அபினிப் போர்கள்

சீனா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான தகராறுகளின் உச்சக்கட்டமாக, 1880 களின் மத்தியில் நிகழ்ந்த இரண்டு போர்கள், அபினிப் போர்கள் அல்லது ஆங்கிலோ-சீனப் போர்கள் என அழைக்கப்படுகின்றன.

இரண்டாவது போரில் பிரான்சும், பிரித்தானியாவுக்குச் சார்பாகப் போரில் கலந்து கொண்டது. இந்தத் தகராறுக்கு அடிப்படையாக அமைந்தது, பிரித்தானிய இந்தியாவிலிருந்து அதிகரித்துவந்த அளவில் அபினி சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டமையாகும். சீனச் சமுதாயத்தில், உடல்நலம் மற்றும் சமுதாய வழக்கங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட தீங்கான பாதிப்புக்கள் காரணமாக, கிங் பேரரசர் (Qing Emperor) அபினியைச் சீனாவில் தடை செய்தார். தனது நாட்டு எல்லைக்குள் அபினியைத் தடை செய்த பிரித்தானியப் பேரரசு, சீனாவுக்குள் அதனைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்தது. அந்த தடையையும் பொருற்படுத்தாது பிரித்தானியக் களங்கள் சீனாவுக்கும் அபினி வணிகத்தைத் தொடர்ந்தது. அதனால் அப்போது குவாங்தொவ் மாகாணத்தில் பணிபுரிந்த ஆளுநர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அதுவே பிரித்தானியாவுக்கும் சீனப்பேரசுக்கும் இடையிலான போராகியது. அதனையே அபினிப் போர்கள் எனப்படுகின்றன.

அபினிப் போர்கள்
அபினிப் போர்கள்
குவாங்தோவ் (கண்டன்) துறைமுகப்பகுதியில் போர்
நாள் 1839–1842, 1856–1860
இடம் சீனா
ஐரோப்பியப் படைகள் சீனாவை வெற்றிக்கொண்டன. அத்துடன் நாஞ்சிங் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டது
நிலப்பகுதி
மாற்றங்கள்
ஹொங்கொங் தீவு மற்றும் தென் கவுலூன் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு
பிரான்சு பிரான்சு பேரரசு (1856–1860)

ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா (1856 and 1859)

சிங் அரசமரபு

ஹொங்கொங்கை கைப்பற்றல்

முதலாம் அபின் போர் 1839 முதல் 1842 வரை நடந்தது. இந்த போரிலேயே பிரித்தானியப் படைகள் ஹொங்கொங் தீவைக் கைப்பற்றிக்கொண்டது. அதனைத் தொடர்ந்து, பிரித்தானியா ஹொங்கொங்கை பிரித்தானியாவின் ஒரு குடியேற்ற நாடாக பிரகடனப்படுத்திக்கொண்டது.

அதன் பிறகு மீண்டும் அபினி வணிகம் தொடர்பான, இரண்டாம் அபினிப் போர் 1856 முதல் 1860 வரை நடந்தது. இந்த போரின் முடிவில் பிரித்தானியப் படைகள் மேலும் கவுலூன் தீபகற்பம் மற்றும் கல்லுடைப்பான் தீவு வரையிலான நிலப்பரப்பை கைப்பற்றிக்கொண்டது.

இந்த போர்களில் சீனாவுக்கு ஏற்பட்ட தோல்வியும், அதனைத் தொடர்ந்து செய்துகொள்ளப்பட்ட சமநிலையற்ற ஒப்பந்தங்களும் சிங் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாகின.

அபினி வணிகத்தின் வளர்ச்சி (1650-1773)

ஒல்லாந்தரின் முன்மாதிரியைப் பின்பற்றி, பிரித்தானியரும், அக்பர் ஆட்சிக் காலத்திலிருந்தே (1556-1605) இந்தியாவிலிருந்து அபினியை வாங்கிவந்தனர். 1757 இல், வங்காளத்தைக் கைப்பற்றிய பின்னர், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அபினியின் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும், தனியுரிமையை நிலைநாட்டியிருந்தது. வேறு பயிர்களுக்கு இல்லாதவகையில், முன்பணம் கொடுத்து அபினி உற்பத்தியாளர்களை ஊக்குவித்தும் வந்தனர். இந்த உற்பத்தி, கொல்கத்தாவில், பொதுவாக 400 விழுக்காடு இலாபத்துடன், ஏல விற்பனை மூலம் விற்கப்பட்டது.

