அமீஷா பட்டேல்: இந்திய நடிகை

அமீஷா பட்டேல் (குசராத்தி: આમેશા પટેલ, இந்தி: अमीषा पटेल) (பிறப்பு: 1976 ஜூன் 9) பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகை ஆவார்.

இவர் கஹோ நா... பியார் ஹை (2000) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். காடர்: எக் பிரேம் கதா (2001) திரைப்படத்தில் அமீஷா அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். இத்திரைப்படம் இந்தி சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. மேலும் பிலிம்ஃபேரின் சிறந்த நடிப்பிற்கான விருதையும் அப்படத்திற்காக அமீஷா பெற்றார். அதற்குப்பின் பல திரைப்படங்களில் அமீஷா நடித்திருக்கிறார். அதில் பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியையே தழுவின. எனினும் 2006 ஆம் ஆண்டில் வெளியான அன்கஹீ திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சனரீதியாக அங்கீகாரத்தைப் பெற்றது. மேலும் அதைத் தொடர்ந்து அவர் வெற்றித்திரைப்படமான பூல் புலையா வில் (2007) துணைப்பாத்திரத்தில் நடித்தார்.

அமீஷா பட்டேல்
அமீஷா பட்டேல்: ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும், நடிப்பு வாழ்க்கை, இதரப் பணி
இயற் பெயர் அமீஷா பட்டேல்
பிறப்பு சூன் 9, 1976 (1976-06-09) (அகவை 47)
மும்பை , இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 2000 - இன்றுவரை

ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும்

அமீஷா, அமித் பட்டேல் மற்றும் ஆஷா பட்டேலின் மகள், ஆஷ்மித் பட்டேலின் சகோதரியும் பிரபல வழக்கறிஞரும் மும்பையின் காங்கிரஸ் பிரதேச செயற்குழுத் தலைவரும் அரசியல்வாதியுமான பாரிஸ்டெர் ரஜ்னி பட்டேலின் பேத்தியுமாவார். மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அமீஷா பிறந்தார், ஐந்து வயதில் இருந்து பரதநாட்டியக் கலைஞராக பயிற்சி பெற்றார். அமீஷாவின் பிறப்புப் பெயரானது அவரது தந்தையின் பெயரான அமித்தில் இருந்து முதல் மூன்று எழுத்துக்களையும், அவரது தாயின் பெயரான ஆஷாவின் கடைசி மூன்று எழுத்துக்களையும் ஒருங்கிணைத்து வைக்கப்பட்டதாகும்.

மெட்போர்ட், மசாசுசெட்ஸ்ஸில் உள்ள டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பயில வெளிநாடு செல்ல முன், மும்பையில் உள்ள கேத்ட்ரால் அண்ட் ஜான் கானன் உயர்நிலைப் பள்ளியில் அமீஷா கல்வி கற்றார். 1992-1993 கல்வியாண்டுக்கான தலைமைப் பெண்ணாகவும் இருந்தார்.

பட்டம் பெற்ற பிறகு பட்டேலின் தொழில்வாழ்க்கை கந்த்வாலா செக்யூரிட்டீஸ் லிமிட்டெடில் ஒரு பொருளாதார வல்லுநராக ஆரம்பித்தது, பிறகு மோர்கன் ஸ்டான்லியில் வேலைக்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் அந்த வாய்ப்பை அவர் ஏற்கவில்லை. இந்தியாவிற்கு திரும்பிய பிறகு பழைமை விரும்பிகளான அவரது பெற்றோர்களின் சம்மதம் பெற்று சத்யதேவ் துபேயின் திரையரங்குக் குழுவில் சேர்ந்து, தன்வீர் கான் இயக்கியிருந்த நீலம் (1999) எனத் தலைப்பிடப்பட்ட உருது மொழி நாடகத்தில் நடித்தது உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்தார். அதே நேரத்தில் அமீஷா பல்வேறு வணிகப் பிரச்சாரங்களின் மாடலிங்கில் தோன்றினார். பஜாஜ் சேவாஷ்ரம், ஃபேர் & லவ்லி, கேட்பரீஸ் ஜெய் லைம், ஃபெம், லக்ஸ் போன்ற ஏராளமான நன்கு அறியப்படும் இந்திய வாணிகச்சின்னங்களுக்கான வடிவழகியாக அமீஷா இடம் பெற்றார்.

