நரம்பணு

நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் (Neurons) என்பவை மின்புலத்தால் தூண்டலைப் பெற்று, தகவல்களை முறைப்படுத்தி, உடலின் பல பகுதிகளுக்கும் மின்சார வேதி சமிக்ஞைகளாகக் கடத்தும் திறன் வாய்ந்த உயிரணுக்கள் ஆகும்.

வேதி சமிக்ஞைகள், மற்ற செல்களுடன் தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான நரம்பிணைப்புகளின் (synapse) மூலமாக நிகழ்கிறது. நரம்பணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து நரம்பு பின்னலமைப்புகளை (neural networks) உருவாக்குகின்றன. நரம்பணுக்கள், மூளை, தண்டு வடம், புற நரம்பு செல்திரள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நரம்பு மண்டலத்தின் அடிப்படையான பாகங்களாகும்.

நரம்பணு
நரம்பணு வரைபடம்
நரம்பணு
நரம்பணு வரைபடம்
நரம்பணு
a-ஒருங்குமுனைப்பு (dendrite); b-கலவுடல் (cell body); c-உயிரணுக் கரு; d-நரம்பிழை (axon); e-மயலின் நரம்புறை (myelin sheath); f-நரம்பிய உயிரணு (schwann cell); g-இடைவெளிக் கணு (node of Ranvier); h-நரம்பிழை முனையம் (axon terminal)

குறிப்பிடத்தக்க அளவில் தனித்துவமான நரம்பணு வகைகள் பல உள்ளன: உணர்வு உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்டு, மூளைக்கும், தண்டுவடத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பும் உணர்வு நரம்பணுக்கள் (sensory neurons); மூளை, தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று தசைச் சுருக்கங்கள் மற்றும் சுரப்பிகளைப் பாதிக்கும் இயக்க நரம்பணுக்கள் (motor neurons); மூளை, தண்டுவடத்தின் ஒரு பகுதியிலுள்ள நரம்பணுக்களை இணைக்கும் தொடுப்பு நரம்பணுக்கள் (interneurons).

முழுமையாக மாறுபாடடைந்த நரம்பணுக்கள் நிரந்தரமாக ஈரிழைக்கூறுபாடு நிலையைக் கடந்தவையாக (postmitotic) இருக்கும்.

நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் சிலசமயம் நரம்பு உயிரணுக்கள் அல்லது நரம்பு செல்கள் (Nerve cells) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த நரம்பணுக்கள் தவிர்ந்த வேறு உயிரணுக்களும் நரம்புத் தொகுதியில் காணப்படுவதனால், அவ்வாறு அழைப்பது பொருத்தமற்றதாக இருக்கும். நரம்பணுக்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் நரம்புக்கட்டிகளும் (Glial cells) நரம்பு உயிரணுக்களே ஆகும்.

மனித மூளையில் 86 - 100 பில்லியன் (1011) நரம்பணுக்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அமைப்பு

நரம்பணுவானது மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்.

    1. கலவுடல் (Cell body) - இதற்குள் உயிரணுக் கரு, ஏனைய உயிரணு நுண்ணுறுப்புக்கள் காணப்படும். இந்தக் கலவுடலானது ஒழுங்கற்ற வடிவம் அல்லது சமபக்கச்சீரமைவு அற்ற அமைப்பாகக் காணப்படும்.
    2. சிறு நரம்புமுளைக் கிளைகள் / ஒருங்கு முனைப்புக் கிளைகள் (Denrites) - இவை கலவுடலிலிருந்து வெளி நோக்கி நீண்டு காணப்படும் கட்டையான கிளைகளாகும்.
    3. நரம்பிழை (Axon) - கலவுடலிலிருந்து வெளியேறும் நீண்ட இழையாலான அமைப்பாகும். இதன் முடிவில் சிறிய கிளைகளைக் கொண்டிருக்கும். இவ்விழைகள் மயலினேற்றப்பட்ட நிலையிலோ, அல்லது மயலினேற்றம் செய்யப்படாத நிலையிலோ காணப்படலாம்.

