத்தோர்சுப்பிரமணிய பாரதிசீறாப் புராணம்🡆 More