கிழக்கிந்தியக் கம்பனி (1773-1833)

1773 இல், வங்காளத்தின் ஆளுனர்-நாயகம் அபினி விற்பனையில் கம்பனியின் தனியுரிமையை மேலும் உறுதி செய்துகொள்ள, பாட்னாவிலிருந்த அபினிக் கூட்டமைப்பைக் (opium syndicate) கலைத்தார். பின்னர் வந்த ஐம்பது ஆண்டுகளாக, அபினியே கிழக்கிந்தியக் கம்பனிக்கு இந்தியாவில் முக்கியமாக இருந்தது. சீனாவில் அபினி சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்ததால், கிழக்கிந்தியக் கம்பனி, அபினிக்காக மாற்றீடு செய்யமுடியாமல், தேயிலையைச் சீனாவிடமிருந்து கடனுக்கு வாங்கியது. ஆனால், அபினியைக் கொல்கத்தாவில் ஏலத்தில் விற்று, அது சீனாவுக்குள் கடத்திச் செல்லப்படுவதை அனுமதித்தது. 1797 ஆம் ஆண்டில், வங்காளத்துத்து அபினித் முகவர்களின் பங்கை இல்லாமல் செய்து, அபினிப் பயிர்ச் செய்கையாளர் நேரடியாகவே கம்பனிக்கு அபினியை விற்கும்படி ஏற்பாடு செய்து கொண்டது.

சீனாவுக்கான பிரித்தானியரின் அபினி ஏற்றுமதி, 1730 ஆம் ஆண்டில் 15 தொன் (ton) அளவாக இருந்தது, 1773 ஆம் ஆண்டில் 75 தொன்களாக உயர்ந்தது. ஒவ்வொன்றும் 64 கிலோகிராம் நிறையுள்ள அபினியைக்கொண்ட 2000 பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

1799 இல், சீனப் பேரரசு அபினி இறக்குமதி மீதான அதனது தடையை மீளவும் உறுதி செய்தது. 1810 ஆம் ஆண்டில் பின்வரும் ஆணை வெளியிடப்பட்டது:

    "அபினி வன்முறையான தாக்கத்தைக் கொடுக்கக்கூடியது. இதற்குப் பழக்கப்பட்டவர் அதனைப் புகைக்கும்போது, மிக விரைவாக அது அவரை உற்சாகப்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய நிலைக்கு உள்ளாக்குகிறது. அதிக காலம் செல்லுமுன்னரே அது அவரைக் கொன்று விடுகிறது. அபினி, எமது நற் பழக்கங்களையும், நெறிமுறைகளையும் வலுவற்றதாக்கும் ஒரு நஞ்சு. இதன் பயன்பாடு சட்டத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது, பொதுமக்கள், இதைத் தடுக்கப்பட்ட நகருக்குள் கொண்டுவருகிறார்கள். உண்மையில் இவர்கள் சட்டத்துக்குக் கீழ்ப்படியாது அதனை இகழ்கிறார்கள்!"
    "இருந்தும், அண்மைக்காலத்தில், அபினியை வாங்குவோரும், அதனை உட்கொள்வோரும் அதிகமாகியுள்ளனர். ஏமாற்றுகின்ற வணிகர்கள் இலாபம் பெறுவதற்காக அதனை வாங்கி விற்கிறார்கள். சுங் வென் நுழைவாயிலில் உள்ள சுங்க இல்லம், இறக்குமதிகளை மேற்பார்வை செய்வதற்காக அமைக்கப்பட்டது (அபினிக் கடத்தல் தொடர்பான பொறுப்பு எதுவும் அதற்கு இல்லை). நாங்கள் அபினிக்கான தேடுதலைத் துறைமுகங்களில் மட்டும் நடத்துவது போதாது. ஐந்து நுழைவாயில்களிலும் உள்ள போலீஸ் ஆணையர்களுக்கும், போலீஸ் சென்சார்களுக்கும், அபினியைத் தடைசெய்யவும், அதற்காகத் தேடுதல் நடத்தவும் ஆணை பிறப்பிக்க வேண்டியுள்ளது. மீறுபவர்கள் யாராவது பிடிபட்டால், உடனடியாக அவர்கள் தண்டிக்கப்படுவதோடு, அபினியும் உடனடியாக அழிக்கப்படும். அபினி நுழைகின்ற குவாந்துங் மற்றும் ஃபூக்கீன் மாகாணங்களைப் பொறுத்தவரை, அங்குள்ள, வைஸ்ராய்கள், ஆளுனர்கள் மற்றும் கடற் சுங்க அதிகாரிகளுக்கும், முறையான தேடுதல் நடத்தி அபினியின் வழங்கலை முற்றாகத் தடுக்குமாறு ஆணையிடப்படுகின்றது. அவர்கள் இதை ஒரு உயிரற்ற கடிதமாகக் கருதி அபினி கடத்தி வரப்படுவதை அநுமதிக்கக்கூடாது."
      (Lo-shu Fu, A Documentary Chronicle of Sino-Western relations, Vol. 1 (1966), page 380)

