பாம்பு ஆஸ்ப்

ஆஸ்ப் (Asp (snake) என்பது ஆஸ்பிஸ் என்ற சொல்லின் நவீன ஆங்கிலமயமாக்கல் ஆகும்.

இது பழங்காலத்தில் நைல் பகுதியில் காணப்பட்ட பல நச்சுப் பாம்பு இனங்களில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பதாக உள்ளது. இந்த ஆஸ்பிஸ், என்ற பெயரானது கிரேக்க மொழிச் சொல்லாகும். இதற்கு "வைப்பர்" என்று பொருள்படும். தற்போது உள்ள எகிப்திய நாகப்பாம்பே அக்காலத்தில் ஆஸ்பிஸ் என்று அழைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

பாம்பு ஆஸ்ப்
ஐரோப்பிய ஆஸ்ப், விபெரா ஆஸ்பிஸ்

வரலாற்று முக்கியத்துவம்

எகிப்திய அரச குலத்தின் காலம் மற்றும் ரோமானிய எகிப்து முழுவதும், ஆஸ்ப் அரச சின்னமாக இருந்துள்ளது. எகிப்து, கிரேக்கம் ஆகிய பகுதிகளில், வழக்கமான மரணதண்டனை அளிப்பதற்கு பதில் கண்ணியமான மரணத்திற்கு தகுதியானவர்கள் என்று கருதப்பட்ட குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்ற இதன் சக்திவாய்ந்த நஞ்சு பயன்படுத்தப்பட்டது.

கிரேக்கத் தொன்மவியலில் உள்ள பெர்சியசின் சில கதைகளில், மெடூசாவைக் கொன்ற பிறகு, பாலிடெக்டெஸ் மன்னருக்கு அவளது தலையைக் கொண்டு செல்ல பாலிடெக்ஸ் பறக்கும் செருப்பைப் பயன்படுத்தினார். அவர் எகிப்தின் மேல் பறந்து கொண்டிருந்தபோது, அவளுடைய குருதியில் சில துளிகள் தரையில் விழுந்தன. அதிலிருந்து ஆஸ்ப்ஸ் மற்றும் ஆம்பிஸ்பேனாவை உருவாக்கியது.

புளூட்டாக்கின் கூற்றுப்படி, எகிப்திய அரசி கிளியோபாற்றா, தற்கொலைக்குத் தயாராகிய காலத்தில், குற்றறவாளி என்று முடிவு செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு கொடிய நச்சுக்களைச் சோதித்துபார்த்தாள். முடிவில் ஆஸ்பிசின் கடிதால் (ஆஸ்பிஸ் என்ற கிரேக்க சொல்லுக்குப் பொதுவாக டோலமிக் எகிப்தில் எகிப்திய நாகப்பாம்பு என்று பொருள்படும். ஐரோப்பிய ஆஸ்ப் அல்ல) துன்பமின்றி இறப்பதற்கான வழி என்றும்; அதன் நச்சு வலி இல்லாமல் தூக்கத்தையும் மரணத்தையும் கொண்டு வரும் என்பதை அறிந்தாள். இது ஒரு கொம்பு பாம்பு என்று சிலர் நம்புகிறார்கள். 2010 ஆம் ஆண்டில், ஜெர்மன் வரலாற்றாசிரியர் கிறிஸ்டோஃப் ஷேஃபர் மற்றும் நச்சுவியலாளர் டீட்ரிச் மெப்ஸ், இந்த நிகழ்வைப் பற்றிய விரிவான ஆய்வு செய்த பிறகு, கிளேயோபற்றா தற்கொலை செய்துகொள்ள நச்சு விலங்கிடம் கடி வாங்குவதற்குப் பதிலாக ஹெம்லாக், உல்ப்செபியம், ஓபியம் ஆகியவற்றின் கலவையை பயன்படுத்தினார் என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆயினும்கூட, வில்லியம் சேக்சுபியரின் படைப்பினால் கிளியோபற்றாவின் தற்கொலையில் ஆஸ்பியின் பங்கு பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது:

With thy sharp teeth this knot intrinsicate
Of life at once untie: poor venomous fool
Be angry, and dispatch.

சேக்சுபியரின் நாடகமான ஒத்தெல்லோவின் காட்சி III இல் டெஸ்டெமோனா மீதான வெறுப்பை "ஆஸ்பிக்ஸ்' நாக்குகள்" நிறைந்ததாக ஓதெல்லோ குறிப்பிடுவது பிரபலமாக ஒப்பீடு ஆகும்.

பழ மரபுக் கதை

ஹிப்னாலிஸ் என்பது இடைக்கால பெஸ்டியரிகளில் விவரிக்கப்பட்ட ஒரு பழங்கால கற்பனை உயிரினமாகும் . பாதிக்கபட்டவர்களை தூக்கத்தில் கொல்லும் ஒரு வகை ஆஸ்ப் என்று இது விவரிக்கப்படுகிறது. "கிளியோபற்றா அதைத் தன் மீது (அவளது மார்பகங்களில்) வைத்துக்கொண்டாள், இதனால் தூக்கம் போல் மரணத்தை அடைந்தாள்."

குறிப்புகள்

Tags:

கிரேக்க மொழிநச்சுப் பாம்புநைல் வடிநிலம்பண்டைய வரலாறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாசிந்துவெளி நாகரிகம்மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்இந்திய புவிசார் குறியீடுசேரர்முல்லைப்பாட்டுகு. ப. ராஜகோபாலன்குதுப் நினைவுச்சின்னங்கள்சித்தர்கள் பட்டியல்வேதநாயகம் பிள்ளைவிஜய் வர்மாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்திருவண்ணாமலைகபடிதாவரம்கற்பித்தல் முறைவெண்குருதியணுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சூரரைப் போற்று (திரைப்படம்)இந்து சமயம்இராகுல் காந்திஉப்புச் சத்தியாகிரகம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்ஜவகர்லால் நேருஅஸ்ஸலாமு அலைக்கும்அம்லோடிபின்இந்தியக் குடியரசுத் தலைவர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்விரை வீக்கம்யூத்வல்லினம் மிகும் இடங்கள்கவுண்டமணிமேகாலயாதேங்காய் சீனிவாசன்குமரகுருபரர்கதீஜாகண்ணதாசன்சேலம்புதுமைப்பித்தன்சமையலறைநேர்காணல்கம்பர்திருநாவுக்கரசு நாயனார்தமிழ்நாடு சட்டப் பேரவைபிள்ளையார்காதலர் தினம் (திரைப்படம்)மகாபாரதம்அப்துல் ரகுமான்ஏக்கர்விலங்குதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கே. என். நேருசுப்பிரமணிய பாரதிபுங்கைதமிழ் விக்கிப்பீடியாதைராய்டு சுரப்புக் குறைகபிலர் (சங்ககாலம்)வாரிசுபிரம்மம்நெகிழிவரிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇயோசிநாடிகல்விஊராட்சி ஒன்றியம்மெட்பார்மின்பிலிருபின்பஞ்சாங்கம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்யாவரும் நலம்நான் சிரித்தால்மலக்குகள்பிளிப்கார்ட்ஆத்திசூடிதிரு. வி. கலியாணசுந்தரனார்இமயமலைஅல்லாஹ்🡆 More