நடிப்பு வாழ்க்கை

துவக்கமும் முன்னேற்றமும், 2000-2002

பட்டேலின் நடிப்புக்கான முதல் வாய்ப்பானது அவரது தந்தையின் பள்ளி நண்பர் ராகேஷ் ரோஷன் மூலமாக வந்தது. அவரது மகன் ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக கஹோ நா... பியார் ஹை (2000) படத்தில் நடிப்பதற்கு இந்த வாய்ப்பை பட்டேலுக்கு வழங்கினார். அமீஷா உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு விரைவிலேயே இந்த வாய்ப்பு வந்தது. ஆனால் அமெரிக்காவில் அவர் கல்வியைத் தொடர விரும்பியதால் அந்த வாய்ப்பை நிராகரித்தார். அதன்பிறகு கரீனா கபூர் அவரது பாத்திரத்திற்காக மாற்றப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாய் சில நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு கரீனா இத்திரைப்படத்தை விட்டு வெளியேறினார். இதனால் ஒரு குடும்ப மதிய விருந்தில் மீண்டும் ஒருமுறை அமீஷாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அமீஷா அதில் நடிக்க உடனடியாக ஒத்துக்கொண்டார். அப்படத்தில் அவர் காதலில் இருக்கும் உற்சாகமிக்க ஒருக் கல்லூரிப் பெண் பாத்திரத்தில் நடித்தார். அதில் சிக்கலான ஒரு நேரத்தில் அவரது காதலரை இழந்து மீண்டும் கண்டுபிடிக்கும் ஒரு அதிக பக்குவமான பாத்திரம் அமீஷாவுக்கு வழங்கப்பட்டு, அமீஷாவின் நடிப்புத்திறனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இத்திரைப்படம் பெருமளவில் வெற்றி பெற்றது. மேலும் இத்திரைப்படத்திற்காக அமீஷா பல விருது விழாக்களில் சிறந்த அறிமுகத்திற்கான விருதுகளை வென்றார்.

பட்டேலின் இரண்டாவது திரைப்படம், தெலுங்கு மொழி நாடகவகைத் திரைப்படமான பத்ரி ஆகும். இதில் அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இத்திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியை பெற்று இந்தியாவில் 120 மில்லியனுக்கும் அதிகமான வருவாயைப் பெற்றுத்தந்தது.

2001 ஆம் ஆண்டில் அனில் சர்மாவின் எல்லை தாண்டிய காதல்வகைத் திரைப்படமான காடர்: எக் பிரேம் கதா இல், சன்னி தியோலுடன் இணைந்து அமீஷா நடித்தார். கஹோ நா... பியார் ஹை வெளியாவதற்கு முன்பே இத்திரைப்படத்திற்காக திறமை கண்டறியும் சோதனைக்கு வந்த 500 பெண்களில் இருந்து திரை-சோதனை செய்யப்பட்ட 22 பெண்களுள் அமீஷா தேர்ந்தெடுக்கப்பட்டு வெகுநாட்களுக்கு முன்னரே இத்திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அமீஷா அவரது பாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு 12 மணி நேர திறமையைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் அதிக வருவாயைப் பெற்ற படமானது. அதே போல் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றியடைந்து இந்தியாவில் 973 மில்லியன் வருவாயை சம்பாதித்தது. 1947 ஆம் ஆண்டின் இந்திய-பாகிஸ்தான் சண்டையின் போது நடைபெறுவதாக இருந்த இத்திரைப்படத்தில், கலவரங்களில் தியோலின் வீட்டில் தஞ்சம் புகும் சக்கீனா என்ற இஸ்லாமியப் பெண்ணாகவும், பின்னர் அவர் மேல் காதல் கொள்வதாகவும் அமீஷா இதில் நடித்திருந்தார். இதில் அமீஷாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. மேலும் ஃபிலிம்பேரின் சிறப்பு நடிப்பு விருதையும் அவர் வென்றார். மேலும் பல்வேறு விருது விழாக்களில் சிறந்த நடிகை யாகப் பரிந்துரைக்கப்பட்டார். IndiaFM இன் தரன் ஆதர்ஷ் கருத்துக்கூறுகையில், "ஒரு திரைப்படத்தில் நடித்த முதிர்ச்சியைக் கொண்டு, நேர்த்தியுடன் கடினமான பாத்திரங்களைக் கையாளும் முழுத் திறமையை அமீஷா பட்டேல் பெற்றிருக்கிறார். ஒரு இயற்கையான நடிப்புடன் அவர் நடித்து முத்திரையைப் பதிக்குமாறு அமீஷா இப்பாத்திரத்தைப் பார்த்திருக்கிறார்" எனக் கூறினார். பாகிஸ்தான் எதிர்ப்பாளர்களின் அட்டூழியங்களை இத்திரைப்படம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த வெற்றிகளைத் தொடர்ந்து இவரது திரைப்படங்கள் தொடர்ந்து பாக்ஸ்-ஆபீஸில் தோல்வியடைந்தது. யே ஜிந்தகி கா சஃபர் (2001) திரைப்படத்தில் அவர் பிறந்த உடனே அவரது தாயாரால் கைவிடப்பட்ட ஒரு வெற்றிபெற்ற பாடகியாக நடித்தார்.

