அந்தோனியும் கிளியோபாத்ராவும்

அந்தோனியும் கிளியோபாத்ராவும் (Antony and Cleopatra) என்பது வில்லியம் சேக்சுபியர் எழுதிய ஒரு துன்பியல் நாடகம் ஆகும்.

இந்நாடகம் முதன் முதலில் பிளாக்பிரையர்சு அரங்கு அல்லது குளோப் அரங்கில் 1607 ஆம் ஆண்டளவில் "கிங்சு மென்" என்ற நாடகக்குழுவால் மேடையேற்றப்பட்டது. இது முதன்முதலில் 1623 இல் அச்சில் வெளிவந்தது. இந்த நாடகம் அந்தோனி மற்றும் கிளியோபட்ராவின் காதலையும் அவர்களது வீழ்ச்சியையும் சித்தாிக்கிறது.

அந்தோனியும் கிளியோபாத்ராவும்
அந்தோனியும் கிளியோபாத்ராவும் சந்திப்பு (ஓவியம்: லாரன்சு அல்மா-தடேமா, 1884)

இதன் கதை புளூட்டாக்கின் லைவ்ஸ் என்ற பண்டைய கிரேக்க மொழியில் எழுதப்பட்ட புதினத்தை தாமசு நோர்த் என்பவர் 1579 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்து வெளியிட்ட நூலை அடிப்படையாகக் கொண்டது. சிசிலியன் கிளர்ச்சியின் காலத்திலிருந்து உரோமைக் குடியரசின் இறுதிப் போரின் போது இடம்பெற்ற கிளியோபாட்ராவின் தற்கொலை வரை கிளியோபாட்ராவுக்கும் மார்க் அந்தோனிக்கும் இடையிலான உறவைச் சித்தரிக்கின்றது. முதலாவது உரோமைப் பேரரசரும் அந்தோனியின் சக வெற்றியாளர்களில் ஒருவருமான ஆக்டேவியஸ் சீசர் இக்கதையின் முக்கிய எதிரி. இந்தக் கதைக்களம் முக்கியமாக உரோமைக் குடியரசு மற்றும் தாலமைக்கு எகிப்தில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இக்கதைக்களத்தின் புவியியல் இருப்பிடம் கற்பனை அலெக்சாந்திரியா மற்றும் கடுமையான உரோமை நகரங்களுக்கிடையே மாறுகிறது.

கதைச் சுருக்கம்

உரோமை நாட்டு ஆட்சியரில் அந்தோனி ஒரு முக்கிய பொறுப்பாளி ஆவார். அவர் தனது கடமையை விட்டு விலகி கிளியோபாட்ராவின் காதலில் மூழ்கி அலெக்சாந்திரியாவில் குடியேறுகிறார். ஆக்டேவியஸ் சீசர் அந்தோனியிடம் பலமுறை அழைப்பு விடுத்தும் அவர் உரோமாபுரிக்குத் திரும்பவில்லை. தன் தங்கையான ஆக்டேவியாவை மணம் முடித்து வைத்து அந்தோனியை உரோமில் இருக்க வைக்க நினைத்தார். அதுவும் தோல்வியில் முடிந்தது. அந்தோனி கடமையை மறந்து காதலின் பின்னால் சென்றதால் போரில் வீழ்ச்சி அடைந்து, உயிரை நீத்தார். கிளியோபாத்ராவும் ஆஸ்ப் நச்சுப் பாம்பைத் தன்னைக் கடிக்க வைத்து உயிரை நீத்தார்.

பதிப்பு

ஆய்வாளர்கள் இந்த நாடகம் 1603-04 ஆம் வருடத்திற்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். எழுத்து வடிவில் 1623 ஆம் ஆண்டு “பாஸ்ட் போலியோ” என்னும் தொகுப்பில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த நாடகத்தை ஐந்து பாகங்களாகப் பிரிக்கின்றனர். ஆனால் முந்தைய காலத்தில் ஷேக்ஸ்பியா் இதை 40 காட்சிகளாகவே வடிவமைத்திருந்தார்.

மேற்கோள்கள்

Tags:

கிளியோபட்ராகுளோப் நாடக அரங்குவில்லியம் சேக்சுபியர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கூகுள்நற்கருணைதிருநெல்வேலிந. பிச்சமூர்த்திவீரமாமுனிவர்குறவஞ்சிதனுசு (சோதிடம்)தேர்தல்நீர்நிலைவிசயகாந்துகாடுதிணை விளக்கம்தமிழ்நாடு காவல்துறைசுந்தரமூர்த்தி நாயனார்இராவணன்வேலு நாச்சியார்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்திரவ நைட்ரஜன்பரணர், சங்ககாலம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ்ப் புத்தாண்டுசச்சின் டெண்டுல்கர்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)உணவுமுகலாயப் பேரரசுஅறிவியல்தமிழர் கப்பற்கலைஜோதிகாவனப்புதனிப்பாடல் திரட்டுமுகுந்த் வரதராஜன்தமிழ் விக்கிப்பீடியாமத கஜ ராஜாபகத் பாசில்வியாழன் (கோள்)சப்தகன்னியர்ஏலகிரி மலைதூது (பாட்டியல்)தெருக்கூத்துநிதிச் சேவைகள்இந்தியாவில் பாலினப் பாகுபாடுபுதுச்சேரிஅமலாக்க இயக்குனரகம்சேக்கிழார்யானைகன்னியாகுமரி மாவட்டம்மறைமலை அடிகள்திருவள்ளுவர்ரத்னம் (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருதுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இராமர்மருதமலைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்திருமுருகாற்றுப்படைமொழிஜே பேபிகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்தமிழ்எட்டுத்தொகை தொகுப்புமண்ணீரல்கேரளம்அன்புமணி ராமதாஸ்சென்னைகருத்துதட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)புதினம் (இலக்கியம்)பழனி முருகன் கோவில்நேர்பாலீர்ப்பு பெண்ஒற்றைத் தலைவலிமு. மேத்தாஆழ்வார்கள்சித்த மருத்துவம்போதைப்பொருள்வைர நெஞ்சம்முல்லைப்பாட்டு🡆 More