இந்த ஆணை மிகக் குறைவான தாக்கத்தையே விளைவித்தது. சீன அரசாங்கம் பெய்ஜிங்கில் இருந்தது. தெற்கிலிருந்து, வடக்கில் மிகத்தொலைவில் நடைபெற்றுவந்த அபினிக் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசின் செயற்பாடின்மை, அபினியின் அடிமையாக்கும் தன்மை, கிழக்கிந்தியக் கம்பனியினதும், வணிகர்களினதும் அதிக இலாபம் பெறுவதற்கான பேராசை, பிரித்தானிய அரசின் வெள்ளிக்கான தாகம் என்பனவறின் கூட்டுவிளைவாக அபினி வணிகம் மேலும் வளர்ந்தது. 1820 ஆம் ஆண்டில், வங்காளத்திலிருந்து, சீனாவுக்கான அபினி வணிகம், சராசரியாக ஆண்டொன்றுக்கு, 900 தொன்களை எட்டியது.

மேற்கோள்கள்

Tags:

அபினிப் போர்கள் ஹொங்கொங்கை கைப்பற்றல்அபினிப் போர்கள் அபினி வணிகத்தின் வளர்ச்சி (1650-1773)அபினிப் போர்கள் கிழக்கிந்தியக் கம்பனி (1773-1833)அபினிப் போர்கள் மேற்கோள்கள்அபினிப் போர்கள்அபினிஏற்றுமதிசீனாபிரான்ஸ்பிரித்தானியப் பேரரசுபிரித்தானியாபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

செங்குந்தர்வினைச்சொல்கருமுட்டை வெளிப்பாடுமீனம்நிர்மலா சீதாராமன்நயினார் நாகேந்திரன்அன்னை தெரேசாஅக்கிகல்லணைஓ காதல் கண்மணிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்தமிழ் இலக்கியப் பட்டியல்இன்ஸ்ட்டாகிராம்நாழிகைகிராம ஊராட்சிமெய்ப்பொருள் நாயனார்பட்டினத்தார் (புலவர்)பதிற்றுப்பத்துநுரையீரல் அழற்சிஆனந்தம் (திரைப்படம்)வேர்க்குருசிறுபாணாற்றுப்படைமருதம் (திணை)திருநாள் (திரைப்படம்)காடுயாழ்கீர்த்தி சுரேஷ்சிவாஜி (பேரரசர்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005எட்டுத்தொகை தொகுப்புஇந்திய அரசியலமைப்புதேஜஸ்வி சூர்யாவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்மூகாம்பிகை கோயில்சித்ரா பௌர்ணமிசேலம்சரண்யா பொன்வண்ணன்ஹரி (இயக்குநர்)சுடலை மாடன்தமிழ்நாடு காவல்துறையூடியூப்ஐக்கிய நாடுகள் அவைவிடுதலை பகுதி 1டிரைகிளிசரைடுசிதம்பரம் நடராசர் கோயில்குலசேகர ஆழ்வார்வன்னியர்ஆகு பெயர்நெல்பழனி முருகன் கோவில்சிலம்பம்மருது பாண்டியர்அண்ணாமலை குப்புசாமிவரலாறுசுரதாதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கண்ணாடி விரியன்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)நம்மாழ்வார் (ஆழ்வார்)வேளாண்மைஇந்தியாவில் இட ஒதுக்கீடுமணிமுத்தாறு (ஆறு)கலாநிதி மாறன்தமிழர் கப்பற்கலைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தன்னுடல் தாக்குநோய்திருமந்திரம்தேவாங்குவணிகம்தமிழ் விக்கிப்பீடியாதமிழ் மாதங்கள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நான் அவனில்லை (2007 திரைப்படம்)பொது ஊழிபூனைபெரியபுராணம்பர்வத மலைவீரமாமுனிவர்🡆 More