2002 ஆம் ஆண்டில் அமீஷாவின் நான்கு திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவின. ஆனால் அவரது கடைசி வெளியீடான ஹம்ரீஸ் திரைப்படமானது அந்த ஆண்டின் பெருமளவு வருவாயை சம்பாதித்த திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. மேலும் அவரது நடிப்பிற்காக அமீஷா ஃபிலிம்பேரின் சிறந்த நடிகை விருதுக்கான பரிந்துரையைப் பெற்றார். அமீஷா முதல் தடவையாக அப்பாஸ்-முஸ்டனின் மேரிட்டல் திரில்லரில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் அக்சய் கண்ணாவின் கேர்ல்பிரண்டான அமீஷா, பாபி தியோலின் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காக அவரைத் திருமணம் செய்கிறார். ஆனால் பாபியின் நேர்மையைப் பார்க்கும் அவரது பாத்திரம் அவரிடம் சரணடைந்து விடுகிறது. தரன் ஆதர்ஷ் இதைப்பற்றிக் கருத்துரைக்கையில், "அக்சயின் காதலியாக (முதல் பகுதி) அமீஷா பட்டேல் சுமாராக நடித்திருந்தார். ஆனால் பாபியின் மனைவியாக (இரண்டாம் பகுதி) மிகவும் சிறப்புடன் நடித்துள்ளார். இதில் அவரது நடிப்பானது கண்டிப்பாக அமீஷாவைக் குறைகூறுபவர்களை அமைதிப்படுத்தும். மேலும் வியக்கத்தக்க திறமைகள் மற்றும் முழு நிறைவான அலங்காரத்துடன் அவர் சிறப்புடன் காணப்பட்டார்" எனக் கூறினார்.

தொழில் வாழ்க்கைத் தோல்வி, 2003-2006

2003 முதல் 2006 வரை பட்டேலின் நடிப்பு வாழ்க்கை தோல்வியைச் சந்தித்தது. ஹரஸ் திரைப்படம் சுமாராக ஓடியதை அடுத்து அமீஷாவின் வெற்றியடையாதத் திரைப்படங்களின் வரிசையானது 2006 வரைத் தொடர்ந்தது. எனினும் கியா யெஹி பியார் ஹை திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது. இதில் திரைப்படத்தின் ஹீரோவின் முன்கொணர்தல்களைத் தவிர்க்கும் ஒரு தொழில்வாழ்க்கை-சார்ந்த இளம்பெண்ணாக அவர் நடித்திருந்தார். ஆப் முஜே அச்சா லக்னே லகே வில், அவரது சொந்தத் தந்தையின் பாதுகாப்பளிக்கும் கடுமையான கவனிப்பில் இருக்கும் சப்னா என்ற பாத்திரத்தில் அமீஷா நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இரண்டாவது முறையாக ரித்திக் ரோஷனின் ஜோடியாக அமீஷா நடித்திருந்தார். அவர்கள் ஜோடியாக நடித்த வெற்றி பெற்றத் திரைப்படமான கஹோ நா... பியார் ஹை போலல்லாமல் இத்திரைப்படம் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. மேலும் விமர்சன மற்றும் வணிகரீதியாகவும் தோல்வியைத் தழுவியது. ஊடகங்கள் இத்திரைப்படத்தில் அமீஷாவின் நடிப்பை எதிர்மறையாக விமர்சித்தனர். ஆனால் ஒரு நேர்காணலில் அது பற்றித் தெளிவுபடுத்திய அமீஷா, அத்திரைப்படத்தில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது. அதில் அவரது பாத்திரம் காசநோயாளியாக இருப்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு காட்சி திருத்தியமைக்கப்பட்டதால் இவ்வளவு பெரிய விளைவு ஏற்படும் என அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதனால் அவர் மூச்சிரைப்புடன் தோன்றும் போது பார்வையாளர்களுக்கு அது மிகைப்படுத்தப்பட்ட நடிப்பாகவோ அல்லது அழுவதைப் போன்றோ தோன்றியுள்ளது என்று கூறினார்.

அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டில் வெளியான கிராந்தி மற்றும் டேவிட் தவனின் நகைச்சுவைத் திரைப்படமான யே ஹை ஜல்வாவுடன் பட்டேலின் வெற்றியடையாதத் திரைப்படங்களின் வரிசை தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டில் அவரது முதல் தமிழ் திரைப்படமான புதிய கீதை மற்றும் தீபக் பாஹ்ரேயின் பர்வானாவும் தோல்வியடைந்தன. 2004 ஆம் ஆண்டில் அவரது வெளியீடுகளான 2000 ஆம் ஆண்டில் இருந்து தயாரிப்பு தாமதமாகிக் கொண்டிருந்த விமல் குமாரின் நகைச்சுவைத் திரைப்படம் சுனோ சசூர்ஜீ மற்றும் அவரது தெலுங்கு மொழித்திரைப்படம் நானியும் தோல்வியடைந்தன. மேலும் அந்த ஆண்டு அட்நன் சாமி மூலமாக "கசம்" அண்ட் "கசம் (அன்பிலக்குடு)" இசை வீடியோவில் அமீஷா நடித்தார்.