மேற்கோள்கள்

புத்தகங்கள்

  • Kandel E.R., Schwartz, J.H., Jessell, T.M. 2000. Principles of Neural Science, 4th ed., McGraw-Hill, New York.
  • Bullock, T.H., Bennett, M.V.L., Johnston, D., Josephson, R., Marder, E., Fields R.D. 2005. The Neuron Doctrine, Redux, Science, V.310, p. 791–793.
  • Ramón y Cajal, S. 1933 Histology, 10th ed., Wood, Baltimore.
  • Richard S. Snell: Clinical neuroanatomy (Lippincott Williams & Wilkins, Ed.6th 2006) Philadelphia, Baltimore, New York, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-963-226-293-2
  • Roberts A., Bush B.M.H. 1981. Neurones Without Impulses. Cambridge University Press, Cambridge.
  • Peters, A., Palay, S.L., Webster, H, D., 1991 The Fine Structure of the Nervous System, 3rd ed., Oxford, New York

வெளியிணைப்புகள்

Tags:

நரம்பணு அமைப்புநரம்பணு மேற்கோள்கள்நரம்பணு புத்தகங்கள்நரம்பணு வெளியிணைப்புகள்நரம்பணுஉடல்உயிரணுசமிக்ஞை கடத்துகைசெல்தகவல்தண்டு வடம்நரம்பிணைப்புநரம்புத் தொகுதிமின்சாரம்மின்புலம்மூளைவேதிப்பொருள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஈ. வெ. இராமசாமிதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்ஹர்திக் பாண்டியாதங்கம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தமிழர் விளையாட்டுகள்முல்லை (திணை)திருவள்ளுவர்மஞ்சும்மல் பாய்ஸ்கடையெழு வள்ளல்கள்சென்னை சூப்பர் கிங்ஸ்வில்லுப்பாட்டுசுடலை மாடன்மங்கலதேவி கண்ணகி கோவில்திருப்போரூர் கந்தசாமி கோயில்நாழிகைஆத்திசூடிஅம்பேத்கர்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்எயிட்சுதிருப்பூர் குமரன்பல்லவர்அரவான்தமிழ் இலக்கியப் பட்டியல்சிங்கப்பூர்மீண்டும் ஒரு மரியாதைபிள்ளையார்சப்தகன்னியர்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)காப்பியம்ஐக்கிய நாடுகள் அவைசங்க கால அரசர்கள்மயில்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தேசிய அடையாள அட்டை (இலங்கை)கார்த்திக் (தமிழ் நடிகர்)கள்ளழகர் (திரைப்படம்)கே. எல். ராகுல்முலாம் பழம்அகநானூறுகண்ணனின் 108 பெயர் பட்டியல்அன்னி பெசண்ட்காயத்ரி மந்திரம்இரண்டாம் உலகப் போர்சதயம் (பஞ்சாங்கம்)நாம் தமிழர் கட்சிஅணி இலக்கணம்தமிழர் நெசவுக்கலைடுவிட்டர்தோஸ்த்மாநிலங்களவைமதராசபட்டினம் (திரைப்படம்)மொழிநாலடியார்பதினெண் கீழ்க்கணக்குகருத்தரிப்புமட்பாண்டம்தமிழிசை சௌந்தரராஜன்இந்திய உச்ச நீதிமன்றம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைநரேந்திர மோதிருதுராஜ் கெயிக்வாட்முதுமலை தேசியப் பூங்காஇயேசு காவியம்தேவாரம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்கோத்திரம்ஆனைக்கொய்யாதமிழ்ப் புத்தாண்டுதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்புணர்ச்சி (இலக்கணம்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பரணி (இலக்கியம்)திராவிட முன்னேற்றக் கழகம்எல் நீனோ-தெற்கத்திய அலைவு🡆 More