2005 ஆம் ஆண்டில் சதீஷ் கவுசிக்கின் திகில் திரைப்படமான வாடாவில் அமீஷா நடித்தார். இதில் அவரது பித்துபிடித்த முன்னாள் காதலர் அவரைத் தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதால் அவரது கணவன் அர்ஜூன் ராம்பாலின் சந்தேகத்துக்குரிய மனைவியாக நடித்தார். அவரது அடுத்த வெளியீடான ஏலானில் டிவி செய்தியாளர் பாத்திரத்தில் அமீஷா நடித்தார். பிறகு அவர் கேட்டன் மேத்தாவின் வரலாற்று நாடகவகைத் திரைப்படம் மங்கல் பாண்டே: த ரைசிங் இல் அமீஷா ஒரு ஆங்கிலேய ஆணை அதிகாரியால் திருமணம் செய்து காப்பாற்றப்பட்டு பின்னர் விதவையான ஒரு பெங்காலியான ஜ்வாலா என்ற பாத்திரத்தில் நடித்தார். 2003 ஆம் ஆண்டில் BBC யில் நடந்த க்வெஸ்டீன் டைம் இந்தியா நிகழ்ச்சியில் அமீஷாவின் IQ நிலையில் தாக்கம் ஏற்பட்ட அமீர்கான், அந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருந்த பாத்திரத்தில் அமீஷாவைப் பரிந்துரைத்தார். அத்திரைப்படத்தில் அவர் முதல் தடவையாக எந்த அலங்காரமும் இல்லாமல் தோன்றினார். அத்திரைப்படம் பெரிய வருவாயை அளித்த போதிலும் ஒரு சராசரியான வணிகத்தையே கொண்டிருந்தது. 2001 ஆம் ஆண்டில் இருந்து தயாரிப்பில் இருந்த ஜமீர் த ஃபயர் வித்தின் மற்றும் தெலுங்கு திரைப்படமான நரசிம்மஹூடு இரண்டும் அந்த ஆண்டில் வெளியான அவரது பிற திரைப்படங்களாகும். இரண்டுமே வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் தோல்வியைத் தழுவின.

2006 ஆம் ஆண்டில் ஆறு திரைப்படங்களில் அமீஷா நடித்தார் அனைத்துமே வணிகரீதியாக தோல்வியைத் தழுவின. 2003 ஆம் ஆண்டில் இருந்து தாமதமாகி வந்த தயாரிப்பான மேரே ஜீவன் சாதியில் அவர் நடித்திருந்தார். 2002 ஆம் ஆண்டில் இருந்து தயாரிப்புத் தாமதமாகி வந்த மற்றொரு திரைப்படமான ஹம்கோ தும்சே பியார் ஹையில் ஒரு கண் தெரியாத பெண்ணாக நடித்தார். இத்திரைப்படம் மிகவும் சிறிது இடங்களிலேயே வெளியிடப்பட்டு "பழமையானது" என சில விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டதால் மிகவும் மோசமாக தோல்வியடைந்தது. டீஸ்ரி ஆங்க்: த ஹிட்டன் கேமரா" படத்தில் ஒரு கொலைக்கு சாட்சியான ஊமைப் பெண் பாத்திரத்தில் அமீஷா நடித்தார். இந்த பாத்திரத்தில் நடிப்பதற்காக சைகை மொழியை அவர் பழகினார். அடுத்து டேன்சில் வாசிங்டனின் திகில்படமான ஜான் க்யூ வை (2002) அடிப்படையாக் கொண்டு தத்தஸ்டு என்ற திரைப்படத்தில் அமீஷா நடித்தார். ஒரு உதவியற்ற தாயாக சித்தரிக்கப்பட்ட அவரது நடிப்பு இதில் பாராட்டப்படவில்லை.

மீண்டும் வெற்றி, 2006-இன்றுவரை

2006 ஆம் ஆண்டில் அமீஷாவின் ஐந்தாவது வெளியீடான ஆன்காஹீ திரைப்படம், வசூலில் தோல்வியடைந்திருந்தாலும் விமர்சன ரீதியாக அமீஷா பாராட்டப்பட்டார். இத்திரைப்படத்தில் மனைவி பாத்திரத்தில் அமீஷா நடித்திருப்பதுடன் ஒரு தகாத உறவையும் இத்திரைப்படம் மையப்படுத்தி இருந்தது. அதில் அவரது கணவர் ஒரு மாடலுடன் சேர்ந்து அவரை ஏமாற்றுவதாகக் கதை அமைக்கப்பட்டு இருந்தது. தவறாக நடத்தப்படும் மனைவியின் மனப்பாங்கைப் புரிந்து கொள்வதற்கு அதே போன்ற நிலைமையைக் கடந்து வந்திருந்த அவரது சொந்த பாட்டியிடம் அமீஷா பேசுகிறார். இந்துஸ்தான் டைம்ஸில் இருந்து திக்கண்டா குஹா கூறுகையில் "...இதில் அமீஷாவின் நடிப்பு உங்கள் மனதில் எஞ்சியிருக்கும். இத்திரைப்படத்தில் அவரது தகுதி அவதாரம் எடுத்துள்ளது. திருமணத்தில் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு பெண் அதைக் காப்பாற்ற அனைத்து விதங்களிலும் முயற்சிக்கிறார். இறுதியில் அவரது சொந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்" எனக் கருத்துக் கூறினார். அந்த ஆண்டிற்குப் பிறகு அக்சய் கண்ணா மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து தர்மேஷ் தர்ஷனின் ஆப் கி காதிரில் நடித்தார்.

2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆண்டு வரையிலான தொடர் தோல்விப் படங்களுக்குப் பிறகு ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ஓரளவு வெற்றியை அடைந்த போது 2007 ஆம் ஆண்டில் அமிஷாவின் தொழில்வாழ்க்கை முன்னேற்றம் அடையத் தொடங்கியது. இதில் கரன் கண்ணாவின் வெளிப்படையாகப் பேசும் மனைவியாக, அவரது கணவரின் களிப்புடன் இருக்கும் மனப்பாங்கை தோற்கடிக்க முயற்சிக்கும் பாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் அமீஷாவின் நகைச்சுவை, நன்கு பாராட்டப்பட்டது. பிறகு பிரியதர்ஷனின் வெற்றித் திரைப்படமான பூல் புலய்யாவில் அக்சய் குமாருடன் இணைந்து துணைநட்சத்திரமாக நடித்தார். இதில் ஒரு தத்து எடுக்கப்பட்ட பெண்ணாக அவரது சிறுவயது தோல்வியால் திருமணத்தை நிறுத்த முயற்சிக்கும் குற்றத்தை செய்பவராக இதில் நடித்தார்.

அவரது புகழை மீட்கும் முயற்சியாக குனால் கோஹ்லியின் தோடா பியார் தோடா மேஜிக் (2008) திரைப்படத்தில் ஐட்டம் நம்பர் பாடலிலும் லேசி லம்ஹே வில் நீச்சலுடையிலும் அமீஷா நடித்தார். அந்தப் பாடலிற்காக அமீஷா ஸ்கூபா டைவிங் கற்றார். இது முழுமை பெற பதினைந்து நாட்கள் ஆனது. எனினும் இத்திரைப்படம் வசூலில் தோல்வியடைந்தது. எனினும் அமீஷா அதில் நன்கு கவனிக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கோவிந்தா மற்றும் துஷார் கபூருடன்ரன் போலா ரன் மற்றும் சஞ்சய் தத்துடன் சட்டூர் சிங் டூ ஸ்டாரில் நடிப்பது உள்ளிட்ட இரு திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரத்தில் 2010 ஆம் ஆண்டில் அமீஷா நடிக்கவிருக்கிறார்.

இதரப் பணி

அரங்கப் பங்களிப்புகள்

அமீஷா அவரது தொழில் வாழ்க்கையின் போது பல நிகழ்ச்சிகள் மற்றும் உலகச் சுற்றுலாக்களில் பங்கேற்றுள்ளார். த ரோஷன்ஸ்: ரித்திக் லைவ் இன் கான்செர்ட் (2001) அவரது முதல் உலகச் சுற்றுலா ஆகும். அதில் இந்தியா முழுவதும் ரித்திக் ரோஷனுடன் இணைந்து பங்கேற்றார். 2004 ஆம் ஆண்டில் ரித்திக் ரோஷன், சைப் அலிகான் மற்றும் லாரா தத்தாவுடன் இணைந்து கிரேஸ் 2004 என்ற உலகச் சுற்றுலாத் தொடர் நிகழ்ச்சியில் அமீஷாவும் பங்குபெற்றார். 2005 ஆம் ஆண்டில் அட்நன் சாமியின் குச் தில் சே… உலகச் சுற்றுலாவில் அமீஷா பங்கேற்றார். இந்நிகழ்ச்சி ஏப்ரல் 15 முதல் மே 15 வரை அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் நடந்தது. 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் ஹிமேஷ் ரெஷ்மியாவின் மறுபிரவேச நிகழ்ச்சியான கர்ட்ஸ்ஸ்ஸில் அமீஷா பங்கேற்றார். அதில் நேஹா தூபியா, ரியா சென் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டு டிசம்பரில் அக்சய் குமாரின் திரைப்படம் சாந்தினி சவுக் டூ சைனா விற்காக (2009) விளம்பர ஊக்குவிப்பின் ஒரு பகுதியாக பிபாஷா பாசு, பிரியங்கா சோப்ரா, ரியா சென், ஆர்த்தி சப்ரியா, ஹிமேஷ் ரெஷ்மியா மற்றும் பஞ்சாபி ராப்பர் போஹேமி ஆகியோருடன் இணைந்து அக்சய் குமாரின் கிறிஸ்துமஸுக்கு முந்தைய தின நிகழ்ச்சியான சாந்தினி சவுக் டூ ஹாங் கில் அமீஷா பங்கேற்றார். 26/11 இன் எதிரொலியாக 2009 ஆம் ஆண்டுக்கான, புத்தாண்டுக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள் பல இரத்து செய்யப்பட்டன. ஆனால் அமீஷாவும் கண்ட்ரி கிளப் இந்தியாவும் அவர்களது நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த திட்டமிட்டனர். ஏனெனில் இது தீவிரவாதிகளின் நோக்கத்திற்கு எதிராக அமையும் என அவர்கள் எண்ணினர்.

மனிதாபிமான பணி

2004 ஆம் ஆண்டு செப்டம்பரில் விலங்குகளின் பாதுகாப்புக்காகப் பணியாற்றும் அமைப்புகளில் ஒன்றான PETA இல் அமீஷா சேர்ந்தார். பிறரின் பொழுதுபோக்கிற்காக விலங்களின் இயற்கையான சூழலை கொள்ளையடித்து மிருகக்காட்சி சாலையில் அடிமைப்படுத்தி வைத்திருப்பவர்களை வெளிச்சமிட்டு காட்டும் விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமீஷாவும் பங்கேற்றிருந்தார். மிருகக்காட்சி சாலைகளில் விலங்குகளின் அவலநிலையை மையப்படுத்தும் பிரச்சாரமாக அமீஷா ஒரு சிறையறையில் அச்சத்தால் செயலற்று இருக்கும் கைதியைப் போல் போஸ் கொடுத்திருந்தார்.

2005 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மற்ற பாலிவுட் நட்சத்திரங்களுடன் ஹெல்ப்! டெலிதோன் நிகழ்ச்சி யில் 2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணம் திரட்டுவதற்காக அமீஷாவும் பங்கேற்றார். 24 டிசம்பர் 2005 அன்று புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கத்தில் நடந்த டெம்ப்டேசன் 2005 அறப்பணி நிகழ்ச்சியில் அமீஷாவும் பங்கேற்றார். ஒரு முன்னணி செயலிழந்தவர்களின் உரிமைகள் அமைப்பான (NCPEDP) செயலிழந்தவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கான தேசிய மையத்திற்கு உதவியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

2006 ஆம் ஆண்டு நவம்பரில் பிளானெட்ரீட் என அழைக்கப்படும் NGO இல் இணைந்தார். இது திரைப்படப் பாடல்கள் மூலமாக கிராம மக்களுக்கு படிக்கச் சொல்லிக்கொடுக்க உதவும் அமைப்பாகும். 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் மனித நெரிசலைத் தடுப்பதற்காக ஜான் ஆபிரஹாம் மற்றும் கிரோன் கெர் ஆகியோருடன் இணைந்து அமீஷாவும் 'போதை மருந்துகள் மற்றும் குற்றங்களின் மீதான ஒருங்கிணைந்த தேசிய அலுவலகத்தில்' (UNODC) சேர்ந்தார்.

சொந்த வாழ்க்கை

1999 ஆம் ஆண்டில் அமீஷா இயக்குனரான விக்ரம் பட்டை அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணிபுரியும் முதல் திரைப்படமான ஆப் முஜே அச்சி லக்னே லகி இல் (2002) சந்தித்தார். இருவரும் திரைப்படம் வெளியானதில் இருந்து டேட்டிங் செய்யத் தொடங்கினர். பின்னர் அமீஷா கடினமாக சம்பாதித்த பணத்தை அவர்களது பெற்றோர்கள் அவர்களது சொந்த மனநிறைவுக்காக பயன்படுத்தியதால் அமீஷாவிற்கும் அவரது பெற்றோருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அமீஷா நிதிநெருக்கடியில் இருந்த காரணத்தால் அமீஷா மற்றும் விக்ரம் பட் குடும்பங்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டது. 2004 ஆம் ஆண்டு ஜூலையில் அமீஷா அவரது 120 மில்லியன் மதிப்புள்ள அவரது கணக்குகள் மற்றும் சொத்துகளை அவரது தந்தை தவறாக நிர்வகித்ததற்காக அந்தப் பணத்தை திரும்ப ஒப்படைக்கக் கோரி அவருக்கு சட்டரீதியான மனுவை அனுப்பினார். விக்ரம் பட்டுடன் பட்டேலின் உறவு, திருமணத்தில் முடியலாம் என ஊடகங்கள் அடிக்கடி கிசுகிசுத்தன.

2008 ஆம் ஆண்டு ஜனவரியில் அமீஷா மற்றும் விக்ரம் பட் இருவரும் அவர்களது ஐந்து ஆண்டு கால உறவைத் துண்டித்துக் கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. மிட்-டே யுடன் ஒரு கலந்துரையாடலில் அவர்களது இந்தப் பிளவை விக்ரம் பட் உறுதி செய்தார். அதற்குப் பிறகு விரைவில் அமீஷாவின் பெற்றோர்கள் அவரது மகளுடன் ஒத்துப்போவதற்கு அவர்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் "இந்தப் பிளவைப் பற்றி அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்". ஆனால் அவர்களது உறவு மனதிற்கு ஒவ்வாத முறையிலே எஞ்சியுள்ளது எனத் தெரிவித்தனர். 12 மார்ச் 2008 அன்று வில்ஸ் லைப்ஸ்டைல் பேசன் வீக்கில் லண்டனைச் சார்ந்த தொழிலதிபர் கனவ் பூரியுடன் அமீஷா இருந்தார். 2008 ஆம் ஆண்டு ஜூனில் மிட்-டே உடன் ஒரு நேர்காணலில் அவர்களது உறவை அமீஷா உறுதி படுத்தினார். "விரைவிலேயே நான் கனவ்வை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏனெனில் அவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அவருக்கு நான் அவப்பெயர் ஏற்படுத்த விரும்பவில்லை. மக்களிடம் இதைப் பற்றி நான் பேசுவது எனக்கு மிகவும் கெளரவமாக உள்ளது. இப்போது பெரும்பாலும் ஆறு மாதங்கள் சென்று விட்டன. நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். மேலும் நான் எங்களுடைய உறவுமுறை வலிமையடைந்திருப்பதை உணர்கிறேன். எதற்காகவும் அல்லது யாராலும் எங்களுக்கு இடையில் நுழைய முடியாது" எனக் கூறினார். ஒருமுறை கனவ்வுடன் அமீஷா திருமணம் செய்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் அந்தப் புரளிகளை அமீஷா மறுத்துவிட்டார்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் மும்பை மிர்ரர் தகவல் தெரிவிக்கையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரக்சா பந்தன் நிகழ்ச்சிக்கு அமீஷா மற்றும் அவரது சகோதரரான ஆஷ்மித் இருவரும் இணைந்ததாகவும், ஜுஹுவில் உள்ள PVR சினிமாஸில் இருவரும் ஒன்றாக இருந்ததாகவும் வெளியிட்டிருந்தது. அவர்கள் இருவரும் அதனை ஒத்துக்கொண்டனர். ஊடகங்களுக்கு இது பற்றி பேச வேண்டாமென விரும்பியதாகத் தெரிவித்தனர்.

சர்ச்சை

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஒரு ஏர் இந்தியா பணியாளர் ஒருவர் காவல் துறையிடம் அமீஷா குறிந்து புகார் செய்தார். அதில் ஆகஸ்ட் 18 அன்று மும்பை-நியூஆர்க் விமானத்தில் அமீஷாவின் நண்பருக்கு முதல் வகுப்பிற்கு இருக்கையை மாற்றித்தராத காரணத்தால் அவரது நண்பரிடம் அமீஷா தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அப்போது இந்தியாவின் சுதந்திரதின அணிவகுப்பில் கலந்து கொள்ள அமீஷா நியூயார்க் சென்று கொண்டிருந்தார். அதனால் அவரது இந்த நடத்தை குறித்து அவரை அழைத்து எச்சரிக்கை செய்யமுடியவில்லை என காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அவரின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமீஷா வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு அதற்காக வினவப்படுவார் எனத் தெரிவித்தனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் ஏர் இந்தியா பணியாளர்களுக்கு ஆதரவாக CISF அலுவலர் ஒருவரும் உறுதிபடுத்தினார். பணியாளர்கள் "அவர்கள் மேல் தவறான புகாரை கொடுத்ததால் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள மட்டுமே நினைக்கின்றனர்" என இந்தியா திரும்பிய பிறகு அமீஷா கூறினார். தற்செயலாய் குடிபோதையில் இருந்த ஒரு பயணியும் இந்த வாய்ச்சண்டையில் கலந்து கொண்டிருந்தார். அதன் பிறகு அந்த ஆண்டின் அணிவகுப்பின் நிர்வாகிகள் பட்டேலுக்கு ஒரு மன்னிப்புக் கடிதமும் விளக்கவுரையும் அனுப்பினர். அதில் அமீஷா மற்றும் அவரது நண்பருக்கு மும்பை-நியூஆர்க் விமானத்தில் இரு முதல் வகுப்பு இருக்கைகள் முன்பதிவு செய்திருந்ததாகவும். ஆனால் குழப்பம் ஏற்படுத்தும் விதமாக தானாகவே அந்த முன்பதிவு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என அதில் தெரிவித்திருந்தனர்.

ஊடகங்களில்

2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையில் ரெண்டிஸ்வியஸ் வித் சிமி கார்வல் மற்றும் த மனிஷ் மல்கோத்ரா ஷோ போன்ற பல உரையாடல் நிகழ்ச்சிகளில் அமீஷா பங்கேற்றார். 2006 ஆம் ஆண்டில் தனித்திறமை போட்டியான இந்தியன் ஐடல் 2 இன் சிறப்பு காதலர் தின எபிசோடில் கெளரவ நடுவராக அமீஷா பங்கேற்றார்.

அமீஷா கவர்ச்சியான பாலிவுட் நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து கவனிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டில் பாலிவுட்டின் கவர்ச்சியான நடிகைகளில் ஒருவராகவும், சிறந்த பாலிவுட் நடிகைகளில் ஒருவராகவும் அமீஷாவைத் தேர்ந்தெடுத்து ரெட்டிஃப் நிறுவனம் அவரை கெளரவப்படுத்தியது. ரெட்டிஃப்பின் 2008க்கான கவர்ச்சியான நடிகைகள் பட்டியலில் அமீஷா முதலிடம் பிடித்திருந்தார். மேலும் 2008 ஆம் ஆண்டின் கவர்ச்சியான பத்திரிகை மேலட்டைப் பெண்களில் ஒருவராகவும் ரெட்டிஃப் நிறுவனத்தினால் அமீஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரைப்பட விவரங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2000 கஹோ நா... பியார் ஹை சோனியா சக்ஸேனா பரிந்துரைக்கப்பட்டது, பிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகை விருது
பத்ரி சரயூ தெலுங்குத் திரைப்படம்
2001 காடார்: எக் பிரேம் கதா சக்கேனா பிலிம்பேரின் சிறந்த நடிப்பிற்கான விருது.
பிலிம்ஃபேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
யே ஜிந்தகி கா சஃபர் சரேனா தேவன்
2002 க்ராண்தி சஞ்சனா ராய்
கியா எகி பியார் ஹே சந்தியா பட்டேல்
ஆப் முஜே அச்சே லக்னே லகே சப்னா
யே ஹை ஜல்வா சோனியா சிங்
ஹம்ரஸ் பிரியா பிலிம்ஃபேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
2003 புதிய கீதை ஜோ தமிழ் திரைப்படம்
பர்வானா பூஜா
2004 சுனோ சசுர்ஜீ கிரண் சக்ஸேனா
ஷார்ட்: த சேலஞ்ச் அமீஷாவாகவே சிறப்புத் தோற்றம்
நானி பிரியா தெலுங்கு திரைப்படம்
2005 வாதா பூஜா
எலான் பிரியா
ஜமீர்: த ஃபயர் வித்தின் பூஜா
நரசிம்ஹுடு சுப்ப லக்ஷ்மி தெலுங்குத் திரைப்படம்
மங்கல் பாண்டே: த ரைசிங் ஜவாலா
2006 மேரே ஜீவன் சாதி அஞ்சலி
ஹம்கோ தும்ஸே ப்யார் ஹை துர்கா
டீஸ்ரி ஆங்க்: த ஹிட்டன் கேமரா அம்மு
தத்தஸ்டு சரிதா
அன்கஹீ நந்திதா சக்ஸேனா
ஆப் கி காதிர் ஷிரானி கன்னா
2007 ஹனிமூன் ட்ராவல்ஸ் பிரைவேட் லிமிடெட். பிங்கி கபூர்
ஹேய் பேபி தலைப்புப் பாடலில் சிறப்புத் தோற்றம்
பூல் புலையா ராதா
ஓம் சாந்தி ஓம் அவராகவே சிறப்புத் தோற்றம்
2008 தோடா ப்யார் தோடா மேஜிக் மல்லிகா கேமியோ
2010 ரன் போலா ரன் தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது
சட்டூர் சிங் டூ ஸ்டார் சோனியா தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது

குறிப்புகள்

கூடுதல் வாசிப்பு

புற இணைப்புகள்

Tags:

அமீஷா பட்டேல் ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும்அமீஷா பட்டேல் நடிப்பு வாழ்க்கைஅமீஷா பட்டேல் இதரப் பணிஅமீஷா பட்டேல் சொந்த வாழ்க்கைஅமீஷா பட்டேல் சர்ச்சைஅமீஷா பட்டேல் ஊடகங்களில்அமீஷா பட்டேல் திரைப்பட விவரங்கள்அமீஷா பட்டேல் குறிப்புகள்அமீஷா பட்டேல் கூடுதல் வாசிப்புஅமீஷா பட்டேல் புற இணைப்புகள்அமீஷா பட்டேல்இந்தி மொழிகுசராத்தி மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பால் (இலக்கணம்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பருவ காலம்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைகடல்அங்குலம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்ஜீரோ (2016 திரைப்படம்)இலங்கைடேனியக் கோட்டைதமிழ்நாடுசுற்றுச்சூழல் மாசுபாடுகம்பர்அத்தி (தாவரம்)புறப்பொருள் வெண்பாமாலைகொங்கு வேளாளர்மெய்யெழுத்துகுருதி வகைபட்டினப்பாலைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சிறுபஞ்சமூலம்இந்தியன் பிரீமியர் லீக்நிலாவேற்றுமை (தமிழ் இலக்கணம்)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கருத்தரிப்புஉரைநடைகாயத்ரி மந்திரம்தமிழக மக்களவைத் தொகுதிகள்தேசிக விநாயகம் பிள்ளைசிவவாக்கியர்தொலைக்காட்சிஆற்றுப்படைசென்னைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)அண்ணாமலையார் கோயில்அரவான்முதுமலை தேசியப் பூங்காசங்க காலம்தாஜ் மகால்கல்விபாண்டியர்மாசாணியம்மன் கோயில்செயற்கை நுண்ணறிவுஇலட்சத்தீவுகள்சினேகாவெண்பாஜோக்கர்வைரமுத்துகல்லணைதிணை விளக்கம்மனித வள மேலாண்மைமு. மேத்தாபௌத்தம்ராஜா சின்ன ரோஜாகாதல் தேசம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்குறுந்தொகைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கடவுள்கில்லி (திரைப்படம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்மு. க. ஸ்டாலின்அனுமன்சைவத் திருமணச் சடங்குமஞ்சள் காமாலைஅட்சய திருதியைதமிழர் பருவ காலங்கள்திருமந்திரம்மின்னஞ்சல்அரண்மனை (திரைப்படம்)கருமுட்டை வெளிப்பாடுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைபகிர்வு